Blog Archive

Wednesday, August 27, 2014

ஓசியில் வந்த செய்தி

நமது இந்தியா,
ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின்
கட்டுப்பாட்டில் இருந்தபோது,
'இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு'
அரசாங்கக் கடிதங்களும்,
ஆவணங்களும் மற்ற கோப்புகளும்
தபால் மூலமாக கடல்வழியாக அனுப்பப்பட்டுவந்தன..
இதில்,
ஒவ்வொரு கடிதத்திலும் 'அஞ்சல் தலைகளை'
கடிதங்களின் எடைக்கேற்ப
மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது..
இங்கே இருக்கும்
'ஆங்கிலேய அரசிடமிருந்து'
இங்கிலாந்தில் இருக்கும்
'தலைமை அரசாங்கத்திற்கு'
அனுப்பப்படும் கடிதங்களுக்கு,
எதற்காக வீண்செலவு என்று யோசித்த
ஆங்கில அரசு,
புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது..
அதாவது,
அரசாங்கம் சம்பந்தப்பட்ட
கடிதப் போக்குவரத்துகளில்
தபால்தலைகளை ஒட்டி
வீண் செலவு ஏற்படுத்துவதற்கு பதிலாக,
அக்கடிதங்களில்
O.C.S [ On Company Service]
என்று அச்சிடுவது
என முடிவுசெய்து,
அதன்படியே
செயல்படுத்தப்பட்டது..
அதாவது,
O.C.S. என்றால்,
பணம் செலவு செய்யாமல்
கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாளில்
நம்மக்களுக்குத் தெரிந்தது..
இதனைத் தொடர்ந்து
O.C.S. என்ற வார்த்தை
மக்களிடையே பிரபலமடைந்தது..
அதன்பிறகு
O.C.S. என்ற இந்த வார்த்தை,
எல்லா கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது..
பின்னாளில் O.C.S. என்ற
வார்த்தை மருவி
O.C. என்று சுருங்கியது..
அதன்பிறகு,
எவரேனும் 'இலவசமாக பணமேதும் கொடுக்காமல்'
பொருட்களை வாங்கினால்,
அவரை O.C. என்று அழைக்கும் பழக்கம்
மக்களிடையே
ஏற்பட்டது..
On Company Service என்ற இந்த முறைதான்,
இன்றும்
நமது இந்திய அரசுத்துறைகளில்
On I.G.S. Only..
[On Indian Government Service Only] என்ற பெயரில்
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ரோகிணி ரங்கநாதனின்   செய்தி.

11 comments:

அப்பாதுரை said...

ஓசினா 'on command'னு இங்க்லிஷ்காரங்க அரசாங்கத்து பதவியை சாதகமா பயன்படுத்தி இஷ்டத்துக்கு சுருட்டுனாங்க - அதுலந்து ஓசினு வந்ததா கேள்விப்பட்டிருக்கேன். OCS நம்பும்படியா இருக்கு.

பிரசவத்துக்கு இலவசம் - நச்.

Geetha Sambasivam said...

நல்ல தகவல். பள்ளியிலே பொது அறிவுப் பரிக்ஷைக்குப் படிச்சது இதெல்லாம். இப்போ மறுபடி நினைவூட்டிக் கொண்டாச்சு. :)

priyasaki said...

o c ன்னு எப்படி வந்தது என்பதை தங்கள் பகிர்வின் மூலம் அறிந்து கொண்டேன்.
பிரசவத்துக்கு இலவசம்- உண்மை.

வடுவூர் குமார் said...

ஓ! அப்படியா?

ADHI VENKAT said...

ஓசிக்கான அர்த்தத்தை இன்று தெரிந்து கொண்டேன்.

Angel said...

இப்படி நிறைய சுருங்கிய வார்த்தைகள் படித்தோம் நாங்க ..அம்பட்டன் வாராவதி ,கலாசி இப்படி
ஹாமில்டன் ப்ரிட்ஜ் முன்னது கிளாஸ் சி பின்னது .
ஒ.சி ..மறந்து விட்டேன் பிரஷ் போட்டு தேய்த்து :) நினைவு படுத்தினதுக்கு நன்றிம்மா

RajalakshmiParamasivam said...

ஓசி பற்றிய செய்தி அறிந்து கொண்டேன். இதற்குப் பின்னாடி இருக்கும் கதை இது தானா?

ஸ்ரீராம். said...

தெரிந்து கொண்டேன். :))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை. என் தங்கை அனுப்பிய செய்தி. அவள் சென்னை ஆன்லைனில் நிருபராக இருந்திருக்கிறாள்.அதனால் நிறைய செய்திகள் சேகரிக்கும் வழக்கம் உண்டு. பிரசவத்துக்கு இலவசம் சட்டுனு நினைவுக்கு வந்தது. கூகிளில் பார்த்ததுதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. லிஃப்கோவின் டூ யூ know,series தாத்தா மதுரையிலிருந்து அனுப்புவார்.எத்தனையோ விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சேகரித்துவைத்துக் கொள்ளத்தான் நினைவில்லை.

மாதேவி said...

நல்ல தகவல்.