Sunday, September 23, 2018

மஹாலய பக்ஷம்

Vallisimhan
மஹாலய  பக்ஷம் 
ஆரம்பிக்கிறது.

பித்ருக்கள், தேவர்கள்,வசுக்கள் எல்லோரும் நதி தீரத்தில்வந்து காத்து இருப்பார்களாம்.
இந்தப் பவுர்ணமி தினத்திலிருந்து அமாவாசை வரை.

எனக்குத் தெரிந்து தினமும்மே அர்க்கியம் விடுபவர்கள் இருந்திருக்கிறார்கள்.

நம்மைப் பொழிந்து வளர்த்தவர்களு க்கு 
இந்த பக்ஷத்தில்  எள்ளும் நீரும் கொடுத்து 
வணங்கலாம்.
ஏழைகளுக்குத்துணிமணி தானம் ,உணவு தானம் செய்யலாம்.
எல்லாவற்றையும் விட உயிரோடு இருக்கும் முதியவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம்.
இங்கு ஒருவர், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களைக் கண் பரிசோதனை செய்ய அழைத்துப் போய் 
கண்ணாடியும் வாங்கி கொடுக்கிறார்.

பூலோகத்தை விட்டுச் சென்ற உயிர்களுக்கு மட்டுமில்லாமல் இருக்கும் உயிர்களுக்கும் நன்மை செய்யும் 
மனம் நமக்கு வரட்டும்.

No comments:

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...