Add caption |
துளிதுளித்துளித்துளி மழைத்துளி |
Add caption |
பச்சைமாமலை போல் மேனி ஆழி மழைக் கண்ணா |
ஒன்றுகூடி தாகம் தணிப்போம் |
எங்கெல்லாமோ செழுமை.
நாமோ இருக்கும் மரங்களையும் ஆறுகளையும்
வயல்வெளிகளையும் ஓடவிட்டு வேலைகள்
பார்க்கிறோம். அத்துணை கட்டிடங்களிலும்
குளிர்ச்சி இயந்திரங்கள் வெளியேஏற்றும்
வெப்பம் வானை முட்டி ஓட்டைகள் போடுகின்றன.
அன்று இறைவனைக் காண வழிவகுத்தார் மாமுனி நம்மாழ்வார்.
இன்றைய தமிழ்நாட்டின் மண்வளத்தை
வளர்த்துப் பசுமைவளம் அதிகரிக்கப் போராடி வரும் முதியவரும்
நம் நம்மாழ்வார்.
ஆழிமழைக் கண்ணனை அன்றே வேண்டினாள் ஆண்டாள்.
இன்று நமும் வேண்டுவோம்.
வரப் போகிற்து என்ற புயல் மழை
என்று சொல்லி அதுவும் மையன்மார் போகிறதாம்.
இன்று இலங்கையில் பெய்திருக்கிற்து,.
இலங்கையிலிருந்த நம் ஊர் கொஞ்ச தூரம்தானே.
அதனால் மழையே மழையே இதயம் நனைய
வேகமே வா.
அனல் மேகத்தை ஓட்ட அந்தமேகத்தில் அருள் கருமைநிறைந்து
எங்கள் வயல் வெளிகளிலும் ஏரிகளிலும் அடை மழையாகப் பெய்து பயிர் காப்பாய்.
கிணற்றிலும் தண்ணீர் நிறையச் செய்வாய்.
வேறு யாரிடமும் நாங்கள் கையேந்தும் நிலையை வைக்காதே..
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
19 comments:
ஆழிமழைக் கண்ணனை அன்றே வேண்டினாள் ஆண்டாள்.
இன்று நமும் வேண்டுவோம்.
மழைக்காட்சிகள் மனம் நிறைத்தன..பாராட்டுக்கள்..
இனிய வணக்கம் அம்மா...
மாதம் மும்மாரி
மழைபொழிந்து
சேற்று வயல்களெல்லாம்
மதகுடைந்த
நீராவியான காலம் பொய்த்து
சிறுதுளி நீருக்கு
அண்ணாந்து பார்க்கும்
நிலையாகிப்போனது இன்று...
இயற்கையை பாதுகாத்து
நல் விழிப்புடன்
செயல்படவேண்டிய காலமிது..
எமையாளும் இறைவா..
யாமிழைத்த தீமைகளை
சற்றே மன்னித்து
எமக்கான வாழ்வுநிலைக்காக
மழைநீர் கொண்டுவா...
என அருமையா எழுதியிருகீங்க அம்மா..
படங்கள் அழகு.
ஆஹா.... மழை வந்துருச்சா!!!!! அக்னி நக்ஷத்திர சூடு குறைஞ்சதா?
ஆகா... ரசித்தேன் அம்மா...
அம்பத்தூரில் மழை பெய்யுதுனு சொன்னாங்களே? மயிலையில் பெய்யலையா? :))))
இந்த சீஸனுக்காகத்தான் வெயிட்டிங் வல்லிம்மா
அன்பு இராஜராஜேஸ்வரி, மழையை நினைத்து வேண்டிக் கொண்டே இருக்கலாம். கட்டாயம் இறைவன்
செவி சாய்ப்பான்.நன்றி மா.
அன்பு மகேந்திரன்,
என்ன அழகான ஆதரவான் வார்த்தைகள்.வருண பகவான் கேட்டால் மழை பொழிவான் மனம் நெகிழ்ந்து. மனிதர்கள் மனத்தில் தான் ஈரம் வற்றிவிட்டது. இறைவன் நெஞ்சம் அப்படியில்லையே. இயற்கை நம் வேண்டுகோளைச் செவி மடுக்கட்டும்.
அக்னி நட்சத்திரம் இரண்டு நாட்களாக இல்லாமல் இருந்தது. இன்று இதோ கொதிக்கிறது. துளசி. உங்க ஊர்ர்க் குளிரை இங்கே அனுப்புங்கள்
நன்றி தனபாலன், மழை பெய்யட்டும்.
அம்பத்தூரூக்கு யாரோ நல்லவங்க வந்துட்டுப் போனாங்களாம்.அதான் அங்கே மழை பெய்ததாம்.:) கீதா.
அன்பு ஸாதிகா,எப்படி இருக்கீங்கமா.
வெய்யில் தாங்க முடியவில்லையே.
மழைவந்துதான் ஆகணும்மா.:)
அடிக்கும் வெயிலுக்கும் வரண்டு போன மனதுக்கும் இதம் அளிக்கும் படங்களும், படைப்பும் சற்றே ஆறுதல் அளிக்கிறது.
பகிர்வுக்கு நன்றிகள்.
நம்மாழ்வார் ஒப்பீடு நன்றாக இருக்கிறது. நாம் இயற்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாத வேதனை. மகசேன் புயல் வங்கம்-மியான்மர் இடையே கரை கடக்கச் சென்றாலும் சென்னைக்குக் கொஞ்சமாவது மழைதரும் என்று பார்த்தால் சும்மா தூறி ஏமாற்றி விட்டுச் சென்று விட்டது.
வருகைக்கு மிக நன்றி கோபு சார்.
ஸ்ரீரங்கத்திலாவது மழை பெய்யலாம்னால் அந்தப் பெருமாளுக்கு ஆகாதாம்:)
வைகாசி விசாகம் வருகிறது நம்மாழ்வார் நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்.
ஸ்ரீராம்.
அவர் வைணவ சம்ப்ரதாய விஷயங்களை வெளிக் கொண்டுவர ஒரு மதுரகவி ஆழ்வார் மூலம் நிறைவேற்றினார்.
பௌதிக உடலுக்கு வேண்டிய அன்ன சாம்ராஜ்யத்தைப் படைத்துக் லொண்டிருக்கிறார் நம் ஆழ்வார்.
//ஆழிமழைக் கண்ணனை அன்றே வேண்டினாள் ஆண்டாள்.//
ஆமாம் இன்று நாமும் வேண்டுவோம்.
நாமும் வேண்ட வேண்டும் தீவிரமாய். மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது வீசிஅடிக்குது காத்து மழை காத்து என்ற பாடல் போல் காத்து தான் வருது மழை வரவில்லை.
உண்மையே கோமதி. தினசரி பிரார்த்தனையில் மனித வளம் மேம்பட பூமி மேம்பட விவசாய வளம் மேம்பட தினம் வேண்டுவோம் இறைவனை. நன்றி அம்மா.
நல்ல பகிர்வு. இயற்கை வளங்களைக் காப்போம். நலம்பெறுவோம்.
Post a Comment