
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்''
என்ற பாட்டு இந்தப் படத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது .
அப்படியே பரிசோதனைப் பதிவாகவும் போட இதைப் பயன் படுத்திக் கொண்டேன் .


ஏ.எம்.ராஜா(?) பாடிய பாட்டு என்று நினைவு. வெகு அழகாக, ரசிக்கும்படிப் பாடி இருப்பார்.
நான் கேட்டது தேவநாராயணன் பாட்டு.
பிறகு கிடைத்தது திருமணம் படத்தில் தி எம் எஸ் சார் பாடிய பாட்டு.
பின் பாவைவிளக்கு படத்தில் சி எஸ் .ஜெயராமனும் பாடி இருக்கிறார்.
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு Pஒன்ற ஒலி முகமும்
புன்னகையின் புது நிலவு போற்ற வரும் தோற்றம்
துங்கமணி மின் போலும் வடிவத்தால் வந்து
தூங்காதே எழுந்தேன்னைப் பார் என்று சொன்னால்
அங்கதனில் கண் விழித்தேன்
அடடா ஒ அட டா ஒ அட டா
அழகென்னும் தெய்வம் தான் அதுவென்று அறிந்தேன் !
மங்கியதோர் நிலவினிலே ......
காலத்தில் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே விதியினுக்கொர் கருவியாம் என்ற்ஆள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
nஆலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் eன்றால்
மஹாகவி பாரதியின் பாடல்.
\எழுத்தாளர் அகிலனின் எழுத்துக்களில் பாரதியின் கவிதை வரிகள் சாகாவரம் பெற்றிருக்கின்றன.