எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
பங்களூர் ரயில் நிலையத்தை விட்டு நகர்ந்தது,வேகம் பிடித்தது
வாரணசி எக்ஸ்ப்ரஸ். கண்கலங்கின தங்கையை அணைத்துக் கொண்டான் அண்ணா.
இரண்டு வாரம் தானே போகிறார்கள்.
அப்பா நன்றாகப் பார்த்துக் கொள்வார். பயப்படாதே இந்த 63 வயசிலயாவது கிளம்பணும்னு தோணித்தே அப்பாவுக்கு.
அம்பாசமுத்திரம், சென்னை,விராலி மலைன்னு எத்தனை ட்ரிப்
போவார்.
இதைத்தவிர, ஸ்பெயின், ஜெர்மனி, சின்சினாட்டி,ஹ்யூஸ்டன்னு சுத்தல்
அப்பா ஆல்சோ நீட் அ ப்ரேக்.
21 வயசிலிருந்து எத்தனை பாடு பட்டிருக்கார்.
ஏன் அம்மாவும் தான் அலுக்காம எவ்வளவு வேலை செய்வார்.
தாத்தா பாட்டி இருக்கிறவரை எல்லோருக்கும் சலிக்காமல்
செய்வாள் என்றாள் ஸ்ருதி.
ஆமாம் ஸ்கூலில் இருந்து வரும்போது கூட சமையலறையில்
ஏதாவது செய்து கொண்டிருப்பார்.
வருபவர்கள் போகிறவர்கள்னு நிறைய விருந்தாளிகள்.
என்றான் வேணு.
என்ன கலகலப்பா இருக்கும்.
யேன் சமையலுக்கு அப்போ ஆள் வச்சுக்கலை அம்மா.
அப்பாவுக்குத் தன் கையால செய்யணும்னு ஆசை.
என்னவோ அண்ணா, வந்தவா எல்லாம் அதை செய் ,இதை செய்யுனு சொல்லும்போது எனக்குக் கோவமா வரும் என்றாள்
ஸ்ருதி.
போனாப் போறது. அம்மாவுக்குப் பிடித்ததை அவள் செய்தாள்.
இப்பதான் எல்லா உதவியும் வந்துட்டதே என்றான் சமாதானமாக
வேணு.
சரி வா போலாம்,நம் சம்சாரம் நமக்குக் காத்திண்டு இருக்கும்.
அம்மா வந்த விட்டுச் சொல்ல எனக்கு ஒரு விஷயம் இருக்கு.
அட. நவீனுக்குத் தங்கையா என்று பூரித்தான் வேணு.
எப்படி அண்ணா புரிஞ்சுக்கற,
கில்லாடிண்ணா நீ என்று அண்ணனை அணைத்துக் கொண்டாள்.
எங்க ப்ராஜெக்ட் அடுத்த வருடம் என்று சிரித்தான்.
ஓஹோ என்று சிரித்தாள் ஸ்ருதி.
ஆனால் இந்தத் தடவை அம்மா வீட்டில் பிரசவம் இல்லை.
மாமியாரே பார்த்துக் கொள்கிறேன் என்று விட்டார்.
ஸ்ரீதரும் நான் இல்லாட்டக் கஷ்டப் படுவார் என்ற தங்கையை வாத்சல்யத்தோடு
பார்த்தான் வேணு.
எங்க வீட்டுக்கு வரலாமே ,வசுதா ரொம்ப நன்றாகப் பார்த்துக் கொள்வாள்
என்றான்.
ம்ம் இன்னும் ஏழு மாசம் இருக்கு. அம்மாக்கு என்னைப் பார்த்ததிலிருந்து சந்தேகம் தான்.
வாய்விட்டுக்கேட்கவில்லை.
இந்தா இன் பெண்ணுக்கு இதை எடுத்து வந்தேன் என்று
பெரிய ஸாலி American Doll பொம்மையைக் கொடுத்தாள்.
அத்தைன்னால் நீதான். மது குட்டி
தலைகீழாக் குதிக்கப் போறது என்ற வண்ணம் வண்டியில் வைத்தான்.
நீ நம் வீட்டுக்கு வந்துவிட்டு அப்புறம் போ. சேதி சொன்ன வாய்க்கு,
திருனெல்வேலி அல்வா வந்திருக்கு என்றபடி அவளையும் உள்ளெ
ஏற்றிக் கொண்டு ஜய நகர் பக்கம் வண்டியைத் திருப்பினான்.
காசித்தம்பதியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Add caption |

19 comments:
சுவாரஸ்யமான உரையாடல்கள். திருமணமாகி விட்ட நிலையிலும் பாசம் மாறாத அண்ணன் தங்கை. இயல்பான உரையாடல்கள். அன்பின் பிணைப்பு. அப்பா அம்மா மேல் மாறாத பாசம்...
என் அம்மா கூட அந்நாளில் எங்கள் வீட்டுக்கு வருவோர்க்கெல்லாம் அவரவர்க்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் ஆகையால் அவரவர்களுக்கு பிடித்ததை பார்த்துப் பார்த்துச் செய்வாள்.
உண்மைதான் ஸ்ரீராம். மாறாத அன்புடன்
அண்ணன் தங்கை இருந்தாலே வாழ்க்கை சுகம் பெறும். அண்ணன் மனைவி தங்கையின் கணவர் என்று அன்பு கூடும்.
நான் இப்போது கூட இப்படிப் பட்ட அண்ணன் தம்பிகளைப் பார்த்தேன்.
வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதும்
ஒரு அருமையான அனுபவம். அதுவும் நல்ல உறவுகள் கூடும்போது
பகிர்தல் முக்கியமாகிறது. உங்கள் அம்மாவைப் பார்க்கவில்லையே என்று தோன்றுகிறது.
அன்பான இயல்பான உரையாடல்
அன்பு என்பதை இப்போது தேடிப்பிடிக்கவேண்டியுள்ளது. அச்சூழலில் இப்பதிவினை அதிகம் ரசித்தேன்.
அநுத்தமாவின் எழுத்துக்களைப் படிப்பது போல் இருக்கு உங்க எழுத்துக்களும் அண்ணன், தங்கை பாசத்தைச் சுட்டிக்காட்டிய விதமும். இதைப் படிக்கையில் அநுத்தமாவின் "நைந்த உள்ளம்" நாவலும் அதின் கதாநாயகி மைத்ரேயியும் அவள் அண்ணன் கங்காதரனும் நினைவில் வந்தார்கள். அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.
அண்ணா, தங்கை பாசப்பிணைப்பு அருமை.
நேற்று என் தங்கைகள் வந்து சென்றார்கள். இரவே பார்த்து விட்டேன் பதிவை .
என் அம்மாவும் வந்த விருந்தினர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து வைத்து இருப்பார்கள் அதை செய்து கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து மகிழ்வார்கள்.
என் தங்கைகள் சமையலில் எனக்கு ஒத்தாசை செய்து பழைய கதைகளை பேசி உண்டு, பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு போய் வந்தது நேற்றைய பொழுது மனநிறைவான பொழுது.
உறவுகளின் உன்னதம் போற்றும் பகிர்வு உங்கள் பகிர்வு.
தொடர்கிறேன்.
கதை வெகு பாஸிட்ட்டிவ்...அன்பு....என்ன அழகாகப் பேசிக் கொள்கிறார்கள் அண்ணனும் தங்கையும். அவர்கள் குடும்பம் என்று ஆனபிறகும். ஆச்சரியம்தான்...ரொம்ப நன்றாக இருக்கு அம்மா..
அம்மா எனக்குப் பல நினைவுகள். என் அம்மாவும் சரி நானும் சரி எங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு பார்த்துச் சமைப்போம். விருந்து வந்தாலே மனதிற்குக் குஷியாகிவிடும்.
கீதா
வல்லிம்மா அழகான தொடர். இதில் உங்கள் மனம் அந்த அன்பு பாசிட்டிவ் எனர்ஜி எல்லாம் வெளிப்படுகிறது. நிகழ்வையே ஒரு கதை போல மிக அழகாகச் சொல்லுகின்றீர்கள்.
இப்போதும் எங்கள் வீட்டிற்கு விருந்தினர் யாரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். உபசரிப்பும் மகிழ்ச்சியும் உறவுகளும் என்று செல்லும். தொடர்கிறோம்
துளசிதரன்
அன்பு ஜெயக்குமார். ஒரு குடும்பத்தில் அன்பு பெருகி இருப்பது தந்தை தாயின்
பொறுப்பு. இந்த விஷயத்தில் இந்தத் தம்பதிகள்
முறையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.நன்றி மா.
உண்மையே திரு முனைவர் ஐயா.
எத்தனையோ குடும்பங்களில் அருகிப் போய் விட்டது அன்பு.
ஆனால் இன்னும் பிழைத்திருப்பதால் தான் நாம் இணையத்தில் ஒன்று படுகிறோம்.
நன்றி ஐயா.
அன்பு கீதா மா. நைந்த உள்ளம் நாவல் தான் எனக்குக் கிடைக்கவில்லை.
அலையன்சில் தேடி ஏமாந்து போனேன்.
நல்ல படிப்பனுபவம் கிடைத்திருக்கும்.
இந்தக் கதையும் நம் எல்லாக் குடும்பங்களைப் போலத்தான்,.
குற்றம் பார்க்கவிட்டால் சுற்றம் இனிமை தான்.
நன்றி மா.
கூடப் பிறந்தவர்களின் பிணைப்பு மிக அற்புதமானது அன்பு கோமதி.
என் தம்பிகள் இப்படித்தான். மகன் களின் திருமணத்தின் போது, நான்
காலில் அடிபட்டுக் கொண்டதில் திருமணத்தன்று நடப்பதே
கஷ்டமாக இருந்தது.
பெரியதம்பி என்னை அணைத்த வண்ணமே நடத்திச் சென்றான்.
என் பக்கத்தை விட்டு நகரவே இல்லை.
உங்கள் தங்கைகள் எப்பொழுதும் வளமாக இருக்க
என் பிரார்த்தனைகள். என் இணையத் தங்கைகளூம்,தோழிகளும்
என்றும் நலமாக இருக்கணும்.
அன்பு கீதா,
எங்கள் குடும்பம் இவ்வாறுதான் இருந்தது.
என் அம்மாவின் சகோதரர்களும், என் சகோதர்களும் இப்படியே.
கண்ணின் மணி போல
மணியின் நிழல் போல என்ற கண்ணதாசன் வரிகள் அப்படியே பொருந்தும்.
உங்கள் அம்மாவைப் பற்றி அறிய மிகப் பெருமையாக இருக்கிறது. உங்கள் சமையல் திறன்
அங்கிருந்துதான் வந்திருக்கணும்
என் சின்னத்தம்பி என்னை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது வந்து பார்க்காமல் இருக்க மாட்டான். அலுவலக நிகழ்ச்சிகளை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவனுக்கு.
தன் அத்திம்பேருடன் அரட்டை அடிக்கணும்.
இறைவன் அளவில்லாக் கருணையை அளித்திருக்கிறான்.
வாழ்க வளமுடன் கீதா மா.
குடும்பம் செழிப்பது இந்த உறவுகளால் தான் அன்பு துளசி.
திகட்டத் திகட்ட, வாரிக் கொடுத்திருக்கிறார்கள் என் தம்பிகளும்
கணவரும் அன்பின் அருமை நேரங்களை.
பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
உங்கள் இல்லமும் அப்படியே என்றறியும் போது மகிழ்ச்சி பெருகுகிறது.
அன்பு இருக்கும் இடத்தில் வறுமையோ ஏழ்மையோ
இருக்காது.
இருந்தால் மழுங்கிப் போய் விடும்.
வாழையடி வாழையாக உங்கள் குடும்பம் தழைக்க
என் வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி
அருமையான பேச்சுக்களை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். அண்ணன் தங்கை பாச மிகுந்த பேச்சுக்கள் சந்தோஸத்தை தருகிறது. "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என்பது போல வாழ்வில் பெற்றோர்,உடன் பிறப்பு,திருமணத்திற்குப் பின் கணவர், மனைவியின் மூலம் வரும் சொந்தங்களின் அன்பு, இடையே நம் சந்ததிகள் அன்பு என அன்பை வட்டமாக கொண்டு சுழன்று வரும் போது, வேலைகளின் பளு, மனச்சோர்வுகள் என எதுவுமே அனைவருக்கும் தூசியாக போய் விடும். அழகான பாசக் கதைகள். அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு சகோதரி கமலா,
இந்த அன்பு மட்டும் இருந்தால் போதும். பல குற்றங்கள் மனதில் படுவதில்லை. குறைகளும் படுவதில்லை.
அன்பின் அணைப்பில் வளரும் இதயங்கள்
எப்பொழுதும் மாறுவதில்லை.
நீங்கள் தொடர்ந்து படிப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இனிய உறவுகள் இருப்பது ஒரு கொடுப்பினை......
தொடர்கிறேன்.
Post a Comment