Monday, August 25, 2014

குகனும் ஸ்ரீராம பட்டாபிஷேகமும்

படகோட்டியும் பட்டாபிஷேகமும் ..!
கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!
படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.
‘‘அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நீ என்னடாவென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன், உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?’’ என்றான்.
குகன் அமைதியாகச் சொன்னான். ‘‘ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’என்று என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே... அவருக்கா என்னை மறக்கும்?’’நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
‘‘அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?’’
‘‘பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை
அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும். நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகு
மதிகளை வாங்கிச் செல்’என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன
வேண்டும் எனக்கு?’’
அனுப்பியவர்  திருமதி ரோகிணி ரங்கநாதன்
rs ag

9 comments:

ஸ்ரீராம். said...

அருமை. கடமைதான் முதல்.

Geetha Sambasivam said...

ஆஹா, கண்ணீர் வர வைச்ச பதிவு. நன்றி. நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கும் குகன் பற்றிய அருமையான பகிர்வுகள்..

RajalakshmiParamasivam said...

குகன் கடமையில் ராமனைக் கண்டு விட்டானே. அயோத்தி செல்ள வேண்டிய அவசியமில்லாமல் போய் விட்டது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். குகன் பாத்திரப் படைப்பு இன்னோரு அணிகலன்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா.இராமனின் ஆரண்ய பயணத்தை ஆரம்பித்து மீண்டும் கங்கையைக் கடந்து கொட்ண்டுவிடும் பணிவான அன்பன். அவன் பட்டாபிஷேக இன்பத்தை விட்டுக் கொடுக்கிறான் என்றால் என்ன ஒரு தியாகம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜராஜேஸ்வரி,உண்மையான பக்தியில் பூசலார் போல் இராமபட்டாபிஷேகத்தையும் மானசீகமாகக் கண்டுவிசுகிறான் குகன். அற்புத நிகழ்வு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜிசிவம். இராமனின் நண்பன் ராமனைப் போலவே கடமையில் கண் வைத்து விட்டான். நன்றி மா.

மாதேவி said...

அருமையான பகிர்வு.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...