எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
Add caption அம்பி மாமா மறைந்து 10 நாட்கள் ஆன நிலையில் , மன அழுத்தம் மிகுதியாகிக் கண்கள் நீர் வடிக்கின்றன.
எல்லா நலன் களையும் அவர்களிடம் இருந்து பெற்றவளுக்கு அவர்களின் இறுதி நிலையில் உதவ முடியாத சூழ்நிலை.
தன்னை விட மூ ன்றே வயது மூத்த அக்கா பாப்பாவிடம் அளவிற்கு அதிகமான கரிசனை எல்லா சகோதரர்களுக்கும் உண்டு.
என் மக்கள் திருமணத்துக்கு 13 நாட்கள் இருக்கையில் என் தந்தை திடீரென இறைவனடி சேர்ந்தார்.
திக்குத் தெரியாத காட்டில் விட்டது போல நான் உணர்ந்தேன்.
உடன் கை கொடுத்தது அம்பி மாமா தான்.
ஒரு பக்கம் தம்பிகளுக்கு வைதீகக் காரியங்களில் கை கொடுத்து முடிந்த கையோடு . திருமண முதல் நாள் ஜெயா மன்னியுடன், திருமணத்துக்கு முதல் நாள் சத்திரத்துக்கு வந்துவிட்டார்.
பல்வேறு கொதிப்புகள் சேர்ந்து என் பேச்சு திடீரென்று நின்றது. வைத்தியர் உதவியுடன் சத்திரம் வந்து சேர்ந்தோம்.
பெரியமகன்,சின்ன மகன்,,மக்கள் எல்லோரும் பம்பரமாகச் சுழல, அனுக்கிரஹம் செய்ய வந்த கண்ணன் போல் அம்பியும் மன்னியும் வந்து என்னை ஆசுவாசப் படுத்தி.
மன்னியின் மடியில் படுத்துத் தூங்கினதுதான் தெரியும்.
தலையைத் தூக்க முடியாமல் ரத்த அழுத்தம்.
அடுத்த நாளைக்கு வேண்டும் என்கிற ராமாயணப் புத்தகம், ஸ்ரீநிவாஸத் தாயார் படம், பாய், கைத்தடி எல்லாவற்றையும் பாரிஸ் கார்னருக்கே போய் வாங்கி வந்தது அம்பி மாமாதான்.
ஓயாமல் ஒழியாமல் சுற்றி சுற்றி அனைவரையும் விசாரித்து
இதமாக உபசரித்து , எல்லா இடங்களிலும் இருந்தார்.
என் தம்பிகளுக்கு 12 ஆம் நாள் காரியங்கள் இருந்ததால் வர முடியாத நிலை.
மன்னியின் இதமான கவனிப்பில் எழுந்து உட்கார்ந்த நான் என்ன செய்தெனோ இன்னும் நினைவில்லை.
இந்தத் திருமணத்துக்காகக் கோடி கற்பனைகள் வளர்த்து வைத்திருந்த அம்மாவால் வரமுடியவில்லை.
மறு நாளைக்கு காலையில் அப்பா படவடிவில் மண்டபத்துக்கு வந்தார்.
இவர்தானே சத்திரத்தின் முன்பணம் கொடுத்துச் சென்றார் என்று அந்த அதிகாரிகள் வியந்து சென்றனர்,.அவர்கள் சொல்லாவிடில்
எனக்குத் தெரிந்திருக்காது.
அம்பி மாமா
புது சம்பந்திகளுடன் பேசுவதிலிருந்து , கட்டு சாதம் கட்டி முடிக்கும் வரை இருந்தவர், தன அக்காவுடன் நடந்த விஷயங்களை சொல்ல போய்விட்டார்.
இந்தத்தாராள மனம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, காருண்யம் இதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்வேன் அம்பி.
|
10 comments:
//மன அழுத்தம் மிகுதியாகிக் கண்கள் நீர் வடிக்கின்றன.//
மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
நடந்த சம்பவங்கள் படிக்கும்போது சிலிர்க்கிறது.
ம்ம்ம், ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க! என்றாலும் மனம் வேதனை அடைகிறது. அம்பி மாமா நிச்சயமாய் நாராயணன் திருவடியையே அடைந்திருப்பார்.
அன்பு ஸ்ரீராம் நன்றி. அவருடைய பெண்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.
எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகிறார்கள்.
இது ஒரு ரெகார்ட் மாதிரி பதிகிறேன்.
நன்றி மா. அவருக்கு நல்ல கதியே கிடைக்கும்.
ஏற்கனவே எழுதி இருக்கிறேனா.
அதானே கீதா. ஓட்டை வாய் ,மாதிரி
சொல்வதையே சொல்கிறேனோ.
இது தொடராகப் ப்ரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளணும்.
அவருக்கு நல்ல கதியே இறைவன் கொடுத்திருக்கிறான்.
இன்னும் இருந்தால் துன்பப் பட்டிருப்பார். நன்றி மா.
நல்ல மனம் கொண்டவர் - இவர் போன்றவர் இன்னும் நிறைய பேர் வேண்டும்மா....
மிக நன்றி வெங்கட். கட்டாயம் இருப்பார்கள் ..அம்மா.
எழுதினதா நினைவில் இல்லை வல்லி. என்னிடம் சொல்லி இருக்கீங்க! :)))))
நீங்கள் குறிப்பிடும் அம்பி என்னும் திரு வரதராஜன் மாமாவிடம் நான் சுமார் 13 ஆண்டுகள் மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவன். அவர் பிரிவிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. மாமா மாமி போல் உள்ளம் கொண்டவர்களை நான் எனது வாழ்நாளில் கண்டதில்லை. இனி காணபோவதுமில்லை.
அன்பு திரு ஸ்ரீராம் நடராஜன்,
நீங்கள் பக்கத்தில் குடி இருந்தீர்களா.
நான் மாமாவைப் பார்த்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது.
நீங்கள் கொடுத்துவைத்தவர்.
நான் உங்களைச் சந்திக்க வில்லையே
என்று வருத்தமாக இருக்கிறது.
என் அம்மாவிடம் உயிராய் இருந்தவர்.
வந்து படித்ததற்கு மிக மிக நன்றி.
எத்தனை வேதனைகள் நிறைந்த தருணம் இல்லையா?! அதுவும் பெண்ணின் கல்யாணம்! என்ன ஒரு விசாலமான மனம் இல்லையா அம்பி மாமாவிற்கு! நிச்சயம் இறைவனின் திருஅடிகளை அடைந்திருப்பார்.
மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய சொல்ல? இல்லையா வல்லிம்மா...
விடுபட்ட பதிவுகளைப் பார்த்து வருகிறோம் வல்லிம்மா
துளசிதரன், கீதா
Post a Comment