இராமாயண இறுதி கட்டம். |
கருடன் |
அசோகவனத்தை நினைவு படுத்தும் கேன்கனா வனம் |
சரஸ் வதி |
பாலி சென்ற பிறகு தெரிந்த வரலாறு என்னைக் குழப்பியது . கடோத்கஜனுக்குப் பிரம்மாண்ட சிலை. மஹாபாரதத்தில் அனைவரையும் எதிர்ப்பது போல தத்ரூபமாகச் செதுக்கப்பட்டது ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து நூசா தூவா போகும் வழியில் இருந்தது.
பிறகு ராவண வாலிக்கான யுத்தம் என்று சில சிலைகளை எங்கள் காரை ஓட்டிய சுதாமா சொன்னார்.
மஹாபலி ராஜ்யமும் இங்கே இருந்தது என்றும்,விஷ்ணுவும் மஹாபலியும்
போர் புரிந்தார்கள் என்றும் சொன்னார்.
ஒன்று புரிந்தது.
கோடரி வைத்திருந்தால் அசுரர்கள். வில்லேந்தினால் ராமன் ,இல்லையானால் பாண்டவர்கள்.
இங்கிருக்கும் கோவில்கள் மஹாபலிபுரம்....மாமல்லபுரம் போலவே இருக்கின்றன.
கடலோரக் கோவில்கள் ஏழு.
இதைத் தவிர ஜாவாவில் ஒரு பிரம்மாண்டமான கோவில் ஒன்றும் இருக்கிறது.
அங்கே போக முடியவில்லை
இங்கு வந்து குடியேறியவர்கள் பெயர் எல்லாம் மீரா,சித்ரா, காந்தா என்று இந்தியப் பெயர்களாக இருக்கின்றன.
இங்கே உள்ள கலாசாரம் ராமாயண காலத்தில் பரவியது போல ஒரு
தோற்றம்.
பாலி ராமாயணம் சீதையே அரக்கியருடன் போர் புரிவது போல
அமைந்திருக்கிறது. வீரப் பெண்மணியாகச் சித்தரிக்கப் படுகிறாள்.
11 comments:
இன்னொரு தேசத்தில் நம் இந்தியப் பெயர்களையும், சிநைந்த இந்தியக் கலாச்சாரத்தையும் காணும்போது நமக்கு ஒரு தனி மகிழ்ச்சி வரும். அங்குள்ள கோவில்கள், வீட்டின் காம்பவுண்டிலேயே அமைந்த சிறிய கோவில்கள் கேரளாவை நினைவுபடுத்தும்.
ஏதேனும் ராமாயண நாட்டிய நாடகம் காணும் சந்தர்ப்பம் வாய்த்ததா வல்லிசிம்ஹன் அம்மா?
அன்பு நெல்லைத்தமிழன்,
சரியாகச் சொன்னீர்கள். வண்டியில் செல்லும்போது இதைத்தான்
மருமகளிடம் சொன்னேன். இந்த விஷயம் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
எப்படி ஒரு தேசம் போல் இன்னோரு தேசம் இருக்க முடியும்.
அதுவும் மிகப் பழைய வீடுகள் .தென்னை மரங்கள்,,
..எங்களுக்கு ராமாயண நாடகம் பார்க்க நேரம் இல்லை. ஒரு நாளின் 60 பர்செண்ட்
பயணத்தில் போனது. ஏழரை மணி ஹோட்டல் திரும்பிவிடுவோம். விட்டுப் போன இடங்களைப் பார்க்க இன்னோரு தடவை பாலி போக ஆசை.
படங்களுக்கும் வியக்க வைக்கும் தகவல்களுக்கும் நன்றி.
எவ்வளவு பெரிய கருடாழ்வார்!
உங்கள் எழுத்துக்களில் இருக்கும் எளிமையும், மனப்பூர்வமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த ஓவியம் கோபிகைகளின் ஆடையை கிருஷ்ணர் கவர்ந்து கொள்வதை குயிருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.
I have sent my comment,but it was not published. I don't know why.
பாலித் தீவு பற்றிய நான்கு பதிவுகளையும் இன்றுதான் படித்தேன் /பார்த்தேன். மகிழ்ச்சி. அந்தநாளில் இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, வியட்நாம் இங்கெல்லாம் இந்தியாவின் இராமாயண, மகாபாரதக் கதைகள் மிகவும் பிரபலமாக இருந்துள்ளதை வரலாறு சொல்கிறது. இன்னும் என்னென்ன பார்த்தீர்களோ,எழுதுங்கள். சுவைக்கிறோம்.
- இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி
உண்மையே பானு மா.
கிருஷ்ணரும் கோபிகைகளுமாகத்தான் தெரிகிறது. கைகளை மேலே தூக்கியபடி கோபிகைகள் இருக்கிறார்களே. கவனத்துக் கொண்டு வந்தீர்கள்.
உடனே வந்து பார்க்க முடியவில்லை.
பின்னூட்டங்களை இன்றுதான் படித்தேன். பாலி ஹோட்டலில் அறைவாசலில் படிகள் இறங்கீப் போவதைக் கவனியாமல் புதரில் விழுந்துவிட்டேன். முழங்கால், கால் விரல்கள் மடங்கி
வலி எக்கச்சக்கம் ஆகிவிட்டது. கடலைப் பார்க்கும் ஆர்வம். ஹாஹாஹா.
மன்னிக்கணூம் கண்ணா. நிறையப் படங்கள் எடுக்காததற்கு இது ஒரு காரணம்.Bhanumathi Venkateswaran.
மிக நன்றி திரு செல்லப்பா. உடல் வலு இருந்தால் இன்னும் பார்த்திருக்கலாம். கூட வந்தவர்களுக்கும் சுமையாகி விட்டேன். எழுதுகிறேன் சார். Sri Chellappa Yagyaswamy.
அன்பு ராமலக்ஷ்மி, குறைவாகவே படம் எடுத்தேன். அற்புதமான இடம்.
நன்றி கண்ணா.
ஆமாம். ஸ்ரீராம். அதுவும் வேக அதி வேகக் கருடன்.
நன்றி ராஜா.
Post a Comment