வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
துபாய் ஒருதரம், ரெண்டு தரம் செப்டம்பர் 2008 இதுவும் மீள்பதிவு தான்.
😒🤣😊😁😎🤷♀️
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
துபாய் ஒருதரம், ரெண்டு தரம் செப்டம்பர் 2008 இதுவும் மீள்பதிவு தான்.
😒🤣😊😁😎🤷♀️
வெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)
மணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.
இந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.
அப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.
அப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)
மெத்தனமாகவே இருந்து விடுவார்களா:(
இந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.
பகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
மத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)
அவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.
சரியாக என் தலைப் பக்கம் ,
அவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.
எனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல
கற்பனை தோன்றும்.
அப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.
இப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்
ஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.
மொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.
இந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.
குழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.
அவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்
வைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.
பெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.
என்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.
நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,
எதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.
நிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.
நல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.
கறார் ஆசாமி.
மருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.
நாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.
அதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.
''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)
''இத்னா பஹுத் காம்!!, ஹம்
'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் சாஹ்தி ஹூம்''னு அவள் சொன்னதை
அந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.
மாமியாரும்,மாமனாரும் வெளியே வந்துவிட்டார்கள்:)
குணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து பேசுவாள்.
அவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.
நாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.
தற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.!!
15 comments:
இது இப்போதைய அனுபவமா, மீள் பதிவா என்று தெரியவில்லை. எனினும்,
மண்டைக்குள் பெருச்சாளி பிராண்டுவது போல... ஹா.. ஹா.. ஹா... தலைவேதனை. அலாரம் அடிபப்தை அலட்சியமாக எடுத்துக்கொண்டால் புலி வருது கதையாகி விடாதோ...
சில இல்லங்களில் பெரியவர்கள் இப்படிதான்... வேலைக்காரிக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும் என்று இப்படி எல்லாம் செய்வார்கள். கஷ்டமாக இருக்கும்!
ஸ்ரீராம், மீள் பதிவு என்று அக்கா மேலேயே( 2008 பதிவு என்று) போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.
மிக அருமையாக அனுபவங்களை சொல்லியதை படித்து இருக்கிறேன்.
உங்கள் எழுத்துக்கள் மறக்கவே முடியாது.
சிலர் பாத்திரங்களை வேலை ஆள் இருந்தால் அதிகமாய் எடுத்து போடுவார்கள்.
அவர்களும் மனுஷி தானே என்ற நினைப்பே இருக்காது.
இப்போது வேலை ஆள் இல்லாமல் நானே பார்க்கும் போது அவர்களின் கஷ்டம் புரிகிறது. (இரவு கை வலி குடைகிறது)
வயிற்று பிழைப்புக்கு எத்தனை வீடுகளில் பாத்திரம் தேய்க்கிறார்கள் அவர்களுக்கும் இரவு கைவலிக்கும் தானே!
மீள் பதிவு ஸ்வாரஸ்யம். அப்போது படித்ததில்லை. தொடரட்டும் ஸ்வாரஸ்ய பதிவுகள்.
மொழி தெரியாத போது கடினம் தான்.
மொழியால் பல இடங்களில் கூத்துகள் நடக்கும்.
மீள்பதிவு அருமை. முன்பு படித்திருக்கவில்லை.
800 திர்ஹாமுக்கு அவ்வளவு பாத்திரங்களா? தினமும் மெய்ட் வந்து 1 மணி நேரம் வேலை செய்தால், குறைந்தது 500 திர்ஹாம் கேட்பார்கள். 800 திர்ஹாமே பத்தவில்லையா?
முன்பு பஹ்ரைனில் எங்கள் வளாகத்தில் ஒரு பையன் வந்து வீட்டை கிளீன் செய்து தருவான் (என் அலுவலக நண்பன் வீட்டில்). வார இறுதியில் வந்து வேலை செய்வான். 1 மணி நேரத்திற்கு 10 திர்ஹாம். அதுக்காக சும்மா பொழுதைப் போக்கமாட்டான். சில நேரங்களில் 6 மணி நேரமும் ஆகும் (வாரத்தில் ஒரு நாள்தான் செய்வதால்), சில நேரங்களில் 1 மணி நேரத்திலேயே வேலையை முடித்துவிடுவான்.
கொஞ்ச வருடம் கழித்து அது 15 திர்ஹாமாக உயர்ந்தது. நான் அந்த சர்வீஸ உபயோகப்படுத்தலை.
மொழி தெரியாமல் இப்படி ஒரு பிரச்சனையா...?
அன்பு ஸ்ரீராம்,
நீங்கள் சொன்ன பிறகு மாதம் வருடம் சேர்த்தேன் நன்றி.
செய்திகளில் பயமுறூத்தும் அரக்கனிடமிருந்து மன விடுதலை செய்து கொள்ள இந்தப்
பதிவும் ஒரு வழி.
நன்றி மா.
அன்பு கோமதி மீள்பதிவைப் படித்துக் கருத்திட்டது தான் மகிழ்ச்சி.
உங்கள் அன்பு என்றும் இப்படி அணைத்திருக்க வேண்டும்.
நல் வார்த்தைகள் ,நல் நினைவுகள் நம்மை இந்த கொடுமையிலிருந்து விடுவிக்கட்டும். மிக மிக நன்றி கோமதி.
//ஸ்ரீராம், மீள் பதிவு என்று அக்கா மேலேயே( 2008 பதிவு என்று) போட்டு இருக்கிறார்கள் பாருங்கள்.//
பிறகு சேர்த்ததாக அம்மா சொல்லி இருக்கிறார் அக்கா... நான் பார்த்தபோது இல்லை!
சில இல்லங்களில் பெரியவர்கள் இப்படிதான்... வேலைக்காரிக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும் என்று இப்படி எல்லாம் செய்வார்கள். கஷ்டமாக/////
எருதின் புண்வலி காக்கைக்குத் தெரியாது. பாவம் அந்த குணா.
மிக மிக நன்றி வெங்கட். ஒரு மாற்றமாக, வேறெதிலும் மனம் போகாத நிலையில் இந்தப் பதிவுகளை இடுகிறேன்.
அன்பு தேவகோட்டைஜி,
இந்தப் பெண் சிங்களத்திலிருந்து வந்தவர். நம் வீட்டிலும் வேலை செய்தார்.
எங்கள் மகனிடம் அத்தனை மரியாதை.
அவர் குடும்பம் ஸ்ரீலங்காவில்.
இங்கிருந்து பணம் அனுப்பி அனைவரையும் கரையேற்றினார்.
நம் வீட்டில் நாலு மணி நேரம் வேலை
இருக்கும். அலுக்காமல் செய்துவிட்டு சத்வா சென்றுவிடுவார்.
அன்பு முரளிமா. அந்த அபார்ட்மெண்ட் எல்லாம் பெரிதாக இருக்கும்.
அதைத்தவிர முழுனீள பால்கனி.
எல்லாவற்றையும் பெருக்கித் துடைத்து,
வாஷிங்க் மெஷின் போட்டு,
துணிகள் மடித்து,
பாத்திரம் தேய்த்து, படுக்கை விரிப்புகள் மாற்றி
எல்லாம் செய்வார். நாங்களும் 600 டிர்ஹாம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம்.
கிளம்பும்போது டெலிவிஷன், கணினி, டைனிங்க் டேபிள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வந்தோம்.
எப்படி இருக்கிறாரோ இப்போது.
அன்பு தனபாலன். அவர்கள் எகிப்தியர்கள். இந்தப் பெண் ஸ்ரீலங்கன்.
பாவம் ,டென்ஷன் தான்.
Post a Comment