Friday, March 18, 2016
Thursday, March 10, 2016
தண்ணீர் ராசி!
| குடங்கள். கவிழ்த்து வைக்கக் கூடாது என்று பாட்டி சொல்வார் |
Saturday, March 05, 2016
ஒரு சிறு குறிப்பு
சிலர் பிறப்பார்கள் வாழ்வார்கள் மரிப்பார்கள்.
சிலருக்கே வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக அமையும்
எதையாவது சாதிக்கவேண்டும் என்கின்ற
ஆர்வம் எல்லோருக்கும் இருப்பதில்லை.
நானே ஒரு உதாரணம்.
திருமணமான புதிதில் வேலை நேரம் போக
உலாவச் செல்வது உண்டு.
இரவு ,நடு இரவு வரை பெரிய ட்ராஃப்ட்ஸ்மன் பலகையில் வெள்ளைத்தாளில் பின்ஸ் குத்தப்பட்டு வரைந்து கொண்டிருப்பார்.
நானும் கூட உட்கார்ந்திருப்பேன்.
வெறும் தண்ணீர்+காற்றில் ஓடும் வண்டியை அமைப்பதில்
ஈடுபட்டிருந்தார்.
யாரிடமும் இருந்தும் உற்சாகம் கிடைக்காவிட்டாலும்
கேலிகள் கிடைத்தன.
அதே போல் ஒரு சின்ன மோட்டாரை வாங்கி அதை இயக்கவும் செய்தார்.
மேலே பணம் போட வசதி இல்லை.
வேலை செய்த தொழிற்சாலையில் உழைப்பு அதிகம்.
ஒவ்வொரு சக ஊழியரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார்.
டிசம்பர் வந்தால்,எல்லா ஊழியர்களின் ஜாப் கார்ட் என்பதில் அவரை
அவர் நடவடிக்கைகளைப் பார்த்து மதிப்பீடு கொடுத்தால் தான் அவர்களுக்கு மேற்கொண்டு
சம்பளம் உயரும்.
வேலையில் சலிப்புக் காண்பிப்பவர்களை நல்ல வார்த்தை சொல்லி
வேலை செய்ய வைத்து அவர்களுக்கு நல்ல
சம்பள உயர்வையும் சிபாரிசு செய்து விடுவார்.
அத்தனை உள்ளங்களின் வாழ்த்துகள் தான் எங்களை இன்னும் நல்லபடியாக
வைத்திருக்கின்றன.. நன்றியுடன் மிஸஸ்.சிம்மு.
Singam 76....March
Friday, March 04, 2016
எண்ணங்கள் இணைந்தால் இருத்தல் சுகம்.
![]() |
| எண்ணங்கள் இணைந்தால் |
![]() |
| Add caption |
Wednesday, March 02, 2016
Independance
ஒருவர்தான் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வைத்தவர்.
அவருக்கு சுதந்திரம் பிடிக்கும். அதனால் என் சுதந்திரத்தை மதித்தார்.
மற்றவர்கள் பாதுகாப்பு என்ற அன்பின்
வட்டத்தில் என்னை வைத்துவிட்டார்கள்.
நான் அவர்கள் இஷ்டம் போல்
இருக்க விட்ட நாட்கள்
நினைவுக்கு வருகிறது. தடை விதித்ததில்லை.
அவர்கள் பொறுப்புகளைச் சுமந்து
பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டார்கள்.
எங்களுக்கும் ஆதரவு தந்தார்கள்.
இப்பவும் சுதந்திரம் வேண்டும்.
தங்கக் கூடு பாதுகாப்பு தான்.
என் மாமரமும் மகிழமரமும்,
பாரிஜாதப் பூக்களும் ,செம்பருத்தியும் இல்லையே .
ஒரு நன்றி இல்லாத அம்மாவின் புலம்பல்.
Tuesday, March 01, 2016
தலை தப்பியது....3
ஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும் எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்
அடக்கி வாசிக்கிறாய் என்று கேட்டேன்.
சு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.
கொஞ்சம் சிரி.முகத்தை இனிமையா வச்சுக்கோ.
ராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு
நகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி
32 வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க் மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.
எல்லோரும் அவரவர் வண்டியில் கிளம்பினோம்.
இவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.
குழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.
சுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும் கௌரிஷங்கர் ஹோட்டலுக்கு விரைந்தோம்.
எங்கள் பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.
சிங்கம் முதலில் போய் 14 நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..
சின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.
எதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார
மெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.
சந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்
கண்டு கொள்ளவில்லை.
சிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு
இந்த ஹேர்டூ செய்து இருக்கிறாள்.
என்று சொல்லவும்
தாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.
எல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்
படங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.
போகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை
பார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.
சாப்பாடும் முடிவுக்கு வந்தது.
பீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய
வெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி
விரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில் வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.
சுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக இருப்பதாக நினைப்பு என்று சிரித்தாள்.
இல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள் தானே சப்போர்ட் என்றேன்.
சொன்னால் போச்சு. நாமும் கணவர்களை சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..
எனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு
நகர மற்ற எல்லோரும் வெளியே வருவதைப் பார்த்தோம்.
உமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ் நாம் எல்லோரும் மலம்புழா போய் வரலாமா
என்று கேட்டபடி வந்தார்.
| Add caption |
Subscribe to:
Posts (Atom)
அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.
வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...





