கொலு இந்த வருடம் , போட்டோக்கள்
கொலுன்னு சொல்லியாச்சு.வந்தவங்க யாருன்னு சொல்லணும்.
மேலே படத்தில இருப்பவங்க எல்லாம் வந்து கௌரவிச்சாங்க.
நம்ம வீட்டுக்கு இல்லை, இன்னொருத்தர் வீட்டுல.
அப்புறம் சுண்டல் இல்லாத கொலுவானு சில பேரு மூக்கு மேல கையை வச்சதால, அதையும் சுட்டுப் போட்டுட்டோங்க.
ரொம்ப நன்றிங்க.







Comments
சூப்பர் கொலு.
அந்தப் பச்சைப்புடவை யார்?:-))))
பூமாலைகள் நல்லா இருக்காம். கோபாலின் கமெண்ட்:-)
மெய்மறந்து போனதில் கை மரத்துபோச்சு(-:
படங்கள் நல்லாயிருக்கு ;)ஆனா பெருசு பண்ணி பார்க்க முடியல..:(
இன்னும் நேர்த்தியாக வைத்து இருக்கலாம்.:)))
நாச்சியார் படமும் நல்லா இருக்கு. :p
கொலு அழகாக இருக்கிறது !
சுண்டல் படையலை காணுமே.
(சுண்டல் படம்தான் கேட்க வந்தேன். அதை பல பேர் கேட்டுட்டதுனால...)
பாற்கடலில் இருப்பவரைப் பாராட்டிட்டீங்க.
எல்லாம்தேஜஸ் கடையின் கைவண்ணம்.
நம்ம வீட்டு சாமிகள் எல்லாம் அங்கே போயி,
ஒரு முலாம் பூசிகிட்டு வந்தாங்க.
அதான் ஒரே பளாபளா.
நன்றிப்பா.
காமிரா நல்லததுதான். ஃபோகஸ் செய்யும் போது தனித் தனியா எடுக்க முடியலை.
இன்னும் கண்ணன் பொம்மை படம் ஒண்ணு இருக்கு அதையும் சேர்த்துடறேன்:)
பெரிசு செய்து போட முடியுமா பார்க்கிறேன்.
நன்றிப்பா.
ஆஹா இந்த வார்த்தைக்கு இல்லையோ காத்திருந்தேன்.
//அமைக்கப் பட்டு இருப்பது நன்றாக இருக்கிறது.//
அமைத்தவர் என்ற முறையில் உங்கள் புகழ்பாராட்டுகளை ஏற்றுக் கொள்ளுகிறேன்.
பக்கத்து வீட்டில ஒன்பது படிகள் கொலு வச்சு இருக்காங்க. பிரமாதம்:)))
சுண்டல் ஆகிக் கொண்டு இருக்கிறது. போட்டொ போட்டு விடுகிறேன்.
பச்சைப் புடவை புதுசா வந்தவங்க.
கோதை நாச்சியார். அதுவும் ஸ்ரிவில்லிபுத்தூர் ஸ்டைலில் வலது பக்கம் தலைப்பு போட்ட விதம் அழகா இருக்கு.
பொம்மையும், மாலைகளும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் வாங்கியது.:))
உங்க கொலு என்ன ஆச்சு.
நாச்சியார் அழகுக்கு என்ன. கையும், கிளியும்,மாலையுமாகப், பக்கத்தில் கண்ணன் வேறு நிற்கிறான்.
கேட்பானேன்.
இடம் போதவில்லை. சின்ன வரவேற்பறை. அதில மூன்று படிகளில் வைக்க முடிந்தது பாதி பொம்மைகள் தான்.
நன்றிம்மா.
சுண்டல் இன்று இன்னும் படைக்கவில்லை.
படம் சேர்த்து விடுகிறேன்.:))
தெரிந்து போச்சா:))
கொத்ஸ் ,
இதோ அதையும் சேர்த்துப் போட்டு விடுகிறேன்.
சுண்டல் கூகிள்ள சுடணும்.
புது சுண்டல் போட்டாப் போச்சு:))0
படம்தானே!!
உங்கள் கொலுவும் நல்லா நடந்ததாகக் கேள்விப்பட்டேன்:)))