Monday, November 02, 2009

விழா புதுசு மனசு பழசு

திருப்பரங்குன்றம்
பைபாஸ் ரோட்மதுரை டவுன் ரோடு


ஒரு கிராம ரயில் நிலையம் .பசுமலைசதங்கா அழைப்பு விடுத்து வெகு நாட்கள் சென்று விட்டன. தாமதத்திற்கு மன்னிக்கணும் சதங்கா.


சதங்கா கேட்டிருக்கும் முதல் கேள்வி

1,உங்களைப் பற்றிச் சிலவரிகள்.
-----------------------------------------------------------------


பெரிய நோட்டுப் புத்தகங்களில் கிறுக்கிக் கொண்டிருந்ததைப் பதிவுகளில் எழுதலாமே என்று நினைத்தாதுதான்.

தந்தை பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பின் வரும் தலைமுறைக்காக. முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை.
இப்பொழுது நான் எழுதுவதைப் பிற்கால குடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை.

2,தீபாவளி என்றதும் நினைவுக்கு வரும் மறக்க முடியாத சம்பவம்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------நாங்கள் எல்லாரும் உறங்கிய பிறகு அம்மாவும் அப்பாவும் எங்கள் தீபாவளிப் புதுத்துணிகளுக்கு மஞ்சள்,குங்குமம் வைப்பதும், அடிக்குரலில் அடுத்த தீபாவளிக்கு இன்னும் நல்லதாக உடைகள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது,.
அம்மாவுக்கு எப்பவும் ஒரு சின்னாளப்பட்டுச் சேலைதான். அப்பாவுக்கு அதே எட்டு முழம் வேஷ்டியும் ஒரு பூத்துவாலையும்.

மறக்க முடியாதவற்றை எழுதத் தனிப் பதிவு போடவேண்டும்.:)3, 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருந்தீர்கள்/இருப்பீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------

தருமமிகுச் சென்னையில் தான்.

4,தற்போது இருக்கும் ஊரில் தீபாவளி கொண்டாடும் முறையைப் பற்றி?
---------------------------------------------------------------------------------------------------------------------------

ஆளுக்கொரு தரைச் சக்கரம், இரண்டு சீனிச்சரம், புஸ்வாணம், கம்பி மத்தாப்புகள் வெடித்துவிட்டு மற்றதைப் பார்க்க வரும் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடுவது.
போன வருடம் சிகாகோவில் பட்டாசு வெடிக்காதபோதும் குழந்தைகளோடு இருந்ததால் ஆனந்தம் கொண்டாடியது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டியக் காலத்தின் கட்டாயத்துக்கு வந்துவிட்டது.

எல்லோரிடமும் மணிக்கணக்கில் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டது.

5,புத்தாடை எங்கு வாங்கினீர்கள், தைத்தீர்கள்.?
-----------------------------------------------------------------------------

நல்லியில் புடவை பட்டும் பருத்தியும் கலந்தது.

சிங்கத்துக்கு வேஷ்டியும் ஆயத்த உடை சட்டையும்.

6,உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள், வாங்கினீர்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------

செய்தது ஓமப்பொடியும்,க்ஷீரா எனப்படும் கோதுமை மாவு கேசரியும், வாங்கினது மிக்ஸரும்,லட்டுவும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள.

7,உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகள் எவ்வாறு தெரிவிக்கிறீர்கள்.?
---------------------------------------------------------------------------------------------------------------

முக்கால்வாசி தொலைபேசி.
இணையத்துக்குப் பதிவின் மூலம்.

ஈமெயில் வாழ்த்துகளும் உண்டு.
பெரியவர்களை நேரில் சென்று வணங்குவதும் வழக்கம்.
8,தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா
---------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டும் தான். வெளியே மற்றவர் வீட்டுக்குப் போனாலும் அவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி இருப்பார்கள்:))))

9,இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?
------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் நமக்கு உதவியாக இருப்பவர்கள் குடும்பங்களுக்கு புத்தாடைகளும் ,பட்டாசும் தருவது வழக்கம்.
அதைத்தவிர உதவி கேட்டு வருபவர்களுக்கும் கொடுப்பதுண்டு.
10,நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?
****************************************************************
அனைவரும் எழுதலாம். ஏனெனில் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள்.
நான்தான் கடைசி என்று நினைக்கிறேன்.
நன்றி சதங்கா. உங்களால் ஒரு டைம் மெஷின் எனக்குக் கிடைத்தது. நினைவுகளில் மூழ்கி எழுந்திருக்க இன்னோரு சந்தர்ப்பம். அனைவருக்கும் நன்றி.
சக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா ஐயாவுக்கும் நன்றி.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

21 comments:

ராமலக்ஷ்மி said...

நினைவுகளில் மூழ்கி பகிர்ந்து கொண்டிருக்கும் விஷய்ங்கள் யாவும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

Please scroll down as soon as you open the blog!!
otherwise it takes hours to load.:)

துளசி கோபால் said...

ஜூப்பர்:-)))))

கொசுவத்தி வாங்குன காசை உடனே அனுப்பவும்:-)))))

கீதா சாம்பசிவம் said...

//சக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா ஐயாவுக்கும் நன்றி.//

ada,பட்டாபிஷேஹம் நடந்ததே தெரியலையே?? சொல்லவும் இல்லை?? ம்ம்ம்ம்ம்? சரி, லிங்க் கொடுங்க, போயாவது பார்த்துக்கறேன். :))))))

கோமதி அரசு said...

//இப்பொழுது நான் எழுதுவதைப் பிற்காலகுடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை//

நிச்சியம் படிப்பார்கள்.

நானும் ஆதவன் அழைப்பின் மூலம்
தீபாவளி தொடர் எழுதி உள்ளேன்.

கோமதி அரசு said...

//சக்கரவர்த்தினி என்று முடிசூட்டிய சீனா
ஐயாவுக்கும் நன்றி.//

சீனாவுக்கு தெரிந்து இருக்கிறது.
நீங்கள் சக்கரவர்த்தினி என்று.

வாழ்த்துக்கள்.

எனக்கும் உங்களால்விருது கிடைத்தது. சந்தன முல்லை,நான் ஆதவன் இருவரும் விருது கொடுத்துள்ளார்கள்.

நீங்கள் என்னை அழைத்த அருள்,பொருள்,இன்பம்,தொடர் பதிவுக்கு விருது கொடுத்தார் முல்லை.

என்னை ஊக்க படித்தி எழுத வைத்த
உங்களுக்குத் தான் அத்தனை பெருமையும்.

வாழ்க வளமுடன்.

சதங்கா (Sathanga) said...

வல்லிம்மா, படங்களைக் காட்டி எங்களையும் திருப்பரங்குன்றம், மதுரை, பசுமலை என சுற்றிவர வைத்துவிட்டீர்கள்.படங்களும், பதில்களும் அருமை.

////இப்பொழுது நான் எழுதுவதைப் பிற்காலகுடும்ப அங்கத்தினர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை//

நிச்சியம் படிப்பார்கள்.
//

அதே ! அதே !! இன்னிக்கும் ஊருக்குப் போனால், பழைய அலமாரிகளைத் தோண்டிக் கொண்டிருப்பேன். தாத்தா எழுதிய வீட்டுக் கணக்கு, பாட்டியின் ஜிலேபி கையெழுத்து, அப்பாவின் ப்ராக்டிக்கல் நோட்டு என ..... இது போல நம் வருங்காலம், வலையில் நம்மைத் தேடிப் படிப்பார்கள் :))

//நன்றி சதங்கா. உங்களால் ஒரு டைம் மெஷின் எனக்குக் கிடைத்தது. நினைவுகளில் மூழ்கி எழுந்திருக்க இன்னோரு சந்தர்ப்பம். அனைவருக்கும் நன்றி.
//

அழைப்பினை ஏற்று உணர்வுபூர்வமாக பதில்கள் தந்த சக்கவர்த்தினி வல்லிம்மாவிற்கு நானும் நன்றி சொல்லிக்கறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. முன்னைப்போல் இணையம் மேய்வதில்லை அம்மா.
உங்கள் பதிவு எத்தனை விட்டேனோ தெரியவில்லை.

படித்துப் பின்னூட்டமும் இட்டதற்கு ரொம்ப நன்றி.
இன்னும் பல தீபாவளிகள் குடும்பத்தோடு கூடி சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

இதப் பாருடா.துளசிமா,

கொசுவத்தியைப் பத்தி மூடிசூடா மன்னி ஆனவர்கள் கேக்கறதை:))
உங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற நாடார் கடைல தான் வாங்கினேன்பா.!!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க தானைத் தலைவியே!

இப்படிக் கேட்டா என்ன சொல்றது.
சதங்காவின் தீபாவளிப் பதிவைப் பாருங்கள்.. கீதா.:)

வல்லிசிம்ஹன் said...

இப்போது புரிகிறது கோமதி.
ஒரே ஒரு பட்டம் கிடைத்ததற்கே இவ்வளவு சந்தோஷப் படுகிறேனே,
மனிதர்கள் இயல்பாகவே ஒரு நல்ல வார்த்தை கேட்டுவிட்டால் ஏறிவிடுகிறது போதை:)))
உங்கள் பதிவையும் படித்தேன். நீங்கள் தமிழ் ஆசிரியை என்றும் கேள்விப்பட்டேன்.
அதுதான் அடக்கமும் சாத்வீகமும் கலந்து எழுதுகிறீர்கள்.
இணையம் எத்தனை அன்பை நம்பக்கம் செலுத்துகிறது என்று இன்னும் அதிசயம் கூடுகிறது. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

சதங்கா மீண்டும் நன்றி சொல்லிக்கிறேன். எனக்கும் அப்பா அம்மா பீரோவைக் குடையப் பிடிக்கும். அப்பூர்வப் பொருட்களோடு, பாட்டியின்
கடிதங்களும் கிடைக்கும். தாத்தா எழுதிய பாசுர நோட்புத்தகம் கிடைக்கும்.:)

பித்தனின் வாக்கு said...

திருப்பரங்குன்றம் நான் நாலு வருடங்கள் முன்பு சபரிமலை யாத்திரையின் போது சென்றது. படங்கள் அருமை. உங்கள் வீடு போன்றுதான் எங்கள் வீடும் பண்டிக்கை குளேப்ஜானும், ஓமப்பொடியும் செய்வேம். மற்றவர்களுக்கு கொடுக்க ஜாங்கிரியும், மிக்ஸரும் வாங்கி விடுவேம். நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

முக்கால்வாசி குடும்பங்களில் இதுதான் கதையாக இருக்கும் பித்தனின் வாக்கு.

ஆனால் இப்போது வருடம் முழுவதும் நாம் பலகாரங்களும் பட்சணங்களும் செய்து விடுகிறோம். அதனால் தீபாவளி பட்சணம் என்னும் கான்செப்டே மறைந்து வருகிறது:)) நன்றிமா.

Jayashree said...

"ஆனால் இப்போது வருடம் முழுவதும் நாம் பலகாரங்களும் பட்சணங்களும் செய்து விடுகிறோம். அதனால் தீபாவளி பட்சணம் என்னும் கான்செப்டே மறைந்து வருகிறது"
Je!! Mrs Simhan:)) நானெல்லாம் மீனாக்ஷி அம்மாளை படிச்சுட்டு மூடி வச்சுடுவேன்பா. (பண்ண வந்தாதானே!!) சாப்பிட்ட மாதிரி ஆகிடும்:)) பக்ஷணம்? AH! Well பக்ஷணம்னு எழுதி தான் table ல வைக்கணும்!!இந்த வருஷம் எங்க ஊர்ல ஹல்திராம் யோஹம்!! எங்க பையன்(ர்)(mrs shivam style!) வந்திருக்கறதால வாங்கினேன். ஏதோ " pindi" யாம் . கேள்விப்பட்டதே இல்லை.

திவா said...

பைபாஸ் ரோட் அட்டகாசமா இருக்கு. ஆமா மதுரை நகர ரோடு ஏன் இவ்வளோ வெறீச்சோடி இருக்கு?

வல்லிசிம்ஹன் said...

ஜயஸ்ரீ,
ஹல்திராம் பற்றி என் மருமகள் ரொம்ப உசத்தியா சொல்லுவார்.
உலர்ந்த பழங்கள் ஹல்வா ரொம்ப நன்றாக இருக்கும்.
ம்ம்ம். சாப்பாடு பற்றிப் பேசச் சொன்னால் நேரம் போவது தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் வரணும்.

ஊரில் மழையெல்லாம் எப்படி இருக்கிறது.

மதுரையில் அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. அதான் ரோடு காலியாக இருக்கு:)))

Vetrimagal said...

பசுமலை பார்த்த உடன் 50 வருடங்களுக்கு முன்பு அநுத்தமா எழுதிய தொடர் நாவல் 'விடிவெள்ளி'(?) நினைவுக்கு வந்தது. (சரியா தெரியவில்லை?)

பதிவு படிக்க சுகம். நன்றி.

Vetrimagal said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

அன்பு வெற்றிமகள், அநுத்தமாவின் விடிவெள்ளி எனக்கு நினைவில்லை.விடிவை நோக்கி '' என்ற கதை ஞாபகம்.
உங்களுக்கும் பசுமலை பழக்கமா? இல்லைப் பசுமலைக் கிராமம் ஏதோ ஒரு கதையில் வந்ததோ. எப்படியானாலும் நன்றிம்மா.