எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
மார்கழிப்பாவை 22. அங்கண்மா ஞாலம்
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே, எம் மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எ ம்பாவாய் .
கண்ணா உன் இரு திருக்கண்களும் மலர்ந்து மலராத தாமரைப் புஷ்பங்களைப் போலத் தண்மையோடு எங்கள் மேல் விழவேண்டும்.
முழுவதும் திறந்து கடாக்ஷித்தயானால் எங்களால்
தாங்க முடியாது.
உன் கண்களோ எதிரிகளுக்கு அச்சுறுத்துவது போலவும், பக்தரிடம்
அருள்மழை பொழிவது போலவும்
அமிர்தமபோல இருக்கின்றன.
உன்னிடம் தோல்வி அடைந்த மன்னர்கள் உன் கட்டிலின்
கீழ்
அடிமைகளாகக் காத்துக் கிடக்கிறார்கள்.
அவர்களைப் போலவே நாங்களும் வந்திருக்கிறோம்.
எப்போதோ எங்கள் மேல் இட்ட சாபங்கள் எல்லாம்
தீர நீயே வழி. அவை இழிந்து மறைந்து போக நீயே
அருள வேண்டும் கண்ணா.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
.

7 comments:
அறியாமல் நாங்கள் செய்யும் பிழைகளை பொருத்தருள்வாய் கண்ணா...
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
பாடலைப் படித்தேன். மன நிறைவு.
அருமை
அதையே எப்பொழுதும் வேண்டுகிறோம் . மிக நன்றி
ஸ்ரீராம்.
வணக்கம் முனைவர் திரு ஜம்புலிங்கம் ஐயா. மிக நன்றி.
நன்றி நாகேந்திர பாரதி. நலமா.
பாசுரமும் விளக்கமும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...
Post a Comment