Blog Archive

Thursday, December 17, 2009

சித்திரராமன்...10 சுந்தரகாண்டம்----மீள்பதிவு


மழைக்காலம் முடிகிறது. நான்கு மாதங்கள் கடந்துவிட்டன்.குகையில் காலத்தைத் தள்ளி விடுகிறான் ராமன்
சீதை நினைவில்,
முள்ளாக இருக்கிறது அவனது உள்ளம் சீதையைப்
பற்றிய கலவரத்தில்.
'எப்படி துயர்ப் படுகிறாளோ
'நான் அவளை மறந்துவிட்டென் என்று துடிக்கிறாளோ.
ஒரு சிறு பிரிவு கூடத் தாங்காமல் கோபிப்பாளே..
என்னுடன் இருக்கத்தானே வனம் வந்தாள். ஒரு சூரிய குலத் தோன்றலாக நடக்காமல் பெண்டாட்டியைக் களவு கொடுத்தேனே.'
என்னவெல்லாமோ புலம்புகிறான்.
அவனைச் சமநிலைப் படுத்த லட்சுமணன் செய்ய்யுமத்தனை காரியங்களும் விரயம்.
அண்ணனின் துயர் கண்டு ,
சுக்ரீவன் அலட்சியத்தின் மேல் சினம் பொங்குகிறது.
சொன்ன வார்த்தையை மீறியவனை என்ன செய்கிறேன்
பபர் என்று கிளம்பியவனை ராமன் அறிவுரை கூறி
நிறுத்துகிறான்.
''லட்சுமணா ,அவனால் தான் இந்த நேரத்தில் உதவ முடியும்.
அவனைக் கொல்ல வேண்டாம்.
இந்த ஒரு வார்த்தை சொல் போதும்.
''சுக்ரீவா, வாலி சுவர்க்கம் சென்ற வழி இன்னும் திறந்துதான் இருக்கிறது''
இது சொல் போதும்.வந்துவிடு என்கிறான்.''
லட்சுமணனும் சுக்ரீவனின் அரண்மனைக்கு விரைந்து
அவனை விளிக்கிறான். அவன் கை வில் அதிர்கிறது.
வில்லின் கடினமான ரீங்காரம் சுக்ரீவனின் போதை நிறைந்த காதுகளில் கூட விழுகிறது.
பயந்து பதுங்குகிறான்.
அண்ணன் மனைவி தாரையை அந்தப்புரத்திலிருந்து அனுப்புகிறான்.
அவள்தான் சமயோசிதமாக நிலையைச் சமாளிப்பாள் என்று.
அனுமன் கூட அப்போது இளவலின் கோபத்தைக் கண்டு ஒதுங்கினான் என்று வரிகள் வருகிறது.
''வா வெளியே சுக்ரீவா. என் மன்னன் பணி உனக்குத் தூசாகி விட்டதா.
சொன்ன சொல்லை மறந்து தூங்கும் உன்னை நானே முடிப்பேன். ராமன் மனதுக்கு அஞ்சி சும்மா இருக்கிறேன்.
அக்னிக்கு முன் சொன்ன வார்த்தைகளை நினை!''
என்று கம்பீரமாக உக்கிரமான வார்த்தைகளை உதிர்க்கிறான் லட்சுமணன்
அவன் முன்பு தாரை வந்து நின்றதும் அவன் கோபம் தணிகிறது.
அவளின் கணவனை இழந்த கோலத்தைக் கண்டதும் தந்தை இல்லாமல் மங்களங்களைத் துறந்த தன் தாய்களின் நினைவு வர கலங்கிவிடுகிறான்.
அழுதும் விடுகிறான் மனஅழுத்தத்தில்.
தாரை அவனை நோக்கி இதமான வார்த்தைகளைச் சொல்லிச் சுக்ரிவனை அனுப்புவதாக
உறுதி சொல்லி அனுப்புகிறாள்.
அதே போல் சுக்ரீவனும் ராமன் கால்களில் வந்து விழுகிறான்.
''என் குல வாசனையைக் காட்டிவிட்டேன் ராம. மதுவிலும் மாதுவிலும் மூழ்கி உன் சோகம் மறந்தேன், இனி ஒரு தடை கிடையாது. இதோ வானரர்கள்
படை தயார்,.
நான்கு திசைகளும் சென்று தேடிச் சீதா பிராட்டியைக்
கண்டுபிடித்துக் கொண்டு வருவார்கள்
தென் திசைக்கு அனுமன் செல்கிறான்.
அங்கதன் வழி ந்டத்தும் இந்தப் படைக்கு அனுமன் பிரதம ஆலோசகன்.
அனுமன் ஆரம்பித்த எந்த காரியமும் பிழையுற்றதாகச் சரித்திரமே கிடையாது.
வாயுகுமாரன்,சொல்லின் செல்வன்,நுண்புத்தி படைத்தவன்,சமர்த்தன்
என்றெல்லாம் ராமனுக்குத் தேறுதல் சொல்லி அனுமனை
அவன் முன் நிறுத்துகிறான்.
அதுவரை தத்தளித்துக் கொண்டிருந்த
ராமனின் மனம் அனுமனைப் பார்த்து நிலைப்படுகிறது.
''ஆஞ்சனேயா நீ நல்ல செய்தி கொண்டுவா.
என் சீதையைக் கண்டால்
அவளிடம் இந்தக் கணையாழியைக் கொடு.
இதில் ராமா என்னும் என் நாமம் எழுதி இருக்கிறது.
அவளைத் தேற்றி நான் அவளைச் சிறைமீட்பேன் என்று உறுதி கொடுத்து அவளையுமென்னையும் காப்பபற்று'
என்கிறான்.
ராமனை வணங்கி மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட அனுமன்,
தன்னுடன் வரும் வீரர்களை நோக்கி உணர்ச்சி கூட்டும்
வசனங்களை உரைத்து உற்சாகத்தோடு கிளம்புகிறான்.
அவர்கள் சென்ற திசையையே பார்த்த வண்ணன் ராமன்
மானசீகமாக அவர்களுடன் பயணிக்கிறான்.
''ராம நாமம் துணை வரும் போது அனுமனே உனக்கு ஏது குறை?
வெற்றி உனக்குத்தான்.''
ராமபக்தன் மகேந்திர மலையின் அடிவாரத்துக்கு வந்துவிடுகிறான்.
கடல் தென்படுகிறது.
அதற்கு அந்தப் பக்கம் சீதை சோகித்து இருக்கிறாள்.
இந்தக் கடலை என்னால் தாண்ட முடியுமா என்று யோசித்தவனை,
ஜாம்பவான் நம்பிக்கை உரம் ஊட்டி அவனது விச்வரூப ,யோகமகிமையைக் கொண்டாடத் தன் பெருமையையும் பலத்தையும் மீண்டும் பெறக் கிடைத்த
அனுமன் கடலைத் தாண்டப் பாய்ந்தான்.
ராமநாமம் அவன் நாவில் நிறைந்தது
அனுமன் அடி சரணம்





வாழி ஆஞ்சனேயா.

23 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஸ்ரீராம தூதம் சிரஸா நமாமி.

செல்லி said...

வல்லி

//ராம நாமம் துணை வரும் போது அனுமனே உனக்கு ஏது குறை?
வெற்றி உனக்குத்தான்.//
இதனால், ஆஞ்சநேயரைக் கும்பிடுவோருக்கும் ராமரின் அருள் கிடைக்குமாம், வெற்றி எதிலும் வருமாம்.
நன்றாக இருக்கு சுந்தர காண்டம்.
நல்ல படங்கள்.
வல்லி, நீங்க ஒஸ்ரேலியா வர்ற நோக்கமில்லியா?
வந்தா எங்க வீட்டுக்கும் கட்டாயம் வாங்க.
பகிர்ந்தமைக்கு நன்றி.

துளசி கோபால் said...

வந்துட்டாரு நேயடு. இனி ஜெயமே ஜெயம்.

செல்லி,

முதல்லே நியூஸி வந்துட்டு அப்புறம்
உங்களைப் பார்க்க வருவாங்களாம் வல்லி:-))))

ambi said...

//சூரிய குலத் தோன்றலாக நடக்காமல் பெண்டாட்டியைக் களவு கொடுத்தேனே.'
//

எவ்வளவு அழகாக ராமனின் மன நிலையை சொல்லி உள்ளீர்கள்.

அனுமனை பற்றி படித்ததும் உள்ளமெல்லாம் பூரிக்கிறது.

அசாத்ய சாதக ஸ்வாமிர்
அசாத்யம் தம் கிம்வதக
ஷிராம தூத கிருபா சிந்யோ
மத் சாதயப் பிரபோ!

ஜெய் ஷ்ரிராம்!

சுந்தர காண்டத்துக்கு நைவேத்யம் செஞ்சு குழந்தைகளுக்கு(me only) தரலாமே! :)

Geetha Sambasivam said...

ரொம்பவே அருமை வல்லி. மனதுக்கே ஆறுதல் கொடுக்கும் பதிவு. வாழ்த்துக்கள். அந்த ராமதூதன் பாதம் பணிந்து வணங்குவோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. சொல் குற்றம் இல்லாமல் சுந்தரமாகச் செல்ல அனுமனே துணை செய்ய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

செல்லி வாங்க.

உண்மையான வார்த்தைகள்.
ஒராயிரம் நாமம் சொல்ல வேண்டாம் உன் நாமம் ஒன்றே போது என்று ராமனை அழைப்பார்கள். அவன் நாமம் நம்மைக் கரையேற்றும் என்றுதான் இந்தக் கடல் தாண்டும் படலம் சொல்லக் கேள்வி.
மனத்துக்கு வாக்குக்கு ஸ்ரீராம நாமமே துணை.
நான் ஆஸ்திரேலியா வரலாமே. நியூஸி ரொம்ப நாள் கனவு. யார் கண்டார்கள். இறைவன் சித்தம் இருந்தால் கண்டிப்பாக நடக்கும். அன்புள்ளவர்களை மனசில் நினைத்தாலே பாசம் வந்துவிடுமாம். அப்படி இப்போது எனக்குக் கிடைத்த உள்ளங்கள் நீங்களும் துளசியும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி ஸ்ரீராம தூதன் பாடலுக்கு நன்றி.
//ஸ்ரிராம கிருபா சிந்தோ
மத்கார்யம் சாதயப் ப்ரபோ//

நேற்று காரடை செய்து வெல்லமும் வெண்ணையும் கை காண்பித்தாச்சு.
உங்க அம்மாவும் செய்து கொடுத்து இருப்பார்களே.
இருக்கும் இடத்திலேயே கிடைக்க வழி உண்டு என்று படித்த நினைவு:-)

வல்லிசிம்ஹன் said...

கீதா, நீங்களும் இங்கெ வந்து படிப்பது ரொம்பப் பெருமை.எனக்கு உங்கள் அளவு படிப்பு வாசனை போதாது.
இன்னும் முயற்சிக்கிறேன்.
அனுமன்தான் இருக்கிறாரே கைதூக்கி விட.

தி. ரா. ச.(T.R.C.) said...

சுந்தரகாண்டம் ஒரு மானுடனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை.அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப்பெரிய நம்பிக்கை ஊட்டுகிறது.திரும்பத் திரும்ப படிக்கும்போது அல்லது கேட்கும்போது ஸ்ரீ ஆஞ்சநேயரின் குணாதிசயங்கள் உங்கள் உள்ளுக்குள் தைத்து உங்களை இன்னும் அமைதிப் படுத்தும்
நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு ந்னறி என்று சொல்லி அமைதியாக இருக்க உங்களுக்கு வழிகாட்டும்
மிகுந்த பலவானான் ஹனுமான் சீதா தேவியைக் கண்டு"நின்னடியேன் விண்ணப்பம் நிகழ்ந்த செயல் கேட்டு அருளாய்""ராமாயணத்துக்குள் ஒரு ராமாயணத்தை வைத்தவனல்லாவா!

ந்ன்றி வல்லியம்மா.

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

வல்லிசிம்ஹன் said...

எத்தனை உண்மையான வார்த்தைகள், தி.ரா.ச!

நானும் விடாமல் மாதத்துக்கு ஒருமுறையாவது அனுமனையும் ராமனையும் சீதையயும் இணைக்கும் சுந்தரகாண்டத்தைப் வாசிக்க முயற்சிப்பேன்.
இங்கே வந்து அவர்களை மீண்டும் மனத்தில் இருத்த வாய்ப்பு அவர்களே கொடுத்து இருக்கிறார்கள்.
//யத்ர யத்ர ரகுனாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருதம் ஹஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷசாந்தகம்//

வல்லிசிம்ஹன் said...

வாங்க துளசி.
பின்னூட்டம் தப்பிவிட்டது.
முதல்ல நியூசி தான்.
ஆஸ்திரேலியாவுக்கு அப்புறமா போகலாம்.
வடையெல்லாம் சேஞ்சு வச்சிருப்பீங்க. சாப்பிடாம போகலாமா? இந்த வார சுந்தரகாண்டம் படிச்சாச்சா?

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், நான் அநேகமாய் தினமும் வந்து பார்க்கிற பதிவுகளிலே உங்களோடதும் ஒண்ணு வல்லி, படிப்பு வாசனை போதாதுன்னு எல்லாம் சொல்லி உங்களோட தகுதியை நீங்க குறைச்சுக்க வேண்டாம். எடுத்துக்கிற பொருளை வைத்து எழுதும்போது மாறுபட்ட கருத்துக்களோடு எழுதறாப்பலே ஆகும், நீங்க எழுத எடுத்துக்கிற பொருளை வைத்து நீங்க மென்மையா, அழகாச் சொல்ற மாதிரி எனக்கு வருமான்னு சந்தேகம் தானே! எல்லாரும் முழநீளம் எழுதறேன்னு கேலி செய்வாங்க. நீங்க சுருக்கமாச் சொல்றீங்களே? அது எத்தனை அழகு?

ambi said...

அம்மா அப்பா எல்லாம் தாமிரபரணி கரையாம் கல்லிடையில்.
( உடனே 4 கட்டு அப்பளம் கேட்கப்படாது!) :p

அடை!னு கணிணியில் தன் எழுதி பாத்துக்கனும்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி. கல்லிடைக்குறிச்சி என்று தெரிந்துதான் சொன்னேன்.

அப்பளம் இட இனிமேல் பாட்டிகள் தான் வரணும்.

வல்லிசிம்ஹன் said...

கீதா,நான் உண்மையாகவே உங்கள் ஆன்மீக அறிவு கண்டுதான் சொன்னேன்.
எத்தனையோ விஷயங்கள் செவிடன் காதில் ஊதின சங்காக விட்டுப் போய்விடுகிறது.
இப்போதாவது படிக்ககி கிடைக்கும் சந்தோஷம்தான் உங்கள் ஆன்மீகப் பதிவுகளைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
அதைத்தான் சொன்னேன்.பாரதியைப் பற்றி நீங்க எழுதினதுல எனக்குப் பூர்ணதிருப்தி.
விஷயம் இருக்கும்போது எழுதுவதில் தவறே இல்லை.

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா! சமிபத்தில் ராமாஷ்டகம் என்ற 8 ஸ்லோகங்களை படித்தேன். மிக ரம்யமாக இருக்கிறது. அது ஈஸ்வரன் பார்வதிக்கு உபதேசித்ததாக வருகிறது.....தங்களுக்கோ, வேறு யாருக்குமோ வேண்டுமெனில் தெரியப்படுத்தவும். டைப் செய்து பின்னூட்டமிடுகிறேன்.

ambi said...

மீள் பதிவா இருந்தாலும் நம் மீளாத் துயர் துடைக்க வந்த பதிவல்லவா இது. :))

இந்த தடவை அனுமத் ஜெயந்தி தூள் பண்ணீயாச்சு. பால் பாயசம் எல்லாம் நைவேத்யம் (அனுமாருக்கு தான்).

அட! என் பழைய பின்னூட்டங்களும் இருக்கே. :)

ரெண்டு வருஷத்துக்கு முந்தி வந்த பதிவா..?

பாருங்க, எனக்கு கல்யாணமாகி ஜுனியர் வந்தாச்சு.

துளசி டீச்சர் நியுசியில் இருந்து சென்னை வந்ருக்காங்க.

காலம் யாருக்காகவும் ஒருபோதும் நிற்பதில்லை.

வல்லிசிம்ஹன் said...

அம்பி ரெண்டு வருஷம் ஆகிவிட்டது. எல்லாம் மாறிவிட்டது.
என்னுடைய எழுத்து எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.:)
மற்றதெல்லாம் மாறிவிட்டது!!
ஜூனியர் கதை சொல்கிறாரா இப்போது. சொல்லணுமே!!!

ambi said...

நெறையா சொல்றான், எனக்கு தான் பாதிக்கு மேலே புரிய மாட்டேங்குது. இருந்தாலும் உம் கொட்டி கேட்டுக்கறேன். :)

Jayashree said...

"" Bhimrupi maharudra vajra Hanuman maaruti
Vanaari Anjanisutha Ramdutha prabhanjna ..1

Mahabali, prandhatha, sakala uthavi bade
Saukhaykaari dukhaari dhootvaishnav gayaka ..2

Raamdashi agragaynu kapikulashi mandanu
Ramrupi antaratma darshane dosh naasati...17 ""


RUDHRANIN AMSAMAANA ANJANEYAR NAMMAI KAATHTHU RAKSHIKKANUM...

ACHCHAA!! HANUMATHJAYANTHI KALAI KATTARATHAA? GOOD!!

எல் கே said...

SUndara Kandam Padicha Mulu ramayanam Padicha Punniyam undu. enna ithula 2 edathila(i may be wrong) full ramayanam upto tat point varum...

Miga nalla Muyarchi

Kavinaya said...

இன்றைக்கு ஆஞ்சநேயர் நினைவு அதிகமா இருந்தது. உங்க பதிவு கண்டதும் மிக்க மகிழ்ச்சி அம்மா :)

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்!