Blog Archive

Saturday, September 12, 2015

கௌரவம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

தினப்படி சைக்கிளில் பள்ளி சென்று வரும் பேரன் ,எதையும் மறப்பதில்லை. சாலை விதிகளையும் மதித்து ,ஹெல்மட் அணிந்து கொண்டுதான் கவன்மாக ஓட்டுவான்.

வியாழக்கிழமை பெண் அவனோடு நடந்து போகும்போது பள்ளி வந்ததும் நின்றுகொண் டாள். அவன் சரியாக சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்துகிறானா
பத்திரமாகப் பள்ளிக்குள் நுழைகிறானா என்று பார்த்துவிட்டுத்தான்
திரும்புவாள்.
அவன் சைக்கிளை நிறுத்தியதும் பள்ளியின்  செக்யூரிடி அவனை அணுகுவதைப் பார்த்ததும் அவளுக்கு பயமாக இருந்தது.
இருந்தும் தூரத்திலிருந்து பார்த்தவளுக்குப் புரியவில்லை. அவன் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்குள் சென்றதும்
அவள்  அந்த செக்யூரிட்டியையும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த  போலீஸ் பெண்ணையும் மெதுவாக விசாரித்திருக்கிறாள். தன்னையும் மகனையும் அறிமுகப் படுத்திக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வாரம் ஒரு முறை
அவர்கள்   அந்தப் பள்ளிக்கு வரும் நாட்களில் சாலை விதிகளை ஒழுங்காகப் பின்பற்றும் சிறுவர்களை உற்சாகப் படுத்திக் கௌரவி க்கிறார்கள். அவனுக்கு ஒரு பாட்ஜ் கொடுத்திருப்பாகவும் அவன் தினமும்
சைக்கிள் செய்யும் போது அணிந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அவள் வந்து என்னிடம் சொன்னதும்
அவன் வரும் வரை காத்திருந்தேன். உணவு உட்கொண்டதும்
வெகு நிதானமாக நடந்ததைச் சொன்னான்,. அந்தப் பளபளக்கும் பாட்ஜ்,,ஒளிவிட்டு விட்டு மிளிருகிறது.
நம்ம டியூட்டியைத்தானே செய்கிறோம் என்று சொல்லிவிட்டான் போக்கிரி.
அந்த பாதுகாப்பாளர்களுக்கு எங்கள் நன்றி.
இந்த எட்டரை வயதுப் பெரியவருக்கு வாழ்த்துகள்.
Add caption

8 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பழக்கங்கள்தான் நல்வாழ்வைத்தரும்... வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

பொறுப்பான குழந்தை. பொருத்தமான தலைப்பு. சொன்ன பதிலும் அற்புதம். பேரனுக்குப் பாராட்டுகள்.

அப்பாதுரை said...

Bravo!

வல்லிசிம்ஹன் said...

நன்றி பரிவை குமார். வாழ்த்துகளுக்கு மிக நன்றி..போலீஸ் என்றாலே
நாங்கள் பயந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. இந்தப் பிள்ளையின் அமைதி எனக்கு வியப்பு தந்தது

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ராமலக்ஷ்மி,

பையன் முழு எபிசோடையும் தோளைக் குலுக்கிக் கொண்டு இட்ஸ் ஓகே ஐ கஸ். என்று சொன்னதும்
எனக்கு ஆச்சரியம்.

வல்லிசிம்ஹன் said...

Yes Durai, it was fantastic the way ,he shrugged and did not brag about it.Thank you.

Nagendra Bharathi said...

அருமை

கார்த்திக் சரவணன் said...

படிப்பை விட இம்மாதிரியான நல்ல பழக்கவழக்கங்களே பின்னாளில் முன்மாதிரியான ஆட்களாக்குகின்றன.... வாழ்த்துக்கள் பேரனுக்கு...