Blog Archive

Saturday, September 22, 2018

சீதா கல்யாண வைபோகமே..6

Vallisimhan
எல்லோரும்  இன்பமாக  வாழ வேண்டும் 

   அடுத்த நாளும் வந்தது. ரங்கனாதனும்  சென்ட்ரலுக்குக்
கிளம்பிப் போனார்.

அங்கே ரயில் பயணத்திலேயே  பேசித் தீர்த்தார்கள் ரகுராமனும் சீதாவும்.
அவர்களது  பழக்க வழக்கங்கள், மதம், வணங்கும் தெய்வங்கள், உணவு முறை எல்லாம் 
ஒளிவு மறைவில்லாமல் சொன்னான் ரகுராமன்.

தங்கள் பிரிவு இந்து ஜெயின் மதக்கலப்பு என்றும், தன் பாட்டி இன்னும் த்வாரகா வருவதை
வழக்கமாக வைத்திருப்பதையும் சொன்னான்.
அவர்களின் ஆசார வழக்கங்கள் தங்கள் வீட்டை விட மேலாக இருப்பதை அறிந்து 
அதிசயப் பட்டாள். அவர்கள் உணவில் பூண்டு வெங்காயம் கூடக் கலப்பதில்லையாம்.
சீதாவுக்குக் கொஞ்சம் கலக்கம் கூட வந்தது.
தன் குடும்பத்தை அவர்கள் ஒத்துக் கொள்வார்களோ என்று.

ரகுராமன் சிரித்துவிட்டான். அவ்வளவு குறுகிய மனம் கொண்டவர்கள் இல்லை
என் குடும்பத்தினர். எப்போது உன்னைப் பார்க்கிறார்களோ
அப்பொழுதே  சம்மதித்து விடுவார்கள்.

இப்பொழுதாவது சொல்வியா ,உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா
அதற்குப் பதில் சொல்வது   போலத் தலையை ஆமாம் என்று 
அசைத்தாள். முகம் முழுவதும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
 ஓகே. Let us seal the deal  என்று கைகளை நீட்டினான்.
சுற்று முற்றும் பார்த்த சீதா யாரும் இல்லை என்று
பார்த்துவிட்டு  தன் கைகளை அவனிடம் ஒப்படைத்தாள்.

சிவந்து போன அவள் முகத்தைப் பார்த்து தானும் மகிழ்ச்சியில் 
அமிழ்ந்தான் ரகுராமன்.

பின்னிருந்து கைதட்டல் வண்டியை மீறி வெளியே ஒலித்தது.

 எப்போது திருமணம்  என்று ஒரே கோரசாகக் குரல்கள்
கேட்டன. மேம் சாப் சொன்ன நாள் என்றான் ரகு..

அதன் பிறகு ஒரே உற்சாகக் குரல்கள் வாழ்த்துகளைச் சொல்ல சென்னை வந்தடைந்தனர்.

ரங்கனாதனுக்கு மனதில் இருந்த  கவலை எல்லாம், ரகுராமனையும் சீதாவையும் கண்டதுமே
பறந்துவிட்டது.

பத்மனாபன்  அவரைப் பார்த்து, உங்களுக்கு மாப்பிள்ளையைக் கொண்டுவந்த 
விஸ்வாமித்திரர் நான் தான் என்று சிரித்தார்.

அடுத்த ஒரு மாதத்தில் ரகுராமனின் பெற்றோர்கள் வர,
செல்லிப் பாட்டி உட்பட அத்தனை குடும்பத்தினரிடமும்
அப்ரூவல் வாங்கி விட்டார்கள்.
 தை பிறந்ததும் திருமணம் ரங்கனாதன் வீட்டு வழக்கப் படியும் முறைப்படியும், ஆர்ய சமாஜ் முறைப்படியும்
செய்வதாகத் தீர்மானமானது.

அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றனர் தம்பதியினர்.
இந்தியா மாரிஷியஸ் என்று இரு குடும்பங்களும் பறந்து கொண்டிருந்தனர்.

செல்லிப் பாட்டிக்கு, ரகுவம்ச ராமனே தன் பேத்தியை மணந்ததாக
ஆனந்தம் பொங்கியது. 
அனைவரும் இந்தத் தம்பதிகளுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.

No comments: