எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
பெண்ணுக்கு மட்டும் தான் பொறுப்புகள்,கவலைகள்
என்றில்லை.
ஆண்களுக்கும் உண்டு.
வேறு வேறு விதமான கவலைகள். இன்ப துன்பங்கள் பிரார்த்தனைகள்.
முந்தின பதிவில் சூது செய்யும் தீவினை எழுதி இருந்தேன்.
இந்தப் பதிவில் என் தம்பி முரளி தன் நண்பனுக்காகச் செய்த
பட்ட பாடுகளை எண்ணுகிறேன்.
கல்கத்தாவில் அவனுக்கு பாட்டா அலுவலகம்+ஃபாக்டரியில்
வேலை.
பி//வியாஸ் என்று ஒரு அலுவலக நண்பன். திருமணமனமானவன்.
பெங்காலி.
அவனுடன் டார்ஜிலிங்க் ,ஷிம்லா எல்லாம் போய் வந்திருக்கிறான்.
அவனுக்கு பான், பியர் எல்லாம் வழக்கம் போல இருக்கு அதாவது நண்பனுக்கு.
குடும்பத்துடன் இருக்கையில் கட்டுப்பாடுடன் இருப்பான். தோழர்களுடன் சேர்ந்து விட்டால்
தண்ணீர் பட்ட பாடு தான்.
ஆரம்பத்தில் முரளி இதை ஆமோதித்தாலும், பிறகு விலக ஆரம்பித்தான்.
நண்பனின் மனைவி மிக அறியாத பொண்ணுன்னு சொல்வார்களே
அந்த வகை.
அண்ணா அண்ணா என்று ஒரே உபசாரம்.
துர்கா பூஜாவை ஒட்டி, அந்தப் பெண்ணின் ..அவள் பெயரும் துர்கா தான்,
தந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டமும் சேர்ந்தன.
மாமனாரின் பிறந்த நாளன்று மாப்பிள்ளை வ்யாசைக் காணவில்லை.
பரிசுகளுடன் சென்ன்ற முரளியிடமே துர்கா கேட்கிறாள்.
நேற்றூ ஏதாவது பார்ட்டியா ,இவரைக் காணோமே.
உறவுகாரர்கள் கேட்பார்களே. வீட்டிலிருந்தால் அழைத்து வருகிறீர்களா
என்று கேட்கவும் ,சங்கடமாகிவிட்டது தம்பிக்கு.
அவன் விடுமுறைக்குச் சென்னை கிளம்ப கோரமாண்டலில்
டிக்கெட் எடுத்துக் கிளம்ப தயாராக இருந்தான்.
அக்கா,அம்மா,சிங்கம் எல்லோருக்கும் அன்புப் பரிசுகள்
வாங்க வேண்டும். அடுத்த நாள் ஹௌராவில் 12 மணிக்கு
வண்டி ஏறவேண்டும்.
அப்பாவி முரளிக்கு மறுக்கக் கூடத்தெரியாது.
சரிம்மா நான் பார்க்கிறேன் என்பதற்குள் வாசலில்
கலகலப்பு. மாப்பிள்ளை வியாஸ் வந்தாச்சு.
துர்கா விரைந்தால். பின்னாடியே முரளியும் செல்ல
அவர்கள் கண்டது ,தன் வண்டியில் உட்கார்ந்திருந்த வியாஸ்
மது வாசத்தோடு உளறிக் கொண்டிருப்பதை.
துர்க்கா இதை எதிர்பார்க்கவில்லை.
அண்ணா இவர் இப்படியே உள்ளே வந்தால்
அவமானமாகிவிடும்,
பரிசு வாங்கச் சென்றிருப்பதாக நான் சமாளிக்கிறேன்.
நீங்கள் அவருடன் சென்று தெளிவானதும் வாருங்கள்
என்று தயவாய்க் கேட்டுக் கொண்டாள்.
திகைத்துப் போன முரளியை, வியாஸ் சத்தம் போட்டு அழைக்கிறான்.
ராகவன்//// கமான். என் பாஸின் புது வண்டி.
என்னை டெஸ்ட் ரன் எடுக்கச் சொன்னார். நீயும் வா
வேறு வழியில்லமல் ஏறிக்கொண்ட முரளியுடன்
வண்டி பறந்தது. அதுபோய் நின்ற இடம்
ரவீந்திர சரோவர். கல்கத்தாவின் மாபெரும் ஏரி.
வண்டியின் எஞ்சினை நிறுத்தாமல் இறங்கிவிட்டான் வியாஸ்..
அது ஒரு சரிவில் நின்றதால் பின்னோக்கி நகர ஆரம்பித்தது.
முரளியால் கதவைத் திறக்க முடியவில்லை.
கடைசியாக ஏதோ மரத்தில் மோதி நின்றது.
பாவம் முரளி. உடலே அதிர்ந்திருக்கும்.
நசுங்கின கதவை எப்படியோ திறந்து வெளியே வந்து
வியாசைத்தேடினான். அவனோ பான் வாலாவிடம்,
மேலும் போதை ஏற்றிக் கொண்டிருந்தான்.
அவசரமாக அவனை நெருங்கிய முரளி கார் இருக்கும் நிலையைக் காண்பித்ததும்
அந்தக் கோழை அரண்டுவிட்டான்.
இது போலீஸ் கேசாகிவிடும் என் வேலை போய் விடும்.
நீ இந்த வண்டியை கம்பெனியில் கொண்டு போய் விட்டு விடு என்று உளற
ஆரம்பித்தவன் ஓடவும் முயற்சித்தான்.
இன்னும் இரு ஆட்கள் துணையோடு, அவனைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிப் போட்டு,
வண்டியையை விடுவிக்க ,பணிமனை ஒன்றுக்குத் தொலைபேசி அவர்கள் வருவதற்குள்
வியாசைக் கட்டுப் படுத்துவது கடினமாக இருந்தது,.
பணிமனை ஆட்கள் ,சிரமப் பட்டு எடுத்த வண்டி நல்ல வேளையாக
இயங்கும் கண்டிஷனில் இருந்தது.
உளறியபடி இருந்த வியாசை வண்டியில் ஏற்றி, அலுவலகத்துக்குப் போனால்
மேலதிகாரி ,விவரங்களைக் கேட்டு,இதைப் போலீஸ் தான் விசாரிக்கணும்.
வியாஸ் செய்தது பெரிய தப்பு என்று இரைய ஆரம்பித்தார்.
போலீசும் வந்தது. உறங்கிவிட்டிருந்த வியாசை அருவருப்புடன் பார்த்தவர்களிடம்,
முரளி மன்றாடி,
அவர்கள் குடும்ப கௌரவமே போய்விடும்.
இப்போதைக்கு அவனை விடுவியுங்கள். நாளை அவன்
தன் நிலைக்கு வந்ததும் பொறுபெடுத்துக் கொள்வான்
என்று பாட்டா டைரக்டரிடமும் கேட்டூக் கொண்டான்.
நீ ஜவாப்தாரி. அவன் இந்தச் சேதத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும்.
என்றதும் தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாயைப் பணிமனைச் செலவுக்குக் கொடுத்துவிட்டு,
வாடகை வண்டியில் வியாசை ஏற்றி,
துர்க்காவிடம் கொண்டு சேர்த்தான்.
யாருக்கும் தெரியாமல் அவள் அவனைப் பின்புறம் அழைத்துச் சென்று ஆசைதீற ஷவரில் நிற்க வைத்து வசைமாறி பொழிந்ததும்
ஒரு மாதிரி அரை நினைவுக்குத் திரும்பினான்.
ராகவன் எங்கே என்று கேட்டிருக்கிறான்.
பிறகு தேடினால் ராகவன் அங்கே இல்லை.
நடந்ததை எழுதி துர்காவின் அம்மாவிடம் கொடுத்துவிட்டுக்
கிளம்பிவிட்டான்.
அடுத்தனாள் வண்டி ஏறும் வரை அவன் படபடப்பு அடங்கவில்லை.
சென்னை வந்து என்னிடம் சொன்னபிறகே ஆஸ்வாசப்பட்டான்.
வண்டி மோதின அதிர்ச்சி,போலீஸ் என்று ஒரே சங்கடம். 23 வய்தில்
இதெல்லாம் அப்போது அந்தக் காலத்தில்
நேர்மையான மனிதர்களுக்குக் கஷ்டம் தானே.
பெற்றோருக்குக் கூட இந்த விஷயம் தெரியாது.
பயக்ருத் பய நாசனனே காப்பாற்றினான் என் அருமைத் தம்பியை.

Add caption |
Add caption |
13 comments:
வித்தியாசமான அனுபவம் - அதுவும் அந்தச் சிறு வயதில். அந்த வயதில் குடும்பத்தை விட்டு வெளியூரில் சென்று வேலை பார்த்ததும் ஆச்சர்யம்தான். அந்த நண்பர் அப்புறமாவது திருந்தினாராமா இல்லையாமா?
வரணும் ஸ்ரீராம்.
சின்ன வயசுதான்.
15 வயதில் பள்ளி முடித்து 16 வயதில் ஐஐடி சேர்ந்து,21 வயதில் பாட்டா
ஜூனியர் இஞ்சினீயராக வேலைக்குச் சேர்ந்தான்.
படிப்பில் ,வேலையில் எல்லாவற்றிலும் ஆர்வம்.
என்னை எஸ்கார்ட் செய்து அப்பா இருக்குமிடத்துக்கு
அழைத்துப் போவதும் இந்தப் பெரிய மனுஷந்தான்
செய்யணும்.
அந்த வியாஸ் ,திருந்தவில்லை.
நன்றாகவேகுடியும் குடித்தனமாக இருக்கிறார்.
இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வசதியாக இருக்கிறார்.
சென்னை வரும்போது ,ரசகுல்லா,சந்தேஷ் என்று கொடுத்து விட்டுப் போவார்.
ஆஹா! காலையில் நம்பெருமாள் தரிசனம்! வியாஸ் போன்றவர்கள் திருந்துவது கடினம்.
ஆமாம் கீதா. திருந்தத்தான் இல்லை.
என் தம்பி தட்சண்யம் காரணத்தால்
அமைதி காத்தான். அது போன்ற குணம் கொண்டவர்கள்
மாற சந்தர்ப்பம் இல்லை.
உதவுபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் சோதனை இதுதான்.
வாழ்க்கையில் சில மனிதர்களுடன் முக தட்சண்யத்தோடு வாழ வேண்டி உள்ளது.
உங்கள் தம்பி போல் நல்ல நட்பு கிடைத்தும் திருந்தவில்லையே!
அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக்காலத்திலும் நேர்மையானவர்கள் பாடு திண்டாட்டம்தான்.
ஐயையோ... இந்த விஷயத்திலெல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்கலாமா? உங்கள் தம்பி முரளி, மிகுந்த உதவி செய்யும் சுபாவம் கொண்டவர் என்று நினைக்கிறேன். நான் அந்த இடத்தில் இருந்தால், வியாசின் மனைவி சொல்லும்போதே, 'விடு ஜூட்' என்று காணாமல் போயிருப்பேன். (எங்க ஊரில், டியூட்டி ஃப்ரீல 2 லி மதுவும், 6 பியர் டின்னும் வாங்கலாம். அது உள்ளூர் விலையை விட மிகவும் குறைவு. என் பாஸ் ஒரு தடவை ஒரு பிராண்ட் வாங்கிவரச் சொன்னார். நான் அவரிடம், இதுவரை பாட்டிலைத் தொட்டதில்லை. உங்களுக்காக வாங்கி வருகிறேன், பிராண்ட் பெயர் எழுதித்தாங்க என்று சொல்லி, அந்தப் பேப்பரைக் கொடுத்து வாங்கிவந்தேன். அதன் பிறகு எல்லோரிடமும் சொல்லிவிட்டேன், நான் வாங்கமாட்டேன் என்று)
உண்மைதான் தேவகோட்டைஜி.
தம்பி பிறகு கண்டிப்பான அதிகாரி ஆனதும்
மாறிவிட்டான். இது போல மனிதர்களை அண்ட விடுவதில்லை.
நன்றி மா.
அன்பு கோமதி, சின்ன வயது. மாட்டேன் என்று சொல்ல தயக்கம்.
மிக நல்லவன்.
பிறகு நிறைய மாறிவிட்டான். ஆமாம் வ்யாஸ் போன்றவர்கள் ஆண்மை என்று நினைத்துக் கொண்டு தவறு செய்வார்கள். ஒன்றும் பலனில்லை.
அன்பு முனைவர் ஐயா,
உண்மைதான். நல்ல மனிதர்களுக்கு எப்பொழுதும்
சங்கடம் தான்.
நல்ல வேளை பிழைத்தீர்கள்.நெ.த.
முதலிலியே வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்.
அவனுக்கு சின்ன வயசாக இருந்தது. நம் மனுஷர்கள்
யாரும் இல்லை.
வந்து வாய்த்தவனும் இப்படி இருக்கவே விலகிவிட்டான்.
ஜாகை மாறித் திருமணமும் செய்த பிறகு,
சென்னைக்கு மாற்றல் ஆனது.
ஓ அம்மா இதைப் பார்த்து அப்பவே கமென்டும் போட்டிருந்தமே....எங்கே போச்சு கமென்ட் காக்கா ஊஊஷ்!!! ஆகிவிட்டது போல...
அந்த வியாஸ் (நல்ல பெயர் ஆனால் பாருங்கள் அவர் ஹாபிட்ஸ் குணம் எல்லாம்) திருந்தினாரா? நல்ல வேளை உங்கள் தம்பி தப்பினார். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள். ஆனால் பாருங்கள் இது மணக்கவே இல்லை...இப்படியும் சிலர்.
துளசிதரன். கீதா
கீதா: எனக்கு கூடவே ஒன்றும் தோன்றியது அம்மா. ரஜனியின் வசனம் ஒன்று, "ஆண்டவன் நலல்வங்களைச்சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்" அப்படித்தான்...இப்படியும் மனிதர் உள்ளனர் கேர்ஃபுல்லா இருக்கணும் என்ற பாடமும் கூட இருக்கலாம் இப்படி நிகழ்த்தியதற்கு
Post a Comment