எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
கூகிள் படம்:)
தம்பி ரங்கன்.
கோவில் பிரகாரம்.
மதுரையை நெருங்கும் நேரம் திருப்பரங்குன்ற சாலை.
கோவில் பிரகாரம்.
மதுரையை நெருங்கும் நேரம் திருப்பரங்குன்ற சாலை.
அடுத்த பயணம் அடுத்த வாரம்.:)
பட உருவில் அவர்களை இணைத்துக் கொண்டேன்.
குமரித் தெய்வத்தை வழிபட்ட கையோடு மதுரையை நோக்கித்
திரும்பியது வண்டி.
தென்காசியில் சாரலை அனுபவித்துக்கொண்டே பக்கோடா
வாங்கி ருசித்ததாக ஒரு நினைவு. கடலை மிட்டாய்ப் பிரியனான
தம்பிக்காக அதையும் வாங்கிக் கொண்டோம்.
இரண்டு மணி நேரத்தில் பழங்கா நத்தம் வந்து விட்டது.
பெரியவர்களுக்கு அலுப்பு இருந்தாலும்
அடுப்பை மூட்டி சாதம் வடித்துத் தயிர்சாதம் செய்ய முடிந்தது. பின் வீட்டில்
பாட்டியின் தங்கை குடி இருந்ததால் தயிரும் பாலும் கிடைத்தது:)
ரங்கச் சித்தி பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார்.
குசும்பும் ஜாஸ்தி. அவர்கள் வீட்டிலும் இரண்டு பேரன் ஒரு பேத்தி.
இவர்கள் வீட்டுக்கு அழைக்கப் பட்ட சிங்கத்தை
வளைத்துப் போட்டது நான்:)அது பத்து வருடங்களுக்குப்
பிறகு நடந்த கதை:)
யாருக்கு மாப்பிள்ளை யாரோ ...இதுதான் உண்மை.
இந்த அருமையான அழகான பயணத்தில் என் நினைவில்
இருந்ததைப் பகிர்ந்தேன்.
அப்பாவிடம் கேட்டிருந்தால் அழகாகச் சொல்லி இருப்பார்.
அப்படி ஒரு மோகம் தன் ஊரின் மேல்.
1995 டிசம்பரில் தன் ஊருக்குப் போய் வந்தார். நானும்
போயிருக்க வேண்டியதுதான். அப்போது பார்த்து
எனக்கு ரத்த அழுத்தம் கூடிப் போய்த் தேவகியில்
அனுமதிக்கப் பட்டேன். பாவம் அப்பா. தவித்துப் போனார்.
அப்போதிருந்த டாக்டர் என்னை நன்றாகப் பார்த்துக்
கொள்வதாக உறுதி அளித்ததும் அவர்கள் அனைவரும்
கிளம்பினார்கள்.
நீண்ட காலத்துக்குப் பிறகு 2019இல் நானும் பசங்களும் போனோம்.
அப்பாவின் பரவசத்தை என்னால் அந்த ஊரில்
உணர முடிந்தது.
எங்களூர் நம்பி எல்லோரையும் காப்பார்.
இதுவரை என்னுடன் பயணித்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும்
நன்றி. வாழ்க வளமுடன்.





5 comments:
அப்போதைய திருப்பரங்குன்றம் சாலை எவ்வளவு மரங்களுடன் அழகாக இருக்கிறது!
// வளைத்துப் போட்டது நான்//
அப்படியா? நீங்கள் விரும்பி அதன்பேரில் நடந்த திருமணமா?
அந்தப் பயணம் இனிதே நிறைவா?
இனிமையான நினைவுகள்... இனிக்கும் பயணம். உங்களுடன் நாங்களும் சேர்ந்து பயணித்தோம். ஒவ்வொரு நினைவும் பொக்கிஷம் தான் மா... இங்கே சேமித்து வைத்தது சிறப்பு. நாங்களும் படித்து ரசித்தோம். நன்றி.
அடுத்து வரும் பதிவுகளுக்கான காத்திருப்பில் நாங்களும்....
மிக நன்றிமா.ஆமாம் ஶ்ரீராம். இந்தப் பயணம் இதனுடன் பூர்த்தி. கூடப் பயணித்தது தான் சிறப்பு. இன்னும் எழுத ஆசைதான். முடியவில்லை:) சிங்கத்தின் அம்மா முடிவு செய்த திருமணம் மா. ஆரம்பித்து வைத்தது நான். பழைய கதை . வலைப்பக்கம் ஆரம்பித்த புதிதில் பதிவு செய்த நிகழ்வு. பெண் பார்க்க வந்த அன்றுதான் முதலில் பார்த்துக் கொண்டோம். இருவருக்கும் பிடித்து விட்டது. சில பல விஷயங்களில் இழுத்துப் பிடித்த போது இவரைத்தான் ....என்று சொல்லிவிட்டேன்.:)))))
அன்பின் வெங்கட், தொடர்ந்து வந்ததற்கு நன்றி மா. பெற்றோருக்கு டயரி எழுதும் பழக்கம் இருந்ததால் , நினைவுகளுடன் விவரங்களையும் பதிய முடிந்தது. முடிந்த போது எழுதுகிறேன். உங்கள் அன்பு தான் இதில் சிறப்பு.
படங்களும், பழைய நினைவுகளும் பகிர்வு அருமை.
Post a Comment