நான் மியூட்லயே தொலைக்காட்சி பார்ப்பேன் |
அம்மா போன் பண்ணா நேரம் இருக்கணுமே! |
ஹலோ யார் பேசறது.
நீங்க யாருக்குப் போன் செய்தீர்களோ அவர்தான்.
அது தலமைச் செயலகமா. அம்மா மேடம் இருக்காங்களா?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இல்லீங்க இது வீடு..
அம்மா கிட்டப் பேசணும்.
அம்மா நீல்கிரீஸ் போயிருக்காங்க.
அதுக்குள்ளயா
பின்ன வீட்டுச் சமாசாரமெல்லாம் வாங்கணும் இல்லையா.
நீங்க யாருங்க.
நான் அவங்க வீட்டுக்காரர்.
ஸாரிங்க ராங் நம்பர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இது எங்க வீட்டுக்கு வர ராங் நம்பர்களில் ஒண்ணு.
இது பரவாயில்லை.என் மனதுக்கு இனிய தோழி ஒருத்தி.
அவள் எஸ்டி டியில் மருமகள்,மகள்,சம்பந்தி எல்லாம் பேச ஆரம்பித்து,
நடுவில் அழுது,
என்னை ஆறுதல் சொல்வேனோ என்று எதிர்பார்ப்பாள்.
எனக்கு அந்த வாரத்தில் அது முதல் அழைப்பாக இருந்தால்
ஒத்து ஊதுவேன்.
இரண்டாம் அழைப்பில் மௌனம். மூன்றாம் அழைப்பில்
அவளுக்கு எதிராகப் பேசி அறிவுரைகள் சொன்னால்
அவள் தொலைபேசியை வைத்துவிடுவாள்.
இரண்டு வாரங்கள் சத்தமே இருக்காது.
இதற்கு நடுவில் ஸ்கைப்பில் நான் தொந்தரவு கொடுக்கும் நபர் ஒருவர் உண்டு.
ஒருவர் நல்ல தோழி.,பெயர் வேண்டாம்:)
அவர் இதைப் பத்திப் பதிவே போட்டு இருக்கிறார்:)
அவர் மட்டும் இருந்தால் பரவாயில்லையே.
வசமாக மாட்டிக் கொள்பவர் என் மகளே.
நேரம் வித்தியாசமாக இருப்பதால் அநேகமாகக் கண்விழித்ததும் (காஃபிக்குப் பிறகு) அழைக்கும் போது,
அவளுடைய பெரிய பையன் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருப்பான்.
சாயுங்காளம் ஏழரைக்கு.
சின்னவன் விளையாட்டு அலுப்புப் போக குளித்துவிட்டு ச் சூடாக சாப்பிட அம்மா ஏதாவது கொடுப்பாள் என்று மேஜையில் தாளம் போட்டுக் கொண்டிருப்பான்.
மாப்பிள்ளையோ டாக்ஸ் பேப்பரில் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்.
மகள் அடுப்பில் பாத்திரத்தில் புலவ் செய்து கொண்டே ,டிஷ்வாஷரில் பாத்திரங்களை அடுக்கிக் கொண்டிருப்பாள்.
பொறுமையாக என் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவாள்.
''அம்மா நான் இன்னும் சாப்பிடவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து நானே செய்கிறேன்'' என்பாள்.:(
அந்தக் கொஞ்ச நேரம் நீண்டு அவளுடைய 10 மணிக்குத் தொலைபேசி
குட்நைட் சொல்லிவிட்டுத் தூங்கப் போவாள்.
இந்த ஜாலமெல்லாம் என் மகன்களிடம் செய்ய மாட்டேன்.
இந்த மாதிரி அந்த வீட்டில நடந்தது என்று ஆரம்பித்தால்
இரண்டு மகன்களுமே போனப் போறதுமா. டூ நாட் மைண்ட் தெம்.
யூ ஆர் சச் அ க்ரேட் லேடி.
விட்டுடும்மா என்று பேச்சின் ட்ராக்கை மாற்றிவிடுவார்கள்:)
இன்றிலிருந்து முடிவெடுத்துவிட்டேன்.
தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ மூக்கு உறிஞ்சுவதில்லை என்று.
ஒரு ப்ராப்பர் அம்மாவாக கௌரவமாக நடந்து கொள்வது என்று,
9 கழுதை வயசுக்கு இது கூடத் தெரிய வேண்டாமா.!!!!!
ஒரு விஷயம் தெரியுமா. நான் பேசிப் பேசி எங்கள் சிங்கம்
காது கேட்பது குறைந்து விட்டதுப்பா.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
33 comments:
//ஒரு விஷயம் தெரியுமா. நான் பேசிப் பேசி எங்கள் சிங்கம்
காது கேட்பது குறைந்து விட்டதுப்பா.:)//
ஹா............ மெய்யாலுமா?
அப்ப....இங்கத்து காது இரைச்சல் காரணம்..... ஐயோ...நானா?
விடு ஜூட்:-))))
இங்கேயும் இப்படி சிலர் இருக்காங்க. வேற வழி இல்லாம நானும் காது கொடுப்பேன். பதிவுக்கு மேட்டர் நிறைய வருமேன்ற நப்பாசைதான்:-))))
மகள் நல்லாச் சொல்லுவாள். யூ வேர் ஸோ ஸ்டுப்பீட் டு பிலிவ் ஆல் தோஸ் திங்ஸ்.
ஹா... ஹா... நல்ல முடிவு அம்மா... செயல்படுத்துங்கள்...
Skype password மறந்தே போச்சு. இங்கேயும் இப்படியான அன்புத்தொல்லைகள் உண்டுதான். ஆனால் நாங்க ரெண்டு பேர் மட்டும் எங்களுக்குள் பேசிப்போம்.
பிரச்சனை தீருகிறதோ இல்லையோ, காது கொடுக்க ஆள் இருந்தால் போதும், என்பதுதான் இங்கே விஷயமே:). வாழ்வியல் பாடங்களை உங்கள் அனுபவப் பகிர்வுகள் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கின்றன.
ஹிஹி.. எதிர்பார்ப்பைக் கட்டுவானேன்.. என்ன நான் சொல்லுறது?:-)
நல்லதொரு முடிவு.
ஆல் தி பெஸ்ட்!
ராமலக்ஷ்மியின் கருத்தை வழிமொழிகிறேன்.
நம்மைவிட நம் குழந்தைகள் வாழ்வியல் உண்மைகளை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். (தகப்பன் சாமிகள்)
//தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ மூக்கு உறிஞ்சுவதில்லை என்று.//
நல்ல முடிவு.
படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
அன்பு துள்ஸ்.
நான் எப்படியோ அப்படியே என் தோழியும்:)சிலசமயம் நல்ல வார்த்தைகளும் சொல்வள். வீட்டிற்கு வந்து போன பெரிய மனிதர்களைப்பற்றி.சிரிக்கச் சிரிக்கச் சொல்வாள்.
பாவம்:)அவளைச் சொல்லியும் குற்றமில்லை.
சரி சரி தனபாலன். சீக்கிரம் தொலைபேசி எண் தேடுகிறேன். அதாவது உங்களோடது:))))
பின்ன எப்படிக் குழந்தைகளிடம் பேசுவீர்கள் கீதா? செலவில்லாத பேச்சு இல்லையா இது!
இரண்டு பேரும் பேசிக் கொண்டால் இனிமைதான்:)
Skypeல என்னை நானே தான் பார்த்துப் பேசிக்கணும். மத்தியானம் உங்களுக்குக் கமென்டிட்டு ஸ்கைபைத் திறக்கப் பார்த்தால் எப்படினே தெரியலை. வரவே இல்லை. யூசர் ஐடியும், பாஸ்வேர்டும் கொடுக்கும் வின்டோவே வரலை. சுத்தம்! விட்டுட்டேன்.
அவங்க தொல்லைபேசியில் தான் கூப்பிடுவாங்க. ஸ்கைபில் உட்கார்ந்து பேசும் அளவுக்குப் பொறுமை அவங்களுக்கு இருக்கிறதில்லை. :(
ஆஹா நன்றி ராமலக்ஷ்மி.
பெற்றோர்,தம்பிகள்,தோழிகள், இணையத் தோழிகள் எல்லோரும் என் வாழ்வின் 75% ஆவது அறிவார்கள்.
அப்பாவின் அம்மா சொல்வார். வாய்வலிக்கலையா உனக்கு என்று.:)
அம்மாவின் அம்மா நிறைய விஷயங்கள் சொல்லி என் மூளையின் செல்களை நிரப்பி இருக்கிறார்.!!1
எதிர்பார்ப்பைக் கட்ட முடியாமல்தான் இத்தனை சங்கடமும்.
துரை,இப்பொழுதுதான் யோகப் பயிற்சியில் இறங்கியிருக்கிறேன்.
பார்க்கலாம்.:0)
வரணும் தென்றல். நலமாப்பா. கைவலியெல்லாம் தேவலையா. க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தம் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா,.:)
ஓகே. ஸ்ரீராம் அவ்வழியே செல்வோம்.
நன்றி மா.
வெற்றிகரமா ஸ்கைபைத் திறந்துட்டேன் இப்போ. என்னை நானே பார்த்துப் பேசிக்கறேன். :)))))
//தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ மூக்கு உறிஞ்சுவதில்லை என்று.
ஒரு ப்ராப்பர் அம்மாவாக கௌரவமாக நடந்து கொள்வது என்று,//
மிகவும் நல்ல முடிவுகள். ;)
//ஒரு விஷயம் தெரியுமா. நான் பேசிப் பேசி எங்கள் சிங்கம் காது கேட்பது குறைந்து விட்டதுப்பா.:)//
அடப்பாவமே ! ”மணல்கயிறு” படத்தில் வரும் தாத்தா போல ஆகிவிடப்போகிறார். ஜாக்கிரதை. ;)
@ கீதா மேடம்,
இது நல்ல ஐடியாவா இருக்கே:))!
உண்மையே கோமதி மா.
ஆனால் அவங்களுக்கும் குழந்தைகள்
வெளியூரில் இருக்கும்போது இந்த தவிப்பு வராம இருக்கணும்:)
இது பரம்பரையாத் தொடரும் விஷயம்னு நினைக்கிறேன்.முன்பு கடிதங்கள் மூலம் தொடர்ந்தது.என் அம்மா ,மாமியார் இருவருமே வாரத்துக்கு ஒரு கடிதமாவது எதிர்பார்ப்பார்ப்பார்கள்.இப்போதுதான் வசதியாகத் தொலைபேசி,இணையம் எல்லாம் வந்துவிட்டது. நேரம் தான் இல்லை:)நன்றி மா.சரியாகப் புரிந்து கொண்டீர்கள்.
கீதா நான் என் ஐடி அனுப்புகிறேன்.
அப்போது என் முகத்தைப் பார்க்கலாம்:00)
கட்டாயம் சிரித்த முகமாகப் பேசுகிறேன்!!!
ஹா ஹா கோபு சார்.
அந்தக் கவலை வேண்டாம்.வேணும்கறது காதில் விழும். வேண்டாம்கறது விழாது:)00உங்கள் வீட்டில இந்தப் பிரச்சினை எல்லாம் இருக்காதுனு நினைக்கிறேன்.!!சுப்பு சாரைக் காணோம். இல்லாவிட்டால் சரியாக ஏதோ சொல்லி இருப்பார்.
கீதா ராமலக்ஷ்மி சொல்வதைக் கேட்டீர்களா:)
@ கீதா மேடம்,
இது நல்ல ஐடியாவா இருக்கே:))!//
தொல்லையே இல்லை பாருங்க. மூக்கை உறிஞ்சினாலும் நான் தான் பார்க்கப் போகிறேன். சண்டை போட்டாலும் என்னோடதான் போட்டுக்கணும். :)))))
//வல்லிசிம்ஹன் said...
ஹா ஹா கோபு சார்.
அந்தக் கவலை வேண்டாம். வேணும்கறது காதில் விழும். வேண்டாம்கறது விழாது:)00
உங்கள் வீட்டில இந்தப் பிரச்சினை எல்லாம் இருக்காதுனு நினைக்கிறேன்.!!//
என் வீட்டிலும் இந்தப்பிரச்சனை நிறையவே உண்டு. எனக்கும் “காரியச்செவிடு” என்று தான் பெயர்.
அதாவது எல்லாமே காதில் வாங்கிக்கொள்வேன். முக்கியமானவற்றைத்தவிர மீதியெல்லாம் கிரஹித்துக்கொள்ளாமல் செவிடு போல இருந்து விடுவேன்.
அதாவது எனக்கு ஆதாயமானவை மட்டுமே என்னால் என் காதில் வாங்கிக்கொள்ளப்படும்.
மீதியெல்லாம் காதில் விழவில்லையே எனச்சொல்லி விடுவேன்.;)))))
பொக்கிஷம் பகுதி-8 படிக்க வாங்கோ, ப்ளீஸ்.
அன்புடன் கோபு
ஹா...ஹா.... இது நல்லாக இருக்கின்றதே. மிகவும் ரசித்தேன்.
மத்தியான நேரம் மூக்கு புடிக்க நல்லா சாப்பிட்டுவிட்டு
ஒரு தூக்கம் போடும்போதுதான் இந்த தொலைபேசி அழைப்புகள் வந்து
என் தூக்கத்தை துண்டு போடும்.
போன வாரம் வந்த கால் சாம்பிள்
ஹலோ !! ... மீனாட்சி அம்மா இருக்காகளா ?
நீங்க யாருங்க..
ஹெச்.டி.எஃப்.ஸிலே உங்களுக்கு கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆயிருக்கு.
நான் அப்ளையே பண்ணலையே...
அதனால பரவாயில்ல...உங்களுக்கு நாங்க கார்டு தர்றோம்.
க்ரேட் God ஆ !! அந்த God ஆ!
வச்சுண்டு என்ன பண்ணல்லாம்.?
எதுவேணா வாங்கலாம்.
ஜ்வெல்லரி, ஷாப்பிங்க்...வாட்டெவர் யூ வான்ட்.
இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
வேறென்ன வேண்டும்.
ஒரு விமானம் வேண்டும்.
விமானமா ? யூ மீன் ப்ளேன்..
எஸ். பட் எ டிஃபரன்ட் ஒன்.
என்னது...
புஷ்பக விமானம் கேள்விப்பட்டிருக்கீகளா ?
இல்லையே
தெரியல்லேன்னா சுந்தர காண்டம், யுத்தகாண்டம் படிங்க..
அதுலே வரது.
வாட் ஃபார் ?
சீதையை பாக் டு அயோத்யா கூட்டிண்டுபோனாரே ? அது மாதிரி போவேண்டாமா ?
ஸார் ! நாங்க கிரெடிட் கார்டு பத்தி பேசறோம். சார்.
ஸாரி. நீங்க அந்த க்ரேட் காட் ராமனைப் பத்தி பேசறீங்கன்னு நினைச்சுட்டென்.
அப்ப உங்களுக்கு கார்டு வேண்டாமா ?
அந்தப்பெண் விடுவதாயில்லை.
இனிமே தாங்காதய்யா...
ஃபோனை வைத்துவிட்டேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நம் கணவன்மார்கள் எல்லோருமே இப்படித்தான்! (காரிய செவிடு!)
நீங்கள் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவு!
கோபு சார் படிச்சாச்சு.
சுப்பு சார்,
அதென்ன அவர்களுக்கு ? பன்னிரண்டு மணிக்குப் பைத்தியம் பிடிக்குமோ.
ரிசார்ட்ல இடம் வாங்கணுமா...12 மணிக்குத்தான் கூப்பிடுவார்கள்.
தப்பு கொரியர் வர நேரம் 12 மணி.
உங்க லாண்ட்லைனுக்கு 25 ஆயிரம் அலாட் ஆகி இருக்கு!!!!!!! 12 மணிக்கு.
நான் ''நாட் இண்ட்ரஸ்ட்டட்னு ''சொன்னாலும் அந்தப் பெண் தொடருவாள்.
நீங்க புஷ்பகவிமனம் கேட்டது சூப்பர். அந்த அனா சனா டுனாக்குப் புரிந்ததோ இல்லையோ.:(
வரணும் மாதேவி. வருகைக்கு ரொம்ப நன்றிப்பா.
அன்பு ரஞ்சனி,
இதுதான் இயற்கை.
இன்னும் சொல்லப்போனால்
ஓஹோஹோ சோடுதோனு பாட ஆரம்பித்துவிடுவார்,.:)
Post a Comment