Add caption |
அழகிய கண்ணனாக முரளி பிறந்தது 1950 ஜூன் 10 ஆம் தேதி.
இரண்டு வருடங்கள் இளையவன் எனக்கு.
அப்போதிலிருந்து அடுத்த தம்பி பிறந்தும் எங்கள் தோழமை
நெருக்கமாகத் தான் வளர்ந்தது.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவன் தங்க மகன்.
இருந்த அசட்டுத்தனத்துக்கெல்லாம் நான் வாரிசு என்றால்,
அவன் சமத்துக் குழந்தையாகவே வளர்ந்தான்.
சின்னவன் விஷமம் சொல்லி முடியாது.
படிப்பில் முரளி முதல், ஒரு நாள் லீவு போடமாட்டான்.
முதல் வகுப்பிலிருந்து 11 ஆம வகுப்பு வரை முதலிடத்தை விடவே இல்லை.
நான் அப்படி இல்லை. சின்னவன் படிப்பிலும் சுட்டிதான்.
என் திருமணமும் ,முரளியின் ஐ ஐடி படிப்பும் 1966இல் ஆரம்பித்தது.
மதுரையிலிருந்து வந்த 16 வயதுப் பாலகன் முகம் இன்னும் நான் மறக்கவில்லை.
ஐஐடி ஹாஸ்டல்.படிப்பு கற்றுத்தரும் முறை எல்லாம்
பழகவே அவனுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தது.
வேறு வேறு மொழி பேசும் மாணவர்கள்.
அதிருப்தியே காட்ட மாட்டான். தங்கியிருந்த
அறையில் பாம்பு பார்த்ததும் தான் பயந்துவிட்டான்.
நல்ல வேளை எங்கள் அம்மாவின் அம்மா,மாமாக்கள்
சென்னையிலிருந்ததால், மாதம் ஒரு முறை
மேற்கு மாம்பலம் சென்று வந்து விடுவான்.
நான் எங்கே இருக்கிறேனோ அங்கே லீவு நாட்களைக் கழிக்க வருவான்.
பிறகுதான் மதுரை. இன்னும் நான்கு பகுதிகள் அவனைப் பற்றி எழுதி முடித்து விடுகிறேன்.
67 பாகங்கள் எழுத விஷயங்கள் இருக்கின்றது. என் மன நிம்மதிக்காக எழுதுகிறேன்.
13 comments:
தம்பியின் நினைவுகள் நன்றாக இருக்கிறது.
எழுதுங்கள் மனதுக்கு நிம்மதி தரும் .
நம் நினைவுகளில் உறைந்து இருப்பவர்களை நினைத்து பார்ப்பது சுகம்.
முடிவு வருடம் பார்த்தது மனம் கனக்கச் செய்தது.பதிவு கூடுதல் வேகமெடுத்ததுபோல் ஒரு எண்ணம் கொஞ்சம் பொறுத்தே போகலாமே அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து.
நான்கைந்து பேர் உடன் பிறந்தவர்கள் இருந்தாலும் அதில் இருவருக்கிடையே மட்டும் சமயங்களில் இப்படி அதிகப்படியான பாசம் அமைந்து விடும். தொடருங்கள் அம்மா.
அறிய ஆவலுடன் நானும்....
பகிர்ந்த படம் பல விஷயங்களை நினைவுபடுத்திற்று. தொடர்கிறேன்.
எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கேன்.
உங்கள் தம்பியைப் பற்றிய நினைவுகள் அருமை உங்கள் பாசமும் வெளிப்படுகிறது. உங்கள் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கிறது என்றால் தொடர்ந்து எழுதுங்கள் வல்லிம்மா நாங்களும் தொடர்கிறோம்..
துளசிதரன், கீதா
உண்மையே கோமதி மா.
அன்புள்ளவர்களை மறக்க முடியவில்லை.
இந்த நினைவுகளை மனதில் இருந்து காகிதத்துக்குப் பதிந்துவிட வேண்டும். அற்புதமாக வாழ்ந்தவர்களை ,
சேர்த்துப் பொக்கிஷமாக்குவதால் எனக்கு நிம்மதியே.
வாழக வளமுடன் அம்மா.
நாங்கள் மூவர் தான்.
பெரியவன் அட்வைஸ் செய்வான்,.
சின்னவன் நடத்தியே காண்பித்து விடுவான்.
அன்பு ஸ்ரீராம், நான் மிகக் கொடுத்து வைத்தவள் இவ்வளவு அன்பு கிடைக்கப் பெறச் செய்த இறைவனுக்கு நன்றி.
அன்பு தேவகோட்டையாரே,
நீங்கள் எல்லாம் படிப்பத்தான் எனக்கு மகிழ்ச்சி.
மிக மிக நன்றி.
இன்ன்னும் பல படங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
நெல்லைத்தமிழன். நீங்கள் அக்கறை கொண்டு படிப்பது
இதமாக இருக்கிறது.
அன்பு கீதாமா.
கட்டாயம் பதிவிடுகிறேன்.
அவர்கள் எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்லி விடவேண்டும்.
என் பாசத்துக்குக் கூட அளவுண்டு. அவர்கள் காண்பித்த
அரவணைப்பு விலை மதிப்பில்லாதது துளசி, கீதா.
இருவரின் வார்த்தைகளும் என்னை அமைதிப் படுத்துகின்றன.
Post a Comment