Blog Archive

Wednesday, December 23, 2009

கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்--டிவி தொடர்

தொலைக்காட்சியில் திரைப்படங்கள் அவ்வப்போது பார்ப்பது வழக்கம்.
இந்திப் படங்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மருமகள் ஏதாவது சிபாரிசு செய்வார் .அப்போது கண்டு களித்துவிட்டு மீண்டும் பழைய
படி பழைய ஆங்கிலப் படங்களுக்கும், நினைவில் நிற்கும் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதே பழகிவிட்டது.
அப்போதுதான் விஜய் தொலைக்காட்சியில், ''கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்'' பற்றி முன்னோட்டம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே பார்த்டலும் ஒரே கிராம மணம்னு படங்கள் எடுப்பது போல இதுவும் இன்னோரு சீரியல் என்று நினைத்தேன்.
ஆனால் அந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக அர்த்ததோடு இருந்தன.
''படி படிபடி, தங்கப் பயலே படிதாண்டினாக் கவலை இல்லே''
என்று இசையோடு நல்லத் தமிழ். அதைக் கேட்டதும் பார்த்துத்தான் செய்வோமே என்று ஆவலோடு முதல் எபிசோட் பார்த்தென்.
கப்' என்று பிடித்துக் கொண்டார்கள் காரியான் பட்டிப் பசங்கள். ஆறு பசங்களும் மூன்று பெண்களும் பத்தாவது தேறின கையோடு, தேனியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கு ப்ளஸ் டூ படிப்புப் படிக்க ஆசைப் படுகிறார்கள்.
ஆனால்
இரு ஊர்களுக்குமான பகை அவர்களைப் பொசுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தேனி நபர் ஒருவரை, காரியா பட்டி நபர் தாக்கிக் கொன்றுவிட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.
கொலையுண்டவர் மகனும் தேனிப் பள்ளியில் தான் படிக்கிறான்.
காரியா பட்டிப் பையன்களில் ஒருவனான சக்தியின் அப்பாதான் சிறையில் இருப்பது.
இது ஒரு காரணம், இன்னோரு நிகழ்ச்சியாக,
ஏதோ ஒரு வேகத்தில் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காரியாபட்டி மக்கள் தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்குத் தீ வைத்துவிடுகிறார்கள். அதையும் காரணம் காட்டி,
இரண்டு ஊருக்கும் தீராப்பகை.

இதுவரை 45 நாட்களுக்கான பாடங்களையும் பார்த்துவிட்டேன். நடுவில் இ]ரண்டு மூன்று எபிசோட் தவற விட்டிருப்பேன்.
இந்த சீரியலில் என்னை மிகவும் கவர்ந்தது, காரியாப் பட்டிப் பையன்களாக வரும் பதின்ம வயசுப் பிள்ளைங்களின் பாத்திரப் படைப்பும், மன நலன்களும்,அவர்கள் உண்மையாகவே பாடு பட்டு நடிப்பதும்தான்.

நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. எல்லாமெ எளிமையாக இனிமையாக இருக்கின்றன.

''டூரிங் டாக்கீஸ் என்ற நிறுவனம் இந்தத் தொடரை எடுப்பதாகத் தெரிகிறது.
ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல், அசட்டுத்தனமான வசனங்கள் இல்லாமல்,

மனதோடு ஒன்றிப் போகிறது.
ஒருத்தர் கூட அலட்சியமாக நடிக்கவில்லை. அத்தனை ஈடுபாட்டோடு கண்முன் நடப்பது போல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
இந்தக் கால இளைஞர்களுக்கு வேடிய ஒற்றுமையும்,தோழமையும் பளிச்சிடும்,அதே சமயம்,அந்தவயதிற்கான சஞ்சலங்கள் எல்லாம் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
முடிந்தால் நீங்களும் பாருங்கள்.
விஜய் தொலைக் காட்சியில் இரவு ஏழரை மணிக்கு வாரநாட்களில் ஒளி பரப்பாகிறது.



எல்லோரும் வாழ வேண்டும்.

23 comments:

எல் கே said...

நீங்களும் மெகா தொடர் பாக்க ஸ்டார்ட் பண்ணியாச்சா

ராமலக்ஷ்மி said...

சுந்தராவின் பதிவில் இந்தத் தொடரை நீங்கள் சிலாகித்துச் சொல்லியிருந்ததும் வல்லிம்மா சொன்னா நல்லாதான் இருக்குமென பார்க்க ஆரம்பித்தேன். நம்பிக்கை வீண் போகலை:)! ரெகுலரா முடியாவிட்டாலும் முடியும் போது பார்க்கிறேன். நன்றி.

VELAN said...

Yes. I accept it.. Very good serial

துளசி கோபால் said...

உங்களுக்காக ஒரு நாள் பார்க்கறேன். எத்தனை மணி, என்ன சேனல்ன்னு சொல்லுங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா! நீங்களுமா வல்லியம்மா :)

Muruganandan M.K. said...

ரிவீ தொடர் என்றாலே எனக்கு ஆகாது. ஆனால் உங்கள் கட்டுரை மீள யோசிக்க வைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஓ!!ஆரம்பிச்சாச்சு.:)
சாயந்திர வேளைல பொழுதும் போகணும்.
நல்லபடியா விஷயமும் தெரியணும்.
செலவும் இல்லை;)LK!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி.
நன்றாக இருந்ததால் தான் விடாமல் பார்க்கிறேன்.
வன்மம் எந்த அளவிற்கு உள்ளத்தைப் பாதிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்.
அதே போல அஹிம்சையாகவே நடக்கத்தெரிந்த பிள்ளைகளும்
இங்க இருக்க வாய்ப்பும் இருக்கு என்று காட்ட வந்த தொடராகவே பார்க்கிறேன்.

இதே ரீதியில் இந்தத் தொடர் போகவேண்டும்.
வர்த்தக வழியில் போகாமல் ரசனையும் குறையாமல் இந்தத் தொடர் தொடர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வேலன்.எண்ணங்கள் செழிக்க
நல்ல கதைகள் வேண்டும். அதை இந்தத் தொடர் பூர்த்தி செய்கிறது என்று நம்புகிறேன்.
வருகைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

துளசி, வாங்கப்பா.
சரியா 7.30 மணிக்கு
ஸ்டார்விஜயில்,
மஹாராணிக்குப் பிறகு,
கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்!!!

அதைப் பார்த்துட்டு இரவு சாப்பாட்டையும் முடித்துக் கொள்ளலாம்:0)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி. நானும் தான்.:)

பாட்டுக் கச்சேரிக்குப் போனால் அப்படியே தூங்கிவிடுவேன்.
பண விரயம்.:0)

Unknown said...

y this site to see the serial.

- Kiri Kamal

Unknown said...

Opps sorry, forgot to attach the link.

Try this site to see the serial,

www.tamilrain.com

- Kiri Kamal

subbu said...

உண்மையிலேயே அருமையான தொடர் இது. பல பல வருடங்களுக்கு முன்னால் தூர்தர்ஷனில் 13 வாரத் தொடர்களை ஆர்வத்துடன் பார்த்தது போல இந்தத் தொடரும் இழுக்கிறது.

அன்புடன்

மதுரை சுப்பு

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு டாக்டர். இந்தத் தொடர் நிச்சயம் பார்க்கலாம்.எத்தனையோ விசயங்களை யோசிக்க வைக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

Hi akkanshaa.
Yes I did see that site.
thanks for mentioning it here. our friends can see the past clips too.

வடுவூர் குமார் said...

ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வரனா?முகப்பு படம் மற்றும் வலைப்பக்க பின்புல நிறம் எல்லாம் அசத்தலாக இருக்கு.
டி வி தொடரா? ஹூகும் இன்னும் அந்த பக்கம் சாயவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு.
உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆமாம் முன்பு நமக்கு இவ்வளவு பார்வைக் குழப்பங்கள் இல்லை:(
கிடைத்ததை ரசிக்கவும் கற்றோம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க குமார்.
நீங்க இப்படி சொன்னா எப்படி:)).
எதையும் கற்று மறக்கலாமே!
நல்லதைப் பார்த்தால் தப்பு இல்லை. ஓரிரு முறை பார்த்தால் கதை பிடிபடும் .
பிடிக்குமா என்பது நமது நேரம் காலம் ஒத்துழைப்பதைப் பொறுத்தது.

திவாண்ணா said...

ஒரு மாமியார் மருமகள் வன்மம், கொலை செய்ய திட்டம், "டாய்....! ஒன்ன...." வசனம் இல்லாம ஒரு சீரியலா? ஹும்! எவ்வளோ நாள் போகுதுன்னு பாக்கலாம். :-))

வல்லிசிம்ஹன் said...

அதானே தம்பி வாசுதேவன்,
ஏதாவது மசலா கலக்காம இருக்கணுமேன்னு தோன்றுகிறது.
பதினாறு வயசுக் காதல் டூயட்னு ஆரம்பித்தால்....ம்ஹூம்.
செய்ய மாட்டார்கள். நம்பிக்கை இருக்கு!!!

குமரன் (Kumaran) said...

நானும் தொடர்ந்து இந்தத் தொடரைப் பார்த்து வருகிறேன் அம்மா. நீங்க சொல்ற மாதிரி நல்லா இருக்கு.

இதை பாக்குறதுக்காக தொலைக்காட்சியை கொஞ்ச நேரம் முன்னாடியே தொடங்கினா இந்த மகாராணித் தொடரைப் பார்க்க வேண்டிய தண்டனையும் கிடைக்குது. :-)

வல்லிசிம்ஹன் said...

குமரன் புத்தாண்டு வாழ்த்துகள் மா. குளிர் எப்படி இருக்கிறது. அது நன்றாகவே இருக்கும்:)
ஆமாம், மகாராணியைக் கூடக் கொஞ்ச நாள் பார்த்தேன்.அதில வருகிற மிரட்டல் இசைக்கும், கொடூர வசனங்களுக்கும்,
பயந்து பார்ப்பதில்லை.
அதீத அப்பாவியாக ஒரு பெண்,
அதற்கு எதிர்மறையாக இன்னோரு பெண்.
ஹ்ம்ம் ,வேடிக்கை என்கிற பெயரில் என்ன என்ன கூத்து நடத்துகிறார்கள்:(