Blog Archive

Friday, May 26, 2017

ஒரு குழந்தையும் ஒரு தாத்தாவின் மறைவும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

ஏன்பா நீதானே  ஒயிட் ஹேர் இருந்தா உம்மாச்சி அழைச்சுண்டு போவார்னு சொன்ன.
ஆமாம் கண்ணா.
தாத்தா தலைல க்ரே ஹேர் தானே இருக்கு.
உம்மாச்சி சரியாய் பார்க்காம அழைச்சுண்டு போயிடப் போரார்ப்பா.
தாத்தாவைப் பொட்டி யிலிருந்து
எடுத்துடுங்கோ.

22 comments:

ராமலக்ஷ்மி said...

படமும் நினைவுகளும் பொக்கிஷம்..

கோமதி அரசு said...

உங்கள் தம்பி பற்றிய பதிவா சொன்னது உங்கள் பேரக் குழந்தையா?
மனது கனத்து போகிறது படிக்கும் போது.

நெல்லைத் தமிழன் said...

மனதுக்கு வருத்தம் தரும் கேள்வி. தம்பி முரளி உங்கள் கைகளிலா? படத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றியது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது...

?????

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி. மிக நன்றி கண்ணா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி மா
,தம்பியின் பேத்தி இப்படிக் கேட்டாளாம்.அவளுடைய பெஸ்ட் ஃப்ரண்டு தாத்தா தான்.
ஆறு வயதாகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன், என் பக்கத்தில் நிற்பவன் தான் பெரிய தம்பி. இப்பொழுது கடவுளை அடைந்தவன்.
அவன் பக்கத்தில் சின்னத்தம்பி 2004 இல் தூக்கத்தில் மறைந்தான்.
என் கையில் இருப்பது சித்தப்பா பெண்.

வல்லிசிம்ஹன் said...

Thanks Dhanabalan.

Angel said...

குழந்தைகளின் கள்ளம் கபடில்லா செய்கை பேச்சு எல்லாமே கடவுளின் அன்பை பறைசாற்றும் ..அந்த குழந்தை பாவம் மிஸ் செய்ய போறா அவளது அன்பான தாத்தாவை ..காலம் புரியவைக்கும் அவளுக்கு ..
அழகான படங்கள் பொக்கிஷம்தான் இவை ..பத்திரமா வச்சிருக்கீங்க வல்லிம்மா க்ரேட்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஏஞ்சல், அவளுக்குத் தாத்தா விளையாட்டு நண்பன். கோபமே வராது தாத்தாவுக்கு. Thaththa is Like Rama ummaachchi. he is always smiling. He never gets angry.
these are her words.
Yes she will with the right support should overcome this loss. all our blessings are with her. love you da Angel.
God has blessed me with so many good friends.Take care.

ஸ்ரீராம். said...

குழந்தை மனம். கடவுள் காதைத் திருப்பி வைத்திருப்பார்.. குழந்தையின் கேள்வி காதில் விழாத மாதிரி..

கோமதி அரசு said...

வல்லி அக்கா பெரிய தம்பியா? எப்போது மறைந்தார்கள்?
நீங்கள் தம்பியை பார்த்து இருக்க முடியாதே!
வருத்தமாய் இருக்கிறது.
ஆறுவயது குழந்தைக்கு தாத்தாவை பிரிவது இன்னும் வருத்தம் அதிகமாய் இருக்கும்.
எந்த ஊரில் இருந்தார்கள் தம்பி?
ஆவர்கள் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலை தர வேண்டுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். தம்பி சொல்லி இருந்தால் கேட்டிருப்பாரோ என்னவோ.
குழந்தை சொல்லும்போது காதைத் திருப்பிக் கொண்டுவிட்டார்.
அந்தக் குழந்தை விமானத்தில் சென்னை திரும்பும்போது ஜன்னல் வழியாக
உம்மாச்சியைத் தேடித்தாம். தாத்தா சொல்லி இருக்கா உம்மாச்சி ஸ்கையில இருக்கார்னு.
அந்தக் குழந்தை அதிர்ஷ்டக் குட்டி.
அவளை விட்டு விட்டு என் தம்பி போய்விட்டானே மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, கடந்த திங்கள் 22ஆம் தேதி ,உட்கார்ந்து காய்கறி வெட்டியபடி யே அதிகாலையில் இறைவனிடம் ஏகிவிட்டான்.
நான் மஹா பாபி என்பது தெரிந்த விஷயமே.
பெரியவள் நானிருக்க அவன் போகலாமா.

இனி யாரிடமும் பாசம் வைக்கப் பயமா இருக்கு மா.

கோமதி அரசு said...

மிகவும் கஷ்டமாய் இருக்கிறது கேட்க
வருத்தபடாதீர்கள் அக்கா.
வாழ்க்கை பயணத்தில் யார் பெரியவர், சிறியவர் என்று எல்லாம் கிடையாது,
அவர்கள் இறங்க வேண்டிய நேரம் இறங்கி விட்டார்கள்.
இறைவனின் திருவிளையாடலை யார் அறிவார். அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லுங்கள்.

//இனி யாரிடமும் பாசம் வைக்கப் பயமா இருக்கு மா.//

நீங்கள் சொல்வது உண்மை அக்கா பாசம் வைக்க பயமாதான் இருக்கிறது.
பழகி பிரிவதே கஷ்டம், ஒரு தாய் பற்வைகள் பிரிவது கஷ்டம்தான். காலம் மன ஆறுதல் தரும்.

Geetha Sambasivam said...

பாசத்தினால் தவிக்கும் மனதுக்கு யாரால் ஆறுதல் கூற முடியும்? காலம் மனப்புண்ணை ஆற்றட்டும்.

Thenammai Lakshmanan said...

vallima. en thambi 2013 il iranthapothu ennal oru naal muluthum asaiya kooda mudiyavillai. udambey thembatru poi vittathu. irtuk kidanthen. manathai thetri kolungkal. hmm.

Bhanumathy Venkateswaran said...

//என் உயிராக நேசிப்பவர்களை கண்ணாடி பெட்டியில் பார்த்து அலுத்து விட்டது.// உங்கள் மன வேதனை புரிகிறது. நாம் நேசிப்பவர்கள், அதுவும் நம்மை விட இளையவர்கள் நமக்கு முன்னாள் மறைவது மிகவும் வருத்தத்திற்குரியது. காலம் உங்களுக்கு ஆறுதல் தரட்டும். முன்பே உங்களுக்கு பதில் அனுப்பியிருந்தேன்.சில சமயங்களில் ஆண்ட்ராய்டு போன் மூலம் அனுப்பும் செய்திகள் பதிவாவதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, உப்பும் தண்ணீரும் உள்ளே போய்க் கொண்டுதான் இருக்கிறது. இதையும் கடக்கப் பழகி விடுவேன் மா:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானுமதி, ஆமாம். மா. இன்று இணையம் கிடைத்தது. உங்கள் பின்னூட்டம் நான்கு முறை வந்திருக்கிறது. எங்கள குடும்பத்தில் நானே மீதி. இனி கீழ் இருக்கும் செலவங்களை இறைவன் ரட்சிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேன்,
ஆமாம் போறுக்க முடியாத துயரமே. இது இரண்டாவது தடவை. ஊழ்வினை என்று தான் சொல்லணும். நன்றி கண்ணா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Thatha paati thaan best friends for kids. Losing them at young is very sad