Blog Archive

Wednesday, May 23, 2018

வாழ்க்கையின் குரல் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 மணி 10 ஆகிவிட்டது.
இன்னும் சுந்தரத்தைக் காணவில்லை.

கவலைப் படத் தெம்பில்லை சந்திராவுக்கு.
வாயில் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்து
மாமனாரைத் தொலைபேசியில்  அழைத்தாள்.

அவர்களுக்கு செய்திகள் பார்க்கும் வழக்கம் உண்டு. 11 மணிக்கே

படுக்கச் செல்வார்கள்.

சுருக்கமாக நடந்த விவரங்களைச் சொன்னாள்.
விஸ்வனாதனைத் தொடர்ந்து இன்னும் எத்தனை நபர்கள் வீட்டுக்கு வருவார்கள்
என்று தெரியாத காரணத்தால்,
தான்  அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு
கோபாலபுரம் பள்ளி அருகில் தங்கள் லாயரின் வீட்டுக்கு அருகில்
அப்பார்ட்மெண்ட் செல்வதாகச் சொன்னாள்.

தான் கிளம்புமுன் அவர்களிடம் இந்த வீட்டுப் பத்திரத்தை க்
கொடுப்பதாகவும்,வீட்டின் மேல் கடன் வாங்கச் சொல்லி சுந்தரம் வற்புறுத்துவதாகவும்
விளக்கினாள்.

எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர் அவளது மாமியாரும் மாமனாரும்.
உன் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதம்மா.
நன்றாக யோசித்து முடிவெடு.
பேத்திகள் மிதிலா மைதிலியின் எதிர்காலம் மிக முக்கியம்.
பத்தாம் ஆண்டும் ,ப்ளஸ் ஒன்றும் படிக்கிறார்கள் அல்லவா.

நீ உன் பட்டுப் புடவைகள் நகைகள், தவிர ஒன்றும் எடுக்க வேண்டாம்.
வெள்ளி எல்லாம் ஏற்கனவே வெளியே போய்விட்டது தெரியும்.

நீ இல்லாவிட்டால் எங்களைத்தான் தேடி வருவான்.
நாங்கள் தயார். நீ நிம்மதியாகப் போ என்று தொலைபேசியை வைத்தார்.

அடுத்த நாளும் விடிந்தது. பெண்கள் பள்ளீக்குக் கிளம்புமுன்
தன் முடிவைச் சொன்னாள்,.
அவர்களும் தீர்மானமாக , எங்களூக்கூப் படிப்பு முக்கியம் அம்மா
இந்த வெள்ளி கிளம்பிடலாம்.

அப்பா தெளிவுடன் இருக்கும் போது
நல்வழி பிறக்கட்டும். என்றபடி பள்ளிக்கூட பஸ் நிற்கும் இடத்திற்கு விரைந்தார்கள்.

பஸ் பள்ளிக்குத் திரும்பும் முனையில் தந்தையை சிகரெட் கடை வாசலில்
யாருடனோ உத்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைக்
கண்டதும்,பயமும் வருத்தமும் ஏற்பட்டது அவர்களுக்கு.

படிப்பில் மனம் ஓடாமல், மதியம் மூன்று வரை இருந்துவிட்டு
அடையாறுக்குப் பஸ் ஏறித் தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

தாத்தா பாட்டியைப் பார்த்ததும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் கண்ணீராய் வழிந்தது.
பாட்டி அவர்களுக்கு முதலில் சாப்பிடக் கொடுத்தார்.

என்ன செய்யப் போகிறோம் பாட்டி. அப்பாவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
அம்மா பணம் தரவில்லை என்று அடிக்கக் கூட செய்துவிட்டார்.
என்றவர்களைச் சமாதானப் படுத்தி, சந்திராவுக்குப் போன் செய்தார் தாத்தா.

கவலைப் படாதேம்மா , குழந்தைகள் இங்கிருக்கிறார்கள்.
நீயும் வா. அவசரம் இல்லாமல் நிதானமாகச் செயல் படு,
நீ குடிபோகும் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், காஸ் அடுப்பு முதல்
அங்கு வந்து சேரும். கவலை வேண்டாம் என்று போனை வைத்தார்.
இத்தனை அன்பான பெற்றோருக்காத் தன் கணவன் பிறந்தான் என்று
மனம் பொங்க அழுதாள். ஏற்கனவே அடுக்கிவைத்திருந்த பொருட்களோடு

தான் நம்பி வணங்கும் கடவுளரின் சிறு படங்களை ஒரு தனிப் பையில் போட்டுக் கொண்டு தெரு முனை
 டாக்சிக்குத் தொடர்பு கொண்டாள்.
வீட்டுச் சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துத் தான் அலுவலக வேலையாக
ஹைதிராபாத் கிளம்புவதாகவும், கண்வன் வந்தால் சாவியைக் கொடுக்கும்
 படியும் சொல்லிவிட்டு மறு கேள்விக்கு நிற்காமல் விரைந்து வெளியே வந்த,


அரைமணி நேரத்தில் தான் வாழ்ந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட்டாள் சந்திரா.

13 comments:

Geetha Sambasivam said...

இனி எல்லாம் நன்கு அமையப்பிரார்த்தனைகள். ஊபேர் டாக்சி எல்லாம் சொல்லி இருப்பதைப் பார்த்தால் மிக சமீபத்து நிகழ்வாய்த் தெரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். சமீபம் தான். கீதா மா. நான்கு வருடங்களுக்கு
முன். கால் டாக்சி என்று போடுவதற்குப் பதில்
ஊபர் என்று எழுதிவிட்டேன். மாற்றி விடுகிறேன். கரு 60 வருடங்களுக்கு முந்தியது.
அந்த தாத்தாவுக்குத் தப்பாத பேரன் இந்த சுந்தரம்.

Nagendra Bharathi said...

அருமை

காமாட்சி said...

எல்லாம் நல்லபடி நடக்கணும். அன்புடன்

ஸ்ரீராம். said...

எனக்கும் ஊபர் டாக்சி என்றதும் அப்படித்தான் தோன்றியது. ப்ளஸ் டூ என்பதும் காலம் (ஓரளவு) சொல்லியது.

அப்படி அன்பான, பொறுப்பான பெற்றோருக்கா இப்படி ஒரு மகன்? என்பது எனக்கும் தோன்றியது.

கோமதி அரசு said...

சந்திராவிற்கு மாமியார், மாமானார் துணை இருக்கும் போது கவலை இல்லை.
நலமே விளையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். ஊபரை டாக்ஸியாக மாற்ற வேண்டும். கால் கட்டை விரலில் இடித்துக் கொண்டுவிட்டேன். மறந்துவிட்டது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா கோமதி. காதலித்தவன் மாறி விட்டான்.
பெற்றோர்கள் மாறவில்லை. ஏதோ ஒரு விதத்தில்
நன்மை விளையட்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நலமா நாகேந்திர பாரதி. நன்றி மா.வருகைக்கும் கருத்துக்கும்.

வல்லிசிம்ஹன் said...

எது குழந்தைகளுக்கு நன்மையோ அது நடந்தது காமாட்சி மா.
மிக நன்றி .அக்கறை எடுத்துப் படித்து கருத்தும் சொல்லி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: துணிவான முடிவு. நல்லதே நடக்கட்டும் இதற்குப் பிறகேனும் ச்ந்திராவின் கணவர் திருந்தமாட்டாரா என்ற எண்ணமும் எழுகிறது.

கீதா: வல்லிம்மா சந்திராவுக்கு வேலையும், நல்ல சப்போர்ட்டிவ் மாமனாரும் மாமியாரும் இருப்பதால் துணிந்து செயல்பட்டிருக்கிறார். பொறுத்தது போதும் என்று கிளம்பியது நல்லது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்படி எல்லாம் நடந்தால் கடைசியில் சுபமாய் முடியும் என்ற ஒரு நம்பிக்கைதான்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
யாருக்குமே பிரிவு என்பதே பிடிப்பதில்லை.
நான் வேலை செய்த இடத்தில் பார்த்திருக்கிறேன். எத்தனையோ புலம்புவார்கள். துணிந்து முடிவெடுக்க முடியாது. சமூகத்தைப் பார்த்து அத்தனை பயம்.
சந்திராவுக்கும்,சுந்தரத்துக்கும் குழந்தைகளுக்கும் துன்பம் இல்லாமல்
முடிக்கிறேன்.

அன்பு கீதா,
சரியான பாயிண்டைப் பிடித்தீர்கள். ஓண ஆதரவு, பெற்றோர் ஆதரவு இருந்தால், எந்த விதமான தவறான முடிவுக்கும் போக மாட்டார்கள்.
ஏழ்மையின் பிடியில் சிக்கின பெண்கள்
ஆதாரத்துக்காகக் கணவனைப் பிடித்து,சார்ந்து எத்தனை
அவலங்களைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதையும்
நமக்கு உதவிக்கு வருபவர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன்.
நல்ல படியாகவே முடிக்கிறேன் கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

PAnAM ENrU PADIKKAVUM.