Blog Archive

Saturday, January 04, 2020

கோதை நாமம் வாழி.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழவேண்டும்.
Image result for SRI ANDAL VATAPATRA SAYEE
வடபத்ர சாயியின் அழகு சொல்லி முடியாது .
இதுதான் பச்சை மாமலை  போல் மேனி என்று சொல்லத்
தோன்றும்.

அருகிலேயே ஆண்டாளும்  ஸ்ரீதேவி,நீளா  தேவி என்று அங்கிருந்தனர்.
கண்கள் திறந்தே  இருக்கும் அழகின் ஒய்யாரம் இன்னும்  மனத்தில் நிற்கிறது.
இவருக்கு அல்லவோ கோதை ,  மாலை சூடிக் கொடுத்தாள் !
அந்தச் சின்ன வயதில் வரித்த   மணவாளனை,
தன்னுடைய 12 வயதில் ....... ஒரு

இளங்காலை நேரத்தில் வரச்  சொல்லிக் கிளியிடம் தூது சொல்லி அனுப்புகிறாள் ஸ்ரீரங்கராஜனுக்கு.

அவரும் பொழுது விடியும் முன்னரே
கருடன் மேலேறி மாப்பிள்ளையாய்  வந்து இறங்கத்
திருமணம்  நடந்தேறுகிறது.

அப்புறம்  என்ன நடந்தது என்று கேட்பதற்கு முன் வேறு சந்நிதி வந்துவிடப் பாதியில் கதையை நிறுத்தினார் ஈஸ்வரன் என்ற அந்த வழி காட்டி.

Image result for KOTHAI NACHIYAR

அங்கு கடைகளில் ஆண்டாளையும் கண்ணனையும் 
சேர்த்தே பொம்மைகளாக விற்கிறார்கள்.
கோதை நாமம் வாழி.








6 comments:

கோமதி அரசு said...

//அருகிலேயே ஆண்டாளும் ஸ்ரீதேவி,நீளா தேவி என்று அங்கிருந்தனர்.
கண்கள் திறந்தே இருக்கும் அழகின் ஒய்யாரம் இன்னும் மனத்தில் நிற்கிறது.//

மிக அழகாய் இருப்பார். கண்கள் அழகு.


கோதை நாமம் வாழி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு மா...

தேர்ந்தெடுத்து பகிர்ந்த படங்களும் அழகு.

தொடரட்டும் பக்தி உலா.

Geetha Sambasivam said...

சட்டுனு முடிச்சுட்டீங்க போல! சுருக்கமான பதிவு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,இன்னோரு தடவை போய் வரும் போது என்னையம் நினைத்துக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிக நன்றி மா. இனிதான் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.பேரனுக்கு சளிஜுரம் வந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா. முப்பத்து மூவர் பதிவின் வால் இது. மீண்டும ப்ளாகர் தகராறு. நன்றி மா. இனிய காலை வணக்கம்மா.