Blog Archive

Sunday, December 09, 2018

#பத்துப்படவரிசை#9ஆம்படம்அன்னை

#பத்துப்படவரிசை
#9ஆம்படம்அன்னை
#பானுமதி,ரங்கராவ்,சௌகார்ஜானகி,சச்சு,ராஜா,சந்த்ரபாபு.

அன்னை படம் 1962இ வெளிவந்த ஏவீஏம் ஸ்தாபனத்தின்
அற்புதமான படம். இதுவரை யாரும் தொடாத கரு.
 இரு சகோதரிகளில் பானுமதிக்குப் பிள்ளைப்பேறு இல்லை என்றாகிவிடுகிறது.
சகோதரி சௌகார் ஜானகி,தந்தையின் விருப்பத்துக்கு எதிராகத் திருமணம் செய்ததால்
சொத்துரிமை இழக்கிறர்,.
பானுமதியின் சகல ஆதரவுகளையும் ஏற்று குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்.
கணவன் நல்ல மானஸ்தன். ஏதோ தவறான நபருக்கு காரண்டார் கையெழுத்துப்
போட வழக்கில் மாட்டிக் கொளிக்றார்.
பானுமதியின் கணவர் சமயதில் உதவ் தம்பதிகள், வெளினாடு சென்று பிழக்க எண்ணுகிறார்கள்.
அக்காவுக்குத் தங்கையின் குழந்தையிடம் இயற்கையாகவே
பாசம். இப்பொழுது பிரிய வேண்டுமே என்ற ஏக்கத்தில்
தங்கையிடம் பிள்ளைப் பிச்சை கேட்கிறார்.
ஆரம்பத்தில் மறுக்கும் தங்கை நிலைமையைக் கருதி விட்டுக் கொடுக்கிறார்.
குழந்தை செல்வத்தைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து மருத்துவராக ஆக்கிவிடுகிறார்.
பாசம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. அவனுக்குத் தலைவலித்தால் இவருக்கு நெஞ்சே வலிக்கும்.
நடுவில் தங்கைக்குப் பணம் அனுப்பவும் மறக்க மாட்டார்.
ரங்கராவ் புகழ் பெற்ற வக்கீலாக வருகிறார்.
நேர்மையான மனிதருக்கு எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும்
உண்டு. பர்மாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் காலை இழக்கும் தங்கை கணவருக்காக வேண்டி இருவரும் சென்னை திரும்ப உத்தேசிக்கிறார்கள்.
அதன் பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
பலவித உணர்ச்சிப் போராட்டங்களுக்கு நடுவே எப்படிக் குடும்பம் ஒன்று சேர்கிறது
 என்பதே கதை.
அருமையான வசனங்கள்.அற்புத நடிப்பு
லாபாயிண்ட் பேசும் ரங்கராவ். அவரையும் மேற்பார்வை செய்யும் பானுமதி.
நகைச்சுவைக்கு சந்திரபாபுவு, கூடத் தங்கி இருக்கும் உறவினர்களும்.
நளினமான காதலுக்கு ராஜாவும் சச்சுவும்.
பானுமதி அம்மாவின் ஆளுமை நிறைந்த படம்.இது போல
 நடிப்பெல்லாம் இனிக் காண்போமா என்பது சந்தேகமே.
நீங்களும் ரசித்திருப்பீர்கள். இன்னோரு தடவையும்  பார்க்கலாம் தப்பில்லை.
எல்லோரும் இனிதாக வாழவேண்டும்.

No comments: