வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள்.
சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந்தைக் குரல் ராஜேஸ்வரி அம்மா குரல்களைக் கேட்டு
வளர்ந்த பொன்னான நேரங்கள் வானொலிக் காலங்கள்.
முதன் முதல் அவர் குரலை ''மலரோடு விளையாடும் தென்றலே
வாராய் என்ற பாட்டை 1958இல் கேட்டிருப்பேன் என்று
நினைவு. சுசீலாவின் குரலுக்கு ஒரு மாற்றுக் குரலாக
அமைந்தது. நானும் தோழியரும் அவ்வளவு
சீக்கிரம் அவர் குரலுக்கு மாறவில்லை.
பிறகு வந்த சிங்கார வேலனே தேவா பாட்டு
எங்கள் மனதை எல்லாம் மாற்றிவிட்டது.
அப்படியே அந்த மயக்கம் தொடர்ந்தது.
இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள்
மிகப் பிரபலமாயின.
என்றும் நம் நினைவில் அழியாத குரலாக அவர் நிலைத்திருப்பார்.
10 comments:
குழந்தைக் குரல் ராஜேஸ்வரி அம்மா யுவதி குரலிலும் பாடி இருக்கிறார்! துன்பம் நேர்கையில் யாழெட்யத்து நீ பாடலும், புது பெண்ணின் மனதைத் தொட்டு பாடலும், ஓ ரசிக்கும் சீமான் வா பாடலும் அந்த வகையில்...
மலரோடு விளையாடும் தென்றலே நீ வாராய் ... என்ன ஒரு பாடல். எங்கள் தளத்தில் கூட இந்தப் பாடலைப் பகிர்ந்திருக்கிறேன்.
அருமையான பதிவு. ஜானகி அம்மாவுக்கு ஒரு நினைவஞ்சலி.
ஜானகி அம்மா மிகவும் திறமையான ஆர்ட்டிஸ்ட். எங்கள் தலைவர் SPB யைக் கண்டெடுத்தவர். எந்தக் குரலிலும் பாட வல்லவர். குரல் ஜாலங்கள் தெரிந்தவர். என்றும் அவர் குரல் நம்மோடு இருக்கும்.
இசை அஞ்சலி அருமைஅக்கா , எல்லா பாட்டும் பிடித்தாலும் கடைசி பாட்டு மிகவும் பிடிக்கும்.
இசைக் குயில்கள்....
ஜானகி அம்மாவுக்கு அஞ்சலிகள்.
அன்பின் ஶ்ரீராம் , உண்மைதான் மா. மலரோடு விளையாடும் பாட்டு திண்டுக்கல்லில். கேட்டது. அந்த 60 கள் பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும். பாதிக்கு மேல் தெலுங்கு இறக்குமதி.:)
ராஜேஸ்வரி அம்மாவின் குரல் மிக இனிமை. சிறுவயதில் ஒரு சின்னப் பெண் தான் பாடுகிறர் என்று நினைத்தேன்.
ராஜெஸ்வரி அவர்களின் புதுப்பெண்ணீன் பாட்டு மிக மிக அருமை. குதூகலமாகப் பாடும் இளம் மங்கையின் குரல். நன்றி மா ஶ்ரீராம். ஜானகி அம்மா வந்த பிறகு இவருக்கு பாடும் சந்தர்ப்பங்கள் குறைந்தன.
வாழ்க வளமுடன் அன்பு கோமதிமா. எனக்கும்மிகப் பிடிக்கும். அந்தத் தமிழ் உச்சரிப்பு அத்தனை அருமையாக இருக்கும். குரலும் இனிமை. நன்றிமா
அன்பு மாதேவி நலமுடன் இருங்கள். எல்லாமே. இலங்கை வானொலியில் கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்கள். மேல் உலகிலும் அவர் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
Post a Comment