அம்மா கொஞ்சம் திரும்பேன்.
உன் முகத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.
உன் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும்
உன் பெயர் தெரிந்திருக்கிறது.
கடமைப்பட்டவர்கள்...ஆனால் அவர்களின்
வாரிசுகளுக்கும்
ஜயாப் பாட்டியைத் தெரிந்திருக்கிறது.
வாய் திறவாமல் கண்களா லயே சிரிப்பாயே
அந்தச் சிரிப்பை
அதன் புனிதத்தை அவர்களும் பார்க்கவேண்டாமா.
குழந்தைகளா
பாட்டிக்கு ஹாப்பி பர்த் டே இன்னிக்கு.
நாம் அவள் இருக்குமிடத்தில் ஆநந்தமாக இருக்க வாழ்த்தலாம்.
வாருங்கள்.
தாழம்பூ வாங்கி கையில் குத்தினாலும் அழகுப் பின்னலில் தைத்துவிடுவாள்.
அமுதமாகத் தயிரும் அன்பும் சேர்த்துக்
கையில் அன்னம் இடுவாள்.
அந்த அம்மாவை அவள் கைகளின் ஆதுரத்தை
எந்நாளும் மறக்காமல் இருப்போம். எத்தனை எழுதினால் போதும் எங்கள் அம்மாவைப் பற்றி. உனக்கு அள்ளித்தர வேண்டிய அன்பு இன்னும் நிறைய இருக்கிறது. அம்மா. மீண்டும் வா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
27 comments:
உருக்கமான கவிதை.
அம்மாவுக்கு வணக்கங்கள்!
நன்றி கௌதமன்.அம்மாவுக்கு உருகாம வேற யாருக்கு உருகப் போகிறோம்.
அன்பு ராமலக்ஷ்மி, மனம் நிறைந்த ஆசிகளை அம்மா கொடுத்திருப்பார்.
அருமையான நினைவு கூர்தல் வல்லிம்மா.
கண்கள் பனித்துவிட்டன வல்லிமா....உலகப்பொதுக்கவிதை...
அம்மாவுக்கு ஈடு இணை ஏதுமில்லை.....இந்த உலகில்....
அருமையான கவிதைம்மா....
அருமை. அம்மாவின் முகத்தைக்காட்டி இருக்கலாம்.
அந்தப் பக்கம் திரும்பியிருக்கும் புகைப் படமாயிருக்கிறதே என்று யோசிக்கும்போதே 'கொஞ்சம் திரும்பேன்' என்ற அன்பு மகளின் வரிகள் படிக்க முடிந்தது. கண்களே சிரிக்க வேண்டும் என்றால் மனம் எந்நேரமும் அன்பில் மலர்ந்திருக்க வேண்டும். எங்கள் நமஸ்காரங்களும்..ஆசீர்வாதத்தில் எங்களுக்கும் கொஞ்சம் ப்ளீஸ்.......
அருமையான பகிர்வும்மா....
உங்களது அம்மாவுக்கு எங்களது நமஸ்காரங்கள்....
அருமையான பதிவு அம்மா ! நன்றி !
என் அன்பு சாரல், அன்பு மலர்,
ரொம்பநன்றி.
அன்பு ஆதி, இதை கவிதையாக எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.அம்மாவும் தமிழும் ஒன்றுதானே.
ஆமாம் கீதா
வேறு படங்கள் இருக்கானு பார்க்கிறேன்.
அன்பு ஸ்ரீராம்,ஒரு அழகான அன்னம், புறா,மகாலக்ஷ்மி எல்லாம் சேர்ந்து உருவான்வள் எங்க அம்மா என்று நினைத்துக் கொள்வேன்.எத்தனையோ வேலைகள் அந்தக் கைகள் செய்திருக்கின்றன. அப்படியும் கைகள் மிகவும் மிருதுவாக இருக்கும்.
ரொம்பநன்றி அம்மாவின் ஆசிகள் உங்களுக்கு நேற்றே வந்துவிட்டன.
அன்பு வெங்கட் மனம் நிறைந்த நன்றிகள்.ஆசிகள் அம்மாவிடம்
எப்பொழுதும் பேரப்பிள்ளைகள் வசம் உண்டு.
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
அன்னையை நினைத்தாலே ஈடுசொல்ல முடியாத பேரன்புதான் அனைவரும் உணர்வது. இங்கே அன்னைக்காய் உருகிய உங்கள் எழுத்துக்களில் நானும் கரைந்தேன். அந்த அன்னையை ஆசிவேண்டி நானும் பணிகிறேன்.
படங்களும் கவிதையும் மனதில் சுகமாகவும் சோகமாகவும் பதிகிறது.
அன்பு திருமதி,
அம்மா சுகமே கொடுப்பாள்.நீங்கள் உங்கள் பெண்ணுக்கு அணைப்பாக இருப்பதுபோல அவளும் உங்களுடன் அணைத்தாறே இருப்பாள்.
அம்மாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள். மறக்காமல் நினைவு கூரும் உங்களுக்கு வாழ்த்துகள்.
முகம் நோக்கும் திசை வேறாயினும் அவர் அகம் நோக்குவது நம்மைத்தானே. அம்மாவுக்கு எங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் வந்தனங்களும்.
முகம் நோக்கும் திசை வேறாயினும் அவர் அகம் நோக்குவது நம்மைத்தானே. அம்மாவுக்கு எங்களுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் வந்தனங்களும்.
அன்பு கீதா,
மிக மிக நன்றி.இந்தக் கணினியில் படங்கள் கூட அப்லோட் செய்ய முடிவதில்லை.அதனால் பழைய பதிவையே போட்டுவிட்டேன்.என் மன நிம்மதிக்காகத்தான்.பத்து வருடங்களும் போயாச்சு.
அம்மா என்றால் அன்பு. அம்மாவிற்கு என் வணக்கங்கள்.
படமும் கவிதையும் அருமை.
Namaskarams to you for such words on mother....I think you shared some other pic also in the past.....
ஆமாம் மௌலி. இன்னும் ஒரு படம் இருக்கிறது. இன்னும் சில கிடைத்திருக்கின்றன.
நன்றி மா. எவ்வளவு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.
Post a Comment