வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
மீள்பதிவு 4'2010 ஏப்ரில்
வணக்கம்.
கிட்டத்தட்ட எட்டு பேராவது விசாரிச்சுட்டாங்க. ஏன் எழுதலை கொஞ்ச நாளா அப்படீன்னு.
ரொம்பவே மகிழ்ச்சியாப் போய், தலை கனம் கூடிடுச்சு.
அதற்காக ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவாங்களேன்னு
தங்கவேலு வசனம் பேச முடியுமா.
நம்ம எழுத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
என்னவெல்லாம் இந்த நாலு வருஷம் எழுதி இருக்கேன்னு
ஒரு சுய அலசலில் இந்தப் பத்து நாட்கள் ஓடி விட்டனப்பா.
ஆரம்பம் என்னவொ பூஜ்யம் பின்னூட்டத்தோடுதான்.
ஃபிப்ரவரி 2006 ல ஆரம்பித்த ஆங்கில வலைப்பூ ,
துளசி, மஞ்சுரார் அவர்கள் உதவியால் கலப்பைக்கு
மாறி அறுவடை செய்துதான் வரேன்.
ஆகக் கூடி நான்கு வருஷம் ஓடிப்போச்சு.
ரெண்டு பத்திரிக்கையில் நம்ம பேரு வேற வந்துடுத்தா....
கேக்க வேண்டாம். ஒரே தொலைபேசி அழைப்பும்,
இங்க வரீங்களா, அந்தப் பத்திரிகைல எழுதறீங்களான்னு ஒரே கேள்வி மயம்.:)
உறவுகாரங்களை மட்டும் நம்ப வைக்க முடியவில்லை..:)
நீயா,கதையா என்று இரண்டு மூன்று பெரியவர்கள் கேட்டார்கள்.
ஆமா ஆமா என்று ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டியதாப் போச்சு.
என் குழந்தைகள் மட்டும் பெரீயதாகத் தலை ஆட்டி ஆமோதித்தார்கள்.
நீ அப்பவே ரீல் விடுவியேம்மா.
ஒரு சமாசாரத்தையாவது கண்,காது, மூக்கு வைக்காம சொல்லுவியா.
உதாரணத்துக்கு சாலையைக் கடந்து போய்,
நடைப் பயிற்சி செய்ய வணங்கவில்லை
என்று ஒரு விஷயத்தைச் சொல்ல உன்னால்தான்,முடியும்.
பல்லவனையும், பாங்க் ஆஃப் பரோடாவையும், பக்கத்துவீட்டில் மண் கொட்டிக் கிடப்பதால் வழுக்குகிறது என்று இத்தியாதி காரணம்,++
நூறு பொய் சொல்ல முடியும்.
அத்தனையையும் கோர்வையாக விவரித்து,
''ஐய்யோ பாவம்டா அம்மா. பாவம் ,
பயிற்சி செய்ய முடியவில்லை, நாம் வேணுமானால் மாடியில் ஒரு பார்க் கட்டிக் கொடுத்துவிடலாம்'' என்று சொல்லும் அளவுக்கு வைத்துவிடுவாய் நீ!!
இப்படிப் பேசிப் பேசிப் பேசி நான் சொல்லும் எந்த விஷயத்தையும்
தலையிலிருந்து கால் வரை ஆராய்ச்சி செய்துதான் ஒப்புக் கொள்ளுவார்கள்.
ஒரே விஷயத்தைக் காலையில் ஒரு மகன் விசாரித்து வைத்துக் கொள்ளுவான்.
அதே விஷயத்தைப் பகலில் இன்னோரு மகன் ஏம்மா அப்படியா??? அப்டீனு கேட்டுப்பான்.
கடைசியா ராத்திரி பொண்ணு கேப்பாங்க. ஏதோ கேள்விப்பட்டேனே நிஜமா? என்று. எல்லோருக்கும் கையில் சிவப்பு பெரி,நீல பெரி எல்லாம் இருக்கு .உடனுக்குடன் உறுதி செய்து கொண்டு நம்மை மாட்டுவார்கள். சிலசமயம் என்னையும் மீறி உண்மையைச் சொல்லிவிடுவேன்:)
அதுக்காக இந்த வலைப்பூவை கப்சா பதிவுன்னு நினைக்கக் கூடாது நீங்க.:)
அப்பப்போ நல்ல விஷயங்களும் எழுதி இருக்கிறேன்.
இதய பூர்வமான நன்றி சொல்லி ,உங்களோட வாழ்த்துகளை எல்லாம் வாங்கிக் கொண்டு அடுத்த பதிவுக்குப் போகலாம்.:) நன்றிங்கோவ்!!

16 comments:
அடேங்கப்பா... 2006 லிருந்தே எழுத ஆரம்பிச்ட்டீங்களா? பாராட்டுகள். அதுசரி, ஆனால் 2008 இல் எப்படி நாலு வருஷம் ஆகும் என்பது என் சந்தேகம்.
நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்கள் சுவாரஸ்யம். பத்திரிகையில் பெயர் வந்ததா? என்ன பத்திரிக்கை? எப்பொழுது? என்னவென்று?
ஆஹா அடுத்த பதிவு எழுதப் போறதுக்கான ஆர்ப்பாட்டமா ?
தொடர்கிறேன் அம்மா.
மீள் பதிவு - நன்றாக இருக்கிறது மா...
நிறைய விஷயங்கள் உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள் மா...
ஓ! ஃபிப்ரவரி 2006 இப்படியெல்லாம் நடத்திருக்கிறதா...?
தொடர்கிறேன் அம்மா...
பழைய கதை மிக அருமை.
இனிய நினைவுகள்.
அன்பு ஸ்ரீராம்.
எழுதியது என்னவோ உண்மை. தமிழ் மணத்தில் ப்ரவேசம் 2006 ஏப்ரிலில்.
இப்போது அதெல்லாம் பழங்கதை.
கலைமகளிலும் ,அப்போது வந்து கொண்டிருந்த தேவதை
என்ற பத்திரிகையிலும் பதிவர்கள் சிறப்பிக்கப்
பட்டார்கள்.
நம் மைலாப்பூருக்குக் கலைமகள் தானே ஆஸ்தானம்.
அதில் அப்போது எங்கள் படங்களும் விவரங்களும் வந்தன.
2010 ஆக தேதி மாற்றிவிட்டேன். நன்றி மா.
அன்பு தேவகோட்டை ஜி, ஆமாம் ஆமாம்.
நாடகம் உலகம் எல்லாம் நம் பதிவுகளில்:)
அன்பு வெங்கட்,
மனம் தளராமல் இருக்கவே திரும்பிப் பார்க்கிறேன். செய்திகளைக்
கேட்க விருப்பம் இல்லை
நல்ல விஷயங்களை நினைவு கொள்கிறேன். மிக நன்றி ராஜா.
அன்பு தனபாலன்,
ஆமாம். நான், புதுகைத் தென்றல், எல்லோரும் வலைப் பதிவர் ஷைலஜா
அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டோம்.
அன்பு கோமதி. நம் எல்லோர் கதையும் தான்.நீங்களும்
உங்கள் வலைப்பதிவு ஆரம்பத்தையும் எழுதுங்கள்.
நன்றி மா
ஆவ்வ்வ் இவ்ளோ விசயங்கள் ஒளிச்சிருக்கோ வல்லிம்மாவுக்கும்.. என்னாலயும் தான் டக்குப்பக்கென நம்ப முடியவில்லையாக்கும் ஹா ஹா ஹா.
இல்ல வல்லிம்மா சூப்பர்ர்.. பேப்பரில் எல்லாம் எழுதியிருக்கிறீங்கள்.
என்னோடு படிச்ச ஒரு நண்பியின் அம்மா, கணவரின் கொடுமையால தற்கொலை பண்ணிக்கொண்டா, அப்போ நண்பிக்கு ஒரு 15,16 வயசிருக்கும், ஒரு தம்பி மட்டுமே.
அப்போ நாம் போயிருந்தோம், அந்நேரம் அந்த நண்பி ஒரு புத்தகக்கட்டை வைத்து சொல்லிச் சொல்லி அழுதார், அம்மா பல கதைகள் எழுதி பேப்பருக்கு அனுப்புவா, அவை எலலாம் வெளி வந்திருக்கு, ஆனா இது இன்றுவரை அப்பாவுக்குத் தெரியாது, அப்பா அறிஞ்சால் விடமாட்டார் என பொய்ப்பெயரில் அனுப்புவா.. அவ்ளோ திறமைசாலி எங்கள் அம்மா என அழுதா:(..
அன்பு அதிரா, பாவம்பா அந்தக் குழந்தை, அதான் உங்கள் தோழி. என்ன கொடுமை.
இது போல எத்தனை தாய்களோ. பழக்கங்கள் நேரே இல்லையெனில் ,பெண்கள் திருபணத்தை விட்டு விலகக் கற்க வேண்டும். என்னிடம். வேலை செய்து வந்த வேணி, தினம் ரத்தக் க்காயத்துடன் வருவாள். இன்னொரு நாள் பூவும் புன்னகையுமாக. வருவாள். என்ன என்றால்,
கண்காட்சிக்குப் போறோம்மா, காசு கொடுங்க என்பாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனும் போய்ச் சேர்நதான்.
அம்மா அதாவது வல்லிம்மாவைப் பற்றி எழுதி இருந்தார்கள் . நான் எந்தப் பத்திரிக்கைக்கும் கதை அனுப்பியதில்லை:)
நமக்குத் தெரிந்தது இந்த ப்ளாக் ஒன்றுதான் .நன்றி ராஜா.
நேரம் மாறி இருக்குமே அதிரா. மீண்டும் நன்றி.
யேச்ச்ச் மாத்தியாச்சு நைட் வல்லிம்மா...
நல்லிரவுக்கான வணக்கம் அன்பு அதிரா. இறை எல்லோரையும் காக்கட்டும்.
Post a Comment