Blog Archive

Saturday, January 27, 2018

பீஷ்ம ஏகாதசி.

ரதாங்க பாணி  ரக்ஷிக்கட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
வியாசர் விருந்தில் ஆரம்பித்த  மஹாபாரத  லயிப்பு ,புக்ககம் வந்து பிறகு  பெரிய பாட்டியின்  துணையோடு மிகப் புராதன
அச்சுக்களில் கோர்க்கப் பட்ட, மஹா பாரதப் படிப்பாகத் தொடர்ந்த பொது  கண்ணன் மேலும், பீஷ்மர்  மேலும்  அதீத லயிப்புடன் தொடர்ந்தது.
 ஒருவன் ஆட்டுவித்தவன். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் அவன் குரலுக்கு ஆடியவர்.    பரிக்ஷித்து ராஜா,கரிக்கட்டையாக உலகில் வந்த பொது அவரை உயிர்ப்பித்த கிருஷ்ணன் சொல்லும் வார்த்தை, நான் உண்மையாகப் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தது உறுதி என்றால் இந்தச் சிசு உயிர் பெறட்டும் என்று உரைத்து ,பாண்டவகுலத்தைக் காப்பாற்றுகிறான்.
உலகமறிந்து சூளுரைத்து பிரம்மச்சரிய  விரதத்தை மேற்கொண்டு,
பீஷ்மராகி,  குரு குலத்தை
 தன்  மனக்  கருவில் சுமந்து  கடமை வழுவாத கார்ய வீரராகத் திகழும் பீஷ்மரோ, தானாக உயிரை விட்டாலொழிய  அவர் உடலும் உயிரும் பிரியாது என்ற வரம் பெற்ற அஷ்ட வசுக்களில் ஒருவர்.
ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்த கண்ணனையே
ரதத்தின் சக்கிரக் காலைத்  தன்  கையில் எடுக்க வைத்தவர்.
ரங்க பாணியாகத் தன்னை நோக்கி வரும்  கண்ணனை இரு கரம் கூப்பி நிராயுத பாணியாக வரவேற்கிறார்.
அருச்சுனன் அந்த நேரத்தில் கண்ணன் கால்களில் விழும்போது ,சுயநிலை பெற்ற  கிருஷ்ணனும்  பீஷ்மரைப் பார்த்துப் புன்னகைத்து  மீண்டும் பார்த்த சாரதியாகத் தேர் ஏறுகிறான் .

சஹஸ்ர நாமம் பிறக்கிறது.
உத்திராயண காலத்துக்காக அம்புப் படுக்கையில் படுத்திருந்த
பிதாமஹரைப் பார்க்க வந்த அர்ஜுனன், அவருக்குத் தலைக்கு முட்டுக்கொடுக்க இன்னொரு அம்பை எய்துகிறான்..
அவரது தாகத்துக்கு கங்கா மாதாவையே வாயில் வந்து விழும்படி இன்னொரு பாணம்  விடுகிறான். எல்லோருக்கும் தெரிந்த கதை.
தாத்தாவிடம் அறிவுரை கேட்கவந்த பாண்டவர்களுக்கு கிருஷ்ணனைக்  காட்டுகிறார்,.
ஆயிரத்தெட்டு நாமாவளிகளும் பிறக்கின்றன. உலகம் உள்ளளவும் சாதுக்களை ரட்சிப்பெண். அல்லாதவர்களை அழிப்பேன் என்று வாக்குறுதி கொடுக்கிறான் விஷ்ணுவாகிய கண்ணன் .
இந்த ஏகாதசி பீஷ்மர்
தன்  கர்ம உடலை விட்டுப் பரமபதத்தை  அணுகிய நாள்.
அவரளவு  தூய  உறுதி இல்லாவிட்டாலும் கால் பங்காவது
நம் உயிரில்  அந்தத் தீர்மானம் இருக்க வேண்டும்
என்பதே நம் பிரார்த்தனை.

4 comments:

KILLERGEE Devakottai said...

அரிய விடயம் அறிந்தேன் நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கில்லர் ஜி. உடனே பதில் இடாததற்கு மன்னிக்கணும். ஊரைச் சுற்றும்
காய்ச்சல் எங்க வீட்டுக்கும் வந்துவிட்டது.

Thulasidharan V Thillaiakathu said...

இது அறிந்திருந்தாலும் கொஞ்சம் விரிவாக அறிய முடிந்தது உங்கள் பதிவின் மூலம் அதுவும் பீஷ்ம ஏகாதசி இப்போதுதான் அறிகிறோம்...

மிக்க நன்றி வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

வரலாறு,இதிகாசங்கள்
சொல்லும் நல்ல சம்பவங்களைக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதே போல இங்கேயும் பதிந்து விட்டேன்.
அன்பு துளசிதரன். இத்தகைய மகான் கள் இருந்த நாடு,
இனியும் வளம் பெற வேண்டும்.
வருகைக்கு மிகமிக நன்றி.