Blog Archive

Thursday, March 15, 2018

எலியும் பூனையும் ,மின் கடியும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  2007 செப்டம்பர்.

 இரண்டாவது பேரன் பிறப்பை ஒட்டி, அமெரிக்க விஜயம் முடிந்து
 ஸ்விஸ், துபாய் டேரா போட்டு ,
சென்னை வர 10 மாதங்கள் ஆகிவிட்டது. அந்த இடைக்காலத்தில்
 எங்க வீட்டில   ஒரு எலியார் மழை நாள் ஒன்றில் குடி வந்து இருக்கிறார்.இது ஒரு மே மாத அக்னி நட்சத்திர மழைக்காலம் வருமே(?:))அப்போது...தான் இவர் உள்ள வந்து இருக்கிறார்.


அவர் வந்தது தெரிந்து அதுவரை வெளியில் மிடுக்கு நடைபோட்ட பூனையார்,



இப்போது வீட்டுக்குள் சகஜமாக உலவ ஆரம்பித்து இருக்கிறார். இது கறுப்புக்கும் சற்றே குறைந்த ,வெள்ளை வரிகள் போட்டுக்கொண்ட சாம்பல் பூனை.


சரியான சம்பல் பூனை கூட:))



வந்தது முதல் ஒவ்வொரு மின் சாதனத்தையும்
சரி செய்துவிட்டுத் தான் இயக்க வேண்டி இருக்கிறது.





எ னக்கும் மின்சாரத்துக்கும் அத்தனை ஒத்துப் போகாது.எல்லா வசதிகளும் கொடுக்கும் பஜாஜ்,விஜய்,இன்னும் எத்தனையோ விளம்பரங்கள்


ஆதிகாலத்திலிருந்தே வருவது வழக்கம்.


பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்.



மேலே மொட்டை மாடியில் தேங்கின தண்ணீர் கசிந்து
கீழே உள்ள சாப்பாட்டு அறை விளக்கைச் சுற்றிச் சொட்ட ஆரம்பித்தது. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இவ்வளவு

மோசமாக வீட்டை வைத்து இருக்கிறீர்களா என்று கேட்காதீர்கள் . இப்போது எல்லாவற்றையும்  சரி செய்தாச்சு.


அது அப்படித்தான்.
இப்போ பூனை எலி சமாச்சாரத்துக்கு வரலாம்.
நாங்க வந்து இறங்கி அடுத்த நாள் மழை வந்தது.
நம்ம வனாந்திரம் போயி வருஷக்கணக்கு ஆச்சா.??
அதில வீட்டு விஷயங்கள் மறந்து போச்சு.

அதிலையும்இந்த மழை சுகமான மழை.சத்தமில்லாத அழகான மழை...
 அதனால் ரசிப்பதில் இருந்து விட்டேன்.

திடீரென்று பூனை சீறும் சத்தம், எலி சார் தாவி அப்பள டப்பா உருண்டூ கீழே விழுந்து கடகட..

சாம்பனும் செல்லியும்(அவங்க பேரு) சண்டையில் சுற்றி வர,(அந்தத் தண்ணீரசொட்டி இருந்த இடத்தை மட்டும்


விட்டார்கள்.)


இவர்களை விரட்ட சிங்கம், போட்ட சத்தம் இன்னும் பெரிதாக இருந்தது.:)
அதுவரை ஜாக்கிரதையாக இருந்த சாம்பன் திடீரென ஒரே தாவலில் கிறீச்னு சத்தம் போட்டு ஓடீ விட்டான்.


என்னடா இது திகில் சண்டையா இருக்கேனு, விளக்கை அணைக்க வந்த போது ச்விட்ச் போர்ட் கர்ர் என்று கர்ணகடூரமாக கத்தியது.


ஆளைவிடு!! இது ஏதோ மின் இணைப்பு வேலை. தப்பு கனெக்ஷன், ஷார்ட் சர்க்யூட் எல்லாம் புரிந்து,

வெளியில் ,மழையில் வழுக்காமல், போயி மெயின் போர்ட் (தடித்த) ஸ்விட்சை அணைத்தோம்.


பிறகு எப்போதும் செய்வது போல குழல்விளக்கைக் கழட்டி வைத்துவிட்டு,ட்ரிப் ஸ்விட்ச் ஆன் செய்து,

எலெக்டீஷியனைக் கூப்பிட்டு சரி செய்தாச்சு.
அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))

16 comments:

Angel said...

//பத்திரிகையில் பார்க்கும்போது கூட, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்ப்பேன்:)) தொட்டால் ஷாக் அடிக்குமோ என்கிற பயம்தான்//

நம்ம ஊரில் கேட்க வேணாம் ..இந்த மின் கசிவால் மெட்ராஸ் வீட்டில் நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம் ..ரி வயரிங் செஞ்சும் பிரச்சினைதான் .நானும் foot ரூலர் மரக்கட்டைல இருக்குமே அது இல்லைனா பென்சில் வச்சுத்தான் ஸ்விட்சை போடுவேன் :)
எங்க வீட்டிலும் அப்போ மெயின் சுவிச்சை அணைக்கும் வழக்கமுண்டு

சாம்பனும் செல்லியும் அப்புறம் வந்தார்களா :) இப்போ எல்லார் வீட்லயும் செல்லிகளின் ராஜ்ஜியம்தான் :)

KILLERGEE Devakottai said...

மௌஸைக்கூட திட்டுவதில்லை ஹா.. ஹா.. ஹா... இரசித்தேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், நலமாப்பா.
இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.
2008 இல் வெளி அறை கட்டும்போது எல்லாவற்றையும் மாற்றினோம்.
அங்கே இப்போது எலி நட மாட்டம் இருக்கான்னு தெரியவில்லை.
பெஸ்ட் கண்ட்ரோல் செய்திருக்கிறொம்.
அந்த செல்லியோட தலைமுறை இருக்க சான்ஸ் உண்டு.

இப்போது சென்னையில் யார் இருக்கிறார்கள் அம்மா.
வாழ்க வளமுடன்.நன்றி மா.

Geetha Sambasivam said...

இந்த எலிங்க எல்லாமே நாம அம்பேரிக்கா போறச்சே தான் வீட்டுக்குள்ளே நுழையும் போல! நாங்க அப்புவை அவங்க அம்மா பிரசவித்தபோது சென்றிருந்தோமே! அப்போவும் இப்படித் தான் ஓர் எலித் தம்பதி உள்ளே நுழைந்து அரிசிச் சாக்குக்குள் குடித்தனமே நடத்திக் குஞ்சுகள் போட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாவற்றையும் வெளியே அனுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு! எழுதினேன் இதைப் பற்றியும்! :)

ஸ்ரீராம். said...

//இப்போது சென்னையில் யார் இருக்கிறார்கள் அம்மா//

வாசிக்கையிலேயே குரலின் ஏக்கம் தெரிகிறது.

சம்பல் செல்லி - நல்ல பெயர்கள். இந்த மின் கசிவு எங்கள் வீட்டில் நிகழ்ந்தபோது நான் கூட ஒரு பதிவு இட்டேன்.. "விடியும் வரை காத்திரு"

சுவையான அனுபவம்தான் அம்மா.

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.in/2007/10/blog-post_02.html

KILLERGEE Devakottai said...

எனது கருத்துரை எங்கே ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையாரே கருத்துரை இரண்டும் வந்துவிட்டது. நான் எழுந்து காப்பியை உள்ள தள்ளி,வாட்ஸாப் பார்த்து உற்றார் சுற்றாருக்குப் பதில் சொல்லி
பதிவுக்கு வர நேரமாகிவிட்டது. இப்போது காலை மணி 7.

உங்கள் பதில்கள் தான் எனக்கு அர்த்தம் உள்ள வாழ்வு கொடுக்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஓ நினைவிருக்கிறது கீதா.
நாம அங்கே குடித்தனம் பண்ணா இவங்க இங்க
துரைத்தனம் செய்யறாங்க.
அதோட அவர்கள் செய்யும் செயல்களால் வீடு நாறித்தான் போகிறது.
எலியம்மா மாடிக்குப் போனால் பூனையாரும் மாடிப் பிரவேசம். சரியான
லூட்டி.

KILLERGEE Devakottai said...

எலித் தம்பதியா ?
எலிசபத் தம்பதியா ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உங்கள் நுண்மையான புரிதலுக்கு நன்றி.
உங்கள் பதிவும் நினைவில் இருக்கிறது . அந்தப் பதிவும், அந்த பாம்பு வந்த பதிவும் த்கில்
கதைகள். ஹப்பாடி.

ஆமாம், ஊர் நினைவு விட மாட்டேன் என்கிறது. அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து கூட.
நம் வீடு, நம்பெருமாள்,நம் தூக்கம் எல்லாம் அங்கே தான்.
பரவாயில்லை. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.

iramuthusamy@gmail.com said...

இன்று தங்கள் வலைத்தளத்தின் பதிவுகளைப் பார்த்து வருகிறேன். எலித்தொல்லை அபாயகரமானது. ஒரு சமயம் எங்கள் புத்தக அலமாரிக்குள் புகுந்து சில புத்தகங்களைக் கடித்துக் குதறிவிட்டது. இது எளிமையான சொற்களுடன் அமைந்த நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு முத்துசாமி. முதல் வருகைக்கு நன்றி.
எலியினால் வரும் அபாயம் தெரிந்ததால் தான்

பெஸ்ட் கண்ட்ரோல் அதனால் தான் செய்தோம்.

வல்லிசிம்ஹன் said...

கில்லர் ஜி . வேடிக்கையாக இருக்கிறது இல்லையா.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை டாம் அண்ட் ஜெர்ரி போல சாம்பன் செல்லி....நல்ல பெயர்கள் வல்லிம்மா...நல்ல ஷோ காட்டினார்களா ரெண்டு பேரும்..

சென்னையில் மின் இணைப்புகள் பழைய வீடுகளில் ரொம்பவே பிரச்சனை பண்ணும். நாங்கள் வாடகைக்கு இருந்த வீடுகள் எல்லாமே பழையகாலத்து வீடுகள். நன்றாக இருக்கும் வீடு ஆனால் மின் இணைப்பு மட்டும் சரியாக இருக்காது லீக்கேஜ்...எப்படியோ சரியாகிடுச்சே..

கடைசி வரியை ரொம்பவே ரசித்தேன் //அதிலிருந்து, இப்ப இன்னிக்கு கம்யூட்டர் (எலி) மௌஸைக் கூட நான் திட்டுவதில்லை. அது மாட்டுக்கு திரை பூராவும் பயணம் செய்கிறது. போனால் போகட்டும் என்று விட்டு விட்டேன்:)))//

ஹா ஹா ஹா ஹா....சரி மௌஸ் ஹன்ட் நு சொல்லுங்க....ஹா ஹா ஹா...அப்புறம் சாம்பனும், செல்லியும் என்ன ஆனார்கள்?!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, இந்தக் கலகம் நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன அம்மா.
சம்பனுக்குப் பதிலா கறுப்பன், வெள்ளி எல்லாம் வந்து கொண்டிருக்கிறார்கள். செல்லியின்
பரம்பரை பற்றித்தான் பயம். பெஸ்ட் கண்ட்ரோல் செய்து இருக்கிறொம். அதனால் பயமில்லை.
இருந்தும் தப்பித்தவறி ஏதாவது வந்தால் ,வீட்டிற்குள் வந்தாலே வாடை காட்டிக் கொடுக்கும்.

எங்க வீடும் கட்டி 45 வருடங்கள் ஆகின்றன.
மராமத்து செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
பர்மனெண்ட் தீர்வை, புது வீடு கட்ட வேண்டியதுதான்.