Friday, December 28, 2018

Positive vibes 2019Vallisimhan

எல்லோரும் வளமுடன் வாழவேண்டும்

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய நன்றிகளைக் கடவுளுக்குச் சொல்லிவிட்டு,
நல்ல எண்ணங்களே மனதில் மந்தில் இடைவிடாது ஓட அவனருள் தேட வேண்டும்.
சிறு கோபம் தலை எடுத்தால் உடனே நீக்கினால் நல்லது.
இந்தக் கடும் சொல் என் ஆத்மாவைப் பாதிக்காது.
இதை நான் ஏற்றூக் கொண்டு சுமை ஏற்றிக் கொள்ள மாட்டேன்.

தினம் தினம் பூக்கும் புதுப் பூவைப் போல
மனதைச் சுத்தமாக மலர்ச்சியாக வைத்துக் கொண்டால் பாதி துன்பங்கள் தானே அகன்று விடும்..
மிகக் கடுமையான பயிற்சிதான்.

மேலும் மேலும் காழ்ப்பு உணர்ச்சிகளை மனதில் ஏற்றி,
அடுத்த பிறவிக்கும் அதை எடுத்துக் கொண்டு போக வேண்டாமே.
அனைவருக்கும் வரும் புத்தாண்டு மகிழ்ச்சியே கொண்டு வர என் பிரார்த்தனைகள்.
வாழ்க வளமுடன்.


Wednesday, December 26, 2018

பழைய பயணம் பற்றிய புதுப் பதிவு.

Vallisimhan
எல்லோரும் இனிதே வாழ வேண்டும். 

 இது 2006 இல் நான் துபாயிலிருந்து ஸ்விட்சர்லாண்ட் பயணம் தனியே தன்னந்தனியே செய்த பயணம் பற்றியது.
அப்பொழுதெல்லாம் நம் முதுகெலும்பு கொஞ்சம் பழுதடைந்து இருந்ததால்
 உடல் பருமனும் கூடி
நம்மை நிலை தடு மாற வைத்த நாட்கள்.
எந்த ஊர் மண்ணாக இருந்தாலும் என் நெற்றி அதைப்
பதம் பார்க்காமல் இருந்ததில்லை.
வழக்கமாகக் கணவரின் இரும்புக் கைகள் என்னைக் காப்பாற்றும்.
இந்தத்தடவை அவர் பத்து நாட்கள் கழித்து வருவதாக ஏற்பாடு.

போய்ச் சேர வேண்டிய இடம் சிகாகோ. நடுவில் நிறுத்தம் சிறியன் வசிக்கும் பாசல்,ஸ்விஸ்.
 எங்கும் விழும் அம்மா பத்திரமாகப் போய்ச்சேர ஏற்பாடு செய்யச் சொன்னான் பெரியவன்.
எனக்கு அது தெரியாததால், ஸ்பெஷல் கவனிப்பாக டூனா, கீரை சாண்ட்விச் கொடுத்தபோதும் புரியவில்லை.
 மகன் சொல்லி இருந்த டயபெடிக் மீல்ஸ் தான் அது.
தேவுடான்னு பட்டினி கிடந்து 6 மணிப் பிரயாணத்தை முடித்தபோது,
காவலாளி போல நீல உடை ஹோஸ்டஸ் வந்து நின்று கொண்டாள்.

ப்ளீஸ் கம் வித் மீ என்று அழைத்துச் சென்றாள்.
   


அந்த நீல உடுப்பின் முதுகைப் பின்பற்றி வெளியே வந்தால் இன்னோரு
இனிமையான குரல், நாராசிமான் என்று கூவியது.

நானும் விட்டுக் கொடுக்காமல் நரசிம்ஹன் என்றதும்,
சரி சரி இப்ப என்னோட வா...என்கிற புன்னகையோடு,
மெயின் காரிடார்க்கே அழைத்து வந்துவிட்டது.

my luggage, என்று இழுத்தவளை, ஓ எல்லாம் பத்திரமாக இருக்கு.
உங்க மகன் காத்திருக்கிறார் , என்று ஜேம்ஸ்பாண்ட் படத்தில்
வருவது போல்  ஒரு சிறிய லிஃஃப்டில்
அழைத்துச் சென்று ஒரு பெரிய வால்வோ வண்டி அருகில் நிறுத்தினார்.
 நீங்கள் உங்கள் மகனிடம் போகலாம் ,இவர் உங்களை மெயின் டெர்மினலில் விடுவார் என்றார்.
இதை உங்கள் தோளீல் இருந்து எடுக்கலாமா என்றபடி நானே உணராமல்
என் தோளில் சேர்க்கப் பட்டிருந்த  எஸ்கார்ட் சர்வீஸ் என்று பெரிய பட்டனை
எடுத்தார்.
பட்டை கட்டப் பட்ட பூனை, குழந்தை இது போல அந்த
வண்டியில் ஏறிக்கொண்டேன்.
வெளிச்சத்துக்கு வந்ததும்  அந்த நவம்பர்  காலைக் குளிரில் மகன்
 பூங்கொத்தோடு நின்றிருந்தான். என்னடா ராஜா இந்த மாதிரி கண்கட்டிக் கூட்டி வருவது போல அழைத்துவதார்கள் என்றால்.
நான் தான் ஏற்பாடு செய்தேன் மா. அப்பாவை விட்டுத் தனியா வர.
பயப்படுவியேன்னு செய்தேன் என்று சிரித்தான்,. இதற்கு 500 ஃஃப்ராங்க்ஸ் எஸ்கார்ட்  ஃஃபீஸ்.
குழந்தைக்கு செலவு வைத்தேனே என்று வருத்தமும், அவனுடைய கரிசனத்துகாகச்
சந்தோஷமும் போட்டியிட, ஸ்டார்பக்ஸ் காப்பிக்கு விரைந்தோம்.
ஏண்டா ,அவா எனக்கு ஒரு காஃஃபி கொடுத்திருக்கலாமே என்றேன் நான்.

Sunday, December 23, 2018

மயிலை முண்டகக் கண்ணி,திண்டுக்கல் அபிராமி

இந்தத் தீபங்கள் அபிராமி அம்மா கோவில் தீபங்கள்.


அபிராமி அம்மா எங்களுக்கு அறிமுகமானது திண்டுக்கல்லில் எங்கள் பள்ளிப் பருவத்தில்அருள்மிகு ஸ்ரீ அபிராமித் தாயார்
அருள்மிகு ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மன்

மயிலை முண்டகக் கண்ணி அம்மா கோவில் .


Saturday, December 15, 2018

Kal Garuda Sewai Full

Vallisimhan

1500பதிவுகள் ,,,,,,,,12 வருடங்களுக்கான பொழுதுகளின் பதிவுகள்.

Vallisimhan பதிவுகள் 1500
அவசரமாக ஓடிய நாட்கள் சில. ஆனந்தமாக ஓடிய நாட்கள் சில.
வருத்தத்துடன் பதிந்த பதிவுகள் சில. வரம் கொடுத்த சாமிகளாக பேரன் பேத்திகள் விஷமங்கள், பேச்சுக்கள் சில.சென்று கழித்த இடங்கள் பல. துணயை இழந்து ,நினைவில் பதிந்த நிகழ்ச்சிகள் சில.

நண்பர்கள் குழாம் பெருகி இருந்த காலம் சில. இப்பொழுது  இன்னும் வல்லி ம்மாவுக்காகப் படிக்க வரும் நாலைந்து நட்புகள்.
பூனை கண்ணை மூடிக் கொள்வது போல என்னிலேயே நான் மூழ்கி விட்டால் யார் தான் 
அசராமல் படிக்க முடியும்.

ஆரம்ப காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பலரின் உறுதுணையால் வளர்ந்த வலைப்பூ இது.
எண்ணங்கள் மனதில் ஓடும்  வரை எழுத ஆசைதான்.

அனைவரும் வாழ்க வளமுடன்.

காலமகள் கண்திறந்தாள் 2

Vallisimhan
எல்லோரும் இனிதாக வாழவேண்டும் .

  சாப்பாட்டுக்கடை வாசலில் திகைப்புடன் உட்கார்ந்த
சரவணன் ஐயாவைப் பார்த்த அவரது கிராமத்தவர்கள்
அதிர்ந்து போனார்கள்.
செய்தி கேட்டதும் பதறிப் போய் அவருடைய பையின் அடையாளங்களை
ஒலிபெருக்கியில் சொல்லச் சொன்னார்கள்.

அடுத்த பத்து நிமிடங்களில் பையும் கையுமாக நால்வரைப் பிடித்தனர் போலீசார்.

அவர்களை ஐய்யா அவர்களின் அருகாமையில் கொண்டு வந்ததும் அதிர்ச்சியில்
திகைத்தார் ஐய்யா.
ஏண்டா பக்கத்து நிலத்துப் பங்காளிகள என்னைப் பாதுகாப்பீங்கன்னு நினைச்சேனே /
என் மடியிலிலேயே கை வச்சிட்டீங்களே பசங்களா.
பங்காளின்னால் இப்படியா.
என் அண்ணன் பிள்ளைகள் என்னைத் தாங்கிப் பிடிப்பதை விட்டு
வெட்டிப் போடப் பாத்தீங்களா என்று கண்ணீர் விட்டார்.
பெரியப்பா, தண்டனை கொடுங்க.
நிலத்துல தண்ணி இல்ல, எங்களுக்கு நெஞ்சிலயும்
தண்ணீ இல்ல.
பெரிய மனசு செய்யணும் என்று அவர்களும் அழ, நம்ம சீமைக்கு வந்த
நட்டத்தைப் பாத்தியா.
பாசம் ஓடிவிட்டதே ..பாசனம் எப்படிச் செய்வோம்.
இந்த எட்டாயிரம் எத்தனை நாளுக்குக் காணுமடா உங்களுக்கு.
சரி பேச்சு வேண்டாம்.
எல்லாம் சாப்பிடுங்க. ஒரு வழி செய்யலாம் என்று அவர் சொல்லும்போதே சூறைக்காற்று
அடிக்கத் தொடங்கியது.
ஏதோ கஜா புயலாம், நாம ஊரைப் பார்க்க ஓடுவோம்,
பொண்டு பிள்ளைக் காக்கணும்னு அவசரமாக சாப்பிட்டு
அதே லாரியைப் பிடித்து வீடு நோக்கி விரைந்தார்கள்.
வழி எங்கும் தோப்புகளும்,பசுமையை இழந்து சரிந்து கிடந்தன.
அனைவர் மனங்களும் பதைக்க ஊர் வந்து சேர்ந்த போது இரவாகிவிட்டது.
மழை வீர்யம் கொண்டு முழங்கிக் கொண்டிருந்தது.
இது அரியாங்கோட்டை தானா என்று கேள்வி கேட்க்கும்படி இருந்தது. எங்கும் தண்ணீர்.
ஒரே இருட்டு. அவரவர் தம் மனைவி,பிள்ளைகள் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். ராமலிங்க சாமி, எங்க பாவத்தை மன்னிச்சுடு. இனித் திருட நினைக்க மாட்டோம். பெரியம்மாவையும்  குடும்பத்தையும் காட்டிகொடு. உயிர் இருந்தால் போதும். பணம் மண் எதுவும் வேண்டாம் என்றூ கூக்குரலிட ஆரம்பித்தனர்.
ஏதோ வண்டி வெளிச்சம் கண்ணில் பாட சாலை நடுவில் நின்று
பார்த்தனர். அது காவல் நிலைய வண்டி. ஓட்டுனர் இறங்கி, ஏன் வழியில் நிக்கறீங்க,புயல் அடிக்கப் போகுதே எங்களுடன் வாருங்கள் என்று வண்டியின்
பின்னால் ஏறிக்கொள்ளச் செய்தனர்.
தங்கள் விவரங்களைச் சொன்னதும், சமூகக் கூடத்தில் நிறையபேருக்கு இடம் இருக்கு. நீங்க அங்க இறங்கிப் பாருங்க..
வெளியே மட்டும் வரவேண்டாம். நாளைக்காலையில்
புயல் கரையைக் கடந்துடும்.காத்து மட்டுப் படும். அப்போ நாங்களே உதவறோம் என்று சொல்லி ,சமூகக் கூடத்தில் இறக்கிவிட்டனர்.

பெரியப்பனைக் கையில் தாங்கியபடி உள்ளே விரைந்தனர்
அந்த வாலிபர்கள். குளிரும் பசியும் வாட்ட,அங்கே கூடி இருந்த மக்களில் தங்கள் குடும்பத்தைதேடினர்.
 அப்பா, தாத்தா, என்னாங்க என்ற குரல்கள் வந்த திசையில் பார்த்தால்,
பர்வதம்மா, மருமகள்கள்,பிள்ளைகள் என்று ஒரே இடத்தில் இருப்பதைப்
பார்த்து ,சரவண ஐய்யாவுக்கு மனம் நெகிழ்ந்தது.
பர்வதம்மா கேட்ட முதல் கேள்வி சாப்பிட்டிங்களா என்பதுதான்.

பெரியம்மா காலில் விழத்தயாராய் இருந்த தம்பி மகன் களைக்
கண்ணால் தடுத்து நிறுத்திய, பெரியப்பா எப்படித் தப்பி இங்க வந்தீங்க எல்லாரும். வர வழி எல்லாம்
மரம் சாய்ஞ்சு கிடக்கே என்று வினவினார்.
நீங்க முந்தின நாள் கிளம்பும்போதே ரேடியோ, டிவில சொல்லிட்டாங்கப்பா.
கிடைத்த வரை எடுத்துக் கொண்டு இங்க வந்துட்டோம்.
நம்ம பந்து ஜனமெல்லாம் இங்கதான் என்றார் பர்வதம்மா.
பெரியம்மா இல்லாட்டா நாங்க நிலத்துலயே மடிஞ்சிருப்போம் என்றாள்
ஒரு மருமகள்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்லதுக்குத்தான்.
குடும்பம்னா இப்படித்தான் இருக்கணும்.
வறுமை வந்தால் விலகிப் போகணும்னு யாரும் சொல்லலியே.
இருக்கிறதைப் பகுந்து கொண்டா,மனசும்,குடும்பமும்
வளரும் பிள்ளை என்றாள் பாசத்தோடு.

வெளியே அடிக்கும் புயல் பெரிசா, மனசில் அடித்த புயல் பெரிசா
என்று யோசித்தார் பெரியய்யா சரவணன்..
 தாயார் அளித்த கூழை உண்டு தகப்பனார் அருகில் வந்தமர்ந்த பிள்ளைகள்,
பெரியப்பா, இந்தமழை நம் குடும்பத்தை ஒண்ணாக்கிடுச்சு.
உங்க நிலமும் எங்க நிலமும் சேர்த்து நாங்க பாடுபடறோம்.
மண்மாதா வஞ்சிக்க மாட்டாள்.
ஒரு போகம் முடிந்ததும் ராமேஸ்வரம் போயீ சாமி கும்பிட்டு வரலாம்
என்று சொல்லி முடித்தனர்.

ஆமாண்டா இனிப் பழைய பகை இல்லை. புது சோறு பொங்கி
,புதுக்காளை வாங்கி, இனி எல்லாம் புதுசு தான்.
பெரியய்யா காளைகளை மீட்கணும் முதல்ல.
ஆமாண்டா முதலில் நம்மைக் கடனுக்காகக் கழுத்தை நெரிச்சதுனால
தான, பெரியய்யாவுக்குத் துரோகம் செய்யப் போனொம்.
நம்ம எட்டு காளைகள்ள இரண்டு ஜோடியைக் கொடுத்துட்டுப் பெரியய்யாவுக்குக் காளைகளை
மீட்டுடுவோம்.
இத்தனை முடிவுகளையும் தீர்மானம் செய்து
அவரவர் குடும்பங்களுடன் தூங்கச் சென்றனர்.
சரவண ஐய்யாவும் பர்வதமும் வெகு நாட்களுக்குப் பிறகு
விடியல் சீக்கிரமே கிடைக்கும் என்ற நிம்மதியோடு
உறங்கச் சென்றனர். வீடு புயலைத் தாங்குமா,மீண்டும் தமக்குக் கிடைக்குமா
என்ற கேள்விகள் மனதின் மூலையில் இருந்தாலும் இன்று
காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்லியபடி
மழையின் சத்தத்தில் லயித்தபடி கண்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.
நமக்கு என்று இருப்பது பறிபோவது போலத் தோன்றினாலும்
மீண்டும் அது நமக்குக் கிடைக்கக் கடவுள் அருள்
உண்டு .நம்பிக்கையே வாழ்க்கை. வாழ்க வளமுடன்.

Thursday, December 13, 2018

பத்தாவதுபடம் திருமலை தென் குமரி

Vallisimhan

#பத்துப்பட பதிவுகள்,
#பத்தாவதுபடம்திருமலைதென்குமரி
#இயக்கம்#எபி நாகராஜன்,
#நடிகர்கள்சீர்காழிகோவிந்தராஜன்,சிவகுமார்,சகுந்தலா, குமாரி  பத்மினி,
கோபாலகிருஷ்ணன்,காந்திமதி,மனோரமா,சுருளிராஜன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள்.
இசை குன்னக்குடி வைத்திய நாதன் .

1970 இல் பார்த்த படம். ஒரு புதுவித முயற்சி. இயக்குனர் தேர்ந்தெடுத்த கருத்து பல
மொழி பேசும் குடும்பங்கள் கொண்ட ஒரு அடுக்கு மாடிக் குடி இருப்பிலிருந்து , ஒரு பேருந்தை ஏற்பாடு செய்து திருமலையிலிருந்து  தென் குமரி வரை, திருத்தணி, மைசூர்,மதுரை, குருவாயூர்
என்று எல்லா இடங்களுக்கும் செல்கிறார்கள்.
அந்தக் குடுபத்தோடு நான்கு கல்லூரி மாணவர்களும், பக்கத்தில் குடி இருக்கும் ஏழைத்தம்பதிகளான மனோரமா ,சுருளிராஜன் தம்பதிகளும் சேர்ந்து கொள்கிறார்கள்.
வண்டி முழுவதும் கலகலப்புக்குப் பஞ்சமில்லை,
சுருளிராஜனைக் குடிப்பழக்கத்திலிருந்து விடுவிக்க மனோரமா முயற்சிக்கிறார். வெற்றியும் பெறுகிறார்.
கல்லூரி மாணவர்கள்+காதலர்களாக சிவகுமார்,குமாரி பத்மினியும், சகுந்தலாவும் அவர் காதலரும்.
இதைத்தவிர, ஒரு தெலுங்குக் குடும்பம், ஒரு கேரளக் குடும்பம், ,ஒரு கன்னடத்தம்பதியினர், ஒரு தமிழ்க் குடும்பம். தமிழ்ப் பேராசிரியர் அழகாகக் கவிதை புனைபவர்,அவரது மனைவி..ஒரு
பிராமணக் குடும்பம் கோபாலகிருஷ்ணன்,மனைவி,மகள்,மகன்,
ஒரு பாட்டியும் ,அவள் பேரனும்.
திருப்பதி உண்டியலில் மோதிரத்தைச் சேர்க்க மனமில்லமல்
பதிலாகப் பணம் செலுத்த நினைக்கும் போது மோதிரமும் கூட விழும் அற்புதம்,
திருத்தணியில் தொலைந்து போகும் மகனுக்கு,திரும்பக் கிடைத்ததும்,
முடியிறக்கி பிராத்தனை நிறைவேற்றும் அழகு,குருவாயூரில் சொல்லப்படும் மகிமை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர்காழியின் அற்புதப் பாடலும், வந்திருக்கும் மங்கைகளின் நடனம்,
ஒவ்வொரு கோவிலிலும் திரு கோவிந்தராஜனின் இசை மழை,
கடைசியில் கன்னியா குமரியில் காதலர்களின் பிரிவும் ,பின் இணைவதும்
மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
அந்தக் காலத்து தமிழ்னாடும் , கோவில்களும் ,சுற்றுப்புறமும் எப்படி இருந்தன என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப் படமாக இருக்கிறது. இந்தச் சித்திரம்.
ஒரு விகல்பம் இல்லை,கவர்ச்சி நடனம் இல்லை. இருந்தும் வெற்றி பெற்றது. திரு.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில்.
முடிந்தபோது காண மறக்காதீர்கள். வாழ்க வளமுடன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Monday, December 10, 2018

காலமகள் கண் திறப்பாள்

குத்துக்காலிட்டு நடைபாதையில் உட்கார்ந்த சரவணன் ஐய்யாவுக்குக்
கண் இருட்டிக் கொண்டுவந்தது.
திருச்சி சந்தைக்கு வந்தவரின் பையை யாரோ பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.
காளை மாடுகளைச் சந்தையில் விற்க வந்து நல்ல லாபத்துக்கும் விற்றுவிட்டு
உணவு அருந்த, பணம் வைத்திருந்த துணிப்பையை வெளியே
Add caption
Add caption
கிடைச்சிறுமியா கவலையை விடு ..
எடுத்த பையை  யாரோ பறித்துவிட்டார்கள்.
ஏமாற்றப் பட்ட விவசாயி.

இணைய நட்பு  திரு வெங்கட் நாகராஜனின் புகைப்படம் ஒன்று எல்லோரையும் பாதித்தது நினைவிருக்கலாம்.
++++++++++++++++++++++
நம் சரவணன் அய்யாவும் அதை போல விவசாயிதான்.
எப்போதும் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காரர் .
ஆமாம் ராம நாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவர்.

இந்த 75 வயதில் பல அராசாங்கங்களையும்  கண்டவர்.
அவர் தந்தை காலத்தில் ரயில்வே  லைன் வந்த பொது சில நிலங்களை இழந்தாலும்  புஞ்சைப் பயிர்கள்,வரகு,சாமை என்று விளைவித்து
சந்தையில் வியாபாரம் செய்வார்.
அவர் காலத்துக்குப் பிறகு மதுரை ராமேஸ்வரம் சாலை வந்தது.
அதில்  இவருக்கு நாட்டம் சில   ஏக்கர்.

அசரவில்லை சரவணன். கையில் இருந்த பணத்தைப் போட்டு சொட்டு நீர்ப் பாசனம் செய்து ,கத்திரி,வெண்டை,என்று மாற்றுப் பயிர்கள் விளைவித்தார் வயதும் ஆச்சு. எல்லாப் பிள்ளைகளையும் போல அவர் மக்களும் மதுரையைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

மனைவி பர்வதம் அவருக்கு உறு  துணை.

எதற்கும் அசராத உடற்பாங்கு. மனப்பாங்கு.
அய்யா அசரும் யோசனைகளை சொல்லி ஊக்கம் கொடுப்பதும்,  வானொலியில் சொல்லும் நல்ல செய்திகளை அவரிடம் பகிர்ந்ந்து உற்சாகப படுத்துவதும் அவள் வேலை.

நிலங்கள் சுருங்கி மழை இல்லாமல் பிளந்து கிடப்பது மனதை உறுத்த, பத்து வருடங்களாகக் கூட இருக்கும்  மாடுகளை நல்ல நிலைமையில் இருக்கும் போதே விற்றுவிட்டு, தன்  சிறிய இடத்துக்கு பி பக்கத்திலே ஏற்றக்  கிணறு போட்டு மிச்ச நாட்களைக் கழிக்க
அவளுக்குத் தோன்றியது. மானம் கண் திறந்தால்  மீண்டும் வெள்ளாமை ஆரம்பிக்கலாம் என்று ஆக்கம்
கொடுத்ததும் அவள்தான்.
அக்கம்பக்கத்து விவசாயிகள் திருச்சி சந்தையில் மாட்டு வியாபாரம் நேர்மை என்று  சொன்னதும்  சரவணனும் மனமில்லாமல், லாரியில் மாடுகளைக் கொண்டு வந்து இறக்கினார்.
அப்போது நிகழ்ந்ததுதான் இந்தத் திருட்டு.
தொடரும்.

Sunday, December 09, 2018

#பத்துப்படவரிசை#9ஆம்படம்அன்னை

#பத்துப்படவரிசை
#9ஆம்படம்அன்னை
#பானுமதி,ரங்கராவ்,சௌகார்ஜானகி,சச்சு,ராஜா,சந்த்ரபாபு.

அன்னை படம் 1962இ வெளிவந்த ஏவீஏம் ஸ்தாபனத்தின்
அற்புதமான படம். இதுவரை யாரும் தொடாத கரு.
 இரு சகோதரிகளில் பானுமதிக்குப் பிள்ளைப்பேறு இல்லை என்றாகிவிடுகிறது.
சகோதரி சௌகார் ஜானகி,தந்தையின் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்ததால்
சொத்துரிமை இழக்கிறர்,.
பானுமதியின் சகல ஆதரவுகளையும் ஏற்று குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்.
கணவன் நல்ல மானஸ்தன். ஏதோ தவறான நபருக்கு காரண்டார் கையெழுத்துப்
போட வழக்கில் மாட்டிக் கொளிக்றார்.
பானுமதியின் கணவர் சமயதில் உதவ் தம்பதிகள், வெளினாடு சென்று பிழக்க எண்ணுகிறார்கள்.
அக்காவுக்குத் தங்கையின் குழந்தையிடம் இயற்கையாகவே
பாசம். இப்பொழுது பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தில்
தங்கையிடம் பிள்ளைப் பிச்சை கேட்கிறார்.
ஆரம்பத்தில் மறுக்கும் தங்கை நிலைமையைக் கருதி விட்டுக் கொடுக்கிறார்.
குழந்தை செல்வத்தைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து மருத்துவராக ஆக்கிவிடுகிறார்.
பாசம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. அவனுக்குத் தலைவலித்தால் இவருக்கு நெஞ்சே வலிக்கும்.
நடுவில் தங்கைக்குப் பணம் அனுப்பவும் மறக்க மாட்டார்.
ரங்கராவ் புகழ் பெற்ற வக்கீலாக வருகிறார்.
நேர்மையான மனிதருக்கு எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும்
உண்டு. பர்மாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் காலை இழக்கும் தங்கை கணவருக்காக வேண்டி இருவரும் சென்னை திரும்ப உத்தேசிக்கிறார்கள்.
அதன் பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
பலவித உணர்ச்சிப் போராட்டங்களுக்கு நடுவே எப்படிக் குடும்பம் ஒன்று சேர்கிறது
 என்பதே கதை.
அருமையான வசனங்கள்.அற்புத நடிப்பு
லாபாயிண்ட் பேசும் ரங்கராவ். அவரையும் மேற்பார்வை செய்யும் பானுமதி.
நகைச்சுவைக்கு சந்திரபாபுவு, கூடத் தங்கி இருக்கும் உறவினர்களும்.
நளினமான காதலுக்கு ராஜாவும் சச்சுவும்.
பானுமதி அம்மாவின் ஆளுமை நிறைந்த படம்.இது போல
 நடிப்பெல்லாம் இனிக் காண்போமா என்பது சந்தேகமே.
நீங்களும் ரசித்திருப்பீர்கள். இன்னோரு தடவையும்  பார்க்கலாம் தப்பில்லை.
எல்லோரும் இனிதாக வாழவேண்டும்.

Annai - Banumathi fixes marriage for Raja

Vallisimhan

Annai | Tamil Movie Comedy | Ranga Rao | Banumathi | Sowcar Janaki | Sac...

Vallisimhan

எட்டாவது படம் ..ஒளிவிளக்கு

Vallisimhan    எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.


#பத்துப்படவரிசையில்எட்டாவது. படம்.
#ஒளிவிளக்கு
#எம்ஜிஆர்,ஜெயலலிதா,சௌகார்ஜானகி
#எம்ஜிஆரின் நூறாவதுபடம்.100.#மதுவிலக்கு உயர்ச்சி#Music by M.S.VISWANATHAN.
நான் இந்தத் தொடரை ஆரம்பிக்கக் காரணமான Raji Muththukrishnan,
தொடர்ந்து கௌரவித்த Hemashrinivasan,Gomathy Arasu,Priya charles Antony,
Laitha Murali, நான் அழைக்க நினைக்கும் சினேகிதிகளிடம்
அனுமதி வாங்கிக் கொண்டு அழைக்கிறேன்.
Phool aur Paththar இந்திப் படத்தின் தழுவலாக எடுக்கப் பட்ட நல்ல படம். எம்ஜியார் முதன் முதலாகக் குடிப்பது போலக் காட்டப்பட்ட படம். அதையொட்டி //தைரியமாகசொல் நீ மனிதந்தானா என்ற பிரபலமான பாடல்.
அவருக்கு நற்போதனைகளைச் சொல்லி
உதவ முனையும் விதவையாக சௌக்கார் ஜானகி.
எம்ஜியாரின் காதலியாக ஜெயலலிதா.
இந்தப் படத்தில் சௌகார் பாடிய// இறைவா உன் ஆலயத்தில்// என்று பாடிய பாடல் எம்ஜியார் உடல் நலம் பெற பட்டி தொட்டிகளில் ஒலித்தது நினைவில் இருந்தது.
வீதிகளேங்கும் அவர் படமும், இந்தப் பாடலும்,பிரார்த்தனைகளும்.
அவரை மீட்டன என்றே நினைக்கிறேன் .
சமூகபிரஞையோடு எடுக்கப் பட்ட படம்.
பாடல்கள் வழக்கம் போல் இனிமை.
எம் ஜி ஆர் ,சௌகார் மற்றும் அனைவரும் சிறந்த நடிப்புக்காக
பெயர் பெற்றார்கள்.
ஜெயலலிதா அவர்களின் நடனங்களும் மிக அருமையாகஇருக்கும்.
மக்கள் தலைவர் என்றால்   எப்பொழுதும் ,
பொழுது போக்குக்கு  உகந்த படங்கள் பார்ப்பதே வழக்கம்.
இந்தப் படத்தில் அருமையான சமூக நலன் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்திருப்பார்.


Show more reactions

Saturday, December 08, 2018

.ஏழாவது படம் மேஜர் சந்திரகாந்த்

Vallisimhan

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

 #பத்துப்படவரிசையில்
#மேஜர்சந்திரகாந்த்,
#கே.பாலச்சந்தர்,
#மேஜர்சுந்தரராஜன்,முத்துராமன்,நாகேஷ்,ஜெயலலிதா
#லலிதாமுரளி. தான் ,நான் பங்கு பெற அழைக்கும் தோழி.
என் இணையத்தோழி திருமதி #Rajimuththukrishnan
என்னைக் கேட்டுக் கொண்டபோது, என்னுள் இத்தனை ஆர்வம் இருந்தது
தெரியவந்தது.
தமிழ் சினிமாக்கடலில்  எத்தனையோ நல்ல படங்கள்.
அதில் பத்து படங்களைப் பற்றி எழுதுவது சிரமமே இல்லை.
எதை எடுப்பது,கோர்ப்பது என்ற நிலைதான்.
இன்று என் மனதில் வந்தது மேஜர் சந்திரகாந்த்.
ஒவ்வொரு காட்சியும் அர்த்தத்தோடு, ஒரு நல்ல கதையை எப்படி
நகர்த்தினால் அனைத்து மக்களுக்கும் அது போய்ச் சேரும் என்று யோசித்து,
அனைத்து நடிகர்களையும்,
அபாரமாக நடிக்க வைத்திருப்பார்.திரு.பாலச்சந்தர்.

கதையும் இதுவரை நாம் அறிந்திராத சப்ஜெக்ட்.
கண்ணிழந்த  மிலிட்டரி மேஜராக ,சுந்தரராஜன்,
கல்லூரி மாணவர்களாக ஏவிஎம் ராஜனும் ஜெயலலிதாவும்.
சாதாரண தையற்காரராக, தங்கையிடன் அதீதப் பாசம் வைத்த
அண்ணனாக நாகேஷ்,
தம்பியைத் திருத்த முயலும் போலீஸ் அதிகாரியாக
முத்துராமன்,எல்லோரும் என் மனதில் பதிந்திருக்கிறார்கள்.

வி.குமாரின் இசையில் 1966இல் வந்த படம்.
கொலை செய்த நாகேஷின் கதையைக் கேட்டு நல் தீப்பு வழங்கும் காட்சியும்,
தப்பு வழியில் சென்ற மகனுக்காக உருகும் நேரமும்,
ஏன் அவர்கள் வீட்டு சீசரும், வேலையாளாக வருபவரும் கூட
கச்சிதமாக நடிக்கிறர்கள். 52 வருடங்களுக்கு முன்
வந்த படம். பத்துவருடம் முன்னால் தொலைக்காட்சியில்
பார்த்தபடம்..இப்பொழுது மாதத்துக்கு ஒரு முறையாவது பார்க்கிறேன்.

பாடல்கள், நானே நிலவு,
ஒரு நாள் யாரோ,
கல்யாண சாப்பாடு போடவா  அனைத்தும் ரீங்கரிக்கும் இனிமை.
அனைவருமே பார்த்திருப்பீர்கள்.

எனக்கு எழுத ,மீண்டும் ரசிக்க வைத்த இந்தப் படத்துக்கு
அன்பு கலந்த நன்றி.


Thursday, December 06, 2018

பத்துப் பட வரிசை.

Vallisimhan#பத்துப்படவரிசை
#கப்பலோட்டியதமிழன்
#வீரசுதந்திரம்#மஹாகவிபாரதி,#சுப்ரமணியசிவா
Requesting #PriyacharlesAntony to continue.

எளிதில் வார்த்தைகளிலோ,எழுத்துகளிலோ கொண்டுவர முடியாத காவியம்.
ஆங்கிலேயர்களை மிரட்டிய தமிழன். அவருடன் இணைந்த மற்ற தமிழர்கள். நம் பாரதியார், சுப்ரமணிய சிவா, கலெக்டரைச் சுட்ட வைத்தியனாதன்,,குமாஸ்தாவுக்குச் சவரம் செய்ய மறுத்த தொழிலாளி,
அன்னியத்துணிகளை எரித்த தேசபக்தி.
இந்தச் சிறு பொறிகளே நம்மைச் சுதந்திரத்தை நோக்கி நகர்த்தின.
திரு பி.ஆர் .பந்துலு முன்னின்று தயாரித்த இந்தப் படத்தைப்
பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம்.
படம் முழுவதும் பாரதி பாட்டு.
நெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத்திறமும் இன்றி,
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்,
ஓடிவிளையாடு பாப்பா,
காற்றுவெளியிடை கண்ணம்மா
எந்தக் காட்சியை விட. எந்தக் காட்சியைச் சொல்ல.
திரு.டிகே ஷண்முகம் சிவாவாக உருக்கொண்டதையா,
திரு எஸ்வி சுப்பையா பாரதியாகக் கனல் பொழிந்ததையா,
எல்லோரும் சேர்ந்து வந்தே மாதரம் என்று முழங்கி நம்
நாடி நரம்புகளில்
புது ரத்தம் புகுத்தினதையா,
அவர்களை நினைத்து நெஞ்சில் பாரம் ஏற்றிக் கொண்டதையா,
வ உ சியாகவே வாழ்ந்து காட்டியம் நடிகர்திலகத்தின் கம்பீரத்தையா.
இந்தக் காவியத்துக்கு இணை வீர பாண்டிய கட்டபொம்மனைச் சொல்லலாம்.

அந்தப் படத்தில் ஒரு வீரம். இந்தப் படத்தில் இன்னும் மலிந்துவிட்ட சமூகத்தில் கப்பல்கொடி ஏற்றிய மாவீரர் சிதம்பரனாரைக் கொண்டாடும் காவியம். இந்த வீரம் இன்னும் நம் இளைஞர்களைப் போய்ச் சேர வேண்டும். வாழ்க பாரதம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Revathi Narasimhan
Yesterday at 7:13 AM ·
# பத்துப்படங்கள் வரிசை
#ஐந்தாவதுபடம்
#எதிர் நீச்சல்.
#கே.பாலச்சந்தர்படம்,#Nagesh,#Hemashrinivasan
மாடிப்படி அடியில் வாழ்வு நடத்தும் மாது வாழ்க்கையில் வெற்றி
கண்ட கதை.
மாதுவின் வாழ்க்கை தினம் ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கும் அவலம். அதற்காக அவனை வேலைக்காரனாக மதிக்கும் மற்ற குடும்பத்தினர்.
மாதுவைத் தோழனாக ஏற்றுக் கொண்ட மேஜர். அந்த ஏண்டா படவா ராஸ்கலுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
பைத்தியமாகப் பெயர் சூட்டப்பட்டு அவதிப் படும் ஜெயந்தி,
அழகாகப் பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சௌக்கார் ஜானகி, அசட்டுக் கிட்டுவாக ஸ்ரீகாந்த்,
முரட்டு அன்பு நாயர் அவதாரமாக முத்துராமன்,
மனோரமா அப்பப்பா இவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கிறார்கள் இந்தப் படத்தில்.

டைரக்டரின் இயக்கும் மகிமை பளிச் பளிச்.
பதட்டத்தில் அடிப்போடி பைத்தியக்காரி என்று பாடிவிடும்
நாகேஷ். அவரிடத்தில் காதல் கொண்ட ஜெயந்தி.
அவர் சரியான நேரத்தில் ஆவேசப்பட்டுப் பழிவாங்கும் கட்டம்
கிணற்றங்கரையில் இருவரும் பரிமாறிக் கொள்ளும் அன்பு

கடிகாரத்தை விட்டுவிட்டியே நாயர்னு நாகேஷ் சொல்லிக்காட்டும் பரிதாபம்.
மேஜர் ஆசி கொடுக்க மறுக்கும் போது, அவரது கைத்தடிக்கு நமஸ்காரம் செய்யும் நாகேஷ்,
கடைசி கட்டத்தில் தில்லிப் பெண்ணை மணந்துவிட்டதாகச் சொல்லி
அனைவரையும் கலங்க வைத்துக்
கடைசியில் மேஜர் வாயால் படவா ராஸ்கல் சொல்ல வைக்கும் மாதுவின் சாமர்த்தியம்,
எல்லாமே நம்மைக் கட்டுப்போட்டு அமர வைக்கும்.
மாதுவுக்கும் நாகேஷுக்கும்,பாலச்சந்தருக்கும்,மேஜருக்கும் ஜே.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
# Moviesformagicalhappiness
#Makkalaip petra Makaraasi.
#4th day preasentation.# Sriram Balasubramaniam,#Bhanumathivenkateswaran.
1957 இல் வந்த நல்ல படம். ஒரு உணர்ச்சிக் காவியம். கண் நிறைந்த கண்ணாம்பா அம்மா,
அவர் மகனாக செங்கோட சிவாஜி.,தங்கை தங்கமாக எம் என் ராஜம்,
அவள் காதலனாக எம் என் நம்பியார்,
செங்கோடனின் முறைப் பெண் துடுக்கு ரங்கம்மாவாக பி. பானுமதி,
வில்லனாக கண்ணாம்பாவின் பணவெறிப் பண்ணையார் வி.கே ராமசாமி.

அவரால் மிரட்டப்பட்டு வீட்டைவிட்டே ஓடிவிட்ட செங்கோடனின் தந்தை.

பானுமதியின் இனிய குரலில் வரும் பாடல்கள்,
அந்த கொஞ்சும் கோவைத் தமிழ்.
சிவாஜியின் வெட்கம் சேர்ந்த காதல். ரங்கம்மாவின் வீரம் சேர்ந்த மிடுக்கு..
முணுக்கென்று சொல்லும் முன் கம்பெடுக்கும் கிராமத்தார்.
அடியாட்கள்.
நம்பியார் எம் என் ராஜத்தின் கௌரவமான காதல்,
அன்னையிடம் காட்டும் பக்தி.அவளுக்குக் கட்டுப்படும் மரியாதை.

படம் முழுவதும் நிறைந்திருக்கும் செழுமை நம்மைப் பழைய
நாட்களுக்கே கொண்டு போய்விடும்.. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு முத்து.
இசையும் ,தமிழும் வெகு இனிமை. கொங்கு நாட்டுத் தமிழும் பண்பும்
காணவேண்டுமானால் இந்தப் படத்தைப் பாருங்கள்.
நல்ல ப்ரிண்ட் இருக்கிற படம் கிடைக்க என் வாழ்த்துகள்.இந்தத் தொடரைக் கௌரவிக்க எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், மற்றும் தோழி பானுமதி வெங்கடேஸ்வரனை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நேரம் இருக்கும் போது தங்கள் எண்ணங்களைப் பகிரவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
#போலீஸ்காரன் மகள். #RajiMuththukrishnan,Hema Shrinivasan,GomathyArasu, #Movie marathon #3rd .
ஸ்ரீதரின் இந்தப் படத்தில் ஒருவரும் நடிக்கவில்லை
அத்தனை பேரும் வாழ்ந்தார்கள்.

நான் வெகு நாட்கள் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்தேன்.
சோகம் நம்மைத் தாக்கும் என்ற பயம்.

சஹஸ்ரனாமம் அவர்கள், முத்துராமன், விஜயகுமாரி பின்னும் அற்புத
ஓவியம்.
கறுப்பு வெள்ளையில் 1960களில் வந்த படம் என்று நினைக்கிறேன். சஹஸ்ரனாமம் அவர்களின் கண்டிப்பு,
அவரின் செல்லமகளாக விஜயகுமாரி, துடிப்பான,அடக்கமான் முத்துராமன்,
உல்லாச பாலாஜி.
பூக்கார ஜோடி சந்திர பாபுவும்.
முதல் சீனிலிருந்து, முடிவு வரை ஒவ்வொரு அசைவுகளிலும் சஹஸ்ரனாமம் அவர்களின் போலீஸ் விரைப்பும், முறைப்பும் மிரட்டும் நம்மை. குழைவுக்கு விஜயகுமாரியின்
அற்புத நளினம். தன்னை ஏமாற்றிய காதலனைக் காக்க கோர்ட்டுக்கே சென்று வாக்குமூலம் கொடுத்துக் காதலனைக் காப்பாற்றும் துணிவு.
எல்லோருக்கும் நடுவில் முத்துராமன் படும் பாடு.
படம் முழுவதும் ஒலிக்கும் இன்னிசைப் பாடல்கள்.

எதுவுமே மறக்க முடியாதவை.
ஸ்ரீதரால் தான் இத்தகைய நடிப்பை வெளிக்கொண்டு வர முடியும்.
இந்தப் படத்தின் பாதிப்பிலிருந்து மீள, காதலிக்க நேரமில்லையும் பார்த்துவிடுங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
November 30 at 8:10 PM ·
I have been invited to for movie appreciation by Raji Muthukrishnan. As I love old movies ,It’s a pleasure to talk about them. Thookkuth thookki is one of the best movies of my childhood days. The famous five sentences describing life in general is the focal point. How the hero finds the truth behind them is highlighted through out the movie. Needless to say everyone has acted very well,especially Sivaji Ganesan. I want to request my friend. Hema Shrinivasan to write about her favorite movie. This is my second day of movie marathon.
Image may contain: 4 people, including Teem Mangai, people smiling, text
n

Write a comment...


Gomathy Arasu
November 30 at 9:28 AM ·
https://www.youtube.com/watch?v=1NC0D1hWnZs
பழைய படப் பகிர்வு.
எனக்குப் பிடித்த நகைச்சுவைப் படம்.
பாடல்கள் என்றும் இனிமை.
நடித்த நடிகர்கள் அனைவரும் அற்புதமாய் நடித்து இருப்பார்கள். ...
See More
See Translation

YOUTUBE.COM
Adutha Veettu Penn | Anjali Devi, T R Ramachandran, Pakkirsamy | Tamil Comedy Movie | Film Library
Watch the tamil comedy movie "Adutha Veettu Penn"…
3You, Sriram Balasubramaniam and 1 other
Love
Comment
Share
Comments
Revathi Narasimhan
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Revathi Narasimhan
November 30 at 8:10 PM ·
I have been invited to for movie appreciation by Raji Muthukrishnan. As I love old movies ,It’s a pleasure to talk about them. Thookkuth thookki is one of the best movies of my childhood days. The famous five sentences describing life in general is the focal point. How the hero finds the truth behind them is highlighted through out the movie. Needless to say everyone has acted very well,especially Sivaji Ganesan. I want to request my friend. Hema Shrinivasan to write about her favorite movie. This is my second day of movie marathon.


இது வரை கருத்து சொன்ன படங்கள்.

1  தூக்குத்தூக்கி
2,பாவை விளக்கு,
3,போலீஸ்காரன் மகள்,
4,மக்களை பெற்ற மகராசி,
5,எதிர் நீச்சல்,
6, கப்பலோட்டிய தமிழன்.
எல்லோரும் வாழவேண்டும். இனிதாக வாழவேண்டும்.Tuesday, November 27, 2018

அன்புடையார் எ ன்றும் நலமுடன் வாழ்க

Vallisimhan

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

 திருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு
ஆறுதலாக இருப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதில் சிறந்தவர்கள் என் புகுந்த வீட்டுக்காரர்கள். எல்லோரும் என்னைவிட அதிகம் கற்றவர்கள். வயதிலும் பெரியவர்கள்.

அவர்கள் தன் சகோதரரின் மனைவியைப் புரிந்து கொள்ள
அதிக நேரம் செலவழிக்கவில்லை.
தங்கள் அன்பு வளையத்துக்குள் சேர்த்துக் கொண்டார்கள்.

அதில் மிக முக்கியம் என் இரண்டாவது நாத்தனார் பத்மா.
பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதில் மிகவும்
பாக்குவப்பட்டவர்.
புகுந்த வீட்டுப் பாட்டியின் செல்லம்.
ஒரு நாள் வரவில்லை என்றால் கூட ஆள் அனுப்பி விடுவார்.

நாத்தனாரும் பொறுமையாகப் பாட்டியிடம் சொல்லித் தன் வேலைகள் பொறுப்புகள்
எல்லாவற்றையும் விளக்கி இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லுவார்.

அவர்கள் வீட்டில் எப்பொழு தும்  விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள் .
அவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை.
உறவுகள் பிள்ளை பெறவும், பெற்ற பிறகு இவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும் இருந்துவிட்டுப் போவார்கள்.
மாமியார் வழி உறவுகள் அனைத்தும்
வருடம் முழுவதும் வந்து கொண்டிருப்பார்கள்.
என் நாத்தனார் சமையலறையை விட்டு வெளியே வருவது என்பதே அதிசயம் தான்.

பாட்டி வண்டி அனுப்பித்தால் மட்டும் மாமியார் அனுமதி கொடுப்பார்.
தன அம்மாவிடம் கூட உரையாட நேரம் இல்லாமல், வாரம் முழுவத்துக்குமான
நிகழ்ச்சிகளை சொல்லிச் செல்வார்.
அவர் அலுத்துக் கொண்டு பார்த்ததே இல்லை.

அவருடன் கூட மற்ற சகோதரிகளும் சேர்ந்தால் நம் வீடு முழுவதும் குதூகலம் தான்.
அந்தப் பழைய பெரிய வீடு நிறைய குழந்தைகளும், பட்சணம் பலகாரம் செய்யும் வாசனையும்,
என்னை மகிழ்வித்தன.

வருடா வருடம் வருவோம். பத்து வருடங்களில் நிரந்தரமாக வந்துவிட்டோம்.
எனக்கு நல்லதொரு முன் மாதிரி அவர்.
அவர் பென்னுக்குத் திருமணத்துக்காக, ஜோதிடர்களை அணுகும் போது நான் தான் துணை.

பிற்காலத்தில  எனக்கு உதவியாக இருந்த்தது.
அவர்கள் மரங்களில் காய்க்கும் மாங்காய், புளிச்சகாய் எல்லாம் ஊறுகாய் போடுவது நான் தான்.
அழகான அபூர்வமான சமையல் முறைகளை சொல்லிக் கொடுப்பார்.

இவர் எங்களை பிரிந்து நான் வெளியூ ர் வந்துவிட்டாலும் ,மாதம் ஒரு தடவையாவது பேசுவேன்.
எங்க என் பெஸ்ட் ஃ ப்ரண்ட்  போன் பேசலியேன்னு நினைத்தேன். நீ செய்துட்டே என்று மகிழ்வார்,.
என் அன்புத் தோழி பிரிந்தது வருத்தமே.
ஆனால் சிரமப் படாமல் இறைவனடி அடைந்தார்.
பத்தா  ❤🙌    ....... என்றும் மறக்க மாட்டேன் உங்களை.
உங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ வேண்டும்.
உங்கள் அன்பு ரேவதி.

Wednesday, November 21, 2018

பாசுமதி 3ஆம் பாகம்.

Vallisimhan  எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
கல்யாண சமையல் சாதம் 👌👌👌👌👌

வெள்ளி இரவு பெய்ய ஆரம்பித்த மழை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்தது.

அறைகளில் கணப்பு போடப்பட்டது. சுற்றி இருந்த  மலைகளில்  மழை முயூட்டம்,அதற்குள் வெள்ளி இழையாக அருவிகள்  என்று தெரிய ஆரம்பித்தன.
இரவு  பகல் என்று பாராமல் உழைத்தவர்களுக்கு இந்த ஒய்வு  பிடித்திருந்தது.

 நிதானமாகத் தூங்கினார்கள். நிதானமாக எழுந்தார்கள். சுற்றி இருந்த வராந்தாவில் மலைச்சாரலில் உடை நனைய நடந்து மகிழ்ந்தார்கள்.

சுமதிக்கு தாரிணிக்கும்,அவளது அனஸ்தடிஸ்ட்  ரூபா மேனனுக்கும் ஒரு அறை  ஒதுக்கப் பட்டிருந்தது சௌகரியமாகப் போனது.

திங்கள்  அன்று காலை  காலை உணவுக்கு ஒவ்வொருவராக  வந்து சேர ஆரம்பித்தார்கள். 
பாசுவும்  சுமதி ,தாரிணி ஒன்றாக நுழையும் பொது,ரூபாவும் அழகான  டென்னிஸ் உடையில் உடல் வடிவம் 
தெரிய வந்ததும் பாசுவின் கண்கள் அவளை விட்டு மாறவில்லை.
 ரெடி  ஃ பார்  எ கேம் என்று ஆவலுடன் வினவினான்.
தாரிணியும் சுமதியும்  ஒருவரை ஒருவர் பார்த்து  கண்ணசைத்துப் புன்னகை புரிந்து கொண்டனர்.
       
 ஓ  நான் ரெடி. முதலில்  நல்ல ப்ரேக்பாஸ்ட்  வேண்டும் என்றபடி தன்  தட்டை, ரொட்டி,வெண்ணெய், ஜாம் என்று நிரப்பத் துவங்கினாள் .
அவளுக்கு அடுத்து பாசுவும் ஆவலுடன் நகர்ந்தான்.
தாரிணியும் சுமதியும், நறுக்கி வைத்திருந்த பழங்களையும், கார்ன் ஃ ப்ளெக்ஸ் +பால் என்று எடுத்துக் கொள்ள,
ஹாய் என்ற உற்சாகக் குரல் கேட்டதும் தன்னிச்சையாக சுமதி அந்தத் திசையைப் பார்க்க ,
தினேஷ்,மதிவாணன் வருவதைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் .

 இந்த டேபிளுக்கு  வாருங்கள்.  என்று அழைப்பு விடுத்தாள்.
மேஜை அடியில் அவள் காலை மிதித்தாள்  சுமதி.
ஏன்பா வம்பை விலைக்கு வாங்குகிறாய்.

மதி நிறுத்தாமல் பேசுவான். காதே ஓட்டையாகிடும்.
ஏன் தினேஷ்  வந்தால் கசக்கிறதோ.
சுமதியின் முறைப்பைக் கவனிக்காமல்,மற்றவர்களை  நோட்டம் விட்டாள் .
அடுத்த மேஜையில் ரூபாவும் பாசுவும் உலகையே மறந்தவர்களாகப்   பேசிக்கொண்டிருந்தார்கள் 

மதிவாணன் டீமைச் சேர்ந்த அருண் வருண் இரட்டையர் அவரவர் தோழிகளுடன் வர 
கலகலப்புக்கு கூடியது.
மதிவாணனும்  தினேஷும் இவர்கள் எதிரில் உட்கார,சாப்பிடுவதில் மும்முரமானாள்  சுமதி.

மதிவாணன் சுமதியிடம் பேச விரும்பி,//எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா
சுமதி. குழிப்பணியாரம் போடுகிறார்கள், எடுத்து வரவா என்றான்.
சுமதி //,தாங்க் யூ காலையில் எண்ணெய் சாப்பாடு எடுத்துக்கொள்வதில்லை.//என்றபடி
தன் காப்பிக்காக எழுந்தாள்.
ஃபில்டர் காஃபி மேம் என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். 
அங்கே தினேஷ் ஒரு தட்டில் டெகாக்ஷன், பால்,சர்க்கரை எல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
உங்களுக்கேன் சிரமம். என்றபடி அதை வாங்கிக்கொண்டு
அனைவருக்கும் காப்பியைப் பகிர்ந்தாள்.

பாசுவுக்கு நம் மேல் கவனம் இல்லை. ரூபாவுடன் டென்னிசுக்குப் போய்விட்டார்.
என்றி நமட்டுத்தனமாகச் சிரித்தான்.
இப்பொழுதைய பொழுதே நிரந்தரம். என்ன அழகான காலை. நாம் நால்வரும் 
யானைகள் பார்க்கப் போவோமா என்று கேட்டான்.
அவைகள் தண்ணீர் அருந்த வரும் நேரம். சீக்கிரம் கிளம்புங்கள்
என்று வாசலை நோக்கி விரைந்தான்.

நான்கு பேரும் சேர்ந்த நடக்கையில் ,சுமதியிடம் ஒரு 
புதுவிதப் பூவைக் காண்பிக்க நின்றான் தினேஷ்.
மிக அழகான ஆரஞ்சு வர்ணத்தில் இதழ் விரித்து நின்ற 
பூவை ஆவலோடு பார்த்த வண்ணம் நின்ற சுமதியிடம்
சட்டென்று தன் மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டான் தினேஷ்.
//உன்னை மதி,பாசு இருவரும் விரும்புகிறார்கள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்.
என்னை அவர்களது தூதுவனாக நினைத்துக் கொள்
என்றதும் சுமதியின் கோபம் கண்களில் தெரிந்தது.
நான் பணம் சம்பாதிக்க வந்தேன். கணவனை சம்பாதிக்க வரவில்லை மிஸ்டர் தினேஷ்.
அதற்கு இன்னும் இரண்டு வருடம் போக வேண்டும்.
இப்போதைக்கு நாம் யானைகளை மட்டும் 
பார்க்கலாம். அவைகளுக்குத் துணை தேட தூது தேவை இல்லை..
நேரிடையாகச் சொல்லிவிடும் என்று
முன்னோக்கி விரைந்தாள்.


தினேஷ் திகைத்து நின்றான், இந்தக் கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை .
நில்லுங்கள் சுமதி . என்பதற்குள் அவள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டால். தினேஷ் தன பொறுமையைச் சேகரித்துக் கொண்டு அந்த யானைகளின் கூட்டத்தையும், குட்டி யானைகளின் சேஷ்டையையும் ரசித்துப் படம் எடுத்தான். நடுநடுவே  சுமதியையும் காமிராவில் அடைக்க மறக்கவில்லை.

தான் அவசர பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது.
பெண் தான் விரும்பிய தேர்ந்தெடுத்த  ஆணைத்தான் தேர்ந்தெடுப்பாள்  எல்லாம் அறிவுக்கு உரைத்தது.
அன்றைய சாப்பாட்டு நேரத்தில் சுமதியைக் காணவில்லை. அறையிலே சாப்பாடை வரவழைத்துக் கொண்டதாக தாரிணி சொன்னாள் .

தினேஷுக்கு மனம் சங்கடப்பட்டது . இந்த விஷயத்தில் என் புகுந்தோம். என்று மதியையும், பாசுவையும் கவனித்தான்,அவர்கள்  மத்திய உணவோடு உற்சாக பான ங்களான  பியர், இன்னும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள் .
தினேஷ் வா எங்களோடு சேர்ந்து கொள்  என்று அவனுக்கு வேறு அழைப்பு. 
மறுத்துவிட்டுக்  கிளம்பிய  தினேஷ், நேரே சென்றது சுமதியின் அறைக்குத்தான்.
மெலிதாக இசை கேட்டுக் கொண்டிருக்க  படுத்திருந்தவள் அவன் தட்டியதும் உள்ளே வரலாம் என்று குரல் கொடுத்தாள் .
தினேஷ் உள்ளே நுழைந்ததும் அவள் முகம் வாடியது.
சுமதி என்று அழைத்தவன், உன்னைத்தவராக அணுகிவிட்டேன்.
இருவரும் மிக வற்புறுத்தியதால் இந்த விஷயங்களில் அனுபவம் இல்லாத எனக்கு என்ன செய்வதென்று 
தெரியாமல் உளறிவிட்டேன்  என்னை மன்னித்துவிடு என்றான்.

அது எனக்கும் புரிந்தது தினேஷ். அவர்கள் இருவரும் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டாம்.
நான் ஏற்கனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.
எனக்கு சற்று எட்டாக்  கைதான்.
என்று புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள் .

அதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன் யாரென்று எனக்குத் தெரியுமா  என்று கேட்டான். உங்களுக்கு மிகவும் தெரிந்தவர் தான். அவருக்கு என் மனம் தெரியும் நாள் விரைவில்  வரும். இதோ இந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள். என்று அவனை உபசரித்தாள்.
குழப்பத்தோடு அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஐஸ்க்ரீம் இணைக்கவில்லை.

நீ பார்த்துவைத்தவர் இரண்டு வருடம் காத்திருப்பாரா  என்றான். அது என் சாமர்த்தியத்தைப் பொறுத்து 
இருக்கிறது.
நடக்கும் என்றே தோன்றுகிறது.
நம் வட்டத்தில் இருக்கிறாரா  என்றவனிடம் ,முகத்தைக் காட்டாமல் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ம்ம்ம்ம். இருக்கிறார் என்றாள் 
மனம் நிறைந்த சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம்.

தினேஷ் பயப்பட வேண்டாம். நாம் இப்போது ஒழுங்கான சாப்பாட்டுக்குச் செல்வோம்,
வாருங்கள்  என்று அழைத்ததும்  
அவனும் எழுந்தான் . பெண்களை புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம்  என்றான்.
நான் புரிய வைக்கிறேன்.
ஆமாம் உங்கள் மணவாழ்க்கை எப்போது ஆரம்பம் 
என்று பதில் கேள்வி போடா, உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் எனக்கு இன்பம் தான் 

என்றவனை  நின்று பார்த்தவள் ,
கிடைத்துவிட்டால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நேர்மறை எண்ணம் எப்பொழுதும்  
நிச்சயமாக நடக்கும். 

ஹியர் இஸ் டு தா வொண்டர்புல்  ஃ ப் யூச்சர் என்று அவனிடம் கையை நீட்டினாள்.
அவள் கையைப் பற்றியதும் 
மொழி படத்தில் வருவது போல அவனுக்குள் வெளிச்சம் பரவியது.  பின் நடந்ததெல்லாம்  அழகானவை.
சுபம்.

நம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை

Vallisimhan
நம்ம ஏரியாவுக்கான கதைக் கரு கொடுப்பதில் 
கவுதமன் ஜி யை மிஞ்சி யாரும் கிடையாது.

சுவையான பாத்திரங்களை,அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே தலைப்பை உரு வாக் கிவிட்டார். 
வாழ்த்துக்கள்.

நாமும் அதை ஒட்டியே எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.
லஸ் விநாயகரே துணை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பாசு என்கிற  பாஸ்கர், தன் தந்தையிடம் பாலபாடம் கற்று, மதுரை மா நகரில் 
அந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 
சி இ ஓ ஆனான். அப்பா அவ்வப்போது வந்து போவதோடு 

தன் ஓய்வை ஏற்றுக்கொண்டார். 30 வயதில் இந்தப் பெரிய பொறுப்பை
ஏற்றுக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது,.
இரண்டு வருடங்களில் தேறிவிட்டான். அந்தப் பதவிக்கான 
மிடுக்கும், அதிகாரமும் சேர்ந்தன.

தனக்கென்று உண்டான தனிக்குழுவாக  விளம்பர அதிகாரி  மதிவாணன். ////என்ன தூக்குத்தூக்கி
படத்தில் வர பெயர் மாதிரி இருக்கேன்னு நினைத்துக் கொண்டேன்.///////////
மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக  சுமதி. இனிமையான பெண். 
நல்ல பல்கலைக் கழகத்தில் இஞ்சினீரிங்க் முடித்து
மேனாடு சென்று  நிர்வாகமும் கற்று வந்தவள்.

இவர்கள் கூட அவர்களுடைய உதவியாளர்களும் உண்டு.

பாசுவின் கூடப் படித்த தினேஷும் மாதம் ஒரு முறை வந்து போவான். 
இருவரும் பெரியப்பா, சித்தப்பா பசங்களாக இருந்ததால்.

உருவ ஒற்றுமை நிறைய இருக்கும். தினேஷ் ,பாசுவைவிட ஒரு பிடி
உயரம் கூட,.தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அழகனாகவே இருப்பான்.
 மார்ச் 15 ஆம் தேதி நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது.
விமரிசையாகக் கொண்டாட பாசுவின் தந்தை முடிவு செய்தார்.
ஆரம்பத்திலிருந்து பணிமணையிலும் ,இப்பொழுது சர்வீஸ் செண்டரிலும் வேலை செய்பவர்களுக்கு 

நல்ல கைக்கடியாரமும் ,ஒரு வாரம் விடுமுறையில் செல்லவும் 
போனஸ் தொகையாக 2000 ரூபாயும் கொடுப்பதாக 300 தொழிலாளர்களைத் தேர்ந்து
எடுத்திருந்தார்.

மேல்தட்டு எக்ஸ்கியூட்டிவ்களுக்கு 
 தாராளமாக சன்மானம்.
ஒரு கோடை வாசஸ்தலத்தில் இரண்டு வாரங்கள்  தங்குவதற்கும்,
போகவர ஒரு பெரிய  லேட்டஸ்ட்  சொகுசு பேருந்தும்   கொடுக்கப்பட்டது. 

கம்பெனியின் கஸ்டமரான தினேஷுக்கும் இதே பரிசு.

பாசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த விரும்பினான்.
காரணம் அவன் சுமதியின் வடிவழகில் லயித்து விட்டதுதான்.

அவளும் மதிவாணனும் தொழில் முறையில் சந்தித்துப் பேசினால் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கம்பெனி மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் தாரிணியும் சுமதியும் நல்ல தோழிகள்.

மதிவாணன்  சுமதியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தான்.
தனக்குச் சரியான துணையாக அவள் இருப்பாள் 
என்று தீர்மானித்திருந்தான். அடுத்து என்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.
உற்பத்திக்கூடம்

பகுதி 2 பாசுமதி.

++++++++++++++++++++++++++

முதல் வேலையாக தினேஷை  அழைத்தான்.

"என்னடா, என் குழுவோடு தேக்கடி, மூணாறு வருகிறாயா?"

"கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால் 
ஒரு வேலை நடக்கணும் என்று பீடிகைபோடுபவனிடம்,  
என்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது
 பிடிபட்டு விட்டாயா? வலையிலிருந்து மீட்கணுமா?" 
என்று சிரித்தான் தினேஷ்.

"டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன், 
என்னைக் குத்திக் காண்பிக்கிறாயே.."  என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு பார்த்தான் தினேஷ்.

"நீதான் பறவைகள் பலவிதம்னு  பல வண்ணம் பார்த்தவனாச்சே,
  இப்போ புதிதா சாலஞ்ச் வந்திருக்கா உனக்கு?" 
 என்றவனிடம் விஷயத்தைச் சொன்னான்.  
மதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும் சுமதியைக் 
காதலித்து மணக்க வேண்டிய உணர்வு...  என்று விவரித்தவனைப் 
புதிராகப் பார்த்தான் தினேஷ்.

"உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள். 
வாட்ஸ் த ப்ராப்ளம்?"  என்று கேட்டவனிடம், 
தன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும் 
அறிந்தவளாக சுமதி இருப்பதே பிரச்சினை.

தன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை 
என்றதும் திகைத்துப் போனான் தினேஷ்.

இதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.

அவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு  மதி வந்திருந்தான்.
   "என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா?  நான் வேணா பேசிப்பார்க்கிறேன்" என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.

"இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார். 
 நீ தான் உதவி செய்யணும்." என்றான்.

"ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு" என்றதும்
அதிர்ச்சி காட்டினான்  மதிவாணன்.

"என்ன கேட்டிருக்கிறார்?" என்றதும் "அதை சொல்ல முடியாது. 
 உனக்கு என்னவேணும்" என்றதும்..

"நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள், 
அசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள்.  இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம் நடந்து கொண்டால் 
அவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.  
எனக்குச் சாதகமாக அமையும்"  என்றான்.   

கலகலவென்று சிரித்துவிட்டான் தினேஷ்.

"அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா"  என்று அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.  
ஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட 
 அலுவலக நண்பர்களுடன்  பாட்டும் நடனமுமாக 
உற்சாகமாகக் கிளம்பினார்கள்.

சுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும்
 உதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டரி சரண்யா
 என்று வண்ணமலர்க்கூட்டமாக மங்கையர்.

பாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம் 
வந்து நலம் விசாரித்துப் போனார்கள்.

சுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.
 'இதென்ன புது அக்கறை' என்றபடி திரும்பினவளின்
 கண்களில் தினேஷ் தென்பட்டான்.

சட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.

"ஹேய் அது யார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரே?"
 என்று கேட்ட தாரணியிடம் "அவர் இவருக்கு கசின்" என்றாள் சுமதி.

"ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்? 
 எனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ"  என்று கேலி செய்தாள்.

"இல்லைப்பா. நீ வேற 😔😔😔😔😔
 அவர்கள் லெவலே வேற.  நான் வெறும் பணி செய்பவள். 
பாசு அங்கு உட்கார்ந்திருந்தால்  மூணாறில் செய்திருக்கும் 
ஏற்பாடுகளைச் சொல்லலாம் என்று பார்த்தேன்.  
தினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்" 
 என்றவளைப் பார்த்து "அந்த பேப்பர்களை என்னிடம் கொடு, 
நான் நம்ம பாஸ் உடன் அரட்டை அடிக்கிறேன்.
 நீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில்
 இளையராஜாவை மாட்டிக் கொள்" என்றபடி எழுந்த
 தாரிணியைத் திகைப்புடன்  பார்த்தாள்  சுமதி.

பேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும் தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து 
எழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான்.

திடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவனுக்கு 
அவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.

ஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.

"இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை
 என்றால் என் பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து
 தப்ப ஆசை " என்று இனிமையாகப் பேசினான்.

ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய
 சுமதி பதில் சொல்லத் திணறினாள். 

சமாளித்துக் கொண்டு, "இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. 
 தாரிணி..."  என்று பின்னோக்கிப் பார்த்தாள்.

"ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்.  
உங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே..."

"நான்...  நான்.."  என்று தயங்கிய சுமதியைப் பார்த்து
 புன்னகைத்தபடி,  "நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்.  
நான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்" என்று இருக்கையை நீட்டி, பரிபூரண அமைதி முகத்தில் பிரதிபலிக்கக் 
கண்களை மூடிக் கொண்டான்.

கண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள் 
அவளைச் சுற்றியே வந்தன.  

அப்பழுக்கில்லாத அழகு. பாசு இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை.  கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால் 
இவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது 
என்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே 
வர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

அவன் தோளில் சுமதியின் முகம்.

மூச்சே நின்றது போல உணர்ந்தான்.
 பஸ்ஸின் வெளியே மழை.

பாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.

பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.

அதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப்
 பார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

"மன்னிக்கணும். என்னை அறியாமல்..."  என்றவளைக் கனிவுடன் பார்த்தான். 

"இட்ஸ் ஓகே.  நாம கீழ இறங்கணும்"

"பலத்த மழை.  அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறோம்" என்றபடி  எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள்,
 பாசு அருகில் வருவது கண்டு  மழையைப் பார்ப்பது 
போலக் கண்களைத் திருப்பிக் கொண்டாள் . 
 பின்னாலயே வந்த  தாரிணி "நல்லாத் தூங்கிட்டியே சுமதி. 
இயற்கைக் காட்சிகள் யானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே"  
என்று கேலி செய்தாள்.
இந்த  க்ரீன்வுட் ரிசார்ட்டில்  இடம் சொல்லி வைத்திருந்தேன். 
முன்னாரில் எல்லாம் நல்ல மழையாம்.
. நாம் இங்கேயே தங்கலாம்  என்றான் பாசு.

அங்கிருந்து உதவியாளர்கள் குடைகள் கொண்டு 
வர முப்பது பேரும்  இறங்கி  விடுதிக்குள் சென்றனர்.
- தொடரும் -

Saturday, November 17, 2018

இருக்கும் இடம் எங்கே ..சொல் இறைவா.

Vallisimhan
மீண்டும் தாழ்ந்த மன நிலைக்குப் போக மாட்டேன். அடுத்த
அடி என்ன என்று தீர்க்கமாக் யோசிப்பேன். வீடு என்பது எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம்.

அது ஊழ்வினையால் ஆட்கொள்ளப் படும் என்றால் இறைவன்
பார்த்துக் கொள்வான்.

மகன் களின் மனம் சோகப்படாமல்
அவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியது என் கடமை.

மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்து,அந்த வீடு
இன்னும் பெருமையுறும் என்ற நம்பிக்கையை
விதை த்துக் கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் எந்த சிரமமும் வரக்கூடாது.
 கஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களின் உள்ளம் என்ன பாடுபடுகிறதோ.
அவர்களுக்கு இறைவனும் அரசாங்கமும் நல்வழி காட்டட்டும்.
எப்பொழுதும் அவன் செயலே பரிமளிக்கும்.
வாழ்க இறைவன் நாமம்..அவனே காப்பான்.

Sunday, November 11, 2018

எங்கள் வீடு

Vallisimhan

 சிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும்
தங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்கும் வரை எங்கிருப்பது என்று தெரியவில்லை என்று வருந்தி அழுதார்கள்.

நானும் வீட்டு முன்னறையை ஒழித்துக் கொடுக்கலாம் என்ற நினைத்துக்
கொண்டிருந்தேன்.
இன்று நான் கேட்ட செய்தி என் அஸ்திவாரமே நகர்ந்தது போல இருந்தது.

லஸ் முனையிலிருந்து , ஆழ்வார்பேட்டைக்கு அண்டர்க்ரௌண்ட் மெட்ரோ

போடப் போகிறார்களாம். அதற்கு எங்கள் வீடு உட்பட சாலையோர
வீடுகளின் நிலங்களை அரசு கையகப் படுத்துமாம்.
டிசம்பர் 7 க்குள்   உரிமையாளரோ ,அவருடைய வக்கீலோ
இந்த மெட்ரோ  அலுவலகத்தை அணுக வேண்டுமாம்.

எங்கள் பக்கத்து வீட்டு வக்கீல் சொன்ன விஷயங்கள் இவை.

பார்க்கலாம் மேற்கொண்டு இறைவன் செயல்.