Follow by Email

Friday, March 30, 2012

ஸ்ரீராமன் வருகிறார்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நாளை ஸ்ரீராமஜனனம்.
கொண்டாட்டத்துக்குக் கேட்கணுமா.
சுற்றியிருக்கும் அனுமன் கோவிலெல்லாம் கதாகாலாட்சேபங்களும்
கச்சேரிகளும்.

நமக்கு விஜய் டிவி தான் கோவில். அங்கே  ஒளிபரப்புவதுதான்
ராமராஜ்யம்.
வேளுக்குடி திரு கிருஷ்ணன் சொல்வதுதான் ராமாயணம்.

இப்போதும் பாட்டி சொல்வது கேட்கிறது. கால்ல செருப்பை மாட்டிக்கோ.
ஊர்ல உலகத்தில ஜனங்க சந்தோஷமா ஆஞ்சனேயர் கோவில் ராமர் பட்டாபிஷேகம்
பார்க்கப் போவதைப் பாரு.
அப்படியே வரவழியில  கீரைத்தண்டும் வாங்கிண்டு வா.

சொன்ன பத்து தடவைக்கு ஒரு தரம் போயிருப்பேன்:)
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் மனித வாழ்கைக்கு மதிப்பு இல்லை.

பழங்கள் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைவதற்குள் பல்லவராயர் நம்மைப் பதம் பார்த்துவிடுவார்.
இரண்டு நாட்கள் கழித்துப் போய் ராமா  
சுபஜனனம் ஆச்சா.
அம்மா சௌக்கியமா. தம்பிகள் சௌக்கியமா என்று கேட்டு வரணும்.

ஜானகி காந்தன் நம் எல்லோரையும் ரக்ஷிக்கட்டும்.
 

20 comments:

Geetha Sambasivam said...

மெதுவாப் போய்க்கலாம். உடனே போனால் அறைத் தீட்டு உண்டே! :))))))

அது சரி கும்பகோணம் ராமசாமி கோயில்ச் சித்திரங்களா அவை??

வல்லிசிம்ஹன் said...

அதேதான் கீதா.
மறக்க முடியாத கோவில்.என்ன ஒரு கம்பீரம்.
அந்தச் சித்திரங்களும் மனதை விட்டு அகலவில்லை.
கபாலீஸ்வர கோவில் கொடியேற்றியாச்சு. இன்னிக்கு அதிகார நந்தி. எங்க ரோடையே க்ராஸ் செய்ய முடியலை:) தீட்டெல்லாம் போகட்டும் . அப்புறம் போகலாம்;)

பால கணேஷ் said...

மைலாப்பூர் பக்கம் ட்ராபிக் நெரிசல் இம்முறை ஜாஸ்தியாத்தான் இருக்கு. க்ராஸ் பண்ணவே கஷ்டமாத்தான் இருக்கு. ராமதரிசனம் மெல்லத்தான் போல...

தமிழ் உதயம் said...

கோபுர தரிசனம் அருமை.

ADHI VENKAT said...

கோபுர தரிசனம் செய்து கொண்டேன்....

ராம ராம ராம ராம.......

ஸ்ரீராம். said...

வடை பாயசம் உண்டா....நீர் மோர், பானகம் மட்டும்தானா? என்ன ப்ளான்?

ராமலக்ஷ்மி said...

கோபுரம் அழகு. தரிசனத்துக்கு நன்றி வல்லிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

கோபுர தரிசனம் செஞ்சு வெச்சதுக்கு நன்றி வல்லிம்மா :-)

நெரிசல்ல போய்ப்பார்க்காம ஏகாந்தமா போயிப்பார்க்கறதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தானே..

ஜீவி said...

//இப்போதும் பாட்டி சொல்வது கேட்கிறது. கால்ல செருப்பை மாட்டிக்கோ...//

'தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும் பள்ளம் எனும் தகையான்'
பரதன் நினைவு வந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

கோபுர தரிசனம் அருமை! நன்றி !

வல்லிசிம்ஹன் said...

ஹனுமார் போல நாமும் இதயத்திலியே குழந்தை ராமனையும் அவன் சகோதரர்களையும் இருத்தித் தாலாட்டலாம் கணேஷ்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தமிழ் உதயம்.முழுக் கோபுரத்தையும் எடுத்துப் போட்டு இருக்கவேண்டும். மிக நன்றி மா,.

வல்லிசிம்ஹன் said...

மிகப் பெரிய கோவில் ஆதி.அதற்கான வெப்சைட்ல போய்ப் பாருங்கள். ஒரே தூணில் ராம,லக்ஷ்மண,சீதா,அனுமன் எல்லோரையும் பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.எப்போதுமே கோபுரம் எழுப்பும் உணர்ச்சிகள் உயர்வாகவே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வடை,பாயசமும் உண்டு. நீர்மோர்,நறுக்கிய பழங்கள்,பானகம் ஸ்ரீராமஜனனம் அனுபவிப்பது எல்லாமே உண்டு ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா சாரல். நான் அப்படிச் சொல்வதும் தப்புதான்.
மதுரையில் சிறுவயதில் தேர்விழாவில் பாட்டியின் கையை விட்டதால் ஏற்பட்ட பயம் இன்னும் போகவில்லை. மேலும் சுயநலமாக அவனுடன் தனிப்பேச்சு பேசுவதில் இன்னும் சுகம்.:)

வல்லிசிம்ஹன் said...

பாதுகை என்றதும் பரதன் நினைவு வந்து விட்டதா ஜீவி சார்.
பாட்டிக்கு நான் வெளியே போவதில்லை என்று எப்பவுமே குறை. அதான் கால்ல செருப்பு.
இனிமையான கம்பராமாயணவரிகளைக் கொடுத்து இந்தப் பதிவின் ஆழத்தைப் பெருக்கிவிட்டீர்கள்.
மனம் நிறைந்த வணக்கங்கள்.

துளசி கோபால் said...

ராம ராம ராம ராம.............

சமர்த்து said...

:)

சமர்த்து said...

:) Verennattha solla...