Blog Archive

Saturday, February 11, 2012

முதுமையும் கண் பிரச்சினைகளும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்கண் ணில் வைத்தியம் முடிந்து  கறுப்புக் கண்ணாடியும் நானுமாக ஒருநாள் வீட்டுப்  பலசரக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தோம்.


கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் பழக்கம்
காரண்மாக  வேண்டும் என்ற பொருட்களைத் தள்ளுவண்டியில்
போட்டுக் கொண்டு எண்ணெய்   பாக்கெட்டை எடுக்க நிற்கும் போது
திடீரென்று பின்னால் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

எவ்வளவு நாள்;ஆச்சு?''

திரும்பிப் பார்த்தால் ஒரு மூதாட்டி.அதாவது என்னை விடக் கொஞ்சம் வயதானவர்.
'எதுக்குக் கேட்கறேன்னால் நானும் செய்துக்கணும். 35 ஆயிரம்  லென்ஸ் மட்டும் ஆகணும் என்கிறான் என் அண்ணா பையன்.
அந்த லென்ஸ்  பேர் என்னடா. கூகிள்ள தேடிக்கறேன்னு சொன்னால் ,பெயர் சொல்ல மாட்டேன் என்கிறான்.''
எனக்குத் தலை கால் புரியவில்லை.

நம்மைக் கூட மதித்து ஒரு அம்மா கேட்கிறாரேன்னு சந்தோஷம்.:0)


என்ன தெரியணும் உங்களுக்கு?
என்  வைத்தியர் சொல்லும் லென்ஸ் அந்த விலைதானா.
அதற்கு உண்மையான பேர்  என்ன.
அதுபோட்டால் என் கண் புரை விலகி ப்  பார்வை விளங்குமா.

எனக்கோ படு உத்சாகம்.
'அதிலென்ன சந்தேகம் அம்மா. கண் நன்றாகத்தெரியும்.

அதைக் கேக்கலை....
??????
இந்ட்ரா  அக்குலர் லென்ஸ் எத்தனை வகைப்படும்.
நான் பணம் கொடுக்கப் போகிற  லென்ஸைத்தான்
வைத்தியர் பொருத்துவார் என்று என்ன நிச்சயம்?

ஆஹா  மாட்டிக்கிட்டயா மஹாதேவி;  அப்டீன்னு ஒரு குரல் .என் மனசுதான்.
உங்க   டாக்டர் யார்.

ஸோ அண்ட் ஸொ. உங்களுக்கு அவரைத் தெரியுமா?
நான் விழித்தேன். எனக்கு  தெரிந்த வைத்தியர்கள் எலும்பு முறிவுக்காரர்களும்,

டயபெடிஸ் மருத்துவர்களும் தான்.
''இல்லமா எனக்கு அவரைத் தெரியாது.'
ஓ ஊருக்குப் புதுச்யு போல நீங்கள்.
எங்க டாக்டர் என்னை 35 வருஷங்களாப் பார்த்துக் கொண்டு வருகிறார்.''
''அப்புறம் என்ன அவரை நீங்கள் நம்பலாமே''
உங்களுக்கு யார் வைத்தியம் செய்தது?
'தெரிந்த டாக்டர் தான்.
''
நீங்கள் உங்கள் லென்ஸ் செக் செய்தீர்களா''
சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்''

ஓ! உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள். மருமகள் இருப்பாள். கணவர் பார்த்துக் கொள்வார்,.'


எனக்குக் கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகளும் கிடையாது(!)
உங்களுக்குக் கண்ணில் மருந்து போட உங்கள் கணவர் வருவார்.
சமையலைப் பார்க்க மருமகள் இருப்பார்''
என்னைச் சொல்லுங்கள். பணத்தை யாராவது பறித்துக் கொள்வார்களோ என்ற
  பயத்தைத் தவிர   வேற என்ன இருக்கிறது.என்று சொன்னவர் அழ ஆரம்பித்துவிட்டார்.

ஐய்யோ சாமி இது என்னடான்னு   கவலையாகி விட்டது. இதற்கு நடுவில் சிங்கம் வேற உள்ள வந்து என்ன 'லேடி எம்ஜியார்''(கறுப்புக் கண்ணாடி மஹிமை)
ஒரு கடுகு புளி வாங்க இவ்வளவு நேரமா' என்றபடி   அருகே வந்தார்.
என்பக்கத்தில் அழும் பெண்ணைப் பார்த்து
என்னைச் சந்தேகமாப் பார்த்தார்.
என்ன செய்த. இப்படி இந்த ஓல்ட் வுமன்  அழறாங்களே''
நான் அம்மாவை அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னேன்.
கடையிலிருந்த பெண்ணிடம் ,கொஞ்சம் தண்ணீர் வாங்கி அவரைக் குடிக்கச் சொல்லி
என் புராணத்தைச் சொன்னேன்.
;;அம்மா, எங்கள் குழந்தைகள் இங்கே இல்லை.
வெளியூரில் இருக்காங்க.
கண் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள மருத்துவமனையிலேயே கற்றுக் கொண்டேன்.
ஒரு பதினைந்து நாட்களுக்கு ஒரு அம்மா எங்களுக்குச் சப்பாத்தியும், காய்கறிகளும் செய்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்''
உங்களாலும் முடியும்.
உங்கள் வைத்தியரை நம்புங்கள்.
தெய்வத்தை நம்புங்கள்'
கண் சரியாகிவிடும்.
வைத்தியரிடமே ஒரு  உதவியாளரை உங்கள் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி நான்கு நாட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

என்றதும் ஒருவாறு தேறினார்.
என் விலாசத்தைக் கேட்டார். பக்கத்தில் உறுமல் சத்தம் கேட்கவே ''இங்க பக்கத்தில் தாம்மா இருக்கேன்.
அப்புறம் பார்க்கிறேன்,'' என்றவாறு வெளியே வந்தேன்.
பின்னால் அந்தப் பெண்ணின் குரல் ''வரவங்க, போறவங்க உதவியா செய்வார்கள்!! வாய்வார்த்தைக்கே வழியில்லாமல் போச்செ'கலிகாலம்!!!
என்று தன்னோடு உதவிக்கு வந்திருக்கும் பெண்ணோடு உள்ள போய் ரைஸ் ப்ரான் ஆயில் எடுத்து வைம்மா'
என்று கட்டளையிட்டார்..

எனக்கே என் கண்ணில் வைக்கப்பட்ட லென்ஸ் நான் சொன்ன லென்ஸ்தானா'என்ற சந்தேகம் வந்துவிட்டது:(
எதாக இருந்தால் என்ன. நம்பிக்கை இல்லாமல் வைத்தியம் கிடையாது.

நம்பிவிட்டால் சந்தேகம் கூடாது'
இப்படி உறுதி செய்து கொண்டேன்.:)Posted by Picasa

27 comments:

வெங்கட் நாகராஜ் said...

//நம்பிக்கை இல்லாமல் வைத்தியம் கிடையாது.

நம்பிவிட்டால் சந்தேகம் கூடாது'//

அடடா... எத்தனை உண்மையான வார்த்தைகள்....

நல்ல அனுபவம்... நிறைய மருத்துவமனைகளில் இப்படி ஏமாற்றுவது உண்டு. அது காரணமாக இருக்கலாம் அந்த முதியவரின் சந்தேகத்திற்கு....

துளசி கோபால் said...

பேசாம ஊருக்குப் புச்ச்சு. இந்த ஆபரேஷனுக்காக ஸ்டூவர்ட் தீவில் இருந்து வந்துருக்கேன்னு அவிழ்த்துவிட வேண்டியதுதானே?

உதவியாளர் கூட இருக்கும் அந்த 'மூதாட்டி'க்கு இப்படி எல்லாம் சந்தேகம் வரலாமோ? பேசாம அவரைப் பதிவர் ஆக்கி இருக்கலாம்.

அதுக்குன்னு கண் லென்ஸைக் கழட்டிப் பார்த்துட்டுத் திரும்ப வச்சுக்க முடியுமா?

பால கணேஷ் said...

லேடி எம்.ஜி.ஆர்... ஹா... ஹா... சிங்கம் ஸார் நல்லாத்தான் கூப்ட்டிருக்கார். அந்த அம்மாவை நினைவத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. நீ்ஙகள் முடித்திருக்கும கடைசி இரண்டு வரிகள் மிகவும் சத்தியம்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
சந்தேகம் வரத்தான் செய்கிறது. அந்த அம்மாவுக்காவது 35 வருட,சிநேகம் உள்ள வாஇத்தியர். எனக்கொ ஐந்தே வருடம் தெரிந்தவர்.
துளசி சொன்ன மாதிரி தலையைக் குடுத்துட்டால் விட்டு விடவேண்டியதுதான். ஈஸ்வரோரக்ஷது!
அவங்களுக்கு ,முதுமை+தனிமை.பாவம்தான். தப்பு நபர் கிட்ட அட்வைஸ் கேட்டுவிட்டார்.:)

வல்லிசிம்ஹன் said...

துளசிமா.:)))))
அவங்க சொன்னதுதான் வேடிக்கை. உங்களுக்கென்ன மகன்,மருமகள்,கணவர் எல்லாரும் பார்த்துப்பார்கள்'' நான் அப்படியான்னு ?
சொன்னால்,
நான் என்ன செய்ய முடியும் அந்த நேரத்தில்.!!
நல்ல வார்த்தை நாலு. அதான் செய்தேன்.பாவம் அந்த அம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கணேஷ் ,சிங்கத்துக்கு நான் ஓவர் காஷியஸா இருக்கேன்னு ஒரு சந்தேகம்.ஸ்பை மாதிரி இருக்கேன்னும் சொல்வார்.
அந்த அம்மா சொன்ன டாக்டர் ரொம்ப நல்ல டாக்டர்தான்.நேர்மையானவரும் கூட.
நல்லாயிடுவாங்க.

ஸ்ரீராம். said...

அந்தம்மா சந்தேகம் பரிதாபப் பட வைத்தாலும் 'சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு' என்பதை இன்னும் உணராமலிருக்கிறாரே என்று தோன்றுகிறது...
'எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்'.....
அவரும்...!
சந்தேகம் தொற்று வியாதி என்று வேறு நிரூபித்து விட்டாரே....!! :))))

வல்லிசிம்ஹன் said...

அதையேன் கேட்கறீங்க ஸ்ரீராம்.

நேத்து யாரெல்லாம் எனக்குப் போன் செய்தார்களோ அவர்களிடமெல்லாம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறேன்:)

இன்னும் ஒருவாரத்துக்கு யாரும் என்னன்னு கேட்க மாட்டார்கள்!அதற்காக எல்லாரும் ரமணா ஆக முடியுமா என்ன.

ADHI VENKAT said...

நம்மால் இயலாது என்கிற போது நம்பித்தான் ஆக வேண்டும்....

அந்த முதியவருக்கு ஏதாவது கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு இந்த சந்தேகத்தை உண்டாக்கி இருக்கலாம்.

முதுமையும், தனிமையும் கொடுமை தான்....:(

வல்லிசிம்ஹன் said...

சரியே ஆதி.
தனிமையும் முதுமையும் நம்மைத் தனிமையாக்கிவிடுகின்றன.

நானே மருத்துவமனையில் எங்க பசங்க இருந்தால் நன்றாக இருக்குமே
என்று ஒரு கணம் நினைத்தேன். இவரே வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைய வேண்டி வந்தது.
நல்ல புரிதல் அம்மா உங்களுக்கு.

திவாண்ணா said...

உதவியாளர் எடுத்தது ரைஸ் ப்ரான் ஆய்ல் தானா? பாக்கெட்ல அப்படி எழுதியிருந்தாலும் அது ரைஸ் ப்ரான் லேந்து செஞ்சு இருப்பாங்களா? சந்தேகம் என்கிற பேய் ரொம்ப கொடுமையானது.

லேடி MGR?ஹிஹிஹி நல்ல பேருதான்.... :-)))

பாச மலர் / Paasa Malar said...

லேடி எம் ஜி ஆர் ரசித்தேன்....

நம்பிக்கை வைத்தால்தான் வைத்தியம் முதல் எல்லாம்...

Geetha Sambasivam said...

Hai, Lady MGR, how do you do?? fine article and the Lady MGR title very good. thanks to Singam. :))))))

Geetha Sambasivam said...

விடுங்க, பொதுவா இந்த மாதிரிக் கேட்கிறவங்க சும்மாவானும் கேட்பாங்களோ என்னமோ. போனால் போறது. கூடத் தான் ஆள் வந்திருக்கையிலேயே ஏன் இப்படிச் சொல்றாங்களாம்? புரியலை. :(

சாந்தி மாரியப்பன் said...

லேடி எம்ஜியார்... படத்துலயும் ஜூப்பரா இருக்கீங்க :-))

சந்தேகம் தொத்து வியாதிதான்.. சந்தேகமில்லை. சிலருக்கு கிடைக்கிற அனுபவங்கள் அவங்களைச் சந்தேகப் பிராணியாக்கிடுது. ஒரு தடவை நம்பிக்கை இழந்துட்டா அப்றம் எதையும் நம்ப வைக்கிறது சிரமம்தான்.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு அனஸ்தடிஸ்ட் வைத்தியம் செய்கையில் பக்கத்தில் நின்றிருந்தார். அப்போ தம்பி வாசுதேவனை நினைத்துக் கொண்டேன்:)
நர்சம்மா
நீங்க ரொம்ப கேள்வி கேட்கறீங்க ,டாக்டருக்குப் பிடிக்காது, சைலண்டா இருங்கன்னு ஆப்பரேஷன் தியேட்டர் போவதற்கு முன்னால் மிரட்டிவிட்டுப் போச்சு..இல்லாட்டா அவர்கிட்டயும் பேசி இருப்பேன்.;)
எனக்கும் மேல சந்தேகப் பட்டாங்க இந்த அம்மா. பாவம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மலர்.
சௌகார் போய் இந்தப் பேரு வந்தது சுவைதான்.
நானும் சந்தேகப் பேர்வழிதான். சிலசமயங்களில் சந்தேகப் படுவதனால் பலன் ஒன்றும் கிடையாது. பதில்களும் வருவதில்லை. மண்டை காய்வதுதான் மிச்சம்:)

வல்லிசிம்ஹன் said...

தான்க்ஸ் கீதாமா.எல்லாருக்கும் இப்படிச் சிரிப்பு வருகிறதுன்னு சிங்கத்துக் கிட்ட சொல்கிறேன்.:)
இதைவிட தமாஷ். கண்ணோய்னு (மெட்ராஸ் ஐ)விலகிப் போறவங்களும் இருக்காங்க!!
தனிமை நம்மை எப்படியும் படுத்தும்கறத்துக்கு இந்த அம்மா ஒரு உதாரணம்.

ஹுஸைனம்மா said...

அந்தம்மாவின் நிலை பரிதாபம் வரவழைக்கீறது. பாவம், எதுக்காக, யாருக்காக உழைச்சு, இப்படித் தனிமரமா நிக்கிறாங்களோன்னு ஒரு கேள்வி வருது.

சிலபேர் “கல்யாணமே வேணாம்; இப்படியே இருந்துடறேன்;” அல்லது “கல்யாணத்தில் நம்பிக்கையில்லை” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

ஆனால், இப்படி ஒரு நிலைமை ஒரு சமயம் வந்தேதானே ஆகும் என்பதை அவர்கள் நினைப்பதில்லை. (சிலரின் கல்யாண வாழ்வும் அப்படிச் சொல்லவைக்குமளவு மோசமாய் இருக்கும்தான் என்றாலும்...)

அந்தப் பெண்மணியிடம் நீங்க பக்குவமா எடுத்துச் சொன்னது ஆறுதலா இருந்திருக்கும். நல்ல காரியம் செஞ்சீங்க. (எப்பவும் போலவே) :-))))

//லேடி எம்ஜியார்//
இந்தச் சின்னச்சின்ன நகைச்சுவைகள்தான் வாழ்க்கைக்கு சுவையூட்டுகின்றன, இல்லையா!!

இதைவிட //என்ன செஞ்ச, இந்த ஓல்ட் லேடி அழறாங்க?// என்று கேட்டதுதான் சூப்பர் சிரிப்பு!!

//நர்சம்மா நீங்க ரொம்ப கேள்வி கேட்கறீங்க ,டாக்டருக்குப் பிடிக்காது, சைலண்டா இருங்கன்னு ஆப்பரேஷன் தியேட்டர் போவதற்கு முன்னால் மிரட்டிவிட்டுப் போச்சு..இல்லாட்டா அவர்கிட்டயும் பேசி இருப்பேன்.;)//

ஹி.. ஹி.. ஸேம் ப்ளட்!! ஒருக்கா இந்தியாவில் ஒரு டாக்டர்கிட்ட எதையோ கேட்கப்போக அவர் ரொம்ப டென்ஷனாகி... ”நீங்க அபுதாபி நினைப்புலயே இந்திய ஆஸ்பத்திரிகளைப் பாக்காதீங்க”ன்னுட்டார்!! :-))))

கோமதி அரசு said...

முதுமையில் வரும் பிரச்சினைகளை அழகாய்கூறி விட்டீர்கள்.

அந்த முதியவர் நம்பிக்கையுடன் வாழ இறைவன் அருள் செய்ய வேண்டும்.

தனிமையின் கொடுமை அந்த முதியவரை அப்படி பேச சொல்கிறது போலும்.

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா இத்தனை நாட்கள் கழித்து உங்களுக்குப் பதிலிடுவதற்கு மன்னிக்கணும். நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. சந்தேகம் எப்போதும் உண்டு,. வெளியெ சொல்ல
மாட்டோம். என்னமோ அன்னிக்கு எனக்கும் அந்த அம்மாவுக்கும் போட்டுவச்சிருக்கு.ரசித்தலுக்கு ஒரு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி முதுமை எனக்கும் வந்துவிட்டது. தனிமையும் இருக்கிறது.
ஒரு சிரமம் என்று வரும்போது இந்த மாதிரி சந்தேகங்கள் வருவதும் சஹஜமே.
நாம் புதியவர்களிடம் கேட்க மாட்டோம். அவர் கேட்டுவிட்டார்.அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சசிகலா உங்களுடைய அறிமுகத்துக்கு மிகவும் நன்றிமா.

Jaleela Kamal said...

நகைச்சுவை

ஆறுதல்

உதவி


முன்றும் சேர்ந்த பதிவு

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜலீலா. வாழ்க்கையே இந்தக் கலவையால் ஆனதுதானே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,அக்கறை எடுத்துக் கொண்டு பதிவில் வந்து சொன்னதற்கு மிகவும் நன்றிமா.அவர்களுக்கு நன்றியும் சொல்லிவிட்டேன்.