கொலு இருந்த இந்தப் பத்து நாட்களும் பரபரப்பாக, வரவும் செலவுமாக,
சந்தோஷச் சந்திப்புகளாக,பாடல்களும் பக்தியும்
நட்பும் உறவும் பாரபட்சமில்லாமல்
பாசம் கொண்டாடிவிட்டோம்.
ஆண்டாள் மார்கழியில் ''கூடி இருந்து குளிர்ந்தேலோ ''
என்றாள்.
இந்தக் கொலுவின் போது ,அது என்னவோ தனி உற்சாகம் தான். எங்கள் வீட்டுக்கு பத்திரிகைகள் போடும் பையன்
கல்லூரியில் பி.பி.ஏ படிக்கிறான்.
கொலுவிற்கு அவன் கொண்டுவந்து கொடுத்தது அழகான தோரணங்கள்.அவன் வீட்டிலும் நவராத்திரி !!அங்கே அலங்காரத்துக்காகச் செய்தானாம்.
இன்னும் பூக்காரப் பெண். ஸ்பெஷல் பூக்கள் சப்ளை.
இன்னும் நேரம் காலம் இல்லாமல் பந்து தேடும் சாக்கில்
கிளுகிளு சிரிப்போடு வந்து போகும் சின்ன அனிருத்,அஜய்,சாக்க்ஷி எல்லோரும் சந்தோஷத்தையே
கொடுத்தார்கள்.
சுண்டலுக்கு நாங்கள் பாடிய காலம் இல்லை இது.
''நாட் இண்டரஸ்டட்''
என்ன புதிதாக வந்து இருக்கு? இதுதான் கேள்வி:)
எங்க வீட்டில் சாமி பொம்மைகளே அதிகம் என்பதால்
'தாத்தா புதிசா ஒண்ணும் மரபொம்மை செய்யலியா'னு இன்னோரு கேள்வி.
ஆகக்கூடி இப்படியாகத்தானே நிறைவடைந்த நவராத்திரி
நம் அனைவருக்கும் எப்போதும் வாக்கு வன்மையும்,
மனதில் உறுதியும் விஜயலக்ஷ்மி கொடுப்பாள், கொடுக்க வேண்டும்.
நம் இணையத் தாரகைகள் மேலும் மேலும் ஒளிசேர்த்து மேன்மையோடு திகழ வேண்டும்.
வாழ்த்துக்களுடன்..
8 comments:
விஜயதசமி வாழ்த்துக்கள் :)
பத்து நாட்களும் பத்து நிமிடங்களாய்ப் பறந்து போச்சு! புலி என்ன தினமும் ஆஜர் கொடுக்குது போலிருக்கு?
வரணும் சிவா.
சூடானில் கொலு உண்டா:))
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
வரணும் கீதா.
பறந்துதான் போய்விட்டது. இதோ திருப்பி பொம்மைகள் பொட்டிக்குள் பாக் செய்து வைக்க வேண்டியதுதான்.
காலையிலேயெ உங்களைப் போனில் பிடிக்க முடியலை.
விஜயதசமி வாழ்த்துகள்.
விஜய தசமி வாழ்த்துகள் - 10 தினங்களும் பறந்து விட்டன. கொலு வைத்தவர்களெல்லாம் திரும்ப பொம்மைகளைச் சரியான பாதுகாப்பான முறையில் பெட்டிகளில் அடைந்து வைத்தால் தான் அடுத்த கொலு வைக்க முடியும். ஒரு திருவிழா மகிழ்ச்சியுடன் முடிந்தது
ஆக அருமையாக ஒரு மங்களம் பாடியாச்சா? :p
உள்ளேனம்மா
ம்ம்ம்ம் கூப்பிட்டீங்களா காலையிலே? ஒண்ணும் வரலையே????????????????
Post a Comment