Blog Archive

Friday, June 15, 2018

எல்லை இல்லாத இன்பம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

காத்திருந்தவரின் காதுகளில்  ஆம்புலன்சின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.
 பிரம்பு நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை.
தம்பி தோளை அழுத்திப் பிடித்து உட்கார வைத்தான்.
வேண்டாம் அண்ணா.
வரப் போவது அண்ணியின் உடல் .உயிரில்லை.
நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்.

அவளும் வந்தாளே.
போன சுருக்கிலியே வந்துவிட்டியா விசாலம் என்று
விம்மத் தொடங்கினார் விஸ்வேஸ்வர சர்மா.
 அவள் முகத்தில் ஒரு மாற்றமும்/ இல்லை. அதே இள நகை,.
அதே பேசரி.அதே பளீர் தோடு.
கட்டம் போட்ட புடவை.
//ஏன்னா இன்னும் தூங்கலியா என்று எழுந்துவிடுவாளோ என்று நினைக்க வைத்தது.
அவளைத் தூக்கி வந்த மருத்துவ மனை ஆட்கள்

அப்படியே கீழ இறக்க நினைத்த போது, தன் பக்கத்திலிருந்த விரித்த படுக்கையைக் காட்டினார்
விசு.

செய்தி கேட்டு அந்த இரவு நேரத்திலும் வந்த அவள் அண்ணா  கண்ணன்,அவன் குடும்பம்
எல்லாம் திகைத்து நின்றனர்.
70 வயது தங்கை ஆரோக்கியமாக இருந்தவள் தான்.
 முதல் நாள் அவர் வீட்டுக்கு வந்து அவர் மனைவிக்குத் தான் வாங்கிய புது பாபாலால்  கடைச்
செயினைக் காட்ட வந்திருந்தாள்.
நாளை வெள்ளிக்கிழமை  அம்மனுக்குச் சார்த்தப் போகிறேன்.
கற்பகம்  கழுத்துக்கு நனறாக இருக்கும் இல்லையா என்று குதூகலித்தவளா இது.

கண்ணன்,தன் அத்திம்பேரை அணைத்துக் கொண்டார். அவரது கன்னங்களில் வழிந்த கண்ணீர்
அவர் கண்ணீரில் கலந்தது.
55 வருடப் பழக்கம் சொந்தம் இருவரின் மனதை,
நெருக்கியது.
ஏண்டா இது போல் ஆச்சு. சட்டுனு வண்டி ஏறிப் போயிட்டாளே.
நான்  என்ன செய்யப் போகிறேன் என்று கதறினார் 78 வயது விசு.

யாராவது ஒருத்தர் முந்திக் கொள்ள வேண்டியதுதான்..
நல்லபடியாக் கரையேத்தறத்துக்கு வழி பார்க்கணும் என்ற
தம்பியைப் பார்த்தார் விசு.

ஓ அப்படியா , நீ  எப்போ இவ்வளவு ஞானி ஆனயோ.
வந்திருப்பவள் என் வீட்டு மகராணிடா.
 அவள் நான் சொல்லும் நேரம் போவாள்.

உன் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு போ.
நாளை வந்தால் போதும்.
 இந்தக் கையால் எத்தனையோ பேருக்குக் காரியம் செய்துட்டேன்.
 நீ சிரமப் பட வேண்டாம்.
அவ அப்பா என்னிடம் ஒப்படைத்த போது அவள் பிஞ்சாக இருந்தாள்.
இப்போது அவள் நாலு பிள்ளைகளையும், எட்டு பேரன் பேத்திகளையும் கொண்ட ஆலமரம்.

அவளை வைத்து மரியாதை செய்து  நான் அனுப்புவேன்.

ஒரு நிமிஷத்தில் அவள் உனக்கு, உயிரில்லாத
பொருளாகிவிட்டாளா.
வந்த அன்னிலிருந்து,
உனக்குக் கல்யாணம் ஆகும் வரை எப்படிக் கட்டிக் காத்தாள்.

என்றபடி எழுந்து நின்றார் கைத்தடியின் உதவியுடன்.
 என் விசாலத்தை நான் அலங்காரம் செய்து
மஞ்சளிட்டு,புதுப் புடவை உடுத்தி
கோலாஹலமாக அனுப்புவேன்.
எனக்கு யார் உதவியும் வேண்டாம் என்று விசாலத்தின் உடலருகில்
உட்கார்ந்தார்.

தம்பி அதிர்ச்சியுடன் நின்றார். நான் என்ன சொல்லிட்டேன் அண்ணா.
ஏன் இப்போ கோபம் உங்களுக்கு என்றார்.

என்ன செய்யணும்டா. ஏதோ சாஸ்திரிகள் வந்தால் அவர் சொல்வார் /
அக்கம்பக்கத்துக்காரா எல்லாருமா ஆறுதல் சொல்வா.
அதற்குள் நானும் கொஞ்சம் அடங்கி இருப்பேன்.
அவள் நம்  வீட்டு மூத்த மருமகள் டா. அவள் போயிட்டாளா இல்லையான்னு
கூட எனக்குத் தெளியலை.

நீ ஒண்ணு பண்ணு,
இந்த ஐஸ் பொட்டி, வரச்சொல்லு.
ரெடியா விளக்கெடுத்துண்டு வரா உன் மனைவி.
 வைக்க சொல்லு.
இப்ப நான் விசாலத்துக் கிட்டச் சொல்ல நிறைய விஷயம் இருக்கு
எல்லாரும்  வாசல்க்குப் போங்கோ.
ஏசி ஆன் செய்.
 டேய் கண்ணா உன் தங்கை மஹாலக்ஷ்மி டா.
அவள் உயிர் இன்னும் பத்து நாளைக்கு இங்கதான் நாம் பேசுவதைக் கேட்டுண்டு
 இங்கதான் உலாவிண்டு
இருக்கும் .எல்லோரும் அஜாக்கிரதையா அவளைப் பத்திப் பேசிட வேண்டாம்.

வெறி வந்தவர் போல அமர்ந்தவரை ,விட்டு விட்டு அமைதியாக அகன்றார்கள்.

விசு எழுந்தவர், பூஜை அறைக்குச் சென்று, யாரும் மறுப்பு சொல்வதற்கு  முன்பே
கங்கை சொம்பை உடைத்து.
விசாலம் மேல் பன்னீர் போலத் தெளித்தார். திறந்திருந்த வாயில்
துளித்துளியாக கங்கை நீர் விட்டார்.
கொஞ்சம் உள்ளே சென்றதோ. இல்லை அவர் கற்பனையோ.
 மெதுவாக அவள் வாய் இதழ்களை மூடினார்.
அவையும் நிரந்தர
ப் புன்னகையில் அழுந்தின.

அவளுக்குப் பிடித்த புடவையை எடுத்து வந்து போர்த்தினார்.

விஷ்ணு சஹஸ்ரனாமத்தைத் தலை மாட்டில் கேட்கும் படி
வைத்தார்.
காலையில் வந்த மகன் கள் அவர்கள் குடும்பங்கள் மற்ற எல்லோரும்
எல்லோரும் கண்டது  விஸ்வனாத சர்மாவும் விசாலமும்
கைகள் ஒன்று சேர்ந்த நிலையில் ,
Add caption
சேர்ந்தே கைலாசம் அடைந்த  கோலம்.

இருபது வருடங்களுக்கு முன் நடந்த எங்க அத்தை வீட்டில் நடந்த சம்பவம்.

இணை பிரியாத தம்பதிகளுக்கு வணக்கம்.





14 comments:

நெல்லைத் தமிழன் said...

ஆச்சர்யம். மிக நெகிழ்ச்சியான விஷயம். நீங்கள் அனுபவக் களஞ்சியம்.

Geetha Sambasivam said...

கொடுத்து வைச்ச தம்பதிகள்

வல்லிசிம்ஹன் said...

ஓ அது நடந்த அன்று, திணறிப் போய்விட்டோம்.

தனித்தனியாகத்தான் காரியங்கள் நடந்தன.
காரணமாகத்தான் பெயரை மாற்றினேன் நெ.தமிழன்.
படத்திலும் அவர்கள் இல்லை. கூகிள் கொடுத்தது.
மிக மிருதுவான அத்திம்பேர். ராஜாத்தி என்று என்னைக் கூப்பிடுவது இன்னும் நினைவில் இருக்கிறது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம். அந்த அத்தை உடம்பு முடியாதுன்னு சொன்ன நாளே
இல்லை. கொடுத்து வைத்தவர்கள் தான். அவர்கள் பெற்ற குழந்தைகளுக்குத் தான் அதிர்ச்சியிலிருந்து மீள நாள் பிடித்தது.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

பாசப்பிணைப்பு என்பதற்கான பொருள் இதுதானோ? நெகிழவைத்துவிட்ட நிகழ்வு. கொடுத்துவைத்தவர்கள்.

கோமதி அரசு said...

கொடுத்து வைத்தவர்கள்.
என்ன சொல்வது மனம் நெகிழ்ந்து கிடக்கிறது.

KILLERGEE Devakottai said...

லட்சத்தில் ஒரு தம்பதிகளுக்கே இது அமையும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. கணவருக்குத்தான் தொண்டைப்
புற்று நோய் வந்து குண்மாகி இருந்தது.
சிரித்த முகத்தோடு ,தப்பே காணத்தெரியாத மனிதர்.
எப்பொழுதுமே ஒத்துப் போகாத தம்பியுடன் சேர்த்து
வைத்ததே அண்ணன் மனைவிதான்.
அவன் விட்டேற்றியாகப் பேசியதும்,
மனைவி மேலிருந்த காதல் அவரைக் கதற வைத்தது.
இறைவன் அருளினான்..

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதிமா. என் பாட்டிக்கு இந்த அத்தையின் மேல் மிகவும் பிரியம்.
மதுரையில் எந்தப் புதுப் புடவை வந்தாலும் மும்பைக்கு அனுப்பிவிடுவார்.

கொடுத்துவைத்த தம்பதிகள். நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தேவகோட்டைஜி. நினைத்தால் ஏறிச் செல்ல ஏணியா இருக்கிறது
என்று பாட்டி சொல்வார்.
இவர்களுக்கு ஏணி இறங்கியே வந்துவிட்டது.

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடி என்ன ஒரு முடிவு.,....

ஆதர்ச தம்பதிகள்....

Bhanumathy Venkateswaran said...

அடடா! என்ன ஒரு முடிவு! இப்படிப்பட்ட தம்பதிகளை நினைத்து நாம் வணங்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

வருத்தமான, ஆச்சர்யமான, சோகமான சம்பவம். வணங்கப்பட வேண்டிய தம்பதிகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் . அந்த ஒன்று விட்ட அத்தையின் கணவர், புற்று நோயோடு போராடும்போதே ,அத்தைக்குப் பாதி ஜீவன் போய்விட்டது.
குணமடைந்து முன்னேறி வரும் வேளையில்
இவர் ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில்

இறையடி சேர்ந்தார் அபூர்வ தம்பதிகள்.