Blog Archive

Thursday, March 03, 2022

தமிழுக்காகச் சில பாடல்கள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
தமிழைக் கடித்துக் குதறும் சில பேச்சாளர்களைக் கேட்க நேர்ந்தது.
நாம் என்ன சீத்தலைச் சாத்தனாரா:(
பதிவில் புலம்பத் தான் முடிகிறது.

தமிழ் தமிழ் என்று வாய்ச்சொல் சொல்லியே
மொழியைச் சிதறடிப்பவர்களை
அந்தத் தமிழன்னை தான் கவனிக்க வேண்டும்.
   
  இங்கே பாடி இருப்பவர்கள் கே ஆர் ராமசாமி.
நடிப்பிசைப் புலவர் என்று பெயர் பெற்றவர் மற்றும் தெலுங்கைத் தாய் மொழியாகக் 
கொண்ட பானுமதி.

தமிழ் நாடக மேடைகளில்  தமிழ் பேசிப்   பின் திரை உலகுக்கு வந்தவர்.
இசை கொடுத்தவரும் உயர்ந்த மனிதர்.

இனிமையையே கேட்டு வளர்ந்ததால் 
வேறு தமிழ் நல்ல வேளையாகக் காதில் விழவில்லை.


தமிழ்ப் பாடகர்கள் சொல்லைச்

சிதைக்காமல்
பாடியதால்     உள்ளங்கள் இன்பம் அடைந்தன.
அப்படிச்  சில பாடல்களைப் பதிகிறேன்.
பழமை விரும்புவதால் தவறேதும் இல்லை:)

சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர் மஹாலிங்கம்,
எஸ் வரலக்ஷ்மி, ஜிக்கி, ராஜா, சுசீலா அம்மா, டி எம் சௌந்தர ராஜன்,
திருச்சி லோகனாதன், சி.எஸ் ஜெயராமன்,ஜானகி அம்மா,பி.லீலா,
பாடும் நிலா பாலு என்று நம் எஸ் பி பி
எல்லோருமே தமிழை இசையை வளர்த்தார்கள்.

  மதுரை மீனாக்ஷியும் சொக்கனும் நம் தமிழைக் காக்கட்டும்.









12 comments:

ஸ்ரீராம். said...

ஹா..  ஹா..  ஹா..   நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிகிறது.  இத்தனைக்கும் சாதாரண தமிழ் வார்த்தைகள்...   என்ன கொடுமை.

இனிமையான பாடல்களை சொல்லி இருக்கிறீர்கள்.  எங்கே நான் நாளை பகிரப்போகும் பாடல் இந்த லிஸ்ட்டில் இருக்குமோ என்று பார்த்தேன்!!

Geetha Sambasivam said...

அருமையான பொருள் பொதிந்த சிறப்பான பாடல் தொகுப்புக்கு நன்றி. எல்லாமும் கேட்டிருக்கேன்.

கோமதி அரசு said...

மிக அருமையான பாடல்கள்.
இனிமை நிறைந்த பாடல்கள்.

பாட்டு வேண்டுமா கேட்டு வருடங்கள் ஆச்சு.
பழைய பாடல் என்று வைத்த பாடலையே வைக்கிறார்கள்.

ஒரு பாட்டில் நாட்டுப்பற்று ,மற்றும் தமிழ்பற்று . ஏழை படும் துன்பம் அனைத்தையும் சொல்லும் பாடல். டி.ஆர் மகாலிங்கம் அவர்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கும்.
எல்லா பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ஓங்காரமாய் விளங்கும் நாதம் கேட்டிருக்கிறேன் ரசித்த பாடல் ஆனால் படம் தெரியாது. அழகான கீரவாணி ராகம்!!!

மலையே உன் நிலை, ஒரு பாட்டு வேணுமா, முதல் பாட்டு - கேட்டதில்லை இப்பதான் கேட்கிறேன் அம்மா

மற்ற இன்று போய் நாளை வா, தஞ்சை பெரிய கோயில் கேட்டிருக்கிறேன்.

கேட்டு ரசித்தேன்..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல பாடல்கள். அனைத்தும் கேட்டிருக்கிறேன். ஆனால் பல வருடங்களுக்கு முன். நல்ல தமிழில் அருமையான பாடல்கள்.

இப்போதைய பாடல்கள் மனதில் நிற்பதுமில்லை. ரசிக்கும்படியும் இல்லை. பல பாடல்களில் உச்சரிப்பு புரிவதுமில்லை. முன்பு வேறு மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உட்பட தமிழை நன்கு உச்சரித்தார்கள்.

துளசிதரன்



வல்லிசிம்ஹன் said...

வெளியே இருக்கிறோம் மீண்டும் பார்க்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

தற்போதைய தமிழ் உச்சரிப்பு..... வேதனை அளிக்கிறது. பாடல்களை ஒவ்வொன்றாக கேட்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் வாழுங்கள்.
ஆமாம் அந்தப் பேச்சுகள் தான் இதற்குக்
காரணம்.
வாட்ஸாப்பில் இன்னும் நிறைய
பேச்சுகள் வந்தன:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
மிக நன்றி மா. பாடல்களைக் கேட்டதற்கு
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

பழைய பாடல்கள் ,அதுவும் டி.ஆர்.மஹாலிங்கம் குரலில்
பிசிறு இல்லாமல், நல்ல செந்தமிழ்
பாடி வந்தார்.
இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம்.
பாட்டு வேண்டுமா எனக்கு மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிமா.

''எல்லா பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன்.''
இதுதான் சிறப்பு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாரங்கன் மா,

என்றும் நலமுடன் இருங்கள்.
பழைய தமிழ் சினிமாப் பாடல்களை எழுதியவர்களான
மருதகாசி, உடுமலை நாராயண கவி,
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எல்லோரும்
தமிழையும் சமூகத்தையும்
நேசித்தார்கள்.
அதனால் திரைப் படங்களுக்கும், கதானாயகர்களுக்கும் ,நாயகிக்களுக்கும்

நல்ல பாடல்கள் கிடைத்தன.
நாமும் கேட்டு மகிழ்வோம். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,
மிக நன்றி மா.