Blog Archive

Sunday, January 05, 2020

மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர்.

வல்லிசிம்ஹன் .

எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர்.


No photo description available.

ஸ்ரீ கோதை நாச்சியாருக்கு கண்ணன் தரிசனம் கிடைத்தும் அவன் எழுந்து வருவதாகக்  காணோம்.

தேவர்களுக்கெல்லாம் தானே முன்வந்து அவர்களுடைய கவலைகளை 
போக்கும் கண்ணா, உன் அருளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று இந்தப் பாசுரத்தைப் பாடுகிறாள் .

முப்பத்து மூவர் அமரரக்கு  முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலி யே துயில் எழாய்.
செப்பமுடையாய் திற லுடையாய் துயிலெழாய்  /செற்றார்க்கு
 வெப்பம் கொடுக்கும் விமலா,..துயிலெழாய்//
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல் 
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய் 
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை 
இப்போதே எம்மை  நீராட்டேலோ ரெம்பாவாய் //

கண்ணா நீ கசிந்துருக வேண்டாமா.?
இந்தச் சிறுமி தன்  சொல்வன்மையால் உன்னைப்  பாடி உருகுகிறாளே !
நீ வரவேண்டாமா என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா.

முப்பத்து முக்கோடி மக்களின் துன்பங்களையும் தீர்க்கும் நாராயணா, கண்ணா,கோவிந்தா துயில் எழுவாய்.
 உன்னுடன் பகை கொண்டு உன்னை அழிக்க நினைப்பவர்களுக்குத் தழலாக இருந்து அழிப்பவனே.தயிலெழுவாய் 
நுண்இடை கொண்டு நளினமாகத் துயிலும் நங்காய் நப்பின்னையே திருமகளே துயிலெழுவாய். 
உன் மணாளனுக்கு செய்ய வேண்டிய  சேவைகளைச் செய்யவும் 
செய்து எங்கள் நீராட்டுக்கும் வழி செய்வாய் அம்மா. 
இது முன்பு நான் எழுதியது.

தன் சிந்தைக்கு மாறாய்ச் சிந்திப்பவர்களுக்கு
வெந்தணல் எனக் கோபம் காட்டுவான்.
அம்மா, திரு மகளின் மறு பிறப்பே நப்பின்னைப் பிராட்டித் தாயே
உன் மணாளன் கண்ணனை எங்கள் மார்கழி நீராட்டத்துக்கு
அருள முகம் பார்க்கும் கண்ணாடி ,மற்றும் மங்கலப் பொருட்களுடன்
எங்களிடம் அனுப்பி வைப்பாயாக.
கோதா தேவி என்றும் தன்  மணாளனுடன் 
சுகித்திருக்கும் வில்லிபுத்தூர் செல்வோம்.

ஸ்ரீ வேதாந்த தேசிகர்,
ஆண்டாளைத் துதிக்கும் பொது,
ஸ்ரீ ரங்கராஜன் எனும் சந்தன மரத்தைப் பற்றிப் பிணைந்திருக்கும் வல்லி க்கொடியே கோதாய் ,
ஸ்ரீ விஷ்ணுசித்தரின் மகவாய்ப்  பிறந்து, தயை,பொறுமை மஹாலக்ஷ்மி, பூமாதேவி 
எல்லாவற்றின் வடிவாய் ஸ்ரீரங்கத்து நாயகியானாய்.
உன்னைவிட சரணம் வேறு யார் என்கிறார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


9 comments:

Geetha Sambasivam said...

எளிமையான அழகான சுருக்கமான விளக்கம். நன்றி.

ஸ்ரீராம். said...

படித்தேன், ரசித்தேன்.

கோமதி அரசு said...

பாடலும் விளக்கமும் மிக அருமை.

துரை செல்வராஜூ said...

சிறப்பு...

ஆண்டாள் திருவடிகள் போற்றி..

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கீதாமா, நம் ஊரில் இன்று வைகுண்ட வாசல் திறந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

மிகி மிக நன்றி ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. ஆண்டாள் அருளால் இந்த முப்பது நாட்களும் ஒழுங்காக எழுத வேண்டடும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, வந்து படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

கேட்கவும் படிக்கவும் இனிமையான பாசுரம்... படித்தும் கேட்டும் ரசித்தேன் மா...

தொடர்ந்து பகிர்ந்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.