Blog Archive

Monday, April 24, 2017

பாலியின் வீடுகளில் கோவில்கள். அவர்கள் கலாசாரம்

விருந்தாளிகளுக்குத் தனி இடம்.
வாஸ்து முறைப்படி அமைந்த கிராமம்.
  வீட்டுக்குள் நுழைவது நல்ல சக்தியாக இருக்க வேண்டும் என்ற முறைப்படி இலைகளில் கொஞ்சம் சாதம், எள்ளு, மலர்கள்,தானிய ம் ,ஊதுபத்தி மணம்  கமழப்  பச்சையும்,மஞ்சளுமாக  அழகுக் காட்சிகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பழைய முறைப்படி கட்டப்பட்ட வீடு.
வீட்டுக்குள் சந்நிதி முன்னோர்களுக்கு.

வண்டியோட்டி சுதாமா  சொல்லி நான் புரிந்து கொண்ட
விவரங்கள்... சில கோவில்களுக்கு அருகேயே  இறந்தவர்களுக்கு எரியூட்டும் இடம் இருக்கிறது.

இந்து மதத்தையும் புத்தமதத்தையும்  கலந்து
வாஸ்து முறைப்படி வீடுகள் அமைகின்றன.
எரிமலை அவர்களுக்குத் தெயவங்கள் வசிக்கும் இடமாம். கடல்
நாகம் முதலிய  அசுரர் சக்திகள் வசிக்கும் இடம்.
இரண்டுக்கும் நடுவில் அமைந்த சமவெளியில் வீடுகளில் எடுத்த திசைகளின்   சக்திக்கு மதிப்புக் கொடுத்து
அறைகள் அமைக்கப் படுகின்றனவாம்.
தெற்கு   கழிவறைகள் இருக்குமிடம். வடகிழக்கு நல்ல சக்தி இருக்கும் இடமாம்.
வீட்டுக்கு   காம்பவுண்டு சுவர்கள் நல்ல உயரத்தில் எழுப்பப் பட்டிருக்கின்றன.
வாயில் குறுகலாக இருக்கிறது.  இரு புறமும்
சின்னைச்ச்சின்ன  கல்லாலான வடிவங்கள் திருஷ்டி பொம்மைகளாக மிரட்டுகின்றன.

எல்லோரும் வளம் பொருந்தியவர்களாக இல்லை. சிலர் வசதி படைத்தவர்கள். பார்க்கப் பளிச்சென்று  தங்க முலாம் பூசிய வண்ணக் கதவுகள்.
சில கதவுகள்  இல்லாத வாசல்கள். அவ்வாறு ஒரு வாசல் வழியே  ஒரு சந்நிதியில் அனுமன் மஞ்சள் வர்ணத்தில் பளிச்சிட்டார்.
உள்ளே போகத்  தயக்கமாக இருந்தது.
இங்கேயும் ஜாதி,வர்ணங்கள் வழக்கத்தில் இருக்கின்றன.
என்னுடன் படம் எடுத்துக் கொண்ட பெண் தன்னை  உயர் ஜாதி பெண் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.
 அவரவர் ஜாதிக்கு  ஏற்ற கோவில்களுக்குத் தான் செல்ல வேண்டுமாம் .
அட சாமி என்று  வருத்தமாக இருந்தது.
நல்லவேளை நம்மூரில்  அப்படி இல்லை. இவர்கள் 5000 வருடங்களுக்கு முன் இருந்த வழக்கத்தைப் பின் பற்றுகிறார்களோ. நீண்டு விட்டது பதிவு. இன்னும் விஷயங்கள்   நிறைய. பிறகு பார்க்கலாம்.😇😇😇

11 comments:

நெல்லைத் தமிழன் said...

இந்திய கலாச்சாரத்தின் எச்சங்களாகத்தான் இவற்றைக் காணமுடிகிறது. குறுகலான நடுவில் (பூமியிலிருந்து ஆகாயம் வரை) வழியுள்ள கோபுரம் போன்ற நுழைவாயில். ஓட்டுநர் கண்ணனின் நண்பன் சுதாமா... தகவல்கள் அருமை.

வெளியே எங்கேயும் சாப்பிட்டீர்களா? அவர்கள் உணவுப் பழக்கம் அறிந்துகொள்ள முடிந்ததா? படங்கள் நல்லாயிருக்கு.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு பார்த்து அலுத்து விட்டது நெல்லைத்தமிழன்.
கொஞ்சம் டிப்ரஷன் கூட வந்துவிட்டது. கோவில் இருந்தது.
உள்ளே தெய்வம் என்று ஒன்றும் இல்லை. இயற்கையின் வளம் மட்டும்
உற்சாகம் கொடுத்தது.

நான் அதிகம் வெளியே சாப்பிடவில்லை. தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து
ஸ்டிக்கி ரைஸ் + தயிர் கலந்து , பார்சல் எடுத்துக் கொண்டு விடுவேன். ஒரு நாள் புத்தா என்கிற விடுதியில் சாப்பிட்டோம். Thai வெஜிடேரியன்.
ஒத்துக் கொள்ளவில்லை. Sudhama is a Christian ma. parents are Hindu.

நெல்லைத் தமிழன் said...

நான் அங்க இருந்த 4 நாட்களும் பழமும், கிடைச்ச எடத்துல ஜூஸ், சாதம் தயிர் போன்று ஏதேனும் சாப்பிட்டுக்காலம் கழித்தேன். காலைல ஹோட்டல்ல பிரெட், பழங்கள், நட்ஸ் இவைகளை சாப்பிட்டேன்.

ஸ்டிக்கி ரைஸ் - இதை தாய்லாந்தில் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது. எனக்கெல்லாம் நம்ம ஊரு சாதம் சாம்ப்பார், இல்லைனா மோர்/தயிர் சாதம் போதும். ஒரு தடவை தாய்வானுக்கு 6 நாள் போய்ட்டு, இங்க இரவு 9 மணிக்கு வந்து, ஆத்துல சாதம், வெந்தயக்குழம்பு, உருளை ரோஸ்ட் பண்ணிச்சாப்பிட்டேன் (அங்க அரிசி சாதம் இல்லை).

சுதாமா - பெயருக்காகச் சொன்னேன். அங்கெல்லாம் நிறைய இந்துப் பெயர்கள் (பெற்றோர் வைப்பதால்), கிறிஸ்தவம் follow செய்பவர்கள் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

நானும் காலையில் ப்ரெட், நல்ல காஃபி,பழங்கள் சாப்பிட்டு விட்டெ
கிளம்புவேன். கூடவே சர்க்கரை இல்லாத பிஸ்கட்.
ஜாஸ்மின் ரைஸ் தான் எனக்கு ஒத்துக்கொண்டது. வில்லு வில்லா
சாதம் இருந்தால் எப்படிச் சாப்பிடுவது.
நல்ல தயிர், வயிற்றுக்கும் கெடுதி இல்லை. பாவம் ஆறு நாட்கள் சிரமப் பட்டீர்களா. ராமச்சந்திரா.

சுதாமா நல்ல மனிதர். அத்தனை ஹிஸ்டரியும் தெரிந்திருக்கிறது.
அவர் கூட வந்ததால் போரடிக்காமல் இருந்தது. எங்க மகன் வயதுதான் அவருக்கும்.

இனிய பயணம் அமைய இது போல் மனித உறவு எவ்வளவு அவசியம் மா.
நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

சுதாமா பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைவு. படங்களும் தகவல்களும் சுவாரவ்ஸ்யம்.

எங்கள் தளத்தில் இன்று உங்கள் படைப்புமா. நினைவூட்டுகிறேன்!

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ. நிஜமாவா. சொன்னதையே திருப்பி சொல்கிறேனா.
பகவானே.
இன்னிக்கா வரப் போறது கதை. எல்லாருக்கும் பிடிக்கணுமே ஸ்ரீராம்.
நன்றி ராஜா.

துரை செல்வராஜூ said...

கதையின் போக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்பவர்கள் அதிகமாகி விட்டனர்..

நல்ல குணாதிசயங் கொண்ட பெண் ஆனதால் பீங்கான் உடைந்ததோடு போயிற்று..
குடும்பம் உடைந்திருந்தால் என்ன ஆவது?..

சுரேஷின் மனைவி போன்ற குணமுடையவர்களை ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதாகவே கொள்ளலாம்..

இனி வரும் காலம் இதற்கு மேலும் ஆகி விட்டால் என்ன செய்வது என்பதை நினைக்கும் போது மனதிற்குக் கலக்கமாக இருக்கின்றது..

பெருமாளே சரணம்!..

கோமதி அரசு said...

இனிய பயணம் அமைய சுதாமா போன்ற மனிதர்கள் அவசியம் தான். அந்த நாட்டின் பழக்க வழக்கங்கள் தெரிந்து கொண்டேன்.

ராமலக்ஷ்மி said...

படங்களும் தகவல்களுமாக அருமையான பகிர்வு. இறை வழிபாட்டில் சாதி வேறுபாடு இருந்து வருவது வருத்தம் அளிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உண்மைதான் அம்மா. வாழ்க்கைக்கு வழிகாட்டி
குரு. வண்டியோட்டும் சாரதியும் நல்ல சமயோசிதமாகச் செயல் பட வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,
ராமலக்ஷ்மி , சுதாமா சொல்லும்போது நிஜமாவே அதிர்ச்சியாக இருந்தது.

வருத்தம் கூட.இன்னுமா உலகம் மாறவில்லை என்ற எண்ணம் வருகிறது.