Saturday, November 08, 2008

மாற்றம்,ஒபாமா,லின்கன்மற்றும் உழைப்பு

லின்கன் பிறந்த எளிமையான வீடு.
பதினாலாவது ஜனாதிபதியும் அவரது கடைசி மகனும்.

பிரெசிடெண்ட் எலெக்ட் பராக் ஒபாமா.








ஏப்ரஹாம் லின்கன் 17 ஆண்டுகள் வாழ்ந்த வீடு ஸ்ப்ரிங்ஃபீல்ட்





திரு ஏப்ரஹாம் லின்கன் 14 ஆவது ஜனாதிபதி,அமெரிக்கக் குடியரசு






மரக்கட்டைகளை உடைத்துச் சம்பாதித்தவர் நாட்டுக்குத் தலைவர்.
--------------------------------------------------------------------------------------

இப்போது இன்றைய செய்தி ஒபாமாவைச் சுற்றி.
----------------------------------------------------------------

இன்னும் அதிர்வுகள் ஓயவில்லை. சிகாகோவின் கிராண்ட் பார்க்,அதில் நடந்த வெற்றி ஏற்புப் பேச்சு
பார்வையாளர்களின் உணர்ச்சி,கண்ணீர்,குதூகலம்
எல்லாம் ஓய நாளாகும்!!
ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 44ஆவது பிரசிடென்டாகப் பதவி ஏற்கப் போகும் ஒபாமாவுக்கு
மனம் கனிந்த வாழ்த்துகள்.
எனக்கிருக்கும் ஒரே பிரார்த்தனை இந்த மகிழ்ச்சி என்றும் இவர்களுக்கு நிலைக்கவேண்டும் என்பதுதான்.

உடனே நினைத்தது ஏப்ரஹாம் லின்கன், அவர்களைத்தான்.
நாங்கள் ஸ்ப்ரிங்ஃபீல்ட் (இல்லினாய் மாகாணத்தின் தலை நகரம்) போகும்போது , அவர் குடியிருந்த வீட்டையும்,
அவரது நினைவு நூலகத்தையும்
அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக அந்த ஊரிலிருந்து கிளம்பிய
ரெயில்வே ஸ்டேஷன், டெப்போ என்று அழைக்கப்படும் இடத்தையும்தான்.
அவரும் அவரது மனைவி மேரி,குழந்தைகள் வளர்ந்த அந்த வீடு இப்போதைய
நிலைப்படி மிகச் சிறியது. அத்தனூண்டு வீட்டுக்குள் 700 நபர்களுக்கு விருந்து
கொடுத்தார்களாம்.
ஒரு சின்ன வரவேற்பறை.
ஒரு விளையாட்டு அறை, ஒரு சாப்பாட்டு அறை கீழ்தளத்திலும், மேல ஏப்ரஹாமுக்கு,மேரிக்கென்று தனித்தனி அறைகளும் இருந்திருக்கின்றன,.
சமையலறை நம் வீடுகளை விடச் சின்னது.
ஒரே ஒரு அம்மணியின் துணையோடு வீட்டை நிர்வாகம் செய்திருக்கிறார்.
நடுவில் ஒரு மகனை எலும்புருக்கி நோய்க்கும் பறி கொடுத்திருக்கிறார்கள்.
மிகுந்த ஏழ்மையான பெற்றோர்கள் வளர்த்த மகனாக் ஏப்.
நல்ல செல்வச் செழிப்பில் வளர்ந்த மேரியைத் திருமணம் செய்ததும், அந்தப் பெண்மணி தன்
கணவரின் சமூக(society) வாழ்க்கைக்கு உண்டான நாகரீகங்களைக் கற்றுக் கொடுத்ததாக எங்களுடன் வந்த கைட்
சொன்னார்.
அவர் அந்த ஊரைவிட்டு ஜனாதிபதி பொறுப்பு ஏற்க, ரயில்வண்டியில் கிளம்பிய இடத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஸ்ப்ரிங்ஃபீல்டிலிருந்து வாஷிங்டன் வந்து சேர எட்டு நாட்கள் ஆனதாம்!!!!
இப்போது ஒரு எட்டு மணி நேரம் ஆகுமோ என்னவோ:)
அந்த நிலைமையில் அவர் சொன்ன வாக்கியம் எல்லாமனிதர்களும் சமமானவர்கள்.
all men are equal'' .ஏப்ரஹாம் லின்கனைப் பற்றிய படம் ஒன்றும் பார்த்தோம்.
அவர் பிறந்ததாகக் கூறப்படும் சின்ன மரத்தினாலான காபினையும் பார்த்தோம்.
அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு
மற்றவர்களின் பகைமையையும் சம்பாதித்துக் கொண்டார்.
அமெரிக்காவின் 14 ஆவது ஜனாதிபதியாக அவரைக் குடியரசு கட்சி
தேர்ந்தெடுத்தது.மக்களும் அவரை ஓட்டுப் போட்டு வெள்ளைமாளிகைக்கு அனுப்பினார்கள்.
இத்தனை சம்பவங்களும் எனக்கு நினைவில் ஓடுவதற்குக் காரணம்,
அன்று நான்காம்தேதி இரவில் மக்கள் முகத்தில் பார்த்த நம்பிக்கையும்.,ஆனந்தக் கண்ணீரும் தான்.
1861ஆம் வருடம் ஏப்ரஹாம் லின்கனால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்,
மார்ட்டின் லூதர் கிங்க் போன்றவர்களால்
ஊட்டம் பெற்று,
இன்று 21ஆம் நூற்றாண்டில் ஒரு கறுப்புத் தோல் கொண்ட அமெரிக்கப் பிரஜை
நாட்டின் தலைமைத்தளபதியாக வருவதற்கு அடிகோலியிருக்கிறது.
கிட்டத்தட்ட 150 வருடங்கள்.
வேறு ஒன்றும் தோன்றவில்லை.
விடிவு என்பது வரக்காத்திருக்கிறது எல்லோருக்கும்.
துன்பத்திலிருப்பவர்கள் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்.
தீரமும் தன்னம்பிக்கையும்,என்றும் தளரா முயற்சியும் தான் வேண்டும்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்,வாழிய பாரத மணித்திரு நாடு.




Tuesday, November 04, 2008

ஒரு கோவில்.....இந்தியக் கட்டிடக் கலை
















































































நம் ஊர்க்கோவில் டெல்லி, மற்றும் நிறைய இடங்களீல் கட்டியிருக்கும் அதே ஸ்வாமி நாராயணா கோவில்தான்.
இந்த சிகாகோவில் இருக்கிற கோவில்கள் வெங்கடாசலபதிக்கு ஒன்று, ஸ்ரீராமனுக்கு ஒன்று, ஷீர்டி பாபாவுக்கு ஒன்று என்று நிலம் வாங்கிக் கட்டி இருக்கிறார்கள்.
அதையெல்லாவற்றையும் விட இந்தக் கோவில் கலை நுணுக்கத்தில் மேலோங்கி இருக்கிறது. சென்ற போது எடுத்த படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.













Sunday, November 02, 2008

ஒரு விவாதம்.. அறுபதுக்கும் பத்துக்கும்





ஊருக்குக் கிளம்பப் போகிறொம் என்ற முஸ்தீபுடன் பேரனுடன் ஒரு அதிகாலை
பேச உட்கார்ந்தேன்.
அவன் தன்னுடைய காலை நேரத் தியானம் முடித்துக்கொண்டு, உடல்பயிற்சியும்
செய்த பிறகு ,என்னுடன் வந்து உட்கார்ந்தான்.
அவன் முகத்தில் கேள்வி. ஒன் மோர் அட்வைஸ் செஷனா
என்ற கேள்வி அவன் முகத்தில்.

எங்கள் அறையில் படுப்பதால் எங்களுடனேயே எழுந்திருக்கும் வழக்கம் வந்துவிட்டது.
அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இல்லாத நாளகப் பார்த்து,
நேரம் இருக்கும் போது, மெஷின் துப்பாக்கி, வான்வெளி, குற்றங்கள் தண்டிக்கப் படவேண்டியவை
என்று ஒரே வேகமாகப் பேசுவான்.
எனக்கோ பயமாக இருக்கும். ஒரு வேளை அதிகமாகக் கற்பனை உலகத்தில் ,இருக்கிறானோ. நிறைய வீர தீரப் புத்தகங்கள் படிப்பதால் இத்தனை தீவிர சிந்தனைகள் வருகிறதோ என்று நினைப்பேன்.
''
பையா, இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டாம், அது உடலுக்கு நல்லதில்லை.
எதையும் தீர்மானம் செய்வதற்குள் தீர யோசிக்கணும்'' என்று நான் முடிப்பதற்குள்
பாய்ந்து வரும் பதில்கள்.

அப்படித்தான் என் பள்ளிப்பருவத்தையும் அவனுடைய தற்போதைய பாடங்களையும் நேற்று
பேசிக்கொண்டிருந்தோம். '' உனக்கு இவ்வளவு பெரிய புத்தகங்கள் இருந்ததா பாட்டி?
நீ ஆந்தையைப் பற்றி பிராஜெக்ட் செய்திருக்கியா.
ஆப்ரஹாம் லின்கன் பற்றி என்ன தெரியும்.'' என்றேல்லாம் கேட்டபோது நான் என்னுடைய ' நாலாப்பு'
எப்படி இருந்தது என்று யோசித்து முடிந்தவரை சொன்னேன்.

என்னுடைய தேடல்கள் கூகிளில் தான். மற்றும் புத்தகங்களிருந்து இப்போதுதான்
எனக்கு வேண்டும் என்பதைநிறையப் படிக்கிறேன் என்றும் சொன்னேன்

ஆந்தை சாப்பிட்ட உணவை(எலிகள்) எப்படித் திருப்பிக் கக்கிவிடும் என்றும்
அதை (எலியின் எலும்புகளை) அவர்கள்
பரிசோதனைக் கூடத்தில் அறுத்துப் பார்த்ததாகச் சொன்னதும்
எனக்கு வியப்பு தாங்கவில்லை.
''அந்த எலும்புகளை என் லாக்கரில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் சீல் செய்து வைத்திருக்கிறேன்' என்று
வேறு சொன்னான்.
அது நல்லதில்லையே தொத்து நோய் ஏதாவது வந்துவிடாதா என்றதும், நாங்கள் எல்லோருமே அப்படித்தான் வைத்திருக்கிறோம்,ஒன்றும் வராது''என்றான்.
எதற்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும் என்றேன். 'சுற்றுச் சூழல் பற்றி தெரிந்து கொண்டால்தானே
நாம் ஒழுங்காகப் பிழைக்க முடியும் என்று பதில் வந்தது.

.
நீ எதையாவது டைசெக்ட் செய்திருக்கிறாயா??
நான்; ஏதோ பூக்களைப் பிரித்துப் பார்ப்போம். ஒரு தவளை, ஒரு காக்ரோச்,ஒரு எலி டைசெக்ட் செய்திருக்கிறேன்''
அதுவும் நான் கல்லூரிக்குப் போனபோதுதான் என்றதும்,

உனக்கு ரொம்ப ஸ்லோ எஜுகேஷன் இல்லை??? என்று வேறு கேட்டான்.
நான் இந்திய கல்விமுறையைச் சோதிக்கும் பாட்டிலிருந்து விடுபட ,அப்படிப் படித்தே நம் ஊரில் ஏகப்பட்ட விஞ்ஞானிகள் வளர்ந்தார்கள்,இருக்கிறார்கள் என்றும்
மேற்கோளோடு எடுத்துச் சொன்னேன்.

நான் மேம்போக்காக , ' பரிசோதனைன்னு சொல்லி கினிபிக் எல்லாம் கொல்லறாங்களே
அது தப்புனு தோணுகிறது' என்று சொன்னதும்.
அப்படிப் பார்க்கப் போனால் ''நீ செடியிலிருந்து பூவைப் பறிக்கிறதும் தப்புதான்.''
பூ செடியிலிருந்தால்தான் அந்தச் செடிக்கு நல்லது. நீ அதப் பறித்து சுவாமிக்கு வச்சு அது வாடிப் போய்க்
குப்பைக்குப் போகிறது.'' என்றான்.

ஒருவேளை மனிதர்களை வைத்துப் பரிசோதித்தால் இன்னும் பலன் கிடைக்குமோ என்னவோ என்று என்னை யோசனையோடு
பார்த்தான். என்னிடம் என்ன பதில் வருமென்று சோதனை செய்கிறான் என்று புரிந்தது:)
எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. தாத்தா வாசனை பேரன் பேரில் பட்டிருக்கிறது என்று. அவருக்குத் தான் இந்தச் செடியில் பூக்களைப் பறிக்கிறது எல்லாம் பிடிக்காது.

அவனுடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே வித்தியாசமாகவே எனக்குத் தெரியும்.
கொஞ்ச வருடங்களா இருக்கின்றன அவனுக்கும் எனக்கு இடையில்.
ஐம்பது வருடங்கள்.!!!




Saturday, November 01, 2008

ஹாலோவீன் இரண்டாம் கட்டம்





































































































முந்திய பதிவு ஹாலோவீன் தின கொண்டாட்டங்களைப் பற்றியது. அதில் விட்டுப்போன படங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் வலையேற்றுகிறேன்.
ரசிக்கும்படியாக் இருக்கும் என்றே நம்புகிறேன்.












Thursday, October 30, 2008

TEST pathivu

தமிழ்மணத்துக்கு அனுப்ப முடிகிறதா.

முக்காலேமூணு வீசம் சினிமா..மூன்றாம் வாட்டி

அறிமுகம் தேவையில்லாத தாரகைகள் அமலாவும்,ரேவதியும்.

எனக்கு மிகவும் பிடித்த த்ற்கால(?) நட்சத்திரங்கள்.



இது கவிதாயினி அம்மா எனக்கு மூணாவாட்டி சினிமா பத்தி எழுதச் சொன்ன
அழைப்புக்கு முந்தின அழைப்பு:) ]]]]





புதுப்பெண் பண்டரிபாய்,அம்மாவாகி,பாட்டியாகி,ம்ம்ம் மறைந்தும் விட்டார்.
இதே போல எம்.வி. ராஜம்மா படம் கிடைத்தும் பதிவில் ஏற்ற முடியவில்லை:(






நம்ம மோஹனாங்கி.விகடனில் இப்படி இருந்தார்கள்








எல்லோஒருக்கும் அம்மா வேஷம் போட்டாலும் வெகு அழகான் அம்மாவாகக் கடைசி வரை இருந்தார். என்ன தமிழ் உச்சரிப்பு!!!







இந்த ஜோடி சேவை செய்ய வந்த ஜோடி. சந்தோஷமாக இருந்துவிட்டு வருந்தி மறைந்தனர்.









இவர் தனி ஹீரோ.எங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தவர். ஜெய் சங்கர்.










அம்மா ஆகிவிட்ட ஜோ. இனிமை.













அவங்க வீட்டுக்காரர், சிவகுமாரின் புதல்வன் என்பதாலியே பிடிக்கும்:)















இவங்களைப் பற்றிச் சொல்லறத்துக்கு நிறையப் பேரு இருக்காங்க. அம்பியைத்தான் மறக்க முடியவில்லை:)
















ஸ்ரீவித்யா...படம் கூட வந்தூவிட்டதாம் இவர் வாழ்க்கையைப் பற்றி.




அந்த காந்த விழிகளை மறக்கவே முடியாது.

















நாடோடி மன்னன்.அலுக்காமல் சலிக்காமல் சிரித்துவிட்டு வரலாம் இவர் படங்களில் அவ்வளவு அழுகையும் இருக்காது.


















காதலித்து,மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டாடியவர்.




















டி.எஸ் பாலையா..காதலிக்க நேரமில்லை,தூக்குத்தூக்கி,ஊட்டி வரை உறவு ,தில்லானா மோஹனாம்பாள், பாகப்பிரிவினை(அந்த சிங்ராம் பய)
இந்த சினிமாக்களில் எல்லாம் மிகவும் ரசித்தேன்.
விரசமில்லாத வசனங்களை எப்போது பார்க்க,கேட்கப் போகிறோம்:(






























இளைய தலைமுறையினரின் 'தல'
வார்த்தைகள் தான் வேறு. நாங்கள் அப்பொது ஜெய்ஷங்கரை ரசித்தது போல
இப்போது புதிதாக வரும் அனைவரையும் இருபதுகளில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள்.
மக்களுக்கு பொழுதுபோக்காக வரும் அம்சங்களைத் தரும் விதத்தில் சினிமா மாறிவிட்டது.
மாற்றம்தானெ நிரந்தரம்.
அதனால சினிமா பற்றிப் பதிவுகளையும் நான் மாறிய பிறகு போடலாம் என்று நினைக்கிறேன்:0)
விடு ஜூட் மது. !!!
சுபம்,
THE END.






































































இவங்களுக்கு முதலில் தீபாவளி நல் வாழ்த்துகள் சொல்லிக்கறேன்.
























நவராத்திரிபதிவு 5

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். ஶ்ரீ பட்டீஸ்வரம்  துர்கா. 1956   திருமங்கலம் கொலு நான் சிறப்பாக நினைப்பது பிறந்த வீட்டுக் கொலுவைத...