Blog Archive

Tuesday, April 25, 2023

நெஞ்சம் இருக்கு துணிவாக...

வல்லிசிம்ஹன்அன்பின் அனைவருக்கும் இனிய நாட்களுக்கான வாழ்த்துகள்.

இணையப் பக்கம், வலைப்பூ, நட்புகள் அனைவரிடமும் நெடு நாட்களாகத் 
தொடர்பில் இல்லை.

முதுகெலும்பு நேராக இல்லை அதனால் வலி என்று ஆரம்பித்த பிரச்சினை,
வீட்டுக்கு வந்த விருந்தாளியின் தாராளக் கொடையால்
தொற்றாக  என்னைப் பிடித்து இருவாரங்களாகச் 
செல்லம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது:)

நமக்கும் முதுமைக் காலத் துணை இது என்று ஏற்றுக் கொள்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கால நிலைகள் இந்த ஊரில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
70 டிகிரி வெய்யில் ஒரு நாளைக்கு. 30 டிகிரியில் ஆரம்பிக்கும் குளிர் மறு நாளைக்கு.

இது ஏன் என்றால் வசந்த காலமாம்.
மனிதர்களுக்குத் தான் வசந்தம் தடுமாறும் என்றால்
வெப்ப தட்பமுமா.:))))))

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டாவது பேரனின் ரொபாடிக்ஸ் போட்டி 
இங்கிருக்கும் டெக்ஸஸ் ,டல்லசில் நடக்கப் போகிறது.
இருப்பதிலிலேயே இளையவன் இவன்.
முனைப்போ தாத்தா போல.
போட்டி போடுகிறவர்கள் பல தேசத்திலிருந்து
வருகிறார்கள்.
அந்தக் குட்டி ரொபாட் பாஸ்கெட் பால் விளையாடுகிறது.

வெற்றி தோல்வியைப் பற்றி நினைக்கவில்லை.
 1000 பள்ளிகள் மாணவர்கள் போட்டி போடும் இடத்தில் இவன் குழு
சென்றிருக்கிறது.
என் உடல் நிலை காரணமாக மகளால் செல்ல முடியவில்லை.

அதுதான் வருத்தம்.
கந்தன் கருணையில் பேரன் அனைத்து சவால்களையும் சந்திக்க
வேண்டும்.

மீண்டும் சந்திக்கலாம். நன்றி.

Thursday, April 20, 2023

சளி புதிது கதை பழையது புதுப்பெயர் கொரோனா

வல்லிசிம்ஹன்
ஒரே ஒரு மாற்றம்.
அப்போது பக்க விளைவுகள் இல்லை. வயதும் பத்து வருடம் குறைவு.
இப்போது வந்த நோயும் தீவிரம்.

ஒருவரும் மாஸ்க் அணிவதில்லை. பயமும் விலகிவிட்டது
பாதிக்கு மேல் தடுப்பூசியில் நம்பிக்கை வைக்கவில்லை.

மூன்று வருடங்களாகக் கடந்து போன 
தொற்று இப்போது எங்கள் வீட்டைப் பிடித்தது. இரண்டு வீடு தள்ளியும் ஒருவருக்கு வந்திருக்கிறது



Thursday, March 21, 2013
ஊரைச் சுற்றும் சளியும் தொந்தரவுகளும்

அடப் பாவமே, சளி பிடிச்சுடுத்தா!!

மூக்கு    ஆதாரங்கள்

எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?

நாங்க எல்லாம் ஸ்பெஷல் இல்ல.!!!
 




 ஏதோ ஊருக்குப் போனோமா, கடமையைச் செய்தோமா
வந்தோமான்னு இருக்கத் தெரியாதே'
பச்சத்தண்ணியைத் தலையிலே  விட்டுக்கோன்னு  மாமியாரா விரட்டினார்?

என்னவோ இன்னும்  முப்பதிலியே  நின்னுட்டதா  நினைப்பு./

நாங்க எல்லாம்  வெந்நீர் போட்டுக் குளிக்கலையா. உனக்கு மட்டும் பக்தி மிஞ்சி  இப்படி எல்லாம்  செய்யணும்னு தோணறது பாரு.

ஆஹச்!!

ம்ம் . தும்மு தும்மு. எல்லாம் வெளில வரட்டும்.

எனக்குன்னால் அத்தனை சுக்கையும் என் தலைல கொட்டுவியே!
இப்ப வீட்ல சுக்கே இல்லையோ???

''ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.''
மூக்குதானே கோளாறு.
வாயும் பேச வரலியா.

என்னா தொண்டையா? வரண்டு போயிடுத்தா. வெந்நீர் சாப்பிட வேண்டியதுதானே.

யாரோ சொல்லிப்பாங்க. எனக்கெல்லாம் கோல்டே
பிடிக்காதுன்னு.
அதுதான்  இப்படி வந்திருக்கு.

''ம்ம்ம்ம்ம்.!!!!!''

தோட்டத்தில தான் கற்பூரவல்லி  போட்டு இருக்கியே,
அந்தக் கஷாயம்  சாப்பிடலாமே.
துளசி டீ இருக்கு.

''ஹான்  ஹான். ''

அடக் கடவுளே இது ஹிந்தி சளியா!!!  ஹா ஹா

இப்படி படுத்துக் கொண்டால் எல்லாம் இங்க வருமா.
இரத்த ஓட்டமே இருக்காது. எழுந்துநடந்தால்
பாதி சளி போயிடும்.

இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.
நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும்   தொந்தரவாக இருக்கு.:)


மேல  இருக்கிற டயலாகெல்லாம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துக்கொள்ளவும்.

கோபம் வந்தால்  தமிழ் எங்க வீட்டில தடுமாறும்.)))









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
at March 21, 2013  

35 comments:
துளசி கோபால் said...
ஹாஹா............ ஹாஹா...

எனக்கு Gகோல்ட் ரொம்பப்பிடிக்கும்ப்பா. சும்மாப் பிடிக்காதுன்னு பொய் சொல்லுவானேன்?

செஸ்ட் கோல்ட் மருந்து சாப்பிடணும். அம்ருதாஞ்சன், விக்ஸ் எல்லாம் தடவிக்கணும். ஒரே வாரத்துலே சரியாகிரும்.

மருந்து வேணாமுன்னா..... ஏழு நாள் கஷ்டப்படணும் கேட்டோ!!!!

டேக் கேர்.

6:18 AM 
கோமதி அரசு said...
இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.
நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும் தொந்தரவாக இருக்கு.:)//

உண்மை அக்கா, உடம்பு முடியவில்லையே என்று அக்கடா என்று படுக்க முடியாது!
அவர்களுக்காக எழுந்து கொள்ள வேண்டி உள்ளது.
அருமையாக சொன்னீர்கள்.
6:57 AM 
வல்லிசிம்ஹன் said...
gold பிடிக்காதவங்க இருப்பாங்களா துல்சிமா.:) சேலம் போனபோது குடிக்கிற தாண்ணிர் மாறி,பக்திசிரத்தையா கிணற்றுத்தண்ணிரில் தலை முழுகியதால் பிடிச்சது. 7 நாட்கள் ஓடியாச்சு. சளியும் ஓடிடும்:)

7:12 AM 
வல்லிசிம்ஹன் said...
அவஸ்தைப் பட்டுப் போய் விடுகிறார்ப்பா. பாவமா இருந்தது.இதைத்தவைர ஸ்கைப்ல வர பிள்ளைங்க கிட்டயும் உங்க அம்மாக்கு ஜுரம்,தலைவலி இப்படிஒரு வரி சொன்னால் போதும்,. அக்குப்ரஷர்லிருந்து நாட்டு மருந்துகள் வரை வரிசையாக ஈமெயிலில் வந்துவிடும்.அக்குப்ரஷர் உண்மையாகவே நல்ல பலன். நகைச்சுவைக்காக எழுதினேன். இனி எல்லாம் சுகமே:)

7:16 AM 
priyamudanprabu said...
:)

7:19 AM 
வெங்கட் நாகராஜ் said...
:) ஜலதோஷம் வந்தால் கஷ்டம் தான்.

துளசி டீச்சர் சொன்ன ஏழு நாட்கள் கணக்கு இங்கே ஐந்து நாட்களாக சொல்வோம்!

மருந்து எடுத்துக் கொண்டால் ஐந்து நாட்களில் சரியாகி விடும்! எடுத்துக் கொள்ளாவிட்டால் Five Days-ல சரியாகிடும்னு! :)
8:07 AM 
sury siva said...
// மேல இருக்கிற டயலாகெல்லாம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துக்கொள்ளவும்.//

எங்க அப்பாதுரை ஸார் முந்திண்டு மொழிபெயர்த்து அதற்கான சம்பளத்தை வாங்கிண்டு போயிடுவாரோ
அப்படின்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலீஷிலே நானே மொழி பெயர்த்துட்டேன். நன்னா இருந்தா நாலு
பேருட்ட சொல்லுங்க... இல்லைன்னா நரசிம்மன் ஸாருட்ட மட்டும் சொல்லுங்க...
some townu govaa, dutiyai didaaa
commaa so dont know weee

green waterai head on poru mother in law drovu ?

somehowu even nowu thirtilee standinggu thoughttu.

wee all hot water prepareddu andu bathe u know , you only devotion balance so all do see u think why

haach

mm...mm.....haach haach....sneeez... all outtu commu.

aikku only all sukku my head le poru.

what ? now house in no sukku ?


m...m....m....


nose only planet river.
.

mouth also speak no vaa

what throat aa !! paarched gonaaa ! hot water eat want only..



somebody said. ai kku no gold dont like. that only this way came.

m...m...m...m

garden in camphor valli sow did u.
that decaution eat is not ?
thulasi tee is also yes.

' haan haan

oh god . this is hindi phlegm ....ha haa.


this way down lying u all here no come. blood run never. stand walk half phlegm get out .

this up bear no. i stand up. no . stood up.

i phlegm disturbed toiling.. but this man toiling troubled much more disturbance is.
s dialogue all english in translate u.
anger coming thamil we house le struggle .


சுப்பு தாத்தா.









8:09 AM 
வல்லிசிம்ஹன் said...
நன்றி பிரபு:)

8:17 AM 
வல்லிசிம்ஹன் said...
அதே தான் வெங்கட்.விக்ஸ், குங்குமப் பத்து,மஞ்சள் காய்ச்சி மூக்கில வாசனை பிடிச்சு,அக்குப் பிரஷர் செய்து கொண்டு, டீத்தண்ணி குடிச்சு, டோலோ 650 எடுத்து, வயிற்றுவலி வந்து இப்போ சளி ஓடிவிட்டது.வறட்டு இருமல்தான் பாக்கி.:)

8:21 AM 
வல்லிசிம்ஹன் said...
ஹைய்யோ சுப்பு சார். அதே சேம் இங்கயும் வந்துட்டதா.:)நல்லா இருந்தது.இவர் கவலைப் படுவதைப் பார்த்து என் ஜலதோஷம் வேற எங்கியோ போய்விட்டது.மிக மிக நன்றி.

8:24 AM 
திண்டுக்கல் தனபாலன் said...
ஹா... ஹா... அருமை அம்மா...

9:34 AM 
வல்லிசிம்ஹன் said...
நன்றி தனபாலன்.அந்தந்த நேரத்தில என் வேலைகளைக் கவனிக்காமல் படுத்துவிட்டல் ஹாலுக்கும் ,இந்த அறைக்கும் நடைதான். அத்ற்காக மத்தியானக் காப்பியாவது வருமா? வராது. அம்மா அப்பான்னு காப்பியைச் சுடவைத்தால் எனக்கும் ஒரு கப் கொடுத்திடும்மா என்பார்:)

9:47 AM 
Geetha Sambasivam said...
இப்போ தேவலையா? ஹிந்தி சளியா? தமிழ் ஜலதோஷம் இல்லையா? ஓகே, ஓகே. சீக்கிரமா சரியாகட்டும். கவனமா இருங்க.

12:19 PM 
அப்பாதுரை said...
ஹா.. வடை போச்சே..
க்ரீன் வாடர்னு பரக்க பரக்க ஓடி வந்தா சுப்பு சார் என்னை சதுரமா அடிச்சிட்டாரே?

குளிரெல்லாம் உடனே மருந்து சாப்பிடலைனா குணமாக மெள்ள ஏழு நாள் ஆகும்; மருந்து சாப்பிட்ட ஒரே வாரத்துல சரியாயிடும்.

12:31 PM 
வல்லிசிம்ஹன் said...
கீதா சுப்பு சார் மொழிபெயர்ப்பு பார்த்தீங்களா.:)

இவர் போட்ட போட்டில சளி துண்டக் காணோம் துணியைக் காணோம்னு சொல்ல ஆசைதான். மருந்துகளும் உதவி செய்தன.சரியாப் போச்சு.

2:46 PM 
வல்லிசிம்ஹன் said...
ஆஹா:)
துரை யூ மிஸ்ஸ்ட் த போட். நீங்கள் படகைத் தவற விட்டுவிட்டீர்களே:)

க்ரீன் வாட்டர் சதுரம்!!!ஹா ஹா.:)

2:52 PM 
sury siva said...
// ஹா.. வடை போச்சே..//

நான் என்ன செய்யட்டும்.? அது உங்களோட planet river.

சுப்பு தாத்தா.

3:10 PM 
வல்லிசிம்ஹன் said...
இப்ப எல்லாருக்கும் இந்த தோஷம் பிடித்துக் கொண்டதா. கிரகச் சாரம்!!!
ப்ளானட் வாட்டர் ப்ளானட் வாட்டர்(தலையில் மெல்லத் தட்டிக் கொள்ளவும்:)

3:25 PM 
ஸ்ரீராம். said...
சே.....நான் சொல்ல நினைத்ததை துளசி மேடம் சொல்லி விட்டார்கள்..! தோட்டத்திலேயே இருக்கிறார்களே...!!! :)

சுப்புத்தாத்தா தூள் கிளப்பறார்...

3:38 PM 
ஸ்ரீராம். said...
சளி போய் விட்டது இல்லையா?

3:39 PM 
sury siva said...
//கிரகச் சாரம்!!!
ப்ளானட் வாட்டர் ப்ளானட் வாட்டர்(தலையில் மெல்லத் தட்டிக் கொள்ளவும்//

No. it is planet juice.

subbu thatha

3:48 PM 
ராமலக்ஷ்மி said...
/எனக்குன்னால் அத்தனை சுக்கையும் என் தலைல கொட்டுவியே!இப்ப வீட்ல சுக்கே இல்லையோ???/

சரிதானே:))!

விரைவில் குணமாகட்டும்.

5:35 PM 
Geetha Sambasivam said...
//கீதா சுப்பு சார் மொழிபெயர்ப்பு பார்த்தீங்களா.:)//

படிச்சேன் வல்லி, தூள் கிளப்பறார், கலக்கல்! :)))))நான் எப்போவுமே ஜலதோஷத்துக்கு கன்ட்ரி மெடிசின் தான் சாப்பிடுவேன். சரியாயிடும். :))))))

5:45 PM 
இராஜராஜேஸ்வரி said...
இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன்.

உடல் நல்க்குறைவை விட மருந்துகளும் , குடும்ப்படுத்தல்களும் அறிவுரைகளும் தான் பயங்கரம் ...

6:22 PM 
வை.கோபாலகிருஷ்ணன் said...
//இதற்கு மேலத் தாங்காது. நான் எழுந்துவிட்டேன். நான் சளித் தொந்தரவில் கஷ்டப் படுவதைவிட இவர்
சிரமப் படுவது இன்னும் தொந்தரவாக இருக்கு.:)//

;))))) நல்ல நகைச்சுவைப்பதிவு. ! ஆஹ் ஹச்சு!

7:17 PM 
வல்லிசிம்ஹன் said...
ஆமாம் ஸ்ரீராம்.சளி நிற்குமா. ஓடிப் போய்விட்டது.
ஆமாம் தோட்டத்திலியே துளசி இருக்கிறார்.
கவலையே இல்லை.:)

8:10 PM 
வல்லிசிம்ஹன் said...
அன்பு ராமலக்ஷ்மி,அவருக்கு நாட்டு மருந்தே பிடிக்காது. வலுக்கட்டாயமாக ஏதாவது கொடுப்பேன். அதுதான் சுக்குக் கோபம்.:)

தலைபாரமெல்லாம் குறைந்து இப்பொழுது தேவலைம்மா. நன்றி.

8:16 PM 
sury siva said...
//அன்பு ராமலக்ஷ்மி,அவருக்கு நாட்டு மருந்தே பிடிக்காது. வலுக்கட்டாயமாக ஏதாவது கொடுப்பேன். அதுதான் சுக்குக் கோபம்.:)

தலைபாரமெல்லாம் குறைந்து இப்பொழுது தேவலைம்மா. நன்றி.//

Madam Ramalakshmi i know is an expert in translating English Poetry. But I can also translate from Tamil to English.

Love Ramalakshmi he national medicine take ear. weight forcing something giving. that vegetable piece sukku anger.

head weight down now normal mother thanks.

subbu thatha.
If you get again headache, I am not responsible. U started the game.
8:25 PM 
வல்லிசிம்ஹன் said...
வரணும் இராஜராஜேஸ்வரி.
முகமெல்லாம் இப்படி வீங்கி இருக்கே. சைனஸோ. ஹெட் கோல்டா, செஸ்ட் கோல்டா.
ஆண்டிபயாடிக் எடுத்துக்கலையா.

ஜலதோஷமே பரவாயில்லை என்று செய்துவிட்டார்கள்:)

8:26 PM 
வல்லிசிம்ஹன் said...
பதிவைப் படிச்சு உங்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதா. கோபு சார்.
:)

உங்கவீட்டு ஜல தோஷ விவரங்கள் இருந்தால் சொல்லுங்களேன்:)

8:31 PM 
வல்லிசிம்ஹன் said...
க்ரஹ ரசமா சுப்பு சார்?

ஹ்ம்ம். நன்றாக இருக்கும் போல இருக்கே.
வாழ்க்கைரசம். கிரஹத்திலும் ரசம். சரியா.!!!

8:33 PM 
Geetha Sambasivam said...
//subbu thatha.
If you get again headache, I am not responsible. U started the game.//

ஹிஹிஹிஹிஹி

2:23 PM 
வல்லிசிம்ஹன் said...
நான் ஒரு பதிவு ஆரம்பிக்கப் போறேன் கீதா,சுப்பு சார்.அதை யார் வேணா நகைச்ச்சுவையாத் தமிழ்ல எழுதலாம்.
அதை ஆங்கிலப் படுத்தும் பொறுப்பை சுப்பு சார்கிட்ட கொடுத்துடலாம் சரியா:)
அப்பப்போ துரைகிட்ட ஐடியா கேட்டுக்கலாம்.

மில்கும் ஃப்ரூட்டும் ஹாண்ட்ஸில் டேக்கி
கோரல் லிப்ஸில் ஸ்மைலை ட்ராப் பி
ப்யூட்டிஃபுல் பீகாக் வாகிங் ஸ்லோலி

இது என்தம்பி பாடுவான்:)//

3:36 PM 
ராமலக்ஷ்மி said...
@ sury sir,

:))!

4:21 PM 
கவியாழி said...
ஏழு நாள் சனியன் எல்லோரையும் கஷ்டப்படுத்தும் .சளி சிலருக்கு காய்ச்சல்,தலைவலி,மூக்கடைப்பு ,மூக்கில் ஒழுகுதல் ,நெஞ்சிறுக்கம் போன்ற எல்லா அவச்தைக்குபின் தானே போய்விடும்

Wednesday, April 12, 2023

நம் தவறு இல்லை

வல்லிசிம்ஹன்.  
 லக்கியத்தின் ஆளுமை!
*****************************
கம்ப ராமாயணம் - அயோத்தி காண்டம் - நகர் நீங்கு படலம் 129 வது பாடல் 

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான்.

ராமன் காட்டுக்கு செல்ல இருப்பதை தெரிந்து கொண்ட லக்ஷ்மணன் கோபத்தால் அனைவரையும் பழி வாங்குவேன் என்று சூளுரைப்பதை கேட்கும் ராமன், லக்ஷ்மணனுக்கு அறிவுரை கூறுவது போல இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. நதியில் நாம் நீராட செல்லும் போது நதியில் நீரில்லாமல் வற்றி போய் விட்டால் அதற்காக நதியின் மீது கோபம் கொள்ளலாமா, அது நம் விதி என்று எண்ணிக்கொள்ள வேண்டும் என்று ராமன் அறிவுரை கூறினான்.

கவிசக்கரவர்த்தி கம்பர் எழுதிய இந்த பாடலை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கவியரசர் கண்ணதாசன் "தியாகம்" திரைப்படத்தில் "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி" என்ற பாடலில் அழகாக எடுத்து சொல்லியிருப்பார். அந்த வரிகள்....

"நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா"...

செய்யாத குற்றத்திற்காக, வாழ்க்கையை இழந்து நிற்கும் நாயகன், தன் மன வேதனையை வெளிப்படுத்தும் பாடல் இது...

"பறவைகளே பதில் சொல்லுங்கள்...மனதுக்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்"...

"தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே...
 தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"...
அற்புதமான வரிகள் இவற்றினை கவியரசரை போன்ற ஞானிகளாலன்றி  வேறு யாராலும் எழுத முடியாது! 

மிக சிறப்பான சொற்றொடரில், மனதை  தொடும் அருமையான பாடல்!
Viji

குழந்தையை கொத்தப் போன பாம்பு... காப்பாற்றிய மயில்! Actor Rajesh | Bhupat...

Tuesday, April 11, 2023

வாழ்வில் நிறைவு தரும் செயல்கள்..






வல்லிசிம்ஹன்ஒவ்வொரு நாளும் மலரும் போது
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.
என்ற பிரார்த்தனையுடன் தான் எழுந்திருக்கிறோம்
அப்படியே அமையும் போது மனதுக்கு

நிம்மதி.
எங்கள் செல்வங்கள்  சேர்ந்து என் 75 ஆவது பிறந்த
நாளைத் தங்களுக்குள்
ரசித்துக் கொண்டாடினார்கள்.
அந்த அன்புக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

அப்பா,அம்மா, தம்பிகள், சிங்கம் என்று ஒருவரும் இல்லாத
காலத்தில் குழந்தைகளின் பாசமும்
வலை நட்புகளின் அருமை வாழ்த்துகளும் 
இந்த நாளை இனியதாக்கின. அனைவரும் அமோகமாக
இருக்க வேண்டும்.

! | Sivasankari | P...

Tuesday, April 04, 2023

வாழ்க தமிழ்...!

வல்லிசிம்ஹன்

ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.  இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.

ஒரு வாரம் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. 

அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார்.  
அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். 

சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக்கு தலைமையேற்க சென்றிருந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அந்த பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட  எண்ணி  தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவியாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார். 

காலை 8 மணி. 60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். 

நீதியரசர் அவர்கள், “தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்தனையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடுதேடியே வந்திருப்பேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....

ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா?" 
பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.

( அந்த 47 வார்த்தைகள்...)

(1)ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; 
(2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; 
(3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்;
 (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.

மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்

“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியப் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.

“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி. 

தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.

பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்.

பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!

 வாழ்க தமிழ்...! வெல்க தமிழினம்..!!

# தம்பி வீர ராகவன் அனுப்பிய செய்தி.


Monday, April 03, 2023

சுப்புடு......

வல்லிசிம்ஹன்

அந்த காலத்து குசும்பன் - சுப்புடு -நினைவஞ்சலி😓

சென்னையில் வருடந்தோரும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கிவிடுவார்கள்!

தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில்அதைக்காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது,

அதற்கு காரணம் சுப்புடு!

பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..!

பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு!

மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்!

அதற்குமுன்பெருமுறை ஜேசுதாஸை கச்சேரி செய்யவரும்முன்பு நன்றாக பயிற்சி எடுத்துவரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்!

ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சுப்புடுவை தாக்கினார்களாம்! (பாருங்க எவ்ளோ கொலவெறியை உண்டு பண்ற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்காரு!)

இளையாராஜாவின் இசையில் வெளிவந்த சிந்து பைரவி படம் பார்த்து சுப்புடு கூறிய வார்த்தைகள் " 25 வருஷத்த தமிழ் சினிமாவில வேஸ்ட் பண்ணிட்டீங்களேன்னுத்தான்"

 
"சுற்றளவைக் குறைத்தால் உலகம் சுற்றலாம்" இது நாட்டிய அரங்கேற்றம் செய்த பிரபல பாடகியின் மகளுக்கான விமர்சனம். 

"காதிலும் கம்மல்; குரலிலும் கம்மல்" - இது பிரபல சங்கீத வித்வான் ஒருவருக்கு. 

"கேதாரம் சேதாரமாகிவிட்டது" - இது பாடலைப் பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் சேர்த்து வைத்த குட்டு.

"best luck for next year" - இது ஒரு பிரபல இசைக் கலைஞருக்குத் தெரிவித்த அனுதாபம். 

இப்படி நறுக், சுருக் சொற்களில் காரசாரமாக விமர்சனம் எழுதி, இசை விமர்சனத் துறைக்குப் புத்துயிரூட்டியவர் சுப்புடு என்றழைக்கப்படும் பி.வி. சுப்பிரமணியம். இவர், மார்ச் 27, 1917 அன்று பர்மாவில், வெங்கட்ராம ஐயர், சரஸ்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். சிறுவயது முதலே இவருக்கு இசையார்வம் இருந்தது. சகோதரிகளுக்கு இசை கற்பிக்கவந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூலம் இசை கற்றுக்கொண்டார். மிமிக்ரியும் கைவந்தது. நடிப்பு, கேட்கவே வேண்டாம். பதினைந்து வயதிலேயே 'பிரஹலாதா', 'சீதா கல்யாணம்' போன்ற நாடகங்களை எழுதி நடித்தார். உயர்கல்வியை முடித்த இவருக்கு ரங்கூனில் கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. படிக்கும்போதே பள்ளி இதழில் எழுதிய அனுபவம் இருந்ததால், 1938ல் இசை பற்றிய சிறு விமர்சனக் குறிப்புகளை Rangoon Times பத்திரிகைக்கு எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின. 1942ல் போர் சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் நடந்தே இந்தியா வந்துசேர்ந்தார். சிம்லாவில் சில வருடங்கள் இருந்தார். பின் டெல்லியை அடைந்தார்.

டெல்லியில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். டெல்லியே இவரைச் சிறந்த இசை விமர்சகர் ஆக்கியது. ஓய்வுநேரத்தில் நாட்டியம், நாடகம், இசைக்கச்சேரி போன்றவற்றிற்குச் செல்வார். ஒருமுறை பிரபல இசைக்கலைஞர் ஒருவரது கச்சேரிக்குச் சென்றுவந்த சுப்புடு, அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை 'ஆனந்த விகடன்' இதழுக்கு எழுதி அனுப்பினார். அதில் "அந்த வித்வான் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான். ஆனால் 'தாயே நீ இரங்காய்' என்று பாடும்போது ஏன் 'இற்றங்காய்' என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தின் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் பக்கத்துவீட்டுப் பையன் மாங்காய் பறிக்கிறான் போலிருக்கிறது. நீ இறங்காவிடில் பல்லை உடைச்சிடுவேன் என்று சொல்கிற மாதிரி கொஞ்சம்கூட பாவம் இல்லாமல் இருந்தது. இந்த அதிகப்பிரசங்கத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்த ஆசிரியர் கல்கி, "உங்கள் அதிகப்பிரசங்கம் ஜோரைய்யா. மேலும் மேலும் எழுதுங்களைய்யா!" என்று பதில் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அதுமுதல் விகடனில் இசை விமர்சனம் வெளியானது. அடுத்து கல்கி, சதாசிவத்துடன் இணைந்து "கல்கி" இதழை ஆரம்பிக்கவே அதிலும் சுப்புடுவின் கைவரிசை தொடர்ந்தது. கல்கியையே மானசீக குருவாகக் கொண்டார் சுப்புடு.

விகடன், கல்கியைத் தொடர்ந்து மணியன் ஆசிரியராக இருந்த இதயம் பேசுகிறது இதழில் 16 ஆண்டு காலத்திற்கு மேலாக இசை விமர்சனம் எழுதினார். சுப்புடுவின் விமர்சனங்களில் நகைச்சுவை மிளிரும். அதே சமயம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இருக்கும். அவரது பேனா சிலருக்குத் தேளாகவும் சிலருக்குத் தேனாகவும் இருந்தது! அதனால் பல சர்ச்சைகளும் எழுந்தன. தஞ்சையில் இவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இவர்மீது தாக்குதல்களும் நிகழ்ந்தன. அதற்கெல்லாம் அஞ்சாமல் இவர் எழுதி வந்தார். இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது சபாக்களையும் இவர் கடுமையாகச் சாடியிருக்கிறார். "ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியேதான் நிற்பார்கள். 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல" - இது அவரது சாடல். இவரது விமர்சனத்தால் பாடகர்களுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததுண்டு. இவரது விமர்சனத்தால் சீண்டப்பட்ட சபாக்களும் 'Dogs and Subbudu not allowed' (நாய்களுக்கும் சுப்புடுவுக்கும் அனுமதியில்லை) என்று வாயிலில் எழுதி மாட்டுமளவுக்கு விரோதம் இருந்தது. . 

வார்த்தை ஜாலத்தில் படுசுட்டி சுப்புடு. ஒரு சமயம் செம்மங்குடி சீனிவாச ஐயர் "சுப்புடு என்னைத் தாக்குவது பற்றி எனக்குச் சந்தோஷம். அவர் தாக்கும்போதெல்லாம் எனக்கு நிறையக் கச்சேரி வாய்ப்புக்கள் வருகின்றன" என்று கிண்டலாகச் சொன்னார். அடுத்து மேடையேறிய சுப்புடு, "செம்மங்குடிதான் எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! அவர் தொடர்ந்து மேடைகளில் பேசலாமே? ஏன் பாடுகிறார்?" என்று சீண்டினார். இவ்வாறு பல வித்வான்களை பேச்சாலும், எழுத்தாலும் இறுதிவரை விமர்சித்து வந்தார் சுப்புடு. அதே சமயம் தகுதியுள்ள கலைஞர்களைப் பாராட்டவோ, ஊக்குவிக்கவோ தவறியதில்லை. சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, சஞ்சய் சுப்ரமணியம்
உன்னிகிருஷ்ணன், வயலின் ஏ. கன்யாகுமரி உள்ளிட்டோரை அவர்களின் இளவயதிலேயே அடையாளம் காட்டியவர் சுப்புடுதான். "நானும் கிட்டத்தட்ட 65 வருஷங்களாக இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாண்டலின் சீனிவாசைப் போல் ஒரு அவதார புருஷனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. என்னால் அவனது இசை மேதாவிலாசத்தை ஆய்வு செய்யவோ, எடை போடவோ இயலவில்லை" என்று மனமாரப் பாராட்டியிருகிறார்.
ஒரேநாளில் தொடர்ந்து பல கச்சேரிகளுக்குச் சென்றாலும், ஒரு துண்டுச்சீட்டில்கூடக் குறிப்பெழுதிக் கொள்ளாமல், இரவு பத்து மணிக்கு மேல் உதவியாளரை அழைத்து டிக்டேட் செய்வார் சுப்புடு. அது மிகச் சரியாகவே இருக்கும். அந்த அளவுக்கு நினைவாற்றல். காரணம் அவர் தன் இறுதிக்காலம்வரை செய்துவந்த யோக ஆசனங்கள்தான். கர்நாடக இசை மற்றும் தமிழிசை பற்றிச் சொல்லும்போது, "சங்கீத பிதாமகர்கள் என்று சொல்லுகிறவர்களுக்குத் தமிழ் தெரியாது. அதனால அவுங்க அவுங்க பாஷையில பாடினாங்க. அந்தப் பாட்டுக்கள் பிரபலம் ஆயிட்டுது. அதுதான் கர்நாடக இசைன்னு ஆயிட்டுது. பாஷை புரியாம ரசிக்கமாட்டான். தியாகராஜ கீர்த்தனையில எதை ரசிக்கிறான்? அந்தச் சங்கதியை. இப்ப 'ப்ராவ பாரமா' என்ற கீர்த்தனையை அந்த பாவமே இல்லாமப் பாடினா எப்படி இருக்கும்? 'பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே'ன்னு ஜாலியா தாளம் போட்டுக்கொண்டு பாடினா ரசிக்க முடியுமா? பாபநாசம் சிவன் பாடல்கள் எத்தனை இருக்கு? 'நானொரு விளையாட்டு பொம்மையா' மாதிரிப் பாடல்கள் எல்லாம் பாவத்தோட பாடினா ஏன் ரசிக்க முடியாது?" என்று கேள்வி எழுப்புகிறார். கர்நாடக சங்கீத வித்வான்கள் சினிமாவில் பாடக்கூடாது. அப்படிப் பாடினால் குரல் கெட்டுவிடும் என்பது இவரது உறுதியான கருத்து. 

நிகழ்ச்சிக்கு வராமலேயே விமர்சனம் செய்ததாகவும் இவர்மீது விமர்சனம் இருந்ததுண்டு. "விமர்சனத்துக்கு என்றே சில வார்த்தைத் தொடர்கள் இருக்கு. 'காம்போதி களைகட்டவில்லை' என்று மட்டும் எழுதுவாங்க. ஏன் களைகட்டவில்லை என்று நான் சொல்லுவேன். அதோட நான் dry ஆக எழுதமாட்டேன்" என்கிறார் தன் எழுத்தைப்பற்றி. தினமணி கதிர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்டேட்ஸ்மென் போன்ற இதழ்களில் நிறைய விமர்சனம் எழுதியிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக எழுதுவார். இசை விமர்சனம் மட்டுமல்லாமல் நாடக, நாட்டிய விமர்சனமும் எழுதியிருக்கிறார். பரதநாட்டியம் பற்றியும் நன்கு அறிந்தவர். சில நாட்டியங்களுக்கு நட்டுவாங்கமும் செய்திருக்கிறார். பரதம் குறித்து சிறு நூல் ஒன்றும் எழுதியிருக்கிறார். டில்லியில் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார். கஞ்சிரா வாசிக்கவும் அறிந்தவர்.. 'South Indian Theatres' என்ற அமைப்பை பூர்ணம் விசுவநாதன், கோபு, ராஜி இவர்களுடன் ஆரம்பித்தார். பல நாடகங்களை எழுதி இயக்கி, நடித்திருக்கிறார். "கோமதியின் காதலன்", தி.ஜா.வின். "வடிவேலு வாத்தியார்" உள்ளிட்ட பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார். வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சுப்புடுவின் சகோதரர் திரு. P.V. கிருஷ்ணமூர்த்தி, டில்லியில் அகில இந்திய வானொலியிலும், பிறகு தூர்தர்ஷனிலும் டைரக்டர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்றவர். இசை அறிந்தவர்.

இவரது இசை விமர்சனம் பற்றி கவிஞர் வாலி,

சுப்புடு
பாடகர்களின் தலையெழுத்தை
பேனாவால் எழுத
பர்மாவிட்டு பாரதம் வந்த பிரம்மா

பாலையும் நீரையும் 
பிரித்துக் காட்டுவதற்காக 
டிசம்பர் மாதத்தில்
டில்லியிருந்து சென்னைக்கு வரும்
அன்னப்பறவை.

இளம்வித்வான்களுக்கு
இவர் தூண்டுகோல்
முதிய வித்வான்களுக்கு
இவர் துலாக்கோல்

கொன்னக்கோலைக் கூட
குற்றமிருக்கிறதா என்று
குடைந்து பார்க்கும்
கன்னக் கோல்

என்று எழுதியது முற்றிலும் பொருத்தம். இவரது வாழ்க்கை தொகுக்கப்பட்டு BEYOND DESTINY - The Life and Times of Subbudu என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது.

ஒருசமயம் உடல்நலமில்லாதிருந்தபோது சுப்புடுவைச் சந்திக்க வந்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம். "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்று கேட்ட அவரிடம், "நான் இறந்த பிறகு, உங்கள் மொகல் தோட்டத்தில் இருந்து ஒரு மஞ்சள் ரோஜாவைக் கொண்டுவந்து என் உடல் மீது வையுங்கள்" என்று குறிப்பிட்டார் சுப்புடு. மார்ச் 29, 2007 நாளன்று சுப்புடு காலமானார். மறுநாள் மொகல் தோட்டத்தில் பறிக்கப்பட்ட மஞ்சள் ரோஜாக் கொத்தை சுப்புடுவின் உடல்மேல் வைத்து அஞ்சலி செலுத்தினார் அப்துல்கலாம்.

தனது நகைச்சுவை எழுத்தாலும், கருத்தாலும் அவரது ரசிகர்களால் என்றும் நினைவு கூறப்படுவார் சுப்புடு......