பிரஹ்லாதவரதன் |
எங்கள் சிங்கப்பெருமான் |
ஹரேகிருஷ்ணா சிங்கம் |
மதுரையின் சிங்கம் |
Add caption |
Add caption |
Add caption |
இன்று அழைத்த குழந்தையின் வாக்கைக் காக்க அவதாரம செய்தான் எம் பெருமாள் அழகியசிங்கம்.
வைகாசி சுவாதி
மாலை நேரம்.
அவனுக்கு வேண்டியது என்ன. பக்தர்களின்'
மாறாத பக்தி.
அண்டசராசாரங்கள் கிடுகிடுக்க
ஒரு வெற்றித் தூணைப் பிளந்து கம்பீரமாய் வந்த
நரசிங்கா
உன் கருணை எத்தகையது!
என்றும் துணை இருப்பாய்.
சம்சார சாகரத்தில் அகப்பட்ட துண்டுகள் நாங்கள்.
துன்பம் வந்தால் மட்டுமே
நரசிம்மா காப்பாத்து என்று கூவுவோம்.
நீயோ இமைப் பொழுதும்
எங்களைவிட்டு அகலுவதில்லை.
ஒரு நாள் ஒரு மணித்துகள் சரணம் சொன்னால்
போதும். நினைத்தால் போதும்.
அபார கருணா சாகரம் நீ.
பெற்றதாய்க்கும் மேலே உடன் வந்து காப்பாய்.
அப்பனே உன்னை என்றும் மறவாமல் நினக்கும் வரமதை எப்போதும் அளிப்பாய்.
வாயில் உன்நாமம் ஒலித்துக் கொண்டிருக்கட்டும். சிந்தையில் உன் கருணைமுகம் பதிந்திருக்கட்டும்.
வேறு ஒன்றும் வேண்டாம்.
சிங்கவேள் குன்றம் சிங்கவடிவில் குன்று. |
பானகநரசிம்மன் |
அஹோ!பிலம்!!! ஆஹா பாருங்கள் ஒரு குகை.அங்கிருந்து கிளம்பிய சிங்கப் பெருமான்.
அஹோ பலம். என்ன ஒரு வீர்யம்!!! இன்றும் அந்தக் குகை இருக்கிறது. ஹிரன்யனை வதை செய்யும் கோலத்தில் மஹா உக்ரமாக க் காணக் கொடுக்கிறார் ஒரு நல்ல தரிசனம்.
கூடவே நான் உன்னை ஒண்ணும் செய்ய மாட்டேன்.கெட்டவனுக்குத் தான் இந்த கதி என்று சொல்வது போலத் தோன்றும்.
நாங்கள் 1993 இல் அஹோபலம் சென்ற போது மேலே காணும்
உக்ரஸ்தம்பத்தின் அருகில் செல்ல வழி கடினம். தம்பி சின்னவன் .மேல போய் விடலாம் என்று சொன்னாலும்,அப்பா மறுத்துவிட்டார்.
கற்கள்,முள். துளிதப்பினாலும் உருளவேண்டியதுதான்.
கீழிருந்துபார்க்கும்போதே ஒரு சிங்கம் பிடரி மயிர் சிலிர்க்க நிற்பது போல
சிகர வடிவம்.
அதன் உச்சியில் உக்ரஸ்தம்பம்..
கஷ்டப்பட்டு ஏறினால் ஸ்தம்பத்தைச் சுற்றி வந்து சேவிக்கலாம்.
அதுதான் நிருசிம்ஹன் அவதாரஸ்தலம் என்றார்கள்.
முதன் முறையாக அப்பாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன்.
'அம்மா எனக்கு முதல் போஸ்டிங் சிம்மாசலத்தில்தான்.
அப்பொழுதெல்லாம் இவ்வளவு தீவிர வழிபாட்டுச் சிந்தனை இருந்ததில்லை. ஸஹஸ்ரநாமம் மட்டும் தினம் பாராயணம் செய்வேன்.
தாத்தாவின் முறைகளைப் பின்பற்றி. நினைத்திருந்தால் இந்த புண்ணிய இடங்களுக்கெல்லாம் வந்திருக்கலாம்.
அப்பாவை மீறி ஒன்றும் செய்ய முடியாது.
இப்போழுது உடலில் வலிமை இல்லை. இங்கிருந்தே உன்னைச் சேவிக்கிறேனப்பா என்று கைகூப்பினார்.
அப்பாவும் அம்மாவும் அழைத்துச் சென்றதால் அங்கே போகமுடிந்தது.
பத்துவரி எழுதி விட்டேன் துரை:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
18 comments:
சிங்கவேள் குன்றம் பத்தி ரெண்டு வரி சேருங்களேன்..
நரசிம்மர் ஜெயந்தி அன்று அருமையான தரிசனம். படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி வல்லிம்மா.
அற்புதமான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
வரணும் துரை.
எடிட் செய்து இரண்டு மூணு வரி அதிகமாகவே எழுதிவிட்டேன்.
மேலும் அறிய ahobilam.org
போகலாம்.
வரணும் ராமலக்ஷ்மி, உங்க பதிவைப் பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்:)
நன்றி மா.
ம்... சரணாகதி.. அனைத்தும் அவனே ..எங்கள் கடன் சேவிப்பதே.,-திரு
ம்... சரணாகதி.. அனைத்தும் அவனே ..எங்கள் கடன் சேவிப்பதே.,-திரு
அந்த ' மதுரையின் சிங்கம்' எங்கப்பா இருக்கு?
பார்க்கப்பார்க்க ப்ரமிப்பா இருக்கே!!!
நரசிம்மர் தரிசனம் அருமை.
http://hindutempletrip.hubpages.com/hub/YOGA-NARASIMHA-TEMPLE-AT-YANAMALAI-MADURAI//
இந்த லின்க் பாருங்கோ. யோக நிருசிம்ஹர்.இவர்தான் மதுரை சிங்கம் துளசி:)
வருகைக்கு மிகவும் நன்றி ஸ்ரீ திரு.
நன்றி திரு . முருகானந்தம்.கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி.
நரசிம்மர் குன்றம் அற்புதம். இன்று நரசிம்ம ஜெயந்தியா? அப்பாதுரையால் 10 வரி கூடக் கிடைத்தது. நன்றி துரை!
நரசிம்மர் படங்களெல்லாம் அழகு.
மதுரை ஆனைமலை நரசிம்மரை பலவருடங்களுக்கு முன் பார்க்க போனபோது கும்பாபிஷேக வேலை நடந்து கொண்டு இருந்ததால் பார்க்க முடியவில்லை. உற்சவ நரசிம்மரையும் நாச்சியாரையும் சேவித்தோம். தாயார் நல்ல பெரிய தாயாராய் இருந்தார். நரசிம்மரை உங்கள் பதிவில் சேவித்து விட்டேன். நன்றி.
படங்கள், விளக்கங்கள் அருமை அம்மா... நன்றி...
ஸ்ரீராம்,நரசிம்ம ஜயந்தி வாழ்த்துகள் மா.
எதையும் சுருங்கச் சொல்வது அரிய கலை.
என்னை,ஏம்மா கடைக்க்குப் போனியானு கேட்டால் வாசல்படி இறங்கியதிலிருந்து திருப்பி படியேறும் வரை சொல்லிக் கொண்டே இருப்பேன்:)
பத்துவரிகளோட பிழைத்துப் போகட்டும்னு விட்டு விட்டேன்:)
அன்பு கோமதி. நீங்கள் ஆனமலை நரசிம்மரைத் தரிசித்தது மிக சந்தோஷம்.
தாயார் பெரியவராக இருந்தால் தலைவர் எவ்வளவௌ பெரிய உருவமாக இருக்கவேண்டும்!!
இங்கே சிங்கப் பெருமாள் கோவிலிலும்மஹா பெரிய சிங்கம்.
எங்கள் மாமனார் சொல்வார். சிங்கத்தின் கர்ஜனையிலியே ஹிரண்யனின் பாதி உயிர் போய்விட்டது என்று!
சிங்கவேள் குன்றம் அறிந்துகொண்டேன்.
நல்ல தர்சனம்.
Post a Comment