Blog Archive

Sunday, May 10, 2020

அன்னையர்கள்.

வல்லிசிம்ஹன்
அன்னையர்கள் பங்கு என் வாழ்வில் 
முழுவதும் நிறைந்திருக்கிறது.
முதல் அறிமுகம் அம்மா. அவள் மடியில் 
சொந்தம் கொண்டாடியது இரண்டு வயது வரை. பிறகு 
தம்பி முரளி வந்தான்.
நான், என்னைப் பெறாத தாயிடம், என் பாட்டியிடம் ஒட்டிக் கொண்டேன்.

நிறைய செல்லம், கொஞ்சம் கண்டிப்பு நிறைந்தவள்
அந்த அன்னை.
வாழ்வின் பல முக்கிய கட்டங்களில் என் ஆதரவு.
அதே போல என் தோழிகளின் அன்னைகளும்.
அன்பு காட்டத் தயங்காத காலங்கள்.

என் அருமை மாமாக்களின்  மனைவிகள்
அடுத்து வந்த பரிவின் பிம்பங்கள்.
அவர்களின் அரவணைப்பை நிறைய அனுபவித்திருக்கிறேன்.

எத்தனை கொடுத்து வைத்த வாழ்க்கை.!
இப்பொழுது என் மக்களின் தோழர்கள், தோழிகள்,
இணையத்தில் நட்பாக இருக்கும் அத்தனை பேருக்கும் 
வல்லிம்மா ஆவதில்தான் எத்தனை மகிழ்ச்சி

அனைவரும்  என்றும் சீரும் சிறப்புமாக வாழ 
வேண்டி என் பிரார்த்தனைகளும் ஆசிகளும்.
 நட்புகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்/
எல்லோருக்கும் அன்னையாக இருக்கும் 
கடவுளருக்கும், அவர்களை விட்டுப் பிரியாத
சக்திகள் ,தாயார்கள் அனைவரும் நம்மைக் காப்பார்கள்.

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

அன்னையர் தின வாழ்த்துகள் வல்லிம்மா...

KILLERGEE Devakottai said...

அன்னையர் தினவாழ்த்துகள் அம்மா.

ஸ்ரீராம். said...

அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அம்மா...

மனோ சாமிநாதன் said...

வாக்கை முழுவதும் பரிவும் பாசமும் மிகுந்த அன்னையர்கள் பலர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் கொடுத்து வைத்தவர்.

உங்களுக்கும் மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அருமையான அன்பான பதிவு.

தாயாய் தாங்குகின்ற தெய்வம் காத்து அருள வேண்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவத்துடனான பதிவு. இனிய வாழ்த்துகள்.

Anuprem said...

மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் வல்லி மா ..

நெல்லைத் தமிழன் said...

அன்னையர் தின வாழ்த்துகள்.

இணையத்தில் அன்பு காட்டும் அன்னையர்கள் (that position. Not in age) நிறைய உண்டு. அவர்களுக்கும் வாழ்த்துகள்

Geetha Sambasivam said...

அன்பே உருவான அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு வெங்கட். அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி நீங்களும் நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் நன்றி. எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
என் மனதிடத்துக்கு இவர்களின் அன்பே ஆதார சுருதி. அவர்களைப் போல நானும்
அனைவரிடமும் நல் அன்பு காட்ட வேண்டும் என்று உறுதி மேம்படுகிறது.
நன்றி மா. என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
நமக்கு இறையைத் தவிர வேறு ஏது கதி.
செய்தியே பார்க்காமல் அனைவரின் நலத்தையே
பிரார்த்திப்போம். நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம்,
நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக இருக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு மா.
எப்பொழுதும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறீர்கள்.
அந்த பகவான் நம்மைக் காக்கட்டும்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளிமா.
பெண்கள் பிறக்கும் போதே அம்மா என்ற தத்துவம்
கூடவே பிறக்கிறது.
இணைய அன்பு எப்பொழுதும் நீடிக்கட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பொழுதும் அன்பாக இருப்பவர்கள் நீங்கள். நம் எல்லோருடைய பாதுகாத்தலும் இறைவனிடம் அடங்கி இருக்கிறது. நலமே வாழ்வோம்.

ஜீவி said...

பெண்ணாய்ப் பிறந்தாலே அனுசரித்துப் போதல் அவர்கள் கூடவே பிறந்து விடும் போலிருக்கு.

பிறக்கும் பொழுதே அம்மா, அப்பா உறவு இத்தனை ஆண்டுகளுக்குத் தான் என்று தீர்மானம் ஆகும் பரிதாபத்தை நினைத்தாலே மனம் குமைகிறது. இன்னொரு வீட்டுக்குப் போய் இன்னொரு தாயோடு அனுசரித்து தானும் இன்னொரு தாயாய் மாறும் நேரத்தும் இன்னொரு தாய்க்கு தயாராக வேண்டிய இன்னொரு பெண் பிள்ளையைப் பெற்று...
இந்த வட்டச் சுழற்சியை நினைத்தாலே தலை சுற்றுகிறது.

மாதேவி said...

அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கு நன்றி. அனைவருக்கும் அன்னையர் தினவாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார், இனிய காலை வணக்கம்.
மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கையை
ஏற்றுக் கொள்வதே பெண்ணாகப் பிறந்த பிறகு
அனுசரிக்கப் பட வேண்டிய சாஸ்திரம்.

இப்பொழுது நிறைய மாறி இருக்கிறது.
மாமியார்களை மணமான உடனே அம்மா என்றுதான் அழைக்க வேண்டும்.
எனக்கெல்லாம் வித்தியாசமாகத் தோன்றவில்லை.
என் அம்மா, இந்த அம்மாவைப் பற்றிப்
பேசினபோது விசித்திரமாகப் பார்க்கவில்லை.
ஏனேனில் அவரும் தன் மாமியாரை அம்மா
என்று அழைத்தவர் தான்.

இப்பொழுது என் தாய் மட்டுமே அம்மா, நீங்கள்
வேறு என்றே நினைத்துக் கொள்கிறார்கள்:)

அதற்கும் நாம் இணங்கித்தான் போக வேண்டும்.
பெண்களின் நிலையை ஆதரவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
மிக மிக நன்றி சார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
உங்கள் பெயரிலேயே அன்னை இருக்கிறாள்.
நன்றி மா. என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகள்.