Blog Archive

Tuesday, April 25, 2023

நெஞ்சம் இருக்கு துணிவாக...

வல்லிசிம்ஹன்அன்பின் அனைவருக்கும் இனிய நாட்களுக்கான வாழ்த்துகள்.

இணையப் பக்கம், வலைப்பூ, நட்புகள் அனைவரிடமும் நெடு நாட்களாகத் 
தொடர்பில் இல்லை.

முதுகெலும்பு நேராக இல்லை அதனால் வலி என்று ஆரம்பித்த பிரச்சினை,
வீட்டுக்கு வந்த விருந்தாளியின் தாராளக் கொடையால்
தொற்றாக  என்னைப் பிடித்து இருவாரங்களாகச் 
செல்லம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது:)

நமக்கும் முதுமைக் காலத் துணை இது என்று ஏற்றுக் கொள்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கால நிலைகள் இந்த ஊரில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
70 டிகிரி வெய்யில் ஒரு நாளைக்கு. 30 டிகிரியில் ஆரம்பிக்கும் குளிர் மறு நாளைக்கு.

இது ஏன் என்றால் வசந்த காலமாம்.
மனிதர்களுக்குத் தான் வசந்தம் தடுமாறும் என்றால்
வெப்ப தட்பமுமா.:))))))

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டாவது பேரனின் ரொபாடிக்ஸ் போட்டி 
இங்கிருக்கும் டெக்ஸஸ் ,டல்லசில் நடக்கப் போகிறது.
இருப்பதிலிலேயே இளையவன் இவன்.
முனைப்போ தாத்தா போல.
போட்டி போடுகிறவர்கள் பல தேசத்திலிருந்து
வருகிறார்கள்.
அந்தக் குட்டி ரொபாட் பாஸ்கெட் பால் விளையாடுகிறது.

வெற்றி தோல்வியைப் பற்றி நினைக்கவில்லை.
 1000 பள்ளிகள் மாணவர்கள் போட்டி போடும் இடத்தில் இவன் குழு
சென்றிருக்கிறது.
என் உடல் நிலை காரணமாக மகளால் செல்ல முடியவில்லை.

அதுதான் வருத்தம்.
கந்தன் கருணையில் பேரன் அனைத்து சவால்களையும் சந்திக்க
வேண்டும்.

மீண்டும் சந்திக்கலாம். நன்றி.

8 comments:

கோமதி அரசு said...

பாடல் அருமை. பேரனுக்கு வெற்றிகள் வந்து சேரட்டும்.
உங்கள் உடல் நிலை விரைவில் நலம் பெறட்டும்,
பிரார்த்தனைகள்.
இங்கும் குளிர் இன்னும் விடவில்லை, குளிர் இருப்பதால் எனக்கும் முதுகுவலி கை, கால் வலி இருக்கிறது.
வலைத்தளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி , படங்களை ஏற்றி என்று பதிவு போடுகிறேன்.
நாம் நினைத்தபடி உடல் இயங்குவது இல்லை, அது சொன்னபடி நாம் கேட்கும் காலம். அதனுடன் கொஞ்சம் அனுசரித்துதான் போக வேண்டி இருக்கிறது.

ஸ்ரீராம். said...

விருந்தினர் தந்த பரிசா?  அதுதானே?  எப்படி வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  முன்னரே ஓரிருமுறை வந்திருப்பதால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டாமோ...

ஸ்ரீராம். said...

பேரன் கட்டாயம் வெற்றி பெறுவார். சிங்கம் துணை இருப்பர். தாத்தாவுக்கேற்ற பேரன். எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

ஸ்ரீராம். said...

"வெற்றி மீது வெற்றி வந்து" பாடலை எஸ் பி பி பாடும்போது அவருக்கு ஜலதோஷம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றும் எனக்கு.  வழக்கமான எஸ் பி பி குரலை விட கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்!

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா உங்க உடல்நலம் பார்த்துக்கோங்க. இருக்கவே இருக்கு வலை எல்லாம்.

உங்கள் பேரனுக்கு வாழ்த்துகள். கண்டிப்பாக நன்றாகச் செய்வார். வெற்றியும் பெருவார். உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் ஆச்சே!!

கீதா

ஸ்ரீராம். said...

என் இன்னும் இரண்டு கமெண்ட்ஸ் இருக்குமே...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

இன்னமும் உடல்நிலை சரியாகவில்லையா? நீங்கள் பூஸ்டர் எல்லாம் போட்டிருப்பீர்களே..? உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் பூரண நலமடைய இறைவனிடம் பிரார்த்தித்து கொள்கிறேன்.

தங்கள் பேரன் போட்டியில் வெற்றியடைய என் வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத் தமிழன் said...

உடல் நலம் விரைவில் சரியாகட்டும்.

சிங்கம் வாரிசுகள் நிச்சயம் நன்றாகவே பிரகாசிப்பார்கள்.