Blog Archive

Friday, March 29, 2019

அன்னையின் வழி என்றும் நலம்.4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .






லலிதாவுக்கு அந்தப் பள்ளியின் சூழ்நிலையும்
தலைமைப் பொறுப்பில் அப்போது இருந்த சகோதரியையும் மிகவும் பிடித்து விட்டது.

எல்லோருக்கும் அன்னையாக இருந்த மதர் சுப்பிரியர் அவளை அன்புடன் ஆசீர்வதித்தார்.
மகளே , உன் வாழ்வு சீரடையும். கடவுளிடம் ஈடுபாடும் கற்கும் கல்வியில்  முயற்சியும் இருந்து வெற்றி பெறுவாய். உலகத்தின் உன்னதத் தொழில் கல்வி  கொடுப்பது.
மென்மேலும் அபிவிருத்தி கிடைக்கும் .வாழ்வு உயர்ச்சி அடையும். வெகு நாட்களுக்குப் பிறகு மனம் லேசாவதை உணர்ந்தாள் லலிதா.

வீட்டுக்குத் திரும்பும்போது சாந்தாவின் அலட்சியம் மனதை உறுத்தினாலும்  மாமா,மாமியின்  அன்பும் அண்ணாவின் ஆதரவும் எப்பொழுதும் உண்டு என்பது சிறிது ஆறுதல் அளித்தது.

அங்கே சாந்தா அன்னையைச் சொல்லால் பொரிந்து கொண்டிருந்தாள்.
கணவனை இழந்த ஒரு மாதத்தில்  கருத்தரித்திருக்கும்  என்னைப்  பார்க்க எப்படி இங்கு வருவாள்.
சென்னையில் இல்லாத கல்லூரியா.

அவள் முன் நானும் என் கணவரும் எப்படி  முன் போல்
சகஜமாக இருப்பது.

அவருக்கும் தங்கையைப் பார்த்து வருத்தம் வருமே. என் குழந்தை நன்றாக வளர வேண்டாமா.

இன்னும் என்னென்னவோ சொல்லி அன்னையைத் திகைக்க வைத்தாள் .

அழகம்மா  இத்தனை வேதனைப் படாதே. உன் உடல் நிலைக்குச் சரி வராது. பெண்ணுக்குப் பெண்ணே இவ்வளவு பேதம் பார்க்கலாமா. அவளுக்கும் இப்போதுதான் 32 வயதாகிறது. நீயும் அவளுடன் வளர்ந்தவள் தானே.
சென்னையில் இருக்க முடியாமல் இங்கே வந்திருக்கிறாள் .
விடுதியில் தங்கப் போகிறாள்

உன் நிம்மதிக்கு ஒரு கெடுதியும் வராது
சரவணன் நிலையை நினைத்துப் பார். தங்கைக்காக எவ்வளவு வருந்தினான்.
நல்ல பெண்டாட்டியாக இருக்க முயற்சி செய் குடும்பம் தழைக்கும்.
லலிதா   மேன்மையான பெண்.
யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாள். என்று சொல்லி முடித்தாள்.

உபதேசம் செய்யாதேமா. திருமணம் ஆனதும் தனியாகச் சென்றிருக்கணும்.
அப்பா சொல் பேச்சு கேட்டு இங்கே தங்கினேன்.

எனக்குப் பிடிக்கவில்லை என்று  தன்  அறைக்குள்
போய்விட்டாள் .

நல்லதையே நினைக்கும் அழகம்மையின் மனம் வருந்தியது.
வாயிலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு

      சரவணன். என்ன   அத்தை, லல்லி வந்து விட்டாளா. எப்படி இருக்கிறாள்.
என்று ஆவலோடு கேட்டவனை
உள்ள வாப்பா. லல்லி சுகமாக வந்தாள் . ஹோலிகிராஸுக்கு மாமாவும் அவளும் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் என்று அவனுக்கு காபி பலகாரம் எடுத்துவைக்க உள்ளே விரைந்தாள்.

அவள் வெளியே வந்த பொது சிந்தனை தோய்ந்த முகத்துடன் சரவணன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.

கேள்விக்குறியோடு அத்தையை நோக்கினவனுக்குக் குழப்பம் தான் அதிகரித்தது.

சைகையால் அவனை அமைதி படுத்திய அழகம்மை,
கணவரையும் ,லல்லியையும் உள்ளே வரவேற்றாள்.
அண்ணா எப்ப வந்த என்று அழைத்தபடி உள்ளே வந்தவள், அமைதியாக    அருகில் சென்று அணைத்துக் கொண்டாள்.
சரவணனின் கண்கள் நிரம்பியது.

சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றி போல, என்ன டீச்சரம்மா என்று சிரித்தான். ஒரே மாதத்தில் இளைத்த உருவமும்,இறுகிய முகமும் வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் இருந்தது.

மாமாவை நோக்கி அவர்கள் லல்லிக்கு அட்மிஷன் கொடுத்துவிட்டார்களா என்றான்.
பின்ன என்னன்னு நினைச்ச என் மருமகளை.
திங்களன்று பள்ளியில் சேரனும். ஞாயிறன்று விடுதியில் சேரனும்.
பணம் எல்லாம் ரெடியாகக் கொண்டு வந்திருக்கிறாள் உன் தங்கை.

எனக்கு ஒரு பைசா செலவில்லை என்று சிரித்தார் சோமு மாமா.
 நீங்கள் இருப்பதால் தான் மாமா வந்தேன்.
உங்கள் உதவி இல்லாமல் என் வாழ்வு  எப்படி இந்தப் பாக்கியத்தைப் பெறு ம் என்று மாமியையும் மாமாவையும் நிற்க வைத்து வணங்கினாள் .

அதற்குள் அறையிலிருந்து சாந்தாவின் குரல் கேட்டது. சரூ ..... எனக்கு மீண்டும் தலை சுற்றுகிறது.

இன்று  டாக்டரை ச் சந்திக்கலாமா என்று  கேட்டது.
ஓ போகலாம் மா. இங்கே வாயேன். எல்லோரும் வராந்தாவில் உட்கார்ந்து பேசலாம்
என்று அழைத்தான்.

பதிலில்லை.
லல்லி,,,,, மாமா என்னுடைகளைச் சீர் செய்து கொள்கிறேன். இன்னும் சில தேவையான பொருள்களையும் வாங்கி கொள்கிறேன்.
முக்கியமாக  திருவானைக் காவல் போய் வர வேண்டும்.

அவள் அனுமதியோடு என் பயிற்சி ஆரம்பிக்கட்டும் என்றாள் .

நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் லல்லி.இப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள்  லிஸ்ட் தயார் செய். மதியத்துக்கு மேல் போகலாம் என்றான்.

சரியண்ணா என்ற படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்  லல்லி.

அவள் எதிர்பார்த்தபடி சரவணனால் வரமுடியவில்லை.
தானே ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு, கையில் தயாராய் இருந்த, பயிற்சிக்கான உபகரணங்கள் கொண்ட லிஸ்டும், இரு சேலைகள், தன்  குளியல் சாதனங்கள் என்று  வாங்கி கொண்டு
திருவானைக் காவலும் போய்விட்டு வீடு நோக்கி வந்த பொது மணி இரவு ஏழாகி  இருந்தது.
எதிர் நோக்கி ,முகத்தில் கவலையோடு அமர்ந்திருந்தனர் மாமாவும் மாமியும்.







.


14 comments:

ஸ்ரீராம். said...

பாவம்தான் லலிதா. அவளை மாதிரி இன்னொரு பெண்ணே பேதம் பார்த்தால் எவ்வளவு சங்கடம்?

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... தொடர்கிறேன் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

இந்தக் கதையின் காலம் 1977 என்று எழுதி இருந்தேன் ஸ்ரீராம்.
சில விஷயங்கள் மாறுவதே இல்லை. லலிதாவை விட சாந்தா சிறியவள்.
பக்குவம் போதாது. மூட நம்பிக்கைகள் இன்னுமே போகவில்லை.
42 வருடங்களுக்கு முன் பெருந்தன்மை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

தைரிய லக்ஷ்மி கூடவே இருக்கணும். அது இல்லாமல்
வாழ்வை நடத்த முடியாதுமா.நன்றி ராஜா. எவ்வளவு எழுத்துப் பிழைகள்
இப்போதுதான் திருத்தினேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். பழைய பதிவுகளை எல்லாம் கோப்புகளாகச் செய்து வரும்போது பார்த்தேன் நீங்களும் மற்றவர்களும் பின்னூட்டம் தவறாமல் இட்டு வந்திருக்கிறீர்கள்.
மனம் நிறை நன்றி மா.

Geetha Sambasivam said...

அருமையாய்ச் செல்கிறது. இப்படிச் சொந்தக்காரப் பெண்ணே தன் சொந்த அத்தை பெண்ணை வெறுத்தால்? என்ன செய்ய முடியும்? அப்படியும் ஓர் காலம் இருக்கத்தான் செய்தது.

இதை நீங்கள் முன்னரே எழுதி இருக்கிறீர்களா? எனக்கு நினைவில் இல்லை புதுசாக இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் கீதா.
இப்போது எழுதுவது எல்லாமே புதிதுதான்.

எழுதாமல் இருக்க முடியவில்லை.
குடும்பங்களில் இது சகஜம் தானே.
அம்மா காலத்தில் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பிறகு வந்தது இந்த பொஸஸிவ்னஸ் எல்லாம்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

அடடா... இப்படி யோசித்திருக்கிறாரே அந்தப் பெண்.... நல்லதே நடக்கட்டும்.

கோமதி அரசு said...

அந்த காலத்தில் என் மாமியாருடன் நாந்தனார்கள் வெள்ளை சேலை அணிந்து வீட்டிலும் வெளியூர்களிலும் இருந்தார்கள், மாமனார் அவர்களுக்கு உதவி செய்து வருவார்கள். அவர்களும் தம்பி வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். ஒரு அத்தைக்கு குழந்தைகள் இல்லை தம்பி குழந்தைகள் தான் தன் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வார்கள்.

என் மாமியாரும் அவர்களை கடைசி காலத்தில் நன்கு பார்த்து கொண்டார்கள்.

முன்பு எல்லாம் எல்லோர் வீட்டிலும் இப்படி சகோதர்களை அண்டி வந்தவர்கள் இருந்தார்கள் .

நீங்கள் சொல்லும் காலத்தில் இருந்த அன்பு, பராமரிப்பு குறைந்து இப்போது இல்லவே இல்லை என்று ஆகி விட்டது.

முன்பு போல் இல்லாமல் தன் காலில் தான் நிற்கும் வேலை, படிப்பு, தன்னம்பிக்கை, அல்லது வேறு துணை என்று இருக்கிறார்கள்.

உங்கள் கதை நன்றாக இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

பெண்ணிற்கு பெண்ணே எதிரி என்று சொல்லப்படுவதுண்டே. இது முரணான ஆச்சரியமான விஷயம்.

என் பாட்டி அம்மா காலத்தில் எல்லாம் கூட்டுக் குடும்பம் பெண் விதவையானால் அம்மா வீட்டில் இருப்பது, சகோதரர்கள் கவனிப்பது என்பதெல்லாம் சகஜமாக நடந்தது. பிறந்த வீட்டில் நான் கல்யாணம் ஆகுவ் வரை கூட்டுக் குடும்பம்.

இப்போது அப்படியான குடும்பங்கள் அரிது!

சாந்தா மனம் மாறுவாள் என்று நம்புவோம்...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாரே அன்பு வணக்கம். வருகைக்கு அனேக நன்றி .வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,

நன்றி ராஜா. மனித மனம் ,அதுவும் பெண்மனம் எப்படி எல்லாமோ நினைக்கிறது.
புத்திசாலிகள் கஷ்டங்களைச் சீக்கிரம் கடப்பார்கள்.
சில நபர்களுக்கு அவ்வளவு விசால மனப்பான்மை இருக்காது.
நாம் கடந்து போக வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, மிகப் பெரிய உண்மை அதுதான்.அப்பொழுது பொறுமையும்
தாராள மனம் கொண்டவர்கள். தன் குடும்பம் தன்னுடைய பொறுப்பு என்று

உணர்ந்த பெண்கள்.
எங்கள் வீட்டிலும் ஒரு சித்தப்பா மறைந்து விட்டார் மிகச் சிறிய வயதில்.
அந்த சித்தியும் அவர்களது மூன்று குழந்தைகளையும்
வளர்க்கும் பொறுப்பை அப்பாவும் இன்னோரு சித்தப்பாவும் எடுத்துக் கொண்டார்கள்.
இரு பெண்களுக்குத் திருமணம் செய்யும் வரை
இது நீடித்தது.

கிராமத்து வீட்டை விற்று அவர்களுக்கே கொடுத்து விட்டார்கள்.

இந்தக் கதையும் சரியாக இருந்திருக்கலாம். மன வித்தியாசம்
தடுக்கிறது. இன்னோரு உயிரிடம் தயவு வைத்தால் எல்லாமே
சுகம் தான். நான் சொல்லும் குடும்பத்தில் நீங்கள் சொல்வது நடந்தது. ஆனால்
என்னைப் பொறுத்தவரை பெண்கள் தைரியம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா. ,
மேலே கோமதியிடம் சொன்னது போலத்தான். கூட்டுக் குடும்பத்தில் அந்த மன நிலை வளர ஏதுவாகப் பெரியவர் பணிதல் இருந்தது. ஈவு,இரக்கம், தாராளம்,கருணை எல்லா நல்ல குணங்களும்
உலவிய காலம்.

பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரியாக முடியும் ஒரு குடும்பத்தில்.
தன்னுரிமைக்கும்,பாசத்துக்கும் போங்கு போட யாராவது வந்தால் , தன்னிடமே சுயமதிப்பு வைத்திருக்காத பெண்கள் மற்றவர்களை எதிரியாக நினைப்பதில் வியப்பில்லை.
ஏற்கனவே துர்க்குணி. இதிலே வேற கர்ப்பிணின்னு மாமியார் அடிக்கடி சொல்வார்கள்.

லலிதாவுக்குத் தைரியம் இருந்தால் வெற்றி பெறுவாள்.
நன்றி ராஜா.