Blog Archive

Wednesday, May 24, 2017

N.S. Raghavan... நல்ல தம்பி 1950 June 10 May 22 nd 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அருமை அன்பு,மாண்பு, பக்தி. எல்லாமாக ஒரு உருவம் என் சகோதரன்.
25 வருடங்கள் நோம்பு போல் , வாழ்க்கை, இருதய சிகிச்சைக்குப் பிறகு. தந்தைக்கு அடுத்தபடி இன்னும் அதிகமாக என்ன என்னிடம் பிரியம் கொண்டவன்.
முரளி, தலை முடி  வெட்டிக்கோடா.
முரளி சட்டை இல்லாமல் இருக்காதே  டா. எனக்குப் பார்க்க முடியல.
சரி இதோ போறேன்  ரெவ் னு சொன்னதைச் செய்துவிடுவான்.
அவனுக்கு வாய்த்த மனைவியோ தங்கம்.
 கணவனுக்காக எத்தனையோ விரதம் .கோவில்கள்.
மகன் தந்தை சொல் மீறாத பிள்ளை. அப்பா இந்தக் கோவில்னு சொல்ல வேண்டியதுதான். அடுத்தவாரம் பயணம் கிளம்பி விடுவார்கள். குருவாயூர், திருமலை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் என்று வண்டி பறக்கும்.
 60 வயது வரைத் தன அலுவலகத் தலைமைப் பொருப்பைப் பார்த்துக் கொண்டவன் , சேர்த்த பணம் போதும் என்று பக்தி மார்க்கத்தில் இறங்கிவிட்டான் .
பேத்தியின் காவலன்.மாணவன் என்று பல அவதாரம்.
ஒரு நொடி உட்காராமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்.
இதோ இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை ஒரு வினாடியில் இறைவன் அழைத்துக் கொண்டான்.
நான் இங்கிருக்கிறேன்.
என் உயிராக நேசிப்பவர்களைக் கண்ணாடிப் பெட்டியில் பார்த்து அலுத்துவிட்டது.
நான் இந்தியா  செல்லவில்லை. அதற்குத்தக்க சரியான
விமான டிக்கட்டும்  கிடைக்கவில்லை.
அடுத்த நாள் போவதற்குள் காரியங்கள் முடிந்திருக்கும்.
மௌனம்  காத்துக்   கண்ணீர்வடிக்க மட்டுமே தெம்பு.

இனி வரும் சிரம நாட்களை எதிர்கொள்ள இறைவன் துணை இருப்பான்,. இதுவும் அவன் சொல்லிக் கொடுத்து
தான்.  நன்றி முரளி.

12 comments:

நெல்லைத் தமிழன் said...

பக்திமானுக்குப் பிறப்பேது, மறைவேது. நேசித்தவர்கள் மறைவது மனதை உலுக்கக்கூடியதுதான். உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வருந்துகிறேன் அம்மா...

காமாட்சி said...

உடன்பிறப்பை,அவரை இழந்த நிலையில் இந்த அஞ்ஜலி மனதைப் பிழிந்து விட்டது. நல்ல ஆத்மா.அனாயாஸமான மரணமும் கிடைத்திருக்கிறது. மௌன அஞ்ஜலி . வருத்தமுடன்

Angel said...

Deeply saddened by your loss . our thoughts and prayers are with you vallimmaa .

வல்லிசிம்ஹன் said...

உண்மையே நெல்லைத் தமிழன். ஒருவரும் இங்கே நிலை இல்லை என்று தெரியும்.
இழப்பு என்றால் புலம்புகிறேன். மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். நலமாக இருங்கள். நன்றி ராஜா.
திண்டுக்கல் ஸெயிண்ட் மேரி பள்ளியில் மாவட்ட முதல் பையனாகத் தேர்வானான். அதற்கு அவனுக்குப் பரிசாக 26 நல்ல புத்தகங்கள் கிடைத்தன. அவை
எனக்கு அறிவுக்களஞ்சியங்களாகக் கிடைத்தன.1965இல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காமாட்சி மா.
என் வலைப் பதிவில் இதை ஒரு நிகழ்வாகப் பதிந்து விடுகிறேன்.
மறதி அதிகம் வரும் முன்னர் இது ஒரு டயரிக் குறிப்பு.
உங்கள் அன்பு, தோழமைகளின் ஆதரவு எனக்கு பலம்.

வல்லிசிம்ஹன் said...

Yes I know Angelin. That you took time to express your thoughts make me feel good.
God Bless and keep you fine and stay Blessed.

ஸ்ரீராம். said...

உடன்பிறப்பின் மறைவு பெரிய சோகம். பார்க்கமுடியாமல் தொலைவில் இருப்பது அதைவிடப் பெரிய சோகம். வருத்தமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். மிக நன்றி ராஜா. எனக்கு உதவி என்றால்
உடன் வந்து நிற்பான். அவனுக்கே வேண்டியபோது நான் போகவில்லை. அதுவே வருத்தம்.
ஆமாம் காலம் மாற்றம் செய்யும்.

Geetha Sambasivam said...

ரொம்பவே வேதனையா இருக்கு! கூடப் பிறந்தவர்கள் இருவரையும் உங்கள் கண் முன்னர் இழக்க நேர்ந்திருக்கிறது. அதிலும் இந்தத் தம்பியைப் போய்ப் பார்க்கக் கூட முடியலை! என்ன சொல்லி உங்களைத் தேற்றுவது! காலம் தான் உங்கள் மனப்புண்ணை ஆற்ற வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. வாங்கிக் கொண்டு வந்த வரம் அப்படி. பகவான் தான் நித்ய துணை.