Blog Archive

Monday, March 07, 2022

இப்போது டவுனில் இருக்கிறோம். 5/3/2022

   கிளம்பும்போது எடுத்த படம். இரவினில் 
கலகலத்த வீதி ஞாயிறு காலை தூங்கிக் கொண்டிருந்தது:)

















இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே சென்று
   வந்தோம்.
பேரன்  இந்த ஊரின்   down town Chicago அலுவலகத்தில்
வேலை செய்வதால் அங்கேயே 
   100 yaards தூரத்தில் வீடெடுத்து இருக்கிறான்.
வார இறுதிகளில்
 வீட்டுக்குவந்து விடுவான்.
இந்த வாரம் சிறிய பேரனுக்கும் இரண்டு நாட்கள்
 அதிக லீவு கிடைத்ததும் கிளம்பி விட்டோம்.

சொல்வது சுலபம்.
ஏற்பாடு செய்ததெல்லாம் மகள் தான்.

ஒரு   air mattress ஆறடிக்கு ஆறு  அகலத்தில்வாங்கியதிலிருந்து,
இரண்டு நாட்கள் அங்கே ,
எல்லா வேளை சாப்பட்டுக்கும் வழிசெய்து,
சின்னப் பேரன் உதவியோடு 
பெரிய பெரிய பைகளில் போர்வை, தலையணைகள்
என்று அடைத்து
வண்டியில் ஏத்தும் வரை அவளுக்குத் தான் வேலை.


வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும். உயர உயரமாகக் கட்டிடங்கள். 100 தளங்கள் அதற்கும் மேலே
என்று இருந்தன.
பேரன் இருக்கும் இடம் 40 மாடிக் கட்டிடம். 
அதில் 38 ஆவது மாடிக்கு 38 நொடிகளில் 
சென்று விட்டோம்.

சகல வசதிகளும் அந்தச் சின்ன அபார்ட்மெண்ட்டில் இருந்தது.
சமைக்க,துவைக்க,பொருட்களை, துணிகளைப்
பத்திரப் படுத்த அடுக்கி வைக்க என்று நிறைய
இடங்களும் அலமாரிகளும்.

அறையின் ஒரு சுவர் கண்ணாடியால் ஆனது.
அதருகே உட்கார்ந்து விட்டால் பொழுது போவதே 
தெரியவில்லை.
ஒரு வேளைக்கு பீட்சாவும்,
மற்ற வேளைகளுக்குத் தோசை மாவு, சப்பாத்தி, குழம்பு,
கொத்தவரங்காய்க் கறி என்று கொண்டு போயிருந்ததால்
வேலைத் தொந்தரவு இல்லை.:)

இணையம் கொஞ்சம் கிடைக்கவில்லை.
அத்தனை பேருக்கும் கணினியில் வேலை
இருந்தது.
நான் வெறும் வாட்ஸாப்புடன் நிறுத்திக் 
கொண்டேன். இனிதான் வலைப்பக்கம் வரவேண்டும்.

இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தது.
எப்போதும் ஒலிக்கும் சைரன்,
ஆம்புலன்ஸ்கள் , தீ அணைப்பு வண்டி, காவல் துறை
என்று இரவு முழுக்க ஒலிகள் தான். நாம்
ஒரு நவீன நகரத்தில் இருக்கிறோம்
என்று நினைவூட்டின.


20 comments:

Anuprem said...

வானுயர்ந்த கட்டிடங்கள் மா..எவ்வ்ளோ நீளம்

அந்த 3 வது படத்தில் சூரியனார் ஜொலிக்கிறார் ..மிக அழகு மா

நெல்லைத் தமிழன் said...

ஆஹா.. அருமையான அனுபவம்தான். அங்கும் நெட் பிரச்சனையா?

Geetha Sambasivam said...

நகர வாழ்க்கை அங்கெல்லாம் "நரக"மாயிருக்காதுனு நினைக்கிறேன். எஞ்சாய்! பேரன் வார இறுதியில் மட்டும் தான் வருவாரா? மற்ற நாட்கள் வீட்டிலிருந்து வருவதற்குச் சிரமம் இல்லாமல் இருக்கா?

ஸ்ரீராம். said...

அற்புதமான புகைப்படங்கள்.  நகரமே அழகு.  சில புகைப்படங்கள் திரும்பத்திரும்ப வந்திருக்கிறதோ என்றும் சந்தேகம்.  சுற்றுலாவை அனுபவியுங்கள்மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா என்னைச் சொல்கிறீர்களே இப்போது பாருங்கள் உங்கள் படங்கள் என்ன அட்டகாசமாக இருக்கின்றன!! ஹையோ ரசித்து முடியலை. சூரியன் ஏரி, கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் துல்லியமாக நேர்த்தியான புகைப்படங்கள்.

அதுவும் அந்தக் கடைசி இரு படங்களுக்கு முந்தைய படம் வாவ்!!! நேரே தெரு...அற்றம் வரை அந்தப் படம் செம...நீங்கள் தேர்ந்த புகைப்படக் கலைஞர்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த ரோடுக்கு முந்தைய படம் விளக்குகளுடன் உள்ள கட்டிடங்கள் ஹையோ மிகவும் ரசித்தேன் அழகான ஆங்கிளில் எடுத்த படம்!!! அள்ளுகிறது!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

விளக்குகள் எரியும் கட்டிடங்கள் படங்கள் அத்தனையும் சிறப்போ சிறப்பு!! ரொம்பத் தெளிவாக வந்துள்ளன. பேரனின் வீட்டிலிருந்து எடுத்திருக்கிறீர்கள் இல்லையா? உயரம் தெரிகிறது!

நதியின் மீது பாலம் அந்தப் படமும் செமையா இருக்கும்மா.

அம்மா! தேர்ந்த புகைப்படக் கலைஞர்!!! படங்கள் சூப்பரோ சூப்பர்!

நல்ல ஒரு அவுட்டிங்க் ரிலாக்சேஷன் என்று தெரிகிறது வலைக்கு வராவிட்டால் என்ன அஅம்மா? இப்படியான ஒரு அவுட்டிங்க் கிடைத்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் மனதும் இலகுவாகும்! நல்ல ஒரு டைவெர்ஷன்.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அனைத்தும் நன்று அதிலும் குறிப்பாக சூரியன் படங்கள். Have a great time.

வல்லிசிம்ஹன் said...

@ அனு ப்ரேம்,
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்.
நலமாப்பா.
ஆமாம் எல்லாம் உயரம் தான். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு
அடுத்த நாள் அலுத்து விடுகிறது:)
அறைக்குள்ளயே முடங்கி சுற்றி எடுத்த படங்கள்.

குளிரும், தொற்று பயமும் நமக்குக் கொடுத்த கொடை:)
மிக நன்றி மா.
என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளி மா,

மற்றவர்களுக்கு ஹாட் ஸ்பாட் உதவியில்
அலுவலக வேலைகளைத் தொடர்ந்தார்கள்.
சின்னவனுக்கு ஹோம் வொர்க்.
பெரியவனுக்கு கீதா வகுப்பு.
அதனால் என் தேவையைக் குறைத்துக் கொண்டேன்.
குறை ஒன்றும் இல்லை!!!!
நன்றி மா. இது ஒரு நல்ல மாறுதல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
பேரன் வார இறுதியில் வீட்டுக்கு வந்து விடுவான்.
திங்கள் கிளம்பிப் போவான்.
பதிவு எழுதும்போது வீட்டுக்கு வந்து விட்டதால் இங்கு
என்று குறிப்பிட்டேன்.
தினம் அவசர அவசரமாக ரயில் பிடிப்பது
சிரமம் இல்லையா.
அதுவும் இன்று கொட்டித் தீர்த்த பனியில்
ரயில் நிலையத்திலிருந்து
ஆஃபீஸ்க்கு நடக்கணும்.
முதுகுல சுமை.
அதனால் அங்கேயே இருந்து விடுவான் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள் மா.

படங்கள் மீண்டும் பதிவானது மாதிரி தெரியும்.
அந்த 18 அடி கண்ணாடி வழியாக வேற வேற
கோணத்தில் எடுக்க நினைத்தேன்.
இரவு நேரம் மிக உத்சாகமாக ஒளிவிட்ட விளக்குகள்
படம் இன்னும் இருக்கிறது போடவில்லை.

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகை நாமும் ரசிக்கலாம்.
கீழே வார இறுதிக் களையபரங்கள் நிறைய உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
மிக மிக நன்றி மா.
கைபேசியில் எடுத்த படங்கள் தான். கண்ணாடி
வழியாக எடுத்ததில் சில இரண்டு பிம்பங்களாக
வந்தன. நீங்கள் ரசித்திருப்பதே எனக்கு
சந்தோஷம்.
கடைசி தளம் சென்று எடுக்க ஆசைதான். அங்கே ஜிம்
இருந்தது. அதனால் போகவில்லை.

வணிகத் தலம் இந்த சாலை.
படு சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது.
அசையாக் கட்டிடங்கள் இருக்கும் இடத்தில்
20 ஆம் நூற்றாண்டில் தோப்புகளே
இருந்தனவாம்!!

வல்லிசிம்ஹன் said...

''அந்த ரோடுக்கு முந்தைய படம் விளக்குகளுடன் உள்ள கட்டிடங்கள் ஹையோ மிகவும் ரசித்தேன் அழகான ஆங்கிளில் எடுத்த படம்!!! அள்ளுகிறது!''


அருமையான விவரிப்பு. அன்பு நிறைந்த நன்றி மா.

''விளக்குகள் எரியும் கட்டிடங்கள் படங்கள் அத்தனையும் சிறப்போ சிறப்பு!! ரொம்பத் தெளிவாக வந்துள்ளன. பேரனின் வீட்டிலிருந்து எடுத்திருக்கிறீர்கள் இல்லையா? உயரம் தெரிகிறது!''

ஆமாம் கண்ணா இரண்டு மணி நேரத்துக்கு ஒரு
தடவை படங்கள் எடுத்தேன்.


''நல்ல ஒரு அவுட்டிங்க் ரிலாக்சேஷன் என்று தெரிகிறது வலைக்கு வராவிட்டால் என்ன அஅம்மா? இப்படியான ஒரு அவுட்டிங்க் கிடைத்தால் மனதிற்கு மகிழ்ச்சியும் மனதும் இலகுவாகும்! நல்ல ஒரு டைவெர்ஷன்.''

அதுதான் நாங்கள் நினைத்தது. பாதி நிறைவேறியது.
அங்கும் மகளுக்கு எல்லா இடங்களையும் சுத்தம் செய்து
துணிகள் அடுக்கி வைத்து'
என்று வேலை இருந்தது:)
அனுபவித்துப் படித்துப்
பின்னூட்டம் இடும் கலையை உங்களிடம் வெகுவாக ரசிக்கிறேன் மா

கோமதி அரசு said...

பேரன் இருக்கும் இடம் மிக அருமையான இடமாக இருக்கிறது. வான் உயர்ந்த கட்டிடங்கள், காலை மாலை காட்சிகள் அனைத்து படங்களும் மிக அருமை.

எங்கும் போகாமல் இருந்தற்கு பேரன் இருக்கும் இடம் சென்று வந்தது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

எங்காவது போக வேண்டும் என்றால் உணவு மற்றும் பல வசதிகளை காரில் அடைத்து தான் அங்கு செல்கிறார்கள். அவர்களுக்கு வேலை சரியாக இருக்கும்.

பேரனுக்கு வாழ்க்கை துணை வரும் வரை அம்மாவின் பொறுப்பு அதிகம் தான்.

உயரமான கட்டிங்கள் வழியாக பார்ப்பது கார்கள் சின்னதாக தெரிவது எல்லாம் மிக அழகாய் இருக்கும்.

பதிவு படங்களுடன் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்.வருகைக்கும் கருத்துக்கும். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா வாழ்க வளமுடன். ஆமாம். மிக நல்ல பிரேக் தான். தேவையாகவும் இருந்தது. இந்த ஊரில் இருக்கவே தனி சக்தி தேவை.. ஆனால் இந்தப் பயணம் பிடித்தமான தாங்க அமைந்தது. அசதிப் பட்டால்ஆவது ஒன்றும் இல்லை. பேரனுக்கு மணம் செய்ய இன்னும் 4 வருடங்கள் ஆகும்.அவனே சமைக்க கற்றால் நன்மை. அங்கே சென்று வந்த தில் நல்ல மாறுதல்.

மாதேவி said...

நகரபடங்கள் அனைத்தும் நன்று சூரியன் சூப்பர். இடமாறுதல் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும் .

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி.
நலமுடன் இருங்கள்.

உண்மையிலேயே நல்ல மாற்றம். நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா படங்கள் அத்தனையும் மிகவும் அழகு. பிரம்மாண்டம். வானுயரக் கட்டிடங்கள். எவ்வளவு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கின்றன எல்லாம். வியந்து பார்த்து ரசித்தேன்

உங்கள் பயணத்தை ரசியுங்கள். ஓய்வெடுங்கள்.

துளசிதரன்