Blog Archive

Friday, May 17, 2013

ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர்கள்

ஏடெல் வைஸ்  ஸ்விஸ் நாட்டின் தேசிய  மலர்
Add caption
Add caption
Add caption
Add caption
பெயர்தெரியாத மலர்
Add caption
Add caption
மழைக்குப் பின்  சூரியன் வருவது  அவசியம் இல்லையா.

காமிராவுக்குப் பின்னால் நிழலுக்கருகில் நின்று  வெய்யிலில் குளிக்கும் இயற்கையைப் படம் பிடிப்பதும்    ஒரு   நிகழ்வுதான்.

மேலே  இருக்கு  கேசியா பூக்களைப் பிடித்தது சிங்கம்!!
அவருடைய   கையில் வளர்ந்த செடி மரமாகி
வருடா வருடம்  தங்க மலர்கள் கொட்டுகிறது.
இப்பொழுது    மகிழமரமும்   இறைவனுக்கு
மலர்களைக் கொடுக்க  ஆரம்பித்துவிட்டது.

போன வருடம் பெய்த மழையை இலைகளில் வாங்கி  வேரில் விட்டு
மண்ணை நனைத்து
மண்ணும் சலிக்காமல் அதை உறிஞ்சி எடுத்துக் கொண்டு


மரங்களின் தலையில் மலர்களாகவும்,
மாமரத்தில் மாங்காய்களாகவும்
செம்பருத்திப் பூக்கள் ஒரு  முப்பது ஆவது  பூக்கின்றன.

அதற்காகத்தான் கேட்கிறேன் மழைத் தாயே
என்று வருவாய்.
அடுத்த வருடமும்    நிலம் மகிழமும் மகிழ வேண்டாமா.

தருமப்பயிர் வாழத்
தருண மாமழையே
தன்குலம் எங்கிலும்
மங்கலம்  தங்கவே
அருள் பொழிவாய்
கருணைக்கடலே..
இந்தப் பாடல்   திரு சுத்தானந்த பாரதியின்   படைப்பு.
கீதா  கீழே குறிப்பிட்டிருப்பது போல்

தினம் பள்ளி அஸ்ஸெம்பிளியில் இந்தப் பாடலும்,
செந்தமிழ் நாடென்னும் போதினிலேயும்
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழரும் உண்டு. ரகுபதி ராகவராஜராமும் உண்டு.



















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

27 comments:

Geetha Sambasivam said...

அருமையான பாட்டு, அந்தக் காலத்தில் ஸ்கூல் ப்ரேயரில் கட்டாயமாய் இந்தப் பாட்டு இருக்கும். அப்புறமா கிறித்துவப் பள்ளியிலே சேர்ந்தப்புறம் மாறிப் போயாச்சு! :)))) மழையை இங்கேயும் கொஞ்சம் அனுப்பி வைங்க. :)))

Geetha Sambasivam said...

எந்தப் பதிவுமே திறக்கலையேனு உங்க பதிவைத் திறந்தால் உடனே வந்துடுச்சு! :)))

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

1 & 5 பெயர்களைச் சொல்லுங்கப்பா.

அருள்புரிவாயை நாங்களும் சின்னவயசில் ஸ்கூல் ப்ரேயரில் பாடியிருக்கோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும், பாடலும், பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.

எல்லா இடங்களில் மழை பொழியட்டும்.

ராமலக்ஷ்மி said...

மழைத்தாய் நிலத்தாயைக் குளிர்விக்கட்டும். தங்கள் தோட்டத்துத் தங்க மலர்கள் மிக அழகு.

கோமதி அரசு said...

ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர் படங்கள் எல்லாம் அழகு.

அருள்புரிவாய் கருணைக் கடலே! பாடல் அருமை.
ஆருயிர் அனைத்தும் மகிழ மழை பெய்யட்டும்.
பள்ளியில் காலையில் கடவுள் வாழ்த்தாய் பாடும் பாடல். பகிர்வுக்கு நன்றி.

மகேந்திரன் said...

அருமையான படங்கள் அம்மா..
மனத்தைக் கவருகின்றன..
==
என் வசந்த மண்டபத்திற்கு உங்களை வரவேற்கிறேன்...

http://www.ilavenirkaalam.blogspot.com

Angel said...

அழகான் படங்கள் வல்லிம்மா ./Edelweiss Edelweiss. Every morning you greet me. Small and white. Clean and bright..//

எனக்கு இந்த பாட்டு நினைவுக்கு வந்திடுச்சி சவுண்ட் ஒப் மியூசிக் பாடல் :)

இராஜராஜேஸ்வரி said...

தருமப்பயிர் வாழத்
தருண மாமழையே
தன்குலம் எங்கிலும்
மங்கலம் தங்கவே
அருள் பொழிவாய்
கருணைக்கடலே..
மண்ணுயிர் வாழ
மழை பொழியட்டும்..!

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை... பாட்டும்...

வாழ்த்துக்கள் அம்மா...

ஸ்ரீராம். said...

படங்கள் அருமை.

நினைவுக்கு வரும் பாடல் :

சுதந்திர பூமியில் பலவகை நிறங்களில் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்....

வேண்டுகோள் : மழையே வா....மனம் நனைக்க வா...

அனுப்புனர் :

தமிழக மக்கள் (குறிப்பாகச் சென்னை)

பெறுநர் :

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வருண பகவான்

ஐயா...

பொருள் : நீண்ட நாட்களாக மழை வராமல் கார்ப்பரேஷன் தண்ணீர்க் குழாய் போலவே ஏமாற்றிக்
கொண்டிருப்பது - தொடர்பாக.






இப்பவும் நாங்கள் இந்த வருடத்தின் கொடிய வெயிலின் வெப்பத்தில் வாடுவதால் உங்கள் வருகை அவசர அவசியமாகிறது. அரசு ஊழியர் போல் தாமதமாக வராமல் இதை தந்தி போல் பாவித்து உடனே வரவும்!

பின் குறிப்பு : நீங்கள் வரவேண்டிய உங்கள் சீசனிலேயே நீங்கள் ஒழுங்காக வராமல் டிமிக்கியடித்து விட்டீர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வல்லிசிம்ஹன் said...

அட அப்படியா:) காலை வணக்கம் கீதா. நேற்று முழுசும் கோவில் உலா. திருமங்கலத்தில் ஐது வகுப்பு வரை இந்தப் பாட்டு இல்லாமல் எந்த விழாவும் நடக்காது. அதெ திண்டுக்கல் புனித சூசையப்பர் பள்ளியில் வேற பாட்டு.:)
வெய்யில் நிறைய இருக்கு அனுப்பட்டுமா???????

வல்லிசிம்ஹன் said...

துளசிமா முதல் படம் ஏடெல்வைஸ்.ஸ்விஸ்ஸின் நேஷனல் பூ. மலைப்பகுதியில் மட்டும் பூக்கும்.
ஆனால் அதன் படம்,மாக்னட் எல்லாம் வாங்கி வந்தேன். ஒன்று கூட என்னிடம் இல்லை.

லக்கிசைன்.பார்த்தாலே சந்தோஷமா இருக்கும். அந்த வேலிப்பூவின் பெயர் இவருக்கே தெரியலைம்மா. ஒரு கஸின் கொடுத்தார்.(பங்களூரு)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார்.
எல்லாருமச் சேர்ந்து பிரார்த்தனை செய்தால் நடக்குமோ என்கிற ஆசைதான்.இந்தப் பாட்டைக் கொலுக்காலத்தில் நீங்களும் கேட்டிருக்கலாமே:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. ஊர் முழுவதும் சிகப்பு மலர்களும்,போகென்வில்லாவின் பல வண்ணங்கள். வெய்யில் கொடுமையிலும் தலையாட்டி சந்தோஷமாக இருக்கின்றன.:)
மழைத்தாய் வரட்டும்.
இருக்கு அவளுக்கு வரவேற்பு:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெற வேண்டும்.குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க இராஜராஜேஸ்வரி.
தருணமாமழை அந்தமானில் தொடங்கிவிட்டதாம் பா. நம்மை வந்தடைய கொஞ்ச நாட்களாகலாம்.
எப்படியும் வரவேண்டும். மழைத்தாயே எங்கள் மரங்களை இழந்தோம். மிச்சமீதி இருக்கும் புல் பூண்டுகளும் வாடிக்கருகாமல் நீ கட்டாயம் வரவேண்டும் தாயே. அன்பு ராஜேஸ்வரி உங்களைப் போல ஆன்மீக அன்பாளர்கள் இந்த வழியில் நிறைய பிரார்த்தனி செய்வீர்கள் .அதற்குப் பயனும் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஏஞ்சலின்.
எனக்கு இசை, அதுவும் சௌண்ட் ஆஃப் மியூசிக் பைத்தியம்.அதற்காகவே இந்த ஏடெல்வைஸ் பூவை மலைப் பிரதேசங்கள் செல்லும்போது மகனை வாங்கச் சொல்லி வேண்டிக் கொள்வேன்.
ஹ்ம்ம்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அந்நியன் ராமனுஜம் மாதிரி நல்ல கடிதம். இதுக்குப் பயந்து வருண பகவான் வந்தேவிட்டார். வாங்காளக் கடலில் . நம்மிடம் உடனே வர இன்னோரு பெட்டிஷன் அனுப்பலாமா:)

அப்பாதுரை said...

ஏடல்வைஸ் பாட்டை லட்சம் தடவை கேட்டிருப்பேன் (என் குழந்தைகளுக்குத் தாலாட்டாகவும் பாடியிருக்கிறேன்) - அசல் பூவை இப்போது தான் பார்க்கிறேன். நன்றி.
எல்லாப் படங்களும் டாப்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை.இதில் அப்பாவின் பாசம் ,அவருடைய தாய்நாட்டுக்கான பற்று. காதலிக்கான பார்வையும் அத்தனையும் பூர்த்தியாக இடுக்கு,.
க்ரிஸ்டோஃபர் ப்ளம்மர் ,ஜூலி ஆண்ட்ரூஸ் கொஞ்சம் பொருந்தினார்கள். கொஞ்சம் பொருந்தவில்லை.அந்தக் காலம் அப்படி. அதனால் என்ன. பரவாயில்லை நமக்கு ஒரு நல்ல் மியூசிகல் கிடைத்தது.வயதான அந்த ஏழு குழந்தைகளையு(?)ம் உங்க ஊர் நிகழ்ச்சியில் ஒன்று சேர்த்துப் பார்த்தேன். சுகமான படம்.
அருமையான படம்.

Matangi Mawley said...

Beautiful photographs!

Kanchana Radhakrishnan said...


படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

Thank you Dear Matangi. Its good to hear from you.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காஞ்சனா,வரணும்பா.
உங்கள் அன்பு கருத்துரைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு காஞ்சனா,வரணும்பா.
உங்கள் அன்பு கருத்துரைக்கு மிகவும் நன்றி.

மாதேவி said...

பூத்துக் குலுங்கும் தங்கமலர்கள் அழகு.

இங்கு மழைத்தாயவள் குளிர்விக்கின்றாள்.
அனுப்புகின்றேன் அவளை ஆலத்தியை தயாராக வைத்திருங்கள் :))

மனம் குளிர மழை பொழியட்டும்.