Blog Archive

Friday, September 25, 2015

கதிரவனின் அருள் மழை

இருக்கும் இடம்.
இருந்த இடம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
செல்லும்  இடம்
மழைக்குப் பின்  சூரியன் வருவது  அவசியம் இல்லையா.

காமிராவுக்குப் பின்னால் நிழலுக்கருகில் நின்று  வெய்யிலில் குளிக்கும் இயற்கையைப் படம் பிடிப்பதும்    ஒரு   நிகழ்வுதான்.

மேலே  இருக்கு  கேசியா பூக்களைப் பிடித்தது சிங்கம்!!
அவருடைய   கையில் வளர்ந்த செடி மரமாகி
வருடா வருடம்  தங்க மலர்கள் கொட்டுகிறது.
இப்பொழுது    மகிழமரமும்   இறைவனுக்கு
மலர்களைக் கொடுக்க  ஆரம்பித்துவிட்டது.

போன வருடம் பெய்த மழையை இலைகளில் வாங்கி  வேரில் விட்டு
மண்ணை நனைத்து
மண்ணும் சலிக்காமல் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு


மரங்களின் தலையில் மலர்களாகவும்,
மாமரத்தில் மாங்காய்களாகவும்
செம்பருத்திப் பூக்கள் ஒரு  முப்பது ஆவது  பூக்கின்றன.

அதற்காகத்தான் கேட்கிறேன் மழைத் தாயே
என்று வருவாய்.
அடுத்த வருடமும்    நிலம் மகிழமும் மகிழ வேண்டாமா.

தருமப்பயிர் வாழத்
தருண மாமழையே
தன்குலம் எங்கிலும்
மங்கலம்  தங்கவே
அருள் பொழிவாய்
கருணைக்கடலே..
இந்தப் பாடல்   திரு சுத்தானந்த பாரதியின்   படைப்பு.
கீதா  கீழே குறிப்பிட்டிருப்பது போல்

தினம் பள்ளி அஸ்ஸெம்பிளியில் இந்தப் பாடலும்,
செந்தமிழ் நாடென்னும் போதினிலேயும்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழரும் உண்டு. ரகுபதி ராகவராஜராமும் உண்டு.








Wednesday, September 23, 2015

துளசிதளம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்





    துளசி தளத்துக்கு வாழ்த்துகள்.. 11 வருடங்கள் அசராமல் பதிவுகள். சரித்திர
வரலாறுகள், ஸ்தல புராணங்கள்,,வாழ்க்கை சம்பவங்கள், நியூசிலாண்ட்  நிகழ்ச்சிகள்,
அங்கு வருகை தரும் வி ஐபிகளுக்கு வரவேற்பு,

அங்குள்ள அரசியல்,, தன் செல்லங்கள் வந்த கதைகள்,
பதிவர் சந்திப்புகள்  இத்தனையும் வேறெங்கும் தேட வேண்டாம்.
அவரது பதிவுகளைப் படித்தாலே  போதும்.

இதற்கு நடுவே உலக வருத்தங்களைப் போக்கும்  சபதம்
வேறு எடுத்துக் கொண்டு இருக்கும் துளசி  உதவி  செய்யும் சங்கங்கள் அனேகம்.
உங்களை என்  தோழியாக அடைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் நம்மை இணைத்திருக்கிறது .
இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் தளமும்,கோபாலும் ,நீங்களும்
தமிழுடன் உறவு கொண்டு  எங்களை  மகிழ்விக்கணும்.


Tuesday, September 22, 2015

மனம் நிறை வாழ்த்துகள் துளசிக்கும் கோபாலுக்கும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
 செப்டம்பர்   மாதம் முழுவதும் பிறந்த நாட்கள்  கொண்டாட்டம்.
அதில் முக்கியம் என் தம்பியர் இருவரின் பிறன்தா நாட்கள்.
என் தங்கச்சியின் வலைப்பூ  மலர்ந்த   நாள்.

24 ஆம் தேதி    மகிழ்ச்சி நாள்.
துளசியும் கோபாலும்
என்றென்றும் மகிழ்வுடன் இருக்கணும். சுகமாக ஆரோக்கியம்   செழிக்க
க்ஷேமம் கூட  வாழவேண்டும். இறைவன் துணை இருப்பான்.

Sunday, September 20, 2015

நிறைவுடன் கிளம்புகிறேன்



Add caption






















..






















..
 
   வாழ்க்கை தரும் பாடங்களில்  ஒன்று   நிலையாமை.

உருண்டோடும்   நாளில்  கரைந்தோடும் வாழ்வில் 
ஒளி வேண்டுமா இருள் வேண்டுமா பழைய 

பாடல்..

மேலும் மேலும் ஒளி தேடுவதுதான்  குறிக்கோள்.
முடிவில்லாத ஒளியை அடையும் வரை தேடுதல் உயிர் ஆதாரம்..

துணைவரும் ஆசிரியர்கள் அன்பர்கள் நமக்கு வழிகாட்டுவது 
சஞ்சலமில்லாத பாதையை.
அதை ஏற்கும் பக்குவத்தை மட்டும்
 அடைய முரண்டு பிடிக்கும் மனம்.

நான் நான் தேடும் வாழ்க்கை மட்டும் நல்லது என்று 
எண்ணி   ஏமாந்திருக்கிறேன்.
இருந்தும் அகம் என்பது அழியவில்லை.

இனித் தணிய வேண்டிய நேரம்..

அகத்தில் மூளும் சினம்,இயலாமை,சோகம் அனைத்தும் தீயாக 
என்னை மட்டும் உருக்குவதில்லை. என்னைச் சேர்ந்து எனக்காக
கவலை கொள்ளும்   மற்ற  சிறு உள்ளங்களையும் உலுக்குகிறது..

இதோ மீண்டும்  பயணம். விமானங்கள். ஏர்போர்ட்டுகள்,
 இடம் மாற்றம், மீண்டும் சென்னை.

இறைவன் காப்பார்.
பார்க்கலாம்..
 இனிதாக வாழ வேண்டும்

Wednesday, September 16, 2015

செப்டம்பர் 13 ஒரு அருமை அன்னையின் தினம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்செப்டம்பர் 13

என் மறு அம்மா விண்ணுலகு ஏகிய தினம்.
உலகிலேயே இத்தனை ஆதரவும்
உறுதியான அன்பும் உள்ள மாமியார் யாருக்கும் கிடைப்பது அரிது.

இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் போனதில்லை.
ஆனால் என் வாழ்வின் சங்கடங்கள் எல்லாம் இவரின் ஒரு செயலில்

நீங்கிடும்.
பெற்ற பிள்ளையின் மீது பழுதில்லா அன்பு.
அனைவரையும் அரவணைத்துப் போகும் சுபாவம்.
இப்பொழுது நான் மாமியாராக இருக்கும் நேரம்
அவரது பெருந்தன்மைகளை நினைத்து அதிசயிக்கிறேன்.
காருண்யம் என்றால்  கமலம்மா..
எங்கள் குடும்பத்துக்கு நன்மை ஒன்றையே நினைத்தவர்.

அவர் இருக்கும் இடம் ஸ்வர்க்கமாகத்தான் இருக்கும்.
கடமைப் பட்டிருக்கும் குடும்பத்தின் பிரதி நிதியாக வணங்குகிறேன்.



















.

Tuesday, September 15, 2015

இசை தந்த வள்ளல் அம்மா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
      அருமை அன்னை.

மோகனம்

    நிறை மகிழ் தம்பதி

        குயில் வரையும் கோலம்.

திருமதி  என்றால் திருமதி தான்.
 பொறுமை
,புகழ்,  அருமை, பக்தி

  பதி
சொல் மீறாத மீரா

அன்னையின் பிறந்தாளுக்கு
 இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் தகுதி நமக்கு.


அத்தனை
ங்களையும்
 பக்தி வெள்ளத்தால் நிறைத்து

அனைத்து  துயரங்களிலிருந்தும்
 வெளிவர  வழிகாட்டி
  அரவணைத்துக்  காத்த குரல்.
எப்பொழுதும்   அவரைக் கேட்க

காதுகளுக்கு
 ஆரோக்கியம் தர இறைவனை வேண்டுகிறேன்.



































    





































முன் ஜாக்கிரதை .

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மூன்று நாட்களாக ஒரே பரபரப்பு.
பக்கத்து டிவிஷனில் ஏதோ ஒரு பையன் போதைப் பொருள் விற்பதாகவும்,
இந்தப் பக்கம் வந்தால் பார்த்துவிடவேண்டும் .குழந்தைகளை வெளியே தனியாக விடக் கூடாது

என்றெல்லாம் பேச்சு அம்மாக்களுக்குள்.
எல்லாரும் எல்லாருக்கும் தொலை பேசி எச்சரிக்கை விடும்
வேகம் என்னை அசர வைத்தது.

இங்கே தான் பிறந்த குழந்தையிலிருந்து கல்லூரி செல்லும் வயது வரை பெண்களும்
பையnகளும் இருக்கிறர்கள்.
செய்தியைச் சொன்னவர் இந்த ஊர்க்காரர்.வெள்ளையர்.

ஒரு குடும்பம் போல் இவர்கள் செயல்படும் அழகு எனக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் அதற்காக நடைப் பயிற்சிக்குப் போன என்னை ஏரிக்கரையில் வைத்து
இரண்டு மூன்று வட இந்தியப் பெண்கள் விசாரித்ததுதான் ஹைலைட்.]]]]]]]
இனி ஐடி கார்டோடு வாக்கிங்க் போகணுமோ.

Sunday, September 13, 2015

நீலமலைகளுக்கு ஒரு பயணம்......ஸ்மோக்கி மௌண்டென்ஸ்

Add caption
யாருமே சீ ர் செய்யாமல் ஒழுங்காக   இருக்கும் மலைச்செடிகள் 
மஞ்சள்  பூக்கள்  விரிந்த   மலைப்பக்கம்.
Add caption
புகைமூடிய   மலைகள் 
நீலமும் பச்சையுமாக செழிப்பு 
எப்படிப் படம் எடுக்கலாம் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Saturday, September 12, 2015

கௌரவம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

தினப்படி சைக்கிளில் பள்ளி சென்று வரும் பேரன் ,எதையும் மறப்பதில்லை. சாலை விதிகளையும் மதித்து ,ஹெல்மட் அணிந்து கொண்டுதான் கவன்மாக ஓட்டுவான்.

வியாழக்கிழமை பெண் அவனோடு நடந்து போகும்போது பள்ளி வந்ததும் நின்றுகொண் டாள். அவன் சரியாக சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்துகிறானா
பத்திரமாகப் பள்ளிக்குள் நுழைகிறானா என்று பார்த்துவிட்டுத்தான்
திரும்புவாள்.
அவன் சைக்கிளை நிறுத்தியதும் பள்ளியின்  செக்யூரிடி அவனை அணுகுவதைப் பார்த்ததும் அவளுக்கு பயமாக இருந்தது.
இருந்தும் தூரத்திலிருந்து பார்த்தவளுக்குப் புரியவில்லை. அவன் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்குள் சென்றதும்
அவள்  அந்த செக்யூரிட்டியையும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த  போலீஸ் பெண்ணையும் மெதுவாக விசாரித்திருக்கிறாள். தன்னையும் மகனையும் அறிமுகப் படுத்திக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வாரம் ஒரு முறை
அவர்கள்   அந்தப் பள்ளிக்கு வரும் நாட்களில் சாலை விதிகளை ஒழுங்காகப் பின்பற்றும் சிறுவர்களை உற்சாகப் படுத்திக் கௌரவி க்கிறார்கள். அவனுக்கு ஒரு பாட்ஜ் கொடுத்திருப்பாகவும் அவன் தினமும்
சைக்கிள் செய்யும் போது அணிந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அவள் வந்து என்னிடம் சொன்னதும்
அவன் வரும் வரை காத்திருந்தேன். உணவு உட்கொண்டதும்
வெகு நிதானமாக நடந்ததைச் சொன்னான்,. அந்தப் பளபளக்கும் பாட்ஜ்,,ஒளிவிட்டு விட்டு மிளிருகிறது.
நம்ம டியூட்டியைத்தானே செய்கிறோம் என்று சொல்லிவிட்டான் போக்கிரி.
அந்த பாதுகாப்பாளர்களுக்கு எங்கள் நன்றி.
இந்த எட்டரை வயதுப் பெரியவருக்கு வாழ்த்துகள்.
Add caption

Friday, September 11, 2015

திருமங்கலம் என்று ஒரு ஊர்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
****************************************************
கதம்பம் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.
தஞ்சாவூர்க் கதம்பம் சொல்லுவாங்க
அது இப்போ என்ன மாதிரி இருக்கோ தெரியாது.

எங்க மதுரை மல்லி சேர்த்துக் கட்டிய கதம்பம்ம்ம்ம்ம்ம்ம்
அப்படியே மனசை உள்ள இழுத்துவிடும்.கதிர் பச்சை, மருக்கொழுந்து,கனகாம்பரம்,தாழம்பூமல்லிப்பூஎல்லாம் சேர்ந்து கனமாக் கட்டி
 ஸ்பெஷலாக் கொண்டு வரவங்க பாடவரம் அம்மா.
                              *******************************




பாப்பானு கூப்பிட்டுக் கொண்டே உள்ள வருவாங்க.
அவங்க வர முன்னாடியே எங்க திருமங்கலம் வீட்டு வாசலே  மணக்க ஆரம்பித்துவிடும்.

கூடவெ மருதாணி இலைகளையும் அழகா ஒரு சின்னத் துண்டில் கட்டி எடுத்து வருவாங்க.ரோஜாக்கள் தனியா வரும்.
அந்த ஊரு மண்ணுக்கு அப்படியொரு மணம்.அப்படி ஒரு நேர்த்தி.
காலையில் பள்ளிக்கூடம் போகும் முன்னரேதலையில் வைக்கப் பூ கட்டி கொண்டு வருவாங்க.
பதினோரு மணிக்குத் தயிர், வெண்ணை
கூடைல வித்துக் கிட்டு இருப்பாங்க.




சாயந்திரமானா அங்குவிலாஸ் வீட்டுக்கு எதிர்த்தாப்பில 
பிள்ளையார் மரத்தடிலே வேர்க்கடலை கூறு கட்டி வச்சு இருப்பாங்க.ராத்திரி எட்டு மணீக்கு மாட்டு வண்டியில் 
உருளைக் கிழங்கு மசலா கொண்டு வருவாங்க..
இது போல ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை.55  வருடங்களுக்குப்  பிறகும் என் நினைவில் நிற்கும் மங்கை}}}


Wednesday, September 09, 2015

நான்கு நாட்கள் விடுமுறை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  அருமையான  பொழுதுகளை   இந்த லேபர்  வார இறுதியில்  சந்தித்தோம்..

பேரனின் தோழர்கள் ஒரு  உற்சாகக் கும்பல். . ஐஸ்க்ரீம் கேக், அந்தப் பதின்ம வயதுக்கான ஆர்வத்தோடு  நொடியில் காலியானது.
பிறகு பாட்டியிடம் விசாரணை.

நீங்க இங்கயே வந்துடலாமே  என்று சொல்லும் கரிசனம்..
படிகள் எதிரொலிக்க கீழே இறங்கி  பேஸ்மெண்டில்  விளையாட்டு. 
பிறகு ஒரே  வண்டியில் அத்தனை நண்பர்களும்  வீட்டுக்குத் திரும்பிய கண்ணியம்.

 இரண்டு  நாள்  கழித்து பெண்ணின் தோழிகள் ஒன்றாகச் சேர்ந்து ,அவரவர் வீட்டில்
  சமைத்த பண்டங்களைப் பகிர்ந்து கொண்ட அருமை. கணவன்மார்களும்
உதவி செய்ய எனக்கு மீண்டும் நல்ல தோழி  கிடைத்தார்.

திருச்சியில் வடக்கு ஆண்டார் வீதியில் இருக்கும் சாவித்திரி..
சகோதர சகோதரிகளைக் கரையேற்றிவிட்டுத் தனியே இருந்தாலும் ,லண்டன், அமெரிக்கா சிங்கப்பூர் என்ரறு பயணம் செய்து கொண்டிருப்பவர்..
நம் வை கோபாலகிருஷ்ணனைத் தெரியுமா என்றும் கேட்டேன். யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அருமையான பெண்மணி. குறையென்று எதையும் நினைக்காமல் 
எல்லோரையும் அன்பால் வளைத்துக் கொண்டவர்.
வாழ்க்கையின் இன்னோரு கோணத்தை நேற்று சந்தித்தேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு வார்த்தை விளையாட்டுக் களும், சிரிப்புமாக
இனிய நேரங்கள் கழிந்தன.

மாலையில் வட இந்திய சகோதரி வீட்டில்  ருத்ர ஹோமம்..

அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைச் சொல்லி முடியாது. வந்திருந்தவர்கள் அனைவருக்கும் 
பிரசாதங்களே இரவு உணவாக அமைந்துவிட்டன.
அண்மையில்  மானசரோவர்,கைலாஷ் மலை என்று பயணம் மேற்கொண்டு திரும்பியவர்
ஆடிப் பௌர்ணமி அன்று தான் பார்த்த அதிசய ஒளி நட்சத்திரப் பொலிவையும்,
அவைகள்  மானசரோவர் ஏரியில்  வந்து குதித்த  ஆச்சரியத்தையும் சொல்லிச் சொல்லி எங்களை
மகிழ்ச்சியில் வீழ்த்தினார்.

https://youtu.be/16gZ-KBesCU   இது அவர் கொடுத்த லிங்க் 

நான்கு  நாட்கள் பூர்த்தி. இன்று  பிள்ளைகள் பள்ளி திரும்பியாகிவிட்டது..

இறைவனுக்கு நன்றி.

Monday, September 07, 2015

Door County Pictures

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Add caption

Add caption
Add caption
ஒரு  இனிய பயணத்தின் அடையாளங்கள்.

Sunday, September 06, 2015

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்






















தனியாக்கப் படுவது எப்போது.

நம்  மனம் சில நபர்களைச் சந்தோஷப்படுத்துவது கடமை என்று நினைத்து விடுகிறது.
அவர்களோடு பேசுவதில் நமக்கும் மகிழ்ச்சியே.  ஆனால்  அவர்களுக்கு அது உகப்பதில்லை


கட்டாயமே இல்லை. அவர்கள் நம் அன்பையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து  இல்லை..

நீயும் என்னை விசாரிக்க வேண்டாம். 
நானும் உன்னை விசாரிக்கவில்லை என்று வாசலிலேயே
அனுப்பிவிடுகிறார்கள்..

நம்மைவிடப் பெரியவர்களிடம் பேசப் போகும்போது
இத்தனை நாளாய் ஏன் பேசவில்லை. 
ஒருத்தன் இல்லைன்ன்னால் நாங்களும் இல்லையா என்கிற 
அளவில் வார்த்தைகள் வீசுகிறார்கள்.

சம நிலை எனக்குதான் இல்லையா. என்று யோசனை போகிறது.

அதோடு இந்த ஏழரை  மீன ராசியில் இருக்கிறதோ போய்விட்டதோ என்றும் சில நாட்களாக சந்தேகம்..]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
எல்லாம் 

போகட்டும் கண்ணனுக்கே

Thursday, September 03, 2015

பைத்தியக்கார தோசை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  30  வருடங்களுக்கு  முன்னால்  செய்த  பலகாரம்.
வீட்டுக்கு  வந்த உறவுக்கார   அம்மாவுக்கு    என் திறமைகளில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம்  இல்லை.
  என் மாமியார் என்னை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.  
இந்த   அம்மா  வந்த நேரம் நாங்கள் எல்லோரும் சாயந்திர பலகாரம் முடித்துவிட்டு   பள்ளி சென்று வந்த பிள்ளைகளுக்கு உணவு   கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த நேரம்.
அப்போது   வண்டியில்  வந்து இறங்கினார்  இந்த அம்மா. 
இவரை அவ்வளவாக ரசிக்க  மாட்டார்கள் குழந்தைகள்.
அதனால் வேகமாக  மாடிக்கு ஓடிவிட்டார்கள்.

மாமியாரே சுதாரித்துக் கொண்டு அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார் ஆனார்.
நான் சமையலறைக்குள் செல்லத் தயாரானேன்.😅😅😅😅😣
உடனே  என்னை அழைத்துவிட்டார். 
இன்னிக்கு  என்ன பலகாரம்   என்று கேட்டார்.  ப்ரெட் உப்புமா என்றேன்.
ஏகாதசி ஆச்சே. எப்படி    நீ இதை  அனுமதிக்கிறாய்  கமலா என்று என் மாமியாரிடம் கேட்டார். மாமியார். இங்க குழந்தைகளுக்குத்தான் முதலிடம். எனக்கு   எப்பவும் ப்ரெட் பிடிக்கும். நான்  விரதங்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்   டயபெடிஸ்க்கு ஒத்துக்காது என்று விட்டார் அம்மா.
அப்ப எனக்கு ஏதாவது பலகாரம் செய்து கொடு ரேவதி.கபாலி 
கோவிலில் இருந்து வருகிறேன்.அர்ச்சனை அது இதுன்னு நேரம் போய்விட்டது.
வீட்டுக்குப் போவதற்கு நேரமாகும் .செய்கிறாயா  என்றார்.

நான்  அக்ஷயப் பாத்திரத்தைக் கவிழ்த்த திரௌபதி  போல விழித்தேன்.
மாமியார் உதவிக்கு வந்தார். ரவா கரைச்சு  தோசை வார்த்திடும்மா. என்றார். அவருக்குத் தெரியாது.
பக்கத்துவீட்டிலிருந்து அப்பத்தான் வேலைக்காரப் பெண் வந்து   இருந்த   ரவையை வாங்கிக் கொண்டு போயிருந்தாள். 
அரிசி உப்புமா செய்யட்டுமா என்று கேட்டேன்.
வேண்டாம் . நீ செய்யும்  ரவாதோசைதான் வேணும். என்றார் அந்த அம்மா.
 ஸ்டோர் ரூமுக்குப் போய் ஆராய்ந்தேன்.
மாதாந்திர   ஜாபிதா  எழுதி வைத்திருந்தேன்.
அப்போதுதான் சென்னகேசவ செட்டியார் கடைக்குத் தொலைபேசி இருந்தேன்.வர ஒரு மணி நேரம் ஆகும். எல்லாப் பொருட்களும் கடைசி லிமிட்டுக்கு  வந்திருந்தன. 
பலகார மாவுகளைச் சேர்த்தேன். சேமியா, ரவை,கோதுமைமாவு,அரிசிமாவு,கடலை மாவு.  எல்லாவற்றையும் மோர் விட்டுக் கலந்து  சீரகம் தாளித்து   இரண்டு மூன்று ,நாலு என்று தோசைகளும் வார்த்து விட்டேன்.
முதல் தோசை முரண்டு பிடித்தது. கரண்டியும் தோசைக்கல்லும்  யுத்தம் சத்தமில்லாமல் செய்தன.
பிறகு சரியாகி விட்டது.

மாமியார் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த  பெரியம்மாவிடம் கொடுத்தேன்.
என்ன தோசை இது என்று சந்தேகத்தோடு.பார்த்தார்.  பஞ்சவர்ணத்தோசை. எங்க பாட்டி செய்வார் என்று சொன்னேன்.
நான் இதற்குப் பைத்தியக்கார தோசைன்னு பேர் வைக்கிறேன்.  
என்றார். 
மாமியார் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
எனக்குக் கோபம் வரவில்லை.
இப்படிப் பெயர் வைக்க இன்னோரு பைத்தியத்தால் தான் முடியும் என்று பிறகு மாமியார் சொன்னதும் சிரிப்புதான் வந்தது.
சிங்கமும் அப்போ வந்து இந்தத்  தோசை சாப்பிட்டார். வெங்காயம் ஏம்மா போடலை. சூப்பரா இருக்குன்னு  மாடிக்குப் போய்விட்டார்.
புராணம் முடிந்தது. அதற்குப் பிறகு இந்தத் தோசை வார்க்கவில்லை.
 சென்னகேசவலு செட்டியார் கடையிலிருந்து 
எல்லா  மளிகைப் பொருட்களும் வந்து சேர்ந்தன.
பெருமூச்சுடன் 😀  எல்லாவற்றையும் எடுத்துவைத்தேன்.
மனிதர்களில் இப்படியும் சில பேர்.

எங்க வீட்டு குணுக்கு(பெயர் மூஞ்சில வெடிக்கிறது):)




மைதாமாவு ஒத்துக்கொள்ளாதவர்கள் இந்தப் பதிவைப் படிக்காமல்

ஒதுங்கலாம்:).



ஏன்னா எங்க வீட்டிலியே ஒருத்தர் இருக்கார். ''எனிதிங் ஒயிட் இஸ் டேஞ்சரஸ்"

அப்படீனு யாரோ எழுதினதைப் படித்ததிலிருந்து அவர்

வெள்ளையா இருக்கும் எதையும் சந்தேகக் கண்களோடுதான்

பார்ப்பார்.



சிவப்பு அரிசி, தான் சாப்பாட்டுக்கு.

சர்க்கரை,உப்பு,வெள்ளை அரிசி,மைதா, கோதுமை பக்கமே போக மாட்டார்.



ஆனால் இட்லி,தோசை,பொங்கல் பரவாயில்லை என்று ஒத்துப்பார்.



அதில் மிளகு சீரகம் பொடித்துப் போட்டால் ரொம்பவே பிடிக்கும்.

யாருன்னு சொல்ல மாட்டேன்பா.





ஊரைச் சொன்னாலும் உறவைச் சொன்னாலும்னு சொல்லுவாங்க இல்லையா.
அது போலத்தான்.:)
இப்போ கொடுக்கிற குணுக்கு என்னும் பலகாரம்
சாதாரணமா அடை மாவிலயே அடை ஒரு நாளும் அடுத்த நாள் குணுக்காகவும் அவதாரம் எடுக்கும் பதார்த்தம் இல்லை.

இதுக்குத் தேவையான பொருட்கள்;

மைதாமாவு,
அதில அரைப்பங்கு ரவை,

அதில கால் பங்கு அரிசி மாவு.

மாவுகளைக் கலந்து கொண்டு அதில் பெருங்காயப்பொடி,
பச்சை மிளகாய் ,உப்பு எல்லாம் கலந்து கொள்ளவேண்டும்.

பச்சை மிளகாய் கண்ணில தெரிகிற அளவு நறுக்கி வைத்துக்கொள்ளணும். இல்லாவிட்டால் சாப்பிடறவங்க அதையும் சேர்த்துக் கடிச்சுட்டு குய்யோ முறையோனு அலறுவாங்க.

எல்லாம் அனுபவம் தான்:)

இந்தக் கலவையில் ஒரு கையளவு தயிர்,கொஞ்சம் பால்,கொஞ்சம் சர்க்கரை,
கொஞ்சம் நெய்யெல்லாம் சேர்த்து(நெய் வேண்டாம்னா வெண்ணை போட்டுக்கலாம்.அதுவும் வேணாம்னா சனோலா ரெண்டு ஸ்பூன்)

எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்ணீர் சேர்க்கக் கூடாது,.

அதுவும் கல் உப்பும் போட்டுப் பிசைந்து,
இந்த மைதாமாவு குணுக்கு ஆரம்பித்து வைத்தவர் எங்க புகுந்த வீட்டு அத்தை.

அவங்க , எப்பவும் குணுக்கா?ன்னு கேட்ட மகளைத் திருப்தி செய்ய ,
இந்தப் புதுப் பலகாரத்தைச் செய்ய,அவங்க செய்யும் போது ஒரு குணுக்குப் பிரிந்து முகத்தில் வெடிக்க அதற்கு
அன்று மூஞ்சீல வெடிக்கிறதுன்னு ஒரு பெயர் வந்தது.

ஆமாம். இது எண்ணையில் செய்யும் பலகாரம்.
கல் உப்பைப் பொடிக்காமல் கரைக்காமல் போட்டால், அது எண்ணையுடன்...
அதுவும் கொதிக்கும் எண்ணெயில் போட்டால் வெடிக்காமல் என்ன செய்யும். ரோஷம் உள்ளதாச்சே உப்பு:)


இந்த மாவில் கொத்தமல்லியும், கருவேப்பிலையும் அளவாப் போட்டால் கமகமா வாசனையோடு ம்ம்ம்ம்
நல்லா இருக்கும்.

எண்ணெயைக் கொதிக்க வைத்து,பிறகு மிதமான சூட்டிலியே மாவை உருட்டிப் போட்டு,நல்ல தங்க வண்ணத்தில் வறுத்து எடுக்கலாம்.

ஓஹோ சொல்ல மறந்துட்டேன். அடுப்பை முதலில் பத்த வைக்கணும். அப்புறம் கனமான வாணலியில் எண்ணையை ஊற்றி,

பிறகுதான்,.....
முதலிலிருந்து படிக்கவும்.
இன்னோரு பலகாரம் உண்டு. அதுக்குப் பெயர் பைத்தியக்கார தோசை.

அதை இன்னோரு நாள் பார்க்கலாம்.


Wednesday, September 02, 2015

சில சில் நினைவுகள் 18 ......புதிய பதிவு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எழுத  விட்டுப் போன ஒரு சுவாரஸ்யம். 1965  நவம்பர் மாதம்
****************************************************************
அக்டோபர் 31  பார்த்து,
நவம்பர் 1 ஆம் தேதி  செங்கல்பட்டு சந்திப்பில் ரயில் ஜன்னலில்
மீண்டும் உறுதி செய்து கொண்ட  அன்பு 
திருமண நாளுக்காகக்  காத்து  இருந்தது..

சிங்கத்தின் மாமா  எனக்குப் பெரியப்பா.
அவர் இறைவனடி அடைந்து 6  மாதங்களே  ஆகி இருந்தன. 
பெரியப்பாவின் மகனும்  இவரைப் போலவே உயரம். ஆனால்  5 வயது
இளையவர்.

பசுமலை வழியாகத் தான் அவர் படிக்கும் தியாகராகஜா எஞ்சினீயரிங்க் கல்லூரிக்குப் போக வேண்டும்.
ஒரு நாள் வாசலில் மாலையில்   நான்  உட்கார்ந்திருக்கும்போது
இந்த அண்ணா  பஸ்ஸிலிருந்து தலை நீட்டிப் பார்ப்பது தெரிந்தது.

அப்பாவிடம் சொன்ன போது, பாவம்  நன்றாகப் படிக்கணும் அந்தப் பிள்ளை என்று சொல்லிக் கொண்டார்.
அடுத்தனாள் சனிக்கிழமை சாயந்திரம்,

திடும் திடும் என்று  மோட்டார்  சைக்கிள் சத்தம். அப்பாவின் இன்னோரு தம்பி
 பைக் வைத்திருந்தார்.
அப்பா, சித்தப்பா வருகிறார் போல இருக்கு என்றவாறு
படிகளில் இறங்கி  போகன் வில்லா வளைவில் போய் நின்று ஆவலுடன் பார்த்தேன்.

அந்த  பைக் நிற்காமல் கடந்து விட்டது. ஏமாற்றத்துடன் 
திரும்னபினவளுக்கு  சட்டென்று அண்ணா  முகமும், 
மனதில்  பதிந்த முகமும் நினைவுக்கு வர மீண்டும் திரும்பிப் பார்த்தேன்.

அதே பைக் மறுமுனையிலிருந்து  திரும்பி  வந்து கொண்டிருந்ததது.
அவர்கள் இருவரும் தான்.

நான் திறந்த வாயை மூடி இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.

மெதுவாக  எங்கள் வீட்டைக் கடந்த  பைக் வேகமெடுத்து மறைந்தது.
ஏதோ     சோகம் படிய  நான் உள்ளே வந்துவிட்டேன்.
அப்பாவும் அம்மாவும்   ஏன் ஏதாவது  ஊர்வலமா, இல்லை சினிமா   நோட்டீசா
ஏ ன் வாசலுக்கு ஓடினே  என்று கேட்ட கேள்விக்குப் பதில்  சொல்லத் தெம்பில்லை.
அவ்வளவு   பதட்டம் உடம்பில்..

அந்த ஞாயிறு  பெரியம்மாவிடம் கல்யாணம் பற்றிப் பேச
பெற்றோர்  போய் வந்தனர். அப்போது பெரியம்மா  சிங்கம் இரண்டு நாள் வேலையாக வந்துவிட்டுப் போனதைச் சொன்னாராம்.
ரொம்ப நல்ல பிள்ளை.
நான் கூட  பசுமலைக்குப் போய் வருகிறயா  என்று கேட்டதற்கு
அதெல்லாம் சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.
அன்று எனக்கு வந்த சிரிப்பு 
இன்னும்  புன்னகை வரவழைக்கிறது.