Blog Archive

Thursday, January 18, 2018

அம்பி,மன்னி, என் தம்பி ரங்கன் ------8

இப்பொழுது அவனுக்கு 65 வயது ஆகிவிட்டது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
         மன்னியின் மல்லி மொக்கு மாலை என் 16 வயது வரை என் கழுத்துக்குச் சொந்தம். அன்பு மன்னி வணக்கம்.
என் தம்பி ரங்கன்  இன்னொரு மாமா கோபுவுக்கு மிகச்செல்லம்
கொழு கொழுவென்றிருக்கும் அவனை மடியில் போட்டுக் கொஞ்சும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
ரங்கனுக்கு திருமணமாகி அழகிய மகள்  பிறந்தாள் .
அவன்  அலுவலகத்தில்  நல்ல பெயர் அவனுக்கு.
கையூட்டு வாங்காத நேர்மை ஆபிசர்.
 வருமானவரி ஏய்ப்புகளைக் கண்டு பிடிப்பதில் சூரன். அதற்காகக் கிடைத்த அவார்டுகள் ஏராளம்.
 அவனும் 52 ஆவது வயதில் ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.
என்ன விசேஷம் என்றால்  13 நாட்கள் கழித்து என் மகன்கள்  இருவருக்கும் திருமணம்.
அழைப்பிதழ்களைக் கொடுக்கச் சென்றவன் அவன்தான்.
அத்தனை வீடுகளுக்கும் மயில்கண் வே ட்டி புரள ,
மனைவியுடன் போய் அழைத்தான்.
ஒரு போகி அன்று காலை எனக்குத் தொலைபேசி அழைப்பு. அக்கா
அவர் அழைக்க அழைக்க எழுந்திருக்கவில்லை.என்றதும் நான் ஸ்தம்பித்தேன்.
பெரிய தம்பி ஊரில் இல்லை.
அம்மாவீட்டுக்கு விரைந்தால்
ஒரு விவரமும் புரியவில்லை.
மக்களும் சிங்கமும், ரங்கன் மனைவியும் ஆம்புலன்சில் அப்போலோ போயிருந்தார்கள்.
ஒன்றும் இல்லை என்று கைவிரித்தனர்  வைத்தியர்கள்.
உடனே பார்க்க வந்தது    அம்பி தான்.
அம்மா முதல் தம்பி வீட்டில் இருந்தார். அவருடன் உட்கார்ந்து பேசிய அம்பி தானே ரங்கனுடைய அந்திமக் கிரியைகளை செய்வதாக அம்மாவிடம் வாக்களித்தார்.
செய்யவும் செய்தார். மாதம் தவறாமல் செய்ய வேண்டிய
கர்மாக்களை செய்து,
அக்காவிடம் வந்து சொல்வார். இருவரும் சேர்ந்து கண்ணீர் வடிப்பார்கள்.
இந்தக் கொடைக்கு ரங்கன் கொடுத்து வைத்திருந்தான்.

ஒரு மகா மனிதரின் கைகளால் அவனுக்கு நற்கதி கிடைத்தது.
அம்பி மாமா ஒரு காரியத்தில் ஈடுபட்டால், எத்தனை சிரமம் வந்தாலும் பின் வாங்க மாட்டார்.
அத்தனை பவ்யம். அத்தனை அடக்கம்.
கர்ம வீரனாகச் செய்தார். இந்த மனோபலம் எங்கிருந்து வந்தது.
72  வயதில்  விரதம் இருந்து கடமைகளை நிறைவேற்றிய பெரிய மனிதர்.
என் அம்மாவின் பாசத்துக்கு மரியாதை செய்தவர்.
அவருக்கு இறைவன் தன இருதயத்தில் தனி இடம் கொடுத்திருப்பார்.
வந்தாயா  வரதராஜன் என்று அனைத்துக் கொண்டிருப்பார்.
இன்னும் பல சங்கதிகள் இருக்கின்றன. என்னால் இந்த  வேலையைப் பூரணமாகச் செய்ய தெம்பில்லை.
 முடியவில்லை.
அவர் பெற்ற மகள்கள் இருவரும் பூரணமாக ஆசிர்வதிக்கப் படுவார்கள்.
அனைவரும் சுகமே வாழ வேண்டும்.
அம்பி மாமாவைக் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்ட என் கடைசி மாமா .கே.வி. ஸ்ரீநிவாசன்  அவர்களும்,ராமசாமி மாமா மகன்  வீர ராகவனும்  மாணிக்கங்கள்.
இறைவன் இவர்களுக்கு நாள் ஆரோக்கியமும்,நிறை வாழ்வும் கொடுக்க வேண்டும்.
இனி எல்லாம் சுகம். சுபம்.

8 comments:

ஸ்ரீராம். said...

தனக்கு என்றில்லாமல் அனைவருக்காகவும் வாழ்ந்திருக்கிறார். வணங்கப்பட வேண்டிய மனிதர்.

Bhanumathy Venkateswaran said...

தொடர்கிறேன்

Avargal Unmaigal said...

நல்லதொரு மனிதரை பற்றி படிக்கும் வாய்ப்பு உங்களால் கிட்டியது

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் தொடர்ந்து வந்து படித்ததற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா. நன்றி மா. ஒரு வகையாகப் பூர்த்தி செய்து விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல மனிதர் இல்லையா!!! தன் நலம் கருதாத மனம்!! வெகு சிறப்பு

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆண்ட வீடு அது. என்றும் சிறக்கட்டும் துளசிதரன். நன்றி மா.