 |
| பசுமலை குன்று |
 |
| புதுக்கோட்டை |
 |
| திருமண அழைப்பிதழ் |
 |
| மீனாக்ஷி கோவில் மண்டபம் |
 |
| பசுமலை சாலை |

திண்டுக்கல் நாட்கள் பறந்தோடின. நடுவில் தாத்தா பாட்டி காலம் சென்றது. அப்பாவுக்கு பசுமலை,மதுரைக்கு மாற்றலானது. மீண்டும் மதுரை என்பதே இனிப்பாக இருந்தது
ஆபீசும் வீடும் இணைந்தது இருக்கும்.வாசலில் மண் மெழுகிய முற்றம்.
அதற்குப் பின்னால் அழி போட்ட இரும்புக் கதவுகள்.
அதற்கப்புறம் இரண்டு கதவுகள். ஒன்று அலுவலகம்.
மற்றொன்று வீடு. சுற்றி வர வயல்கள். சுண்டைக்காய்ச் செடி. நந்தியாவட்டை மரம். செம்பருத்தி,போகன்வில்லா என்று கிளி கொஞ்சும் வீடு.
வீட்டுக்குள்ளயே கிணறு.
அந்தத் தண்ணீரும் நன்றாகத்தான் இருந்தது. அம்மாதான் காய்ச்சிதான் சாப்பிடணும் என்று முனைப்பாக இருப்பார்.
பசுமலை நாட்கள் பசுமையான நாட்கள்.
திருமணம், குழந்தை பிறந்தது எல்லாம் இங்கதான்.
நான் புதுக்கோட்டைக்குப் போனேன். அம்மா அப்பா வும் தம்பியும்
ராமேஸ்வரம் போனார்கள்.
புதுக்கோட்டையில் மாடிவீடு.. கீழேகிணறு. குட்டிக் குடமாகத் தண்ணீர் கொண்டுவந்துவிடுவேன்.
பிறகு பிரசவ நேரம் அருகில் வரவர எனக்கு உதவியாக இருந்த நார்த்தாமலைப் பாட்டி,தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
இவர் வொர்க்ஷாப் விட்டு வர இரவு ஒரு மணியாகும். அதுவரை எனக்குத் துணையாக வராந்தாவில் படுத்துக்கொள்ளும் பாட்டி. இவர் வந்ததும்.,பாப்பா
நாதாங்கியைப் போட்டுக்கோன்னு கீழே போய்விடும். எத்தனை நல்ல மனசு.
செவ்வாய் வெள்ளி தவறாமல் எனக்குக் கீழே இருக்கும் குளியலறையில் எண்ணெய்க் காய்ச்சித் தலையில் தேய்த்துவிடும்..
ம்ம்ம்ம்..அந்த அன்பும் ஆதரவும் இப்பொழுதெல்லாம் கொடுக்க யாருக்கு நேரமிருக்கு.
அடுத்த ஸ்டாப் சேலம். கேஹெ ச்.எம்.எஸ் காலனி.,பெரமனூர்
இங்கு கிணறு கிடையாது. மேட்டுர் தண்ணீர் காம்பவுண்டுக்குள் குழாயில் வரும்..
அதைக் கொண்டுவந்து நிரப்பிக் கொள்ளவேண்டும்.
இங்குதான் சரஸ்வதி யை நினைத்துக் கொள்ளவேண்டும்.
எந்த ஜன்ம உறவோ. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும்,அந்தச் சின்னப் பெண் 14 வயதே இருக்கும். நான் கொண்டு வரேன் மா என்று நான் கு குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிவிடுவாள்.
என்னைவிட்டு அகல மாட்டாள். என்னுடனே சாப்பிட்டு, என்னுடனே உறங்கி இரவு ஏழு மணிக்குதான் வீட்டுக்குப் போவாள் . அன்பு சரசு எங்கே இருந்தாலும் நன்றாக இரு.
மீண்டும் தொடரலாம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்